Saturday, March 25, 2023

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் : 3:102)

இத்தகூ அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற வார்த்தை குர்ஆனில் 84 தடவை இடம் பெற்றுள்ளது. இத்தகுல்லாஹ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற வார்த்தை சுமார் 54 தடவை வந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் குத்பாவி [பிரசங்கத்தி] ல் தக்வாவை [இறையச்சத்தை] க் கொண்டு இமாம் வசிய்யத் [உபதேசம்] செய்கிறார். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்,அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு வாரமும் அதைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்.ஏன் ஒவ்வொரு வாரமும் அதை சொல்ல வேண்டும்? அதிலும் இரண்டு குத்பாவிலும் சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதுவும் அரபியில் மட்டும் தான் சொல்கிறோம். திரும்பத் திரும்ப ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் புரியாத மொழியில்! அதைச் சொல்வதினால் என்ன பிரயோஜனம்? என்றெல்லாம் நினைக்கலாம்.

ஏன் ஒரே வார்த்தையை அல்லாஹ் திருப்பித்திருப்பிக் கூற வேண்டும் என்ற கேள்விக்கு விடை தேடுகின்ற போது, ஒருவர் அல்லாஹ் கூறியதை செய்ய வேண்டும். அல்லாஹ் தடுத்ததை விட்டு விட வேண்டும். அவர் தான் உண்மை முஸ்லிம். அமல் செய்வதற்கும் தக்வா வேண்டும். பாவத்தை விடுவதற்கும் தக்வா வேண்டும். எனவே தக்வா தான் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.எனவே திரும்பத் திரும்ப அதைக் கூறுகிறான்.

المؤمن الصالح التقي يكون مباركاً أينما كان, مباركاً على أهله, مباركاً على أصحابه, لا يُسمع منه إلا القول السديد, ولا يحصل منه إلا الإحسان فتجده ليس بطعان ولا لعان ولا فاحش ولا بذيء, بل هو كريم الأخلاق

இறையச்சமுள்ள ஒரு நல்லடியார் அவர் குடும்பத்தாரோடு இருந்தாலும் தோழர்களோடு இருந்தாலும் எங்கிருந்தாலும் அல்லாஹ்வினுடைய அருளை பெற்றவராகவே இருப்பார். நல்ல வார்த்தைகளை மட்டுமே அவர் பேசுவார். நற்காரியங்கள் மட்டுமே அவரிடத்திலிருந்து வெளிப்படும். பழித்துப் பேசுபவராகவோ அருவருப்பான வார்த்தைகளை சொல்பவராகவோ அவர் இருக்க மாட்டார். நிச்சயம் அவர் நற்குண முடையவராக இருப்பார் என ஞானிகள் கூறுகிறார்கள்.

ال الإمام ابن الجوزي رحمه الله: اعلم أن الزمان لا يثبت على حال, كما قال عز وجل: ﴿ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ ﴾ [آل عمران:140] فتارة فقر, وتارة غنى, وتارة عز, وتارة ذل, وتارة يفرح الموالي, وتارة يشمت الأعادي, فالسيد من لازم أصلاً واحداً كل حال, وهو تقوى الله عز وجل, فإنه إن استغنى زانته, وإن افتقر فتحت له أبواب الصبر, وإن عوفي تمت النعمة له, وإن ابتلي جملته, ولا يضره إن نزل به الزمان أو صعد, أو أعراه, أو أشبعه, أو أجاعه, لأن جميع تلك الأشياء تزول وتتغير, والتقوى أصل السلامة حارس لا ينام, يأخذ باليد عند العثرة...فلازم لتقوى في كل حال فإنك لا ترى في الضيق إلا السعة, وفي المرض إلا العافية, هذا نقدها العاجل, والآجل معلوم.

நிச்சயமாக காலங்கள் மாற்றத்தை சந்திக்கக் கூடியது. மனித வாழ்வில் ஏழ்மை, செல்வம், ஏற்றங்கள், இறக்கங்கள். இப்படி மாறி மாறி ஏற்படும். ஆனால் எல்லா நிலையிலும் ஒரு மனிதன் இறையச்சத்தை கடைபிடிக்க வேண்டும். இறையச்சம் இருந்தால் எல்லா நிலைகளிலும் அவன் ஏற்றம் பெறுவான். செல்வந்தனாக அவன் இருந்தால் இறையச்சம் அவன் வாழ்க்கையை அழகு படுத்தும். ஏழ்மையாக இருந்தால் பொறுமையின் வாசல்களை அவனுக்கு திறந்து விடும். ஆரோக்கியம் பெற்றவனாக இருந்தால் இறைவனுக்கு நன்றி செலுத்தும் எண்ணத்தைத் தரும். சோதனைக்கு உள்ளாக்கப்பட்டவனாக இருந்தால் அப்பொழுதும் அவன் வாழ்க்கை இறையச்சத்தைக் கொண்டு அழகு பெரும். இறையச்சம் மட்டும் இருந்தால் காலத்தின் எந்த மாற்றங்களை சந்தித்தாலும் அவனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே இறையச்சம் மனிதனுக்கு எண்ணற்ற பலன்களைக் கொடுக்கிறது.

