Friday, March 24, 2023

இரண்டும் வேண்டும்

 

وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏

அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர் களும் மனிதர்களில் உண்டு. (அல்குர்ஆன் : 2:201)

فَجَمَعَتْ هَذِهِ الدعوةُ كلَّ خَيْرٍ فِي الدُّنْيَا، وصرَفت كُلَّ شَرٍّ فَإِنَّ الْحَسَنَةَ فِي الدُّنْيَا تشملُ كُلَّ مَطْلُوبٍ دُنْيَوِيٍّ، مِنْ عَافِيَةٍ، وَدَارٍ رَحْبَةٍ، وَزَوْجَةٍ حَسَنَةٍ، وَرِزْقٍ وَاسِعٍ، وَعِلْمٍ نَافِعٍ، وَعَمَلٍ صَالِحٍ، وَمَرْكَبٍ هَنِيءٍ، وَثَنَاءٍ جَمِيلٍ، إِلَى غَيْرِ ذَلِكَ مِمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ عباراتُ الْمُفَسِّرِينَ، وَلَا مُنَافَاةَ بَيْنَهَا، فَإِنَّهَا كُلَّهَا مُنْدَرِجَةٌ فِي الْحَسَنَةِ فِي الدُّنْيَا. وَأَمَّا الْحَسَنَةُ فِي الْآخِرَةِ فَأَعْلَى ذَلِكَ دُخُولُ الْجَنَّةِ وَتَوَابِعُهُ مِنَ الْأَمْنِ(٩) مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ فِي العَرَصات، وَتَيْسِيرِ الْحِسَابِ وَغَيْرِ ذَلِكَ مِنْ أُمُورِ الْآخِرَةِ الصَالِحٍةِ، وَأَمَّا النَّجَاةُ مِنَ النَّارِ فَهُوَ يَقْتَضِي تَيْسِيرَ أَسْبَابِهِ فِي الدُّنْيَا، مِنَ اجْتِنَابِ الْمَحَارِمِ وَالْآثَامِ وَتَرْكِ الشُّبَهَاتِ وَالْحَرَامِ

உலகத்தினுடைய எல்லா நலவுகளையும் ஒன்று சேர்க்கிற எல்லா ஆபத்துகளையும் தடுக்கிற ஒரு அற்புதமான துஆ இது. உலகத்தில் மனிதன் எதை எதிர்பார்ப்பானோ அந்த அத்தனை விஷயங்களையும் இம்மையில் நன்மை என்ற வார்த்தை உள்ளடக்கும். ஆரோக்கியம், விசாலமான வீடு, நல்ல மனைவி, போதுமான வாழ்வாதாரம், பயனுள்ள கல்வி, நல் அமல்கள், சௌகரியமான வாகனம், நற்பெயர். அதே போன்று மறுமையின் எல்லா உயர்வான விஷயங்களையும் மறுமையில் நன்மை என்ற வார்த்தை உள்ளடக்கிக் கொள்ளும். (இப்னு கஸீர்)

وَقَالَ الْقَاسِمُ بْنُ(١١) عَبْدِ الرَّحْمَنِ: مَنْ أُعْطِيَ قَلْبًا شَاكِرًا، وَلِسَانًا ذَاكِرًا، وَجَسَدًا صَابِرًا، فَقَدْ أُوتِيَ فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَوُقِيَ عَذَابَ النَّارِ

நன்றி செலுத்தும் இதயம், அல்லாஹ்வை நினைவு கூறும் நாவு, சோதனைகளில் பொறுமை கொள்ளும் உடல், இம்மூன்றும் யார் வழங்கப்பட்டிருக்கிறானோ அவன் இம்மையிலும் மறுமையிலும் நலவுகள் வழங்கப்பட்டவன் என்று காஸிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். (குர்துபீ) 

فَرُوِيَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ الْحَسَنَةَ فِي الدُّنْيَا الْمَرْأَةُ الْحَسْنَاءُ، وَفِي الْآخِرَةِ الْحُورُ الْعِينُ. "وَقِنا عَذابَ النَّارِ": الْمَرْأَةُ السُّوءُ (قرطبي)

இம்மையின் நன்மை என்பது ஸாலிஹான மனைவியாகும். மறுமையின் நன்மை என்பது சுவனத்து மங்கைகளாகும் என்று அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.(குர்துபீ)

