Pages

Pages

Tuesday, March 12, 2024

செய்வதை திருந்தச் செய்


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 


اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَ‌ وَاِنْ تُخْفُوْهَا وَ تُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ‌ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏

தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:271)

سَألُوا رَسُولَ اللَّهِ ﷺ: صَدَقَةُ السِّرِّ أفْضَلُ أمْ صَدَقَةُ العَلانِيَةِ ؟ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ

ஸதகா என்பது மறைவாக செய்வது சிறந்ததா? வெளிப்படையாக செய்வது சிறந்ததா? என்று பெருமானார் நபி அவர்களிடத்தில் கேட்கப்பட்ட போது இந்த வசனம் இறங்கியது. (தப்ஸீர் ராஜி)

செய்வதை திருந்தச் செய் என்று சொல்வார்கள்.பொதுவாக ஒரு அமலைச் செய்வது முக்கியமல்ல, அதை எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்ய வேண்டும். அது தான் அந்த அமல் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் அதிக நன்மைகளைத் தருவதற்கும் உகந்தது. அந்த வகையில் இந்த வசனத்தில் அல்லாஹ் ஸதகாவை வெளிப்படையாக செய்வதும் நல்லது. மறைத்து செய்வதும் நல்லது என்று சொல்கிறான்.எப்போது வெளிப்படையாக செய்ய வேண்டும். எப்போது மறைவாக செய்ய வேண்டும் என்பதற்கு இமாம்கள் விளக்கம் தருகிறார்கள்.

في أنَّ الأفْضَلَ في إعْطاءِ صَدَقَةِ التَّطَوُّعِ إخْفاؤُهُ أوْ إظْهارُهُ. فَلْنَذْكُرْ أوَّلًا الوُجُوهَ الدّالَّةَ عَلى أنَّ إخْفاءَهُ أفْضَلُ

فالأوَّلُ: أنَّها تَكُونُ أبْعَدَ عَنِ الرِّياءِ والسُّمْعَةِ، قالَ ﷺ: ”«لا يَقْبَلُ اللَّهُ مِن مُسْمِعٍ ولا مُراءٍ ولا مَنّانٍ» “ والمُتَحَدِّثُ بِصَدَقَتِهِ لا شَكَّ أنَّهُ يَطْلُبُ السُّمْعَةَ، والمُعْطِي في مَلَأٍ مِنَ النّاسِ يَطْلُبُ الرِّياءَ، والإخْفاءُ والسُّكُوتُ هو المُخَلِّصُ مِنهُما، وقَدْ بالَغَ قَوْمٌ في قَصْدِ الإخْفاءِ، واجْتَهَدُوا أنْ لا يَعْرِفَهُمُ الآخِذُ، فَكانَ بَعْضُهم يُلْقِيهِ في يَدِ أعْمى، وبَعْضُهم يُلْقِيهِ في طَرِيقِ الفَقِيرِ، وفي مَوْضِعِ جُلُوسِهِ حَيْثُ يَراهُ ولا يَرى المُعْطِيَ، وبَعْضُهم كانَ يَشُدُّهُ في أثْوابِ الفَقِيرِ وهو نائِمٌ، وبَعْضُهم كانَ يُوصِلُ إلى يَدِ الفَقِيرِ عَلى يَدِ غَيْرِهِ، والمَقْصُودُ عَنِ الكُلِّ الِاحْتِرازُ عَنِ الرِّياءِ والسُّمْعَةِ والمِنَّةِ؛ لِأنَّ الفَقِيرَ إذا عَرَفَ المُعْطِيَ فَقَدْ حَصَلَ الرِّياءُ والمِنَّةَ مَعًا، ولَيْسَ في مَعْرِفَةِ المُتَوَسِّطِ الرِّياءُ

وثانِيها: أنَّهُ إذا أخْفى صَدَقَتَهُ لَمْ يَحْصُلْ لَهُ بَيْنَ النّاسِ شُهْرَةٌ ومَدْحٌ وتَعْظِيمٌ، فَكانَ ذَلِكَ يَشُقُّ عَلى النَّفْسِ، فَوَجَبَ أنْ يَكُونَ ذَلِكَ أكْثَرَ ثَوابًا

தர்மங்களைப் பொருத்த வரை உபரியாக செய்யப்படுகின்ற ஸதகாவை மறைவாக செய்வது நல்லது என்று இமாம்கள் கூறுகிறார்கள். அதற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறார்கள்.

1, வெளிப்படையாக செய்கின்ற பொழுது பெருமையும் முகஸ்துதியும் ஏற்படும். மறைவாகச் செய்வதில் அவ்விரண்டிலிருந்தும் ஒருவர் பாதுகாக்கப்படுவார்.

