Pages

Pages

Saturday, March 16, 2024

இறைவனிடம் கையேந்துங்கள்



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا‌  اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ يُوْرِثُهَا مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌  وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ‏

மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 7:128)

எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சி இருக்க வேண்டும்.காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். அந்த வெற்றியும் அதனைத் தொடர்ந்து மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டுமென்றால் நாம் அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும்.

ஃபிர்அவ்னின் மூலம் எல்லையில்லா தொந்தரவுகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு கொண்டிருந்த பனூ இஸ்ராயீல் கூட்டத்தார்களைப் பார்த்து மூஸா நபி அலை அவர்கள் சொன்ன வார்த்தைகள் தான் இது.

فَهَهُنا أمَرَهم بِشَيْئَيْنِ وبَشَّرَهم بِشَيْئَيْنِ:

أمّا اللَّذانِ أمَرَ مُوسى عَلَيْهِ السَّلامُ بِهِما:

فالأوَّلُ: الِاسْتِعانَةُ بِاللَّهِ تَعالى.

والثّانِي: الصَّبْرُ عَلى بَلاءِ اللَّهِ.

والعاقِبَةُ لِلْمُتَّقِينَ﴾ فَقِيلَ: المُرادُ أمْرُ الآخِرَةِ فَقَطْ، وقِيلَ: المُرادُ أمْرُ الدُّنْيا فَقَطْ، وهو: الفَتْحُ، والظَّفَرُ، والنَّصْرُ

இந்த வசனத்தில் அல்லாஹ் இரண்டு விஷயங்களை ஏவுகிறான். பின்பு இரண்டு விஷயங்களைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான்.

அல்லாஹ் ஏவும் இரு விஷயங்கள்.

1, அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்

2, பொறுமையாக இருங்கள்.

அல்லாஹ் கூறும் இரு நற்செய்திகள்

1, பூமியை அல்லாஹ் சொந்தமாக்கித் தருவான்

2, இறுதி வெற்றி.

இறுதி வெற்றி என்பதில் இரு கருத்துக்கள் உண்டு.

1, மறுமையின் வெற்றி

2, உலகத்தில் கிடைக்கும் வெற்றி.

எனவே ஈருலக வெற்றியும் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டே கிடைக்கும்.

செய்கின்ற எல்லா காரியத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். ஆனால் அந்த வெற்றியை அல்லாஹ் மட்டுமே தர முடியும். வெற்றி அல்லாஹ்வை கொண்டு மட்டுமே சாத்தியப்படும். ஒரு காரியத்தை செய்வது, அதில் வெற்றி பெறுவது, நன்மைகளைச் செய்வது, தீமைகளிலிருந்து விலகி நடப்பது, சோதனைகளில் பொறுமை கொள்வது, சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது, ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவது, நல்ல மரணம் ஏற்படுவது, மரணத்திற்கு பிறகு மண்ணறை வாழ்க்கை சிறப்பாக இருப்பது,மறுமையில் ஈடேற்றம் பெறுவது என அனைத்திற்கும் அல்லாஹ்வின் உதவி அவசியம்.

احرص على ما ينفعك، واستعن بالله، ولا تعجز

உனக்கு எது பயன் தருமோ அதை ஆசைப்படு. அதற்காக அல்லாஹ்விடம் உதவி தேடு. நீ இயலாதவனாக ஆகி விடாதே. (முஸ்லிம் ; 2664)

உதவி தேடுபவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிடைக்கும்.

يقول ابن كثير عليه رحمة الله: كان بقي بن مخلد أحد الصالحين الأخيار عابدًا قانتًا خاشعًا، أتته امرأة صالحة فقالت: يا بقي إن ابني أسره الأعداء في أرض الأندلس وليس لي من مُعين بعد الله إلا ابني هذا، فاسأل الله أن يرد عليَّ ابني وأن يطلقه من أسره. قالت ذلك بقلب صادق موقن خاضع لله تعالى.