عَنْ أَنَسٍ(١٣) قَالَ: كَانَ أَكْثَرُ دَعْوَةٍ يَدْعُو بِهَا رَسُولُ اللَّهِ [يَقُولُ](١٤) : "اللَّهُمَّ ربَّنا، آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وقنا عذاب النار 

இந்த துஆவை நபி அவர்கள் அதிகம் ஓதுபவர்களாக இருந்தார்கள். (முஸ்னத் அஹ்மத் : 3/101)

عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ عَادَ رَجُلا مِنَ الْمُسْلِمِينَ قَدْ صَارَ مِثْلَ الفَرْخ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ : "هَلْ تَدْعُو(١٩) اللَّهَ بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إيَّاه؟ " قَالَ: نَعَمْ، كُنْتُ أَقُولُ: اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا. فَقَالَ رَسُولُ اللَّهِ : "سُبْحَانَ اللَّهِ! لَا تُطِيقُهُ -أَوْ لَا تَسْتَطِيعُهُ -فَهَلَّا قُلْتَ: ﴿رَبَّنَا(٢٠) آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ﴾ ". قَالَ: فَدَعَا اللَّهَ، فَشَفَاهُ. (مسند الإمام أحمد (٣/١٠٧)

நாயகம் அவர்கள் முஸ்லிமான ஒருவரை நலம் விசாரிக்க சென்றார்கள். அவர் பலஹீனத்தின் காரணமாக குருவிக் குஞ்சு போன்று ஆகி விட்டார். நாயகம் அவரிடத்தில் நீ அல்லாஹ்விடத்தில் ஏதேனும் துஆ செய்தாயா என்று கேட்டார்கள். அவர் ஆம் என்று கூறி விட்டு சொன்னார், இறைவா ஏதேனும் பாவத்தை கொண்டு நீ என்னை மறுமையில் தண்டிப்பதாக இருந்தால் அந்த தண்டனையை உலகிலேயே கொடுத்து விடு என்று துஆ செய்தேன் என்றார். அப்போது நபி   அவர்கள் அந்த மனிதரிடம் இறை தண்டனையை பெறுவதற்கு நீ உலகிலேயே சக்தி பெற மாட்டாய். மறுமையிலும் அந்த சக்தியை தேடாதே என்று கூறி விட்டு,  இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! என்ற துஆவை சொல்லியிருக்க வேண்டாமா என்று கேட்டார்கள். அவர் இதைக் கொண்டு துஆ செய்தார். அல்லாஹ் அவருக்கு சுகம் அளித்தான். (முஸ்னத் அஹ்மத்)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ: أَنَّهُ سَمِعَ النَّبِيَّ يَقُولُ فِيمَا بَيْنُ الرُّكْنِ الْيَمَانِيِّ وَالرُّكْنِ الْأَسْوَدِ: ﴿رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ﴾ شرح السنة (٧/١٢٨)

தவாஃபின் போது நபி அவர்கள் ருக்னே யமானிக்கும் ஹஜருல் அஸ்வதுக்கும் இடையில் இந்த துஆவை ஓத நான் கேட்டிருக்கிறேன் என அப்துல்லாஹ் பின் ஸாயிப் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (ஷரஹுஸ்ஸுன்னா : 7/128)

وما أحْسَنَ هَذا التَّرْتِيبَ، فَإنَّهُ لا بُدَّ مِن تَقْدِيمِ العِبادَةِ لِكَسْرِ النَّفْسِ وإزالَةِ ظُلُماتِها، ثُمَّ بَعْدَ العِبادَةِ لا بُدَّ مِنَ الِاشْتِغالِ بِذِكْرِ اللَّهِ تَعالى لِتَنْوِيرِ القَلْبِ، وتَجَلِّي نُورِ جَلالِهِ، ثُمَّ بَعْدَ ذَلِكَ الذِّكْرِ يَشْتَغِلُ الرَّجُلُ بِالدُّعاءِ فَإنَّ الدُّعاءَ إنَّما يَكْمُلُ إذا كانَ مَسْبُوقًا بِالذِّكْرِ كَما حُكِيَ عَنْ إبْراهِيمَ عَلَيْهِ السَّلامُ أنَّهُ قَدَّمَ الذِّكْرَ فَقالَ: ﴿الَّذِي خَلَقَنِي فَهو يَهْدِينِ﴾ [الشُّعَراءِ: ٧٨] ثُمَّ قالَ: ﴿رَبِّ هَبْ لِي حُكْمًا وألْحِقْنِي بِالصّالِحِينَ﴾ [الشُّعَراءِ: ٨٣] فَقَدَّمَ الذِّكْرَ عَلى الدُّعاءِ. (رازي)