2, மனிதன் புகழையும் பிரபல்யத்தையும் விரும்பக்கூடியவன். மறைவாக செய்கின்ற பொழுது அவற்றை இழக்கிறான். அதன் மூலம் அவனுக்கு சிரமம் ஏற்படுகிறது. அந்த சிரமத்திற்கு கூலி இரட்டிப்பாக தரப்படுகிறது. எனவே மறைமுகமாக செய்வது சிறந்தது.

நம் முன்னோர்கள் தர்மங்களை மறைவாக செய்வதையே விரும்பி னார்கள். கொடுக்கப்படும் நபர்களுக்கும் தெரியக்கூடாது என்று நினைத்தார்கள்.எனவே கண் தெரியாத நபரிடத்தில் கொடுத்து விடுவார்கள். அல்லது ஏழைகள், வழிப்போக்கர்கள் வந்து செல்லும் பாதையில் வைத்து விட்டு வந்து விடுவார்கள். சமயங்களில் தூங்கிக் கொண்டிருக்கிற மனிதருக்கு அருகில் வைத்து விடுவார்கள். அல்லது வேறொரு நபருடைய கைகளில் கொடுத்து தர்மத்தை நிறைவேற்றும் படி சொல்வார்கள். இதெல்லாம் முகஸ்துதியிலிருந்து தன்னை பாதுகாப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட நடைமுறைகள்.

 كان علي بن الحسين زين العابدين يحمل الصدقات والطعام ليلاً على ظهره، ويوصل ذلك إلى بيوت الأرامل والفقراء في المدينة، ولا يعلمون من وضعها، وكان لا يستعين بخادم ولا عبد أو غيره .. لئلا يطلع عليه أحد .. وبقي كذلك سنوات طويلة، وما كان الفقراء والأرامل يعلمون كيف جاءهم هذا الطعام .. فلما مات وجدوا على ظهره آثاراً من السواد، فعلموا أن ذلك بسبب ما كان يحمله على ظهره ، فما انقطعت صدقة السر في المدينة حتى مات زين العابدين.

ஹள்ரத் ஹுசைன் (ரலி) அவர்களின் மகன் ஜெய்னுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் இரவு நேரத்தில் தன் முதுகில் உணவுப் பொருட்களை சுமந்து கொண்டு கிளம்பி விடுவார்கள்.ஊரில் இருக்கிற ஏழைகள், அனாதைகளின் இல்லங்களில் அதை வைத்து விட்டு வந்து விடுவார்கள். செல்கிற பொழுது பணியாளர்களையோ அடிமைகளையோ உதவிக்கு அழைத்துக் கொள்வதில்லை. காலையில் அந்தந்த வீடுகளில் உணவு மூட்டைகள் இருக்கும். ஆனால் வைத்தது யார் என்று அவர்களுக்குத் தெரியாது. இப்படியே பல காலங்களாக பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அவர்கள் மரணித்து விடுகிறார்கள். அவர்களது முதுகிலே கருப்புத் தழும்புகள் தென்படுகிறது. அது என்னத் தழும்புகள் என்று மக்களுக்கு அப்போது புரிய வில்லை. ஆனால், அவர்களின் மரணத்திற்குப் பிறகு அதுவரை வந்து கொண்டிருந்த ரகசியமான இரவு நேர உதவிகள் தடைபட்ட பொழுது தான், அவர்களின் அந்தத் தழும்புக்கான காரணம் புரிந்தது. அதுவரை இரவு நேரங்களில் தங்கள் வீடுகளில் உணவுப் பொருட்களை வைத்துச் சென்றது ஜெய்னுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் தான் என்பதை விளங்கிக் கொண்டார்கள்.

மறைவாகச் செய்வதையே அல்லாஹ் விரும்புகிறான். எனவே நன்மைகளை மட்டுமல்லாது வேறு வகையான பலன்களையும் அது பெற்றுத் தந்து விடும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

قَالَ رَجُلٌ لَأَتَصَدَّقَنَّ اللَّيْلَةَ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ زَانِيَةٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ، قَالَ: اللهُمَّ، لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ غَنِيٍّ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ: تُصُدِّقَ عَلَى غَنِيٍّ، قَالَ: اللهُمَّ، لَكَ الْحَمْدُ عَلَى غَنِيٍّ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ: تُصُدِّقَ عَلَى سَارِقٍ، فَقَالَ: اللهُمَّ، لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ، وَعَلَى غَنِيٍّ، وَعَلَى سَارِقٍ، فَأُتِيَ فَقِيلَ لَهُ: أَمَّا صَدَقَتُكَ فَقَدْ قُبِلَتْ، أَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا تَسْتَعِفُّ بِهَا عَنْ زِنَاهَا، وَلَعَلَّ الْغَنِيَّ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللهُ، وَلَعَلَّ السَّارِقَ يَسْتَعِفُّ بِهَا عَنْ سَرِقَتِهِ

(முற்காலத்தில்) ஒருவர் “நான் இன்றிரவு தர்மம் செய்யப்போகிறேன்’ எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது’ எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், “இறைவா! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், “ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது’ எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், “இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார்.