فقام بقيٌّ رحمه الله وتوضأ ورفع يديه إلى الحيي الكريم الذي يستحي أن يرد يدي عبده صفرا خائبتين سبحانه وبحمده، دعا الله عز وجل أن يفك أسر ابنها، وأن يجمع شملها بابنها، وأن يفك قيده.وبعد أيام وإذ بابنها يأتي من أرض الأندلس، فتسأله أمه: ما الذي حدث؟ قال في يوم كذا في ساعة كذا - وهي ساعة دعاء بقيٍّ - سقط قيدي من رجلي فأعادوه فسقط، فألحموه فسقط، فذعروا ودهشوا وخافوا وقالوا: أطلقوه، قالت: فعلمت أن ذلك بدعاء صالح من عبد صالح. ﴿ أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ ﴾ [النمل: 62].

அஹ்மது பின் ஹம்பல் ரஹ் அவர்களின் மாணவர்களில் ஒருவரான பகீ பின் முகல்லத் என்ற சாலிஹான மனிதர் ஸ்பெயினில் வாழ்ந்து வந்தார். அவரிடத்தில் ஒரு பெண்மணி வந்து எதிரிகள் என் மகனை சிறை பிடித்து சென்று விட்டார்கள். எனக்கு அவனைத் தவிர உதவியாளனோ பாதுகாவலனோ இல்லை. எனவே என் மகன் விடுதலை பெற்று திரும்பி வர வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள் என்று முறையிட்டாள். உடனே பகீ பின் முகல்லத் ரஹ் அவர்கள் உளு செய்து அவர் திரும்பி வர வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் இறைஞ்சினார்கள். பின்பு உன் மகன் பாதுகாப்பாக திரும்பி வந்து விடுவான் நீ கவலைப்படாமல் செல் என்று கூறி விட்டார்கள். சில நாட்கள் கழித்து அந்த மகன் பாதுகாப்பாக இல்லம் வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்த தாய் ஆச்சரியப்பட்டு எப்படி நடந்தது? நீ எப்படி அவர்களிடமிருந்து மீண்டு வந்தாய் என்று விசாரித்தார். அப்போது அந்த மகன், என்னை சங்கிலியால் கட்டி வைத்திருந்தார்கள். திடீரென்று ஒரு நாள் அந்த சங்கிலி தானாக அவிழ்ந்தது. அவர்கள் மீண்டும் திருப்பி இறுக்கமாகக் கட்டினார்கள். மீண்டும் அவிழ்ந்தது. தானாக அவிழ்வதைப் பார்த்து அவர்கள் திடுக்கிட்டு பயந்து என்னை அனுப்பி விட்டார்கள் என்று சொன்னார். அந்த அதிசயம் நடந்த நாள் எது? நேரம் எது? என்று விசாரித்த போது, பகீ பின் முகல்லத் ரஹ் அவர்கள் துஆ செய்த அதே நாளில் அதே நேரத்திலேயே அந்த அதிசயம் நடந்திருந்ததை உணர்ந்தார்கள்.

ஹழ்ரத் மூஸா அலை அவர்களுக்குப் பின் பனூ இஸ்ரவேலர்களிடையே நீண்ட காலமாக எந்த நபியும் வரவில்லை. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜாலூத் என்ற கொடிய மன்னன் பனூ இஸ்ரவேலர்களை கொடுமைப் படுத்தினான்,,அநியாயமாக அவர்களைக் கொன்று குவித்தான், அவர்களின் பொருட்களை சூரையாடினான். இதனால் அவர்கள் மிகப்பெரும் கொடுமைகளுக்கு உள்ளானார்கள். இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர்களுக்கு ஷம்வீல் என்ற ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி வைத்தான். பனூ இஸ்ரவேலர்கள் அந்த நபியிடம் சென்று எங்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்தித் தர வேண்டும், அந்த அரசனின் துணையோடு அந்த கொடிய மன்னனான ஜாலூத்தோடு போர் புரிய வேண்டும். அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று கேட்டார்கள். அந்த நபியும் அதை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அல்லாஹுத்தஆலா தாலூத் அரசரை அவர்களுக்குக் கொடுத்தான். தாலூத் மன்னர் சுமார் 70,000 மக்களை ஒன்று திரட்டி போருக்காக ஆயத்தமானார். மக்களே! நீங்கள் ஜாலூத்தை வெல்லப் புறப்படுகிறீர்கள். வழியில் அல்லாஹ்வின் சோதனை ஏற்படும். அந்த நேரத்தில் என் சொற்படி நடந்தால் தான் வெற்றி பெற முடியும். பாலைவனப் பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்லும் போது தண்ணீர் தாகமெடுத்து நாவெல்லாம் வரண்டு போகும். பாலஸ்தீனுக்கும் ஜோர்டானுக்கும் இடையே ஒரு ஆறு ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதன் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். அதிலிருந்து நீங்கள் ஒரு மிடறுக்கு மேல் குடிக்க கூடாது. மீறி அதிகமாகக் குடித்தால் எங்கள் கூட்டத்தை விட்டு விலகி விடுவீர்கள் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி அந்த ஆறு வந்தது. அந்த தண்ணீரை சொற்ப நபர்களைத் தவிர அனைவரும் வயிறு முட்ட குடித்தார்கள். அதனால் எழுந்திருத்து நடக்க முடியாமல் ஆகி விட்டார்கள்.