உள்ளத்தை பணியச் செய்வதற்கும் அதில் இருக்கிற இருள்களை அகற்றுவதற்கும் முதலில் அல்லாஹ்வை வணங்க வேண்டும். பின்பு உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்துவதற்கு அல்லாஹ்வை திக்ரு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு துஆவில் ஈடுபட வேண்டும். ஒரு நற்காரியத்திற்குப் பிறகு அவசியம் துஆ இடம்பெற வேண்டும். அந்த துஆ ஆரம்பமாக செய்த நல்லமல் கபூல் ஆவதற்கு காரணமாக இருக்கும். எனவே தான் அல்லாஹ் முதலில் ஹஜ் என்ற வணக்கத்தை முதலாவதாக கூறுகிறான். இரண்டாவதாக திக்ரைக் கூறி விட்டு இறுதியாக துஆவைக் குறிப்பிடுகிறான். (தஃப்ஸீர் ராஸீ)

وقال الشيخان إن كل دعاء يحتاج إلى عمل صالح يرفعه إلى الله، مستشهدين بقول الله تعالى " إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ" (فاطر: 10)، موضحين أن كل دعاء فى القرآن كان يسبقه عمل صالح

தூய்மையான வார்த்தைகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றனநற்செயல் அதனை உயர்த்துகிறது. (அல்குர்ஆன் : 35;10)

ஒரு துஆவிற்கு அங்கீகாரம் கிடைக்க ஒரு அமல் அவசியம். அமல் தான் துஆவிற்கு அல்லாஹ்விடத்தில் கபூலியத்தைப் பெற்றுத் தருகிறது என்று சொல்லும் இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ரஹ் அவர்கள், அதற்கு இந்த வசனத்தை சான்றாக காட்டுகிறார்கள்.

وأكد الشيخان أن الله يستحى أن يرد دعاء عبد كان شفيعه فيه عمل صالح، وهو منهج أوضحه الله فى سورة الفاتحة " إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (5) اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (6)"

ஒரு அமலுக்குப் பிறகு கேட்கப்படும் துஆவை நிராகரிப்பதற்கு இறைவனே வெட்கப்படுகிறான்.அமலுக்குப் பிறகு துஆ கேட்க வேண்டும் என்ற வழிமுறையை இறைவன் ஃபாத்திஹா சூராவின் மூலம் நமக்கு கற்றுத்தருகிறான். உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்” என்ற வார்த்தைக்குப் பிறகு எங்களுக்கு நேரான பாதையைக் காட்டுவாயாக!” என்ற துஆவை இடம் பெறச் செய்திருக்கிறான் என்று இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

நமக்கு ஏதாவது தேவை இருக்கிறது. அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். அந்த தேவை நிறைவேற வேண்டும் ஒழு செய்து 2 ரக்கஅத் தொழுது பிறகு துஆ கேட்க வேண்டும். அந்த துஆ கபூலாகும்.

وروى الترمذي أن رسول الله صلى الله عليه وسلم قال: من كانت له حاجة إلى الله تعالى، أو إلى أحد من بني آدم فليتوضأ، وليحسن الوضوء، ثم ليصل ركعتين، ثم ليثن على الله عز وجل، وليصل على النبي صلى الله عليه وسلم ثم ليقل: لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم، الحمد لله رب العالمين، أسألك موجبات رحمتك، وعزائم مغفرتك، والغنيمة من كل بر، والسلامة من كل إثم، لا تدع لي ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا حاجة هي لك رضا، إلا قضيتها يا أرحم الراحمين. رواه الترمذي وابن ماجه