(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது’ என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், “இறைவா! விபசாரிக்கும் பணக்காரனுக்கும் திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது’ எனக் கூறினார்.

பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு, உமது தர்மம் ஏற்கப்பட்டு விட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபசாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம் என்று கூறப்பட்டது என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 1421)

மறைவாக செய்ய வேண்டும் என்ற அவருடைய தூய்மையான எண்ணத்தினால் தவறான நபர்கள் கைகளில் கொடுத்து விட்டாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு அதன் மூலம் பலன்களும் கிடைத்தது.

நாம் செய்யும் அமல்கள் மறைவாக செய்யப்பட வேண்டும். மற்ற மக்களுக்கு தெரியும் அமைப்பில் செய்யும் காரியத்தை விட மக்களுடைய பார்வையை விட்டும் மறைவாக செய்யப்படும் காரியத்திற்கு அல்லாஹ்விடம் மதிப்பு அதிகம்.

سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ في ظِلِّهِ، يَومَ لا ظِلَّ إلّا ظِلُّهُ: الإمامُ العادِلُ، وشابٌّ نَشَأَ في عِبادَةِ رَبِّهِ، ورَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَساجِدِ، ورَجُلانِ تَحابّا في اللَّهِ اجْتَمعا عليه وتَفَرَّقا عليه، ورَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذاتُ مَنْصِبٍ وجَمالٍ، فَقالَ: إنِّي أخافُ اللَّهَ، ورَجُلٌ تَصَدَّقَ، أخْفى حتّى لا تَعْلَمَ شِمالُهُ ما تُنْفِقُ يَمِينُهُ، ورَجُلٌ ذَكَرَ اللَّهَ خالِيًا فَفاضَتْ عَيْناهُ

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ் விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 660)

أنَّ الإظْهارَ في إعْطاءِ الزَّكاةِ الواجِبَةِ أفْضَلُ، ويَدُلُّ عَلَيْهِ وُجُوهٌ:

الأوَّلُ: أنَّ اللَّهَ تَعالى أمَرَ الأئِمَّةَ بِتَوْجِيهِ السُّعاةِ لِطَلَبِ الزَّكاةِ، وفي دَفْعِها إلى السُّعاةِ إظْهارُها.

وثانِيها: أنَّ في إظْهارِها نَفْيَ التُّهْمَةِ، «رُوِيَ أنَّهُ ﷺ كانَ أكْثَرَ صَلاتِهِ في البَيْتِ إلّا المَكْتُوبَةَ»  فَإذا اخْتَلَفَ حُكْمُ فَرْضِ الصَّلاةِ ونَفْلِها في الإظْهارِ والإخْفاءِ لِنَفْيِ التُّهْمَةِ، فَكَذا في الزَّكاةِ.

وثالِثُها: أنَّ إظْهارَها يَتَضَمَّنُ المُسارَعَةَ إلى أمْرِ اللَّهِ تَعالى وتَكْلِيفِهِ، وإخْفاءَها يُوهِمُ تَرْكَ الِالتِفاتِ إلى أداءِ الواجِبِ فَكانَ الإظْهارُ أوْلى، هَذا كُلُّهُ في بَيانِ قَوْلِ مَن قالَ المُرادُ بِالصَّدَقاتِ المَذْكُورَةِ في هَذِهِ الآيَةِ صَدَقَةُ التَّطَوُّعِ فَقَطْ.

 

கடமையான ஜகாத்தைப் பொருத்த வரை வெளிப்படையாக செய்வது சிறந்தது ஏனெனில்,

1، செல்வந்தர்களிடமிருந்து ஜக்காத்தை வசூல் செய்து ஏழைகளுக்கு பங்கீடு செய்யுமாறு இஸ்லாம் ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடுகிறது. மறைவாகச் செய்கின்ற பொழுது அவ்வாறு பங்கீடு செய்வதில் சிரமம் ஏற்படும்.

2, கடமையான ஜகாத்தை ஒருவர் மறைமுகமாக செய்து விட்டால் அவர் கொடுத்தாரா இல்லையா என்ற சந்தேகம் ஏற்படும். அதை தவிர்ப்பதற்காக வெளிப்படையாக செய்வதே ஏற்றமானது.

3، ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர்களுக்கும் கடமையான ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

நன்மைகளில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவது. சிலருக்கு ஸதகா செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கலாம். ஒருவரை பார்க்கும் போது அந்த ஆர்வம் ஏற்படும்.