மட்டுமல்ல, ஒரு விஷயம் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு அதை ஒருவன் கேட்கிற போது அவனுக்குள் அது மாற்றத்தை ஏற்படுத்தும்.

நாவிற்கும், இதயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாவு எதை வேண்டுமானாலும் பேசும். பொய்யைக் கூட பேசும், உண்மையும் பேசும். அதற்கு வித்தியாசம் தெரியாது. ஆனால் உள்ளம், அதற்கு உண்மை மட்டும் தான் தெரியும். அது இந்த உலகத்தைச் சார்ந்தது அல்ல. ஆகிரத்தைச் [மறுமையை] சார்ந்தது, அல்லாஹ்வுக்கு உரியது என்று மேன்மக்கள் சொல்வார்கள்.

எனவே தான் குற்றமுள்ள மனசு குருகுருக்கும்என்று சொல்வார்கள். நீ எவ்வளவு தான் பொய் சொன்னாலும் பொய்தான்டா சொல்கிறாய் என்று உள்ளம் சொல்லி விடும், எனவே தான் நபி (ஸல்) அவர்கள்,  اسْتَفْتِ قَلْبَكَ  நீ உனது கல்பி [உள்ளத்தி] டத்திலே பத்வா [தீர்ப்பு] கேள்  என்று சொன்னார்கள். மனசாட்சிக்கு விரோத மில்லாமல் நடந்து கொள் என்று சொல்வார்கள்.

எனவே இதயம் என்பது எதையெல்லாம் திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறதோ அதைக் கேட்கும்.அதற்கு மொழி இல்லை, திரும்பத்திரும்ப சொல்லப்படுகிற போது அது உள்ளே பதிந்து விடுகிறது.

எனவே தான் நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " جَدِّدُوا إِيمَانَكُمْ ". قِيلَ : يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ نُجَدِّدُ إِيمَانَنَا ؟ قَالَ : " أَكْثِرُوا مِنْ قَوْلِ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ

உங்கள் ஈமானைப் பதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று நபி அவர்கள் கூறிய போது எவ்வாறு புதுப்பிப்பது என்று கேட்கப்பட்டது. லாஇலாஹா இல்லல்லாஹ் என்பதை அதிகம் கூறுங்கள் என்றார்கள். முஸ்னத் (அஹ்மத் ; 8710)

அல்லாஹ்வும் குர்ஆனில் சொல்கிறான் ;

وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ

நீங்கள் ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள், சொல்லிக் கொண்டே இருங்கள் ஏனென்றால்  இவ்வாறு ஞாபகப்படுத்துவது, உபதேசிப்பது முஃமின்களுக்கு பிரயோஜனம் அளிக்கும். [அல்குர்ஆன் : 51 ; 55]

ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்கிற போது ஏற்படுகிற மாற்றம் எதார்த்தமானது, இது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.  மழை வேகமாக பெய்கிறது. அதனால் மிகப்பெரிய பாதிப்பை, பள்ளத்தை உண்டாக்க முடிவதில்லை, ஆனால் ஒரு குழாயிலிருந்து சொட்டு... சொட்டு என விழுந்து கொண்டே இருக்கும். விழுவது சொட்டு தான். ஆனால் தொடர்ந்து விழுவதினால் பாறையையும் கூட அது பள்ளமாக்கி விடும். இதை நாம் பார்க்கத் தான் செய்கிறோம். அதனால் சொல்வார்கள் ; அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.

எனவே தான் குழந்தை பிறந்த உடனே குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் சொல்லப்படுகிறது. [சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது] புரியுமோ புரியாதோ, கவனிக்குமோ கவனிக்காதோ. ஆனால் குழந்தையின் ஆழ் மனது கேட்டுக் கொண்டிருக்கிறது, உள் மனது உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தக் காலத்து இஸ்லாமியத் தாய்மார்கள், குழந்தை அழுதால் அதை தொட்டிலில் போட்டு தாலாட்டும் பொழுது அல்லாஹ்வையும் ரசூலையும் ஞாபகப்படுத்துகிற, கலிமாவையும் ஸலவாத்தையும் மையப்படுத்துகிற தாலாட்டுப் பாடல்களைப் பாடி அதைத் தூங்க வைப்பார்கள். ஆழ் மனது கேட்டு அப்படியே தூங்கி போகும்.

அல்லாஹ்,ரசூலுடைய அந்த வார்த்தையை பிஞ்சாக இருந்த அந்த நேரத்தில் கேட்டது, அது பண்பட்ட குழந்தையாக வளர்வதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

எனவே தான் விளம்பர மேதைகள் சொல்கிறார்கள் ; தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டே இரு! யாரும் கேட்க வில்லையே என்று கவலைப்படாதே! ஏனென்றால் உள் மனது கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.ஆள் மனது அதை ஏற்றுக் கொள்ளும் என்று அவர்களும் கூறுகிறார்கள். தொலைகாட்சியிலும் பத்திரிக்கை யிலும் விளம்பரங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. நாம் கவனிப்பதில்லை, பார்ப்பதில்லை ஆனாலும் திரும்பத் திரும்ப கண்ணிலே படுகிற போது அது ஒரு வகையான பாதிப்பை உண்டாக்காமல் விடுவதில்லை.