அந்த சொற்ப நபர்கள் மட்டுமே அந்த ஆற்றைக் கடந்து போனார்கள். ஆனால் அங்கே ஜாலூத் மன்னனையும் பிரமாண்டமான அவனது படையையும் பார்த்து இவர்களை சந்திப்பதற்கு எங்களுக்கு ஆற்றல் கிடையாது என்று பயந்தார்கள். பனூ இஸ்ரவேலர்களிடையே ஜாலூத்தைக் கொல்பவருக்கு எனது மகளை மணமுடித்து தருவேன் மட்டுமல்ல, எனது ஆட்சியில் சரிபாதியைத் தருவேன் என்று தாலூத் சொன்னார். ஆனாலும் யாரும் முன் வரவில்லை. ஹள்ரத் தாவூத் அலை அவர்கள் மட்டும் ஜாலூத்தை சந்திப்பதற்கு முன் வந்தார்கள். சிறிய கல்லைக் கொண்டே அவனை வீழ்த்தினார்கள். அதன் பிறகு இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என்பது வரலாறு

இந்த நிகழ்வில் தாலூத்தின் மக்கள் துஆ  செய்தார்கள். அதை அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான்.

لما برزوا لجالوت وجنوده:[قالوا ربنا أفرغ علينا صبرًا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين]

 

ஜாலூத்தையும் அவன் படைகளையும் களத்தில் சந்திக்க அவர்கள் முன்னேறிச் சென்ற போது எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 2 ; 250)

அந்த நேரத்தில் அவர்கள் செய்த அந்த துஆவே அவர்களுக்கு வெற்றியைத் தந்தது.

وقال عباس الدوري: حدثنا علي بن أبي فزارة جارنا قال: "كانت أمي مقعدة من نحو عشرين سنة، فقالت لي يوماً: اذهب إلى أحمد بن حنبل فسله أن يدعو لي، فأتيت، فدقّقت عليه وهو في دهليزه، فقال: من هذا؟ قلت: رجل سألتني أمي وهي مقعدة أن أسألك الدعاء، فسمعت كلامه كلام رجل مغضب فقال: نحن أحوج أن تدعو الله لنا، فوليت منصرفاً، فخرجت عجوز فقالت: قد تركته يدعو لها، فجئت إلى بيتنا ودققت الباب، فخرجت أمي على رجليها تمشي

இமாம் அஹ்மது பின் ஹம்பல் ரஹ் அவர்களின் காலத்தில் ஒரு பெண் கால் ஊனமாக இருந்தாள். சுமார் 20 வருடங்களாக சிகிச்சை செய்தும் எந்தப் பலனும் இல்லை. அவர் தன் மகனிடம் இமாமிடத்தில் சென்று எனக்காக துஆ செய்யும்படி சொல் என்றாள். அவனும் சென்று சொன்னான்.சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினான். அவனுடைய அந்த தாய் நடந்து வந்து கதவைத் திறந்தாள்.

நெருக்கடிகளும் சோதனைகளும் நிறைந்த இந்த காலத்தில்  அல்லாஹ்விடமே உதவி தேடுவோம்.

2022 ஸுஜூத்

2023 இஃராஃப்

வாஹிதிகள் பேரவை பெருமை

No comments:

Post a Comment