நாம் ஒரு காரியத்தை செய்து அதை பார்த்து மற்றவர்களும் செய்தால் அந்த நன்மைகளில் நமக்கும் பங்கு உண்டு.

عن جرير بن عبد الله -رضي الله عنه- قال: جاء ناس من الأعراب إلى رسول الله -صلى الله عليه وسلم- عليهم الصوف فرأى سوء حالهم قد أصابتهم حاجة فحث الناس على الصدقة فأبطئوا عنه حتى رئي ذلك في وجهه، ثم إن رجلا من الأنصار جاء بصرة من ورق ثم جاء آخر ثم تتابعوا حتى عرف السرور في وجهه فقال رسول الله -صلى الله عليه وسلم-: «مَنْ سَنَّ فِي الإسلام سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِها بعْدَهُ كُتِب لَه مثْلُ أَجْر من عَمِلَ بِهَا وَلا يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، ومَنْ سَنَّ فِي الإسلام سُنَّةً سَيِّئَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ عَلَيْهِ مِثْلُ وزر من عَمِلَ بِهَا ولا يَنْقُصُ من أَوْزَارهِمْ شَيْءٌ

கிராமவாசிகள் சிலர் நபியவர்களிடம் வந்தார்கள். அவர்களின் ஏழ்மை நிலையைக் கண்ட நபியவர்கள் தன் தோழர்களிடம் ஸதகா செய்வதை ஆர்வப்படுத்தினார்கள். முதலில் ஒருவர் தன் வீட்டிலிருந்து சிலதைக் கொண்டு வந்தார். பின்பு அவரைப் பார்த்து அடுத்தடுத்து மற்றவர்களும் தொடர்ந்து அவ்வாறே கொண்டு வந்தார்கள். (முஸ்லிம்) (சுருக்கான மொழியாக்கம்)

عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي تَفْسِيرِ هَذِهِ الْآيَةِ، قَالَ: جَعَلَ اللَّهُ صَدَقَةَ السِّرِّ فِي التَّطَوُّعِ تَفْضُلُ عَلَانِيَتَهَا، فَقَالَ: بِسَبْعِينَ ضِعْفًا. وَجَعَلَ صَدَقَةَ الْفَرِيضَةِ عَلانيتَها أفضلَ مِنْ سِرِّهَا، فَقَالَ: بِخَمْسَةٍ وَعِشْرِينَ ضِعْفًا.

மேற்கூறப்பட்ட வசனத்திற்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறும் விளக்கம் ;  கடமை இல்லாத உபரியான தர்மத்தை மறைவாக செய்வது வெளிப்படையாக செய்வதை காட்டிலும் 70 மடங்கு உயர்ந்தது. கடமையான ஜகாத்தை மறைவாக செய்வதை காட்டிலும் வெளிப்படையாக செய்வது 25 மடங்கு உயர்ந்தது. (இப்னு கஸீர்)

 

ورَوى ابْنُ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ قالَ ”«السِّرُّ أفْضَلُ مِنَ العَلانِيَةِ، والعَلانِيَةُ أفْضَلُ لِمَن أرادَ الِاقْتِداءَ بِهِ

மறைவாகச் செய்வது வெளிப்படையாகச் செய்வதை விட ஏற்றமானது. தன்னைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவருக்கு வெளிப்படையாகச் செய்வதே ஏற்றமானது. (பைஹகீ : 6612)

ஒவ்வொரு காரியங்களையும் இஸ்லாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று வழிகாட்டியிருக்கிறதோ அவ்வாறே செய்வோம். நன்மைகளை நிறைவாகப் பெறுவோம்.


2022 - குர்ஆனியத் தொடர்பு

2023 - இரண்டும் வேண்டும்

வாஹிதிகள் பேரவை - இறைவனிடம் கையேந்துவோம்

11 comments:

  1. உங்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக.இரவே குறிப்பை தந்தால், மறுநாள் பேசுவதற்கு தோதுவாக இருக்கும்.

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்வையும்
    சிந்தனையில் செழிப்பையும் பொருளாதாரத்தில் பரக்கத்தையும் தந்தருள்வானாக. ஆமீன்

    ReplyDelete
  3. ல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்வையும்
    சிந்தனையில் செழிப்பையும் பொருளாதாரத்தில் பரக்கத்தையும் தந்தருள்வானாக. ஆமீன்

    ReplyDelete
  4. MASHA ALLAH NALLA KARUTTUKKAL

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது இறைவன் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் தந்தருள்வானாக

    ReplyDelete
  6. உலமாக்களின் துஆக்களை ரமளானில் பெற்றுக் கொள்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
    Replies
    1. துஆவிற்காக மட்டும் தான் இந்த முயற்சி. துஆவில் மறந்து விடாதீர்கள்

      Delete
  7. பயனுள்ள பதிவு

    ReplyDelete