யாருக்காவது அல்லாஹ்விடமோஅல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, “லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிகவ அஸாயிம மஃபிரதிக. வல்கனீமத மின் குல்லி பிர்ரிவ்வஸ்ஸலாமத்த மின் குல்லி இஸ்ம். லா ததஃலீ தம்பன் இல்லா கஃபர்தஹுவலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹுவலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களைதஹா யா அர்ஹமர் ராஹிமீன்’ என்று கூறட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 479)

إذا عَرَفْتَ هَذا فَنَقُولُ: بَيَّنَ اللَّهُ تَعالى أنَّ الَّذِينَ يَدْعُونَ اللَّهَ فَرِيقانِ؛ أحَدُهُما: أنْ يَكُونَ دُعاؤُهم مَقْصُورًا عَلى طَلَبِ الدُّنْيا، والثّانِي: الَّذِينَ يَجْمَعُونَ في الدُّعاءِ بَيْنَ طَلَبِ الدُّنْيا وطَلَبِ الآخِرَةِ، وقَدْ كانَ في التَّقْسِيمِ قِسْمٌ ثالِثٌ، وهو مَن يَكُونُ دُعاؤُهُ مَقْصُورًا عَلى طَلَبِ الآخِرَةِ، واخْتَلَفُوا في أنَّ هَذا القِسْمَ هَلْ هو مَشْرُوعٌ أوْ لا ؟ والأكْثَرُونَ عَلى أنَّهُ غَيْرُ مَشْرُوعٍ، واعْلَمْ أنَّهُ سُبْحانَهُ لَوْ سَلَّطَ الألَمَ عَلى عِرْقٍ واحِدٍ في البَدَنِ، أوْ عَلى مَنبَتِ شَعْرَةٍ واحِدَةٍ، لَشَوَّشَ الأمْرَ عَلى الإنْسانِ وصارَ بِسَبَبِهِ مَحْرُومًا عَنْ طاعَةِ اللَّهِ تَعالى وعَنِ الِاشْتِغالِ بِذِكْرِهِ، فَمَن ذا الَّذِي يَسْتَغْنِي عَنْ إمْدادِ رَحْمَةِ اللَّهِ تَعالى في أُولاهُ وعُقْباهُ، فَثَبَتَ أنَّ الِاقْتِصارَ في الدُّعاءِ عَلى طَلَبِ الآخِرَةِ غَيْرُ جائِزٍ

أنَّ الَّذِينَ حَكى اللَّهُ عَنْهم أنَّهم يَقْتَصِرُونَ في الدُّعاءِ عَلى طَلَبِ الدُّنْيا مَن هم ؟ فَقالَ قَوْمٌ: هُمُ الكُفّارُ، رُوِيَ عَنِ ابْنِ عَبّاسٍ أنَّ المُشْرِكِينَ كانُوا يَقُولُونَ إذا وقَفُوا: اللَّهُمَّ ارْزُقْنا إبِلًا وبَقَرًا وغَنَمًا وعَبِيدًا وإماءً، وما كانُوا يَطْلُبُونَ التَّوْبَةَ والمَغْفِرَةَ، وذَلِكَ لِأنَّهم كانُوا مُنْكِرِينَ لِلْبَعْثِ والمَعادِ

அல்லாஹ்விடம் துஆ எவ்வாறு கேட்க வேண்டும் என்கிற ஒழுங்கை இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்லித் தருகிறான். அல்லாஹ் விடத்தில் ஒருவர் உலகத்தையும் கேட்க வேண்டும். மறுமையையும் கேட்க வேண்டும். உலகத்தை மட்டும் கேட்பது தவறு என்பது அனைவருக்கும் தெரிந்தது.ஏனென்றால் மறுமையின் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் உலகத்தை மட்டும் கேட்பார்கள். மறுமையை மட்டும் கேட்கலாமா என்றால் அதுவும் கூடாது என்றே இமாம்கள் சொல்கிறார்கள். ஏனென்றால் உடல் ஆரோக்கியம் என்பது உலகம் சார்ந்த விஷயம். உங்கள் ஆரோக்கியம் இருந்தால் தான் வணக்கத்தில் ஈடுபட முடியும். எனவே உலகத்தையும் சேர்த்து தான் ஒருவர் அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும் என்று கூறுகிறார்கள். (தஃப்ஸீர் ராஸீ)

No comments:

Post a Comment