இது சர்வதேசப் பண்டம்என்று ஒரு பானத்தைத் தொடர்ந்து விளம்பரம் செய்த காரணத்தினால், “அந்த நாட்டினுடைய பண்டம், பானம் என் நாட்டிற்கு வரக்கூடாதுஎனறு சொன்ன நாட்டிற்கும் அது போய் விட்டது என்று சொன்னால், அது விளம்பரத்தினுடைய யுக்தி மட்டுமல்ல திரும்பத் திரும்பச் சொல்வதினால் ஏற்படுகிற ஒரு சக்தி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜெர்மனுடைய சர்வாதிகாரி தன் சுய சரிதையில் ; பொய்யுக்கும் மெய்யிக்கும் அதிக வித்தியாசமில்லை. ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது. பொய்யை அது பொய்யென்று தெரியாத அளவிற்கு திரும்பத் திரும்ப சொன்னால் அது தான் மெய் என்று அவன் எழுதியிருந்தான்.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னாலே மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று சொன்னால் மெய்யை, உண்மையைத் திரும்பத் திரும்ப சொல்கிற பொழுது அது மிகப் பெரிய குணத்தை உண்டாக்கும் என்பது யதார்த்தமானதும், பயனுள்ளதுமாகும்.

யூதர்கள் தான் இந்த உலகத்தினுடைய சீரழிவிற்குக் காரணம் என்பதை ஜெர்மன் நாட்டிலே கிட்டத்தட்ட 20 வருடம் தொடர்ந்து அவன் சொன்னான். அதை அந்த மக்கள் நம்பினார்கள். உலகில் புத்திசாலித்தனமானவர்கள் வாழ்ந்த நாடு ஜெர்மன். அந்த நாட்டிலே வாழ்ந்த மேதைகள் கூட நம்பினார்கள். ஏன்? திரும்பத் திரும்பச் சொன்ன காரணத்தினால் தான்.

எந்தளவிற்கு என்றால், ஒரு வேளை உலகத்தினுடைய சீரழிவிற்கு நாம் தான் காரணமாக இருப்போமோ! இல்லையென்றால் மேதை களெல்லாம் சொல்லுவார்களா? என்று யூதர்களே நினைக்கின்ற அளவிற்கு அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி மனதிலே பதிய வைத்தான் என்று பார்க்கிறோம்.

அதே போல் இன்று உலகத்திலே மீடியாக்கள் மூலமாக, ஊடகங்கள் வழியாக முஸ்லிம் பயங்கரவாதி என்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் இஸ்லாத்திற்கு எதிராக சொல்லிச் சொல்லி இறுதியில் சில இஸ்லாமிய சகோதரர்கள் கூட அப்படியிருக்குமோ! என்று நினைக்கும் அளவிற்கு அந்தப் பொய்யை திட்டமிட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

(குறிப்பு உதவி : கண்ணியமிகு S.S. அஹ்மது பாகவி ஹழ்ரத் அவர்கள்)

9 comments:

  1. மாஷா அல்லாஹ் தங்களின் கட்டுரை சிறப்பாக உள்ளது , ஒவ்வொரு கட்டுரயையும் பார்த்து வருகிறேன் தங்களின் மார்க்க பணி சிறக்க வாழ்த்துக்கள் பாரக்கல்லாஹ் . மௌலவி ஹாபிழ் சுல்தான் இப்ராஹிம் இன்ஆமி பேஷ்இமாம் பாலக்காடு

    ReplyDelete
  2. இலகுவான எழுத்து நடை ஒரு முறை படித்தாலே மனதில் பதியக்கூடியதாக இருக்கிறது ஒவ்வொரு வாரமும் தங்களின் குறிப்பை எதிர் பார்க்கிறேன் அரசியல் இல்லாத எல்லா இடத்திலும் பேசக்கூடிய கட்டுரைகள் பல கட்டுரைகள் வருகிறது எதை எடுப்பது எதை விடுவது என்ற குழப்பதிலே அந்தஸகட்டுரைகளை படிக்க தோன்றுவதில்லை தங்களின் குறிப்பு சுருக்கமாக சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  3. சம்பவங்கள் இருந்தால்இன்னும்அழகு பெறும்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  4. அக்பர் பைஜிMarch 25, 2023 at 3:07 PM

    இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் பதிவிடுங்கள்

    ReplyDelete
  5. Bulu color illamal woit la pota nalla irukum

    ReplyDelete
  6. இன்ஷா அல்லாஹ் உங்கள் துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ்

    ReplyDelete