Pages

Pages

Sunday, March 17, 2024

சிரிப்பு - அழுகை

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

فَلْيَـضْحَكُوْا قَلِيْلاً وَّلْيَبْكُوْا كَثِيْرًا‌  جَزَآءً بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏

எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும். (அல்குர்ஆன் : 9:82)

சிரிப்பு மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற மிக அற்புதமான கொடை. உலகில் சிரித்து தன் உள்ளத்தில் இருக்கிற மகிழ்ச்சியை சந்தோஷத்தை வெளிப்படுத்தி வாழும் ஒரே இனம் மனிதன் மட்டும் தான். மனிதன் சிரிக்கத் தெரிந்த விலங்கு என்று பேச்சு வழக்கில் குறிப்பிடப்படுவதுண்டு.  சிரிப்பதற்கென்றே சில நாடுகளில் அமைப்புகள் உள்ளன. சிரிப்பு யோகா கூட உள்ளது.

laughter is the best medicine  

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்று சொல்வார்கள்.

சிரிப்பு பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.சிரித்து வாழ்வதினால் உள்ளத்தில் இருக்கிற தேவையில்லாத அச்சம் பயம் நீங்குகிறது. மனஇருக்கம் குறைகிறது. ஷுகர் நோய் கன்ட்ரோலில் இருக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

ஷுகர் பேஷன்ட்களை இரண்டு பிரிவாக பிரித்து ஆய்வு நடத்தியதில் திகிலான விஷயங்களை பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு ஷுகர் கூடியிருந்தது. சிரித்து பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு கன்ட்ரோலில் இருந்தது. இதுவெல்லாம் சிரிப்பு குறித்து உலகத்தின் பார்வை.

சிரிக்கும் தன்மையை அல்லாஹ்வே மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறான்.

وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰىۙ

அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். (அல்குர்ஆன்: 53:43,)

 

மறுமை நாளில் நல்லவர்களுக்கு இறைவன் அளிக்கும் பாக்கியங்களில் ஒன்று சிரிப்பு.

وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ 

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ‏

அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் ; 80 38,39)

இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் எறும்பு பேசியதைக் கேட்டு சிரித்ததாக குர்ஆன் கூறுகிறது.

حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது ”எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும் அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். ”என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!” என்றார். (அல்குர்ஆன்: 27:18)

 

நபி அவர்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார்கள். தன் தோழர்களோடு சிரிந்து மகிழ்ந்த தருணங்களும் நிறைய உண்டு.

قَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّه

مَا حَجَبَنِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مُنْذُ أَسْلَمْتُ وَلاَ رَآنِى إِلاَّ ضَحِكَ

நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அவர்கள் என்னை விட்டு மறைந்து (மறுபடியும்) என்னைக் கண்டால் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை என்று ஜரீர் பின் அப்துல்லாஹ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்லிம் ; 4880)

 

عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَال

قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لاَ يَقُومُ مِنْ مُصَلاَّهُ الَّذِى يُصَلِّى فِيهِ الصُّبْحَ أَوِ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِى أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ

சிமாக் பின் ஹர்ப் அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழ மாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக்காலம் குறித்து பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள். (முஸ்லிம் ; 1188)

 

வாழ்க்கையில் சிரிப்பு அவசியம் இருக்க வேண்டும். ஒரு பக்கம் அழுகை தொழுகை, மறுமை சிந்தனை, மரண சிந்தனை, இதுவெல்லாம் இருந்தாலும் இன்னொரு பக்கம் சிரிப்பும் இருக்க வேண்டும். இஸ்லாம் அதைத் தடை செய்ய வில்லை.

أنَّ حَنْظَلةَ الأُسَيْديَّ -وكان مِن كُتّابِ رسولِ اللهِ ﷺ- قال: لَقِيَنِي أَبُو بَكْرٍ، فَقالَ: كيفَ أَنْتَ يا حَنْظَلَةُ؟ قالَ: قُلتُ: نافَقَ حَنْظَلَةُ، قالَ: سُبْحانَ اللهِ! ما تَقُولُ؟ قالَ: قُلتُ: نَكُونُ عِنْدَ رَسُولِ اللهِ ﷺ يُذَكِّرُنا بالنّارِ والْجَنَّةِ حتّى كَأنّا رَأْيُ عَيْنٍ، فَإِذا خَرَجْنا مِن عِندِ رَسُولِ اللهِ ﷺ، عافَسْنا الأزْواجَ والأوْلادَ والضَّيْعاتِ، فَنَسِينا كَثِيرًا، قالَ أَبُو بَكْرٍ: فَواللَّهِ إنّا لَنَلْقى مِثْلَ هذا، فانْطَلَقْتُ أَنا وَأَبُو بَكْرٍ حتّى دَخَلْنا على رَسُولِ اللهِ ﷺ، قُلتُ: نافَقَ حَنْظَلَةُ، يا رَسُولَ اللهِ، فَقالَ رَسُولُ اللهِ ﷺ: وَما ذاكَ؟ قُلتُ: يا رَسُولَ اللهِ، نَكُونُ عِنْدَكَ، تُذَكِّرُنا بالنّارِ والْجَنَّةِ حتّى كَأنّا رَأْيُ عَيْنٍ، فَإِذا خَرَجْنا مِن عِندِكَ، عافَسْنا الأزْواجَ والأوْلادَ والضَّيْعاتِ، نَسِينا كَثِيرًا، فَقالَ رَسُولُ اللهِ ﷺ: والَّذِي نَفْسِي بيَدِهِ، إنْ لَوْ تَدُومُونَ على ما تَكُونُونَ عِندِي وفي الذِّكْرِ، لَصافَحَتْكُمُ المَلائِكَةُ على فُرُشِكُمْ وفي طُرُقِكُمْ، وَلَكِنْ يا حَنْظَلَةُ ساعَةً وَساعَةً، ثَلاثَ مَرّاتٍ.

ஹன்ளலா (ரலி) அவர்கள் நபி அவர்களுடைய எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார்கள். அவர்கள் கூறுகிறார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னை சந்தித்து ஹன்ளலாவே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நான், ஹன்ளலா நயவஞ்சகராக ஆகிவிட்டார் என்று கூறினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ் தூய்மையானவன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நான், நாம் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில் இருக்கும் போது அவர்கள் நமக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டுகிறார்கள். எந்த அளவிற்கென்றால் கண்கூடாக (அவற்றை) நாம் காண்வதைப் போல் (மார்க்க சிந்தனையில் இருக்கிறோம்). அல்லாஹ்வின் தூதர் அவர்களிடமிருந்து பிரிந்து வந்துவிட்டால் மனைவிமார்களுடனும் குழந்தை களுடனும் விளையாடுகிறோம். வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விசயங்களை மறந்துவிடுகிறோம் என்று கூறினேன்.

 

அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாமும் இப்படித் தான் இருக்கிறோம் என்று கூறினார்கள். ஆகையால் நானும் அபூபக்கர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் வந்தோம். நான் அல்லாஹ்வின் தூதரே ஹன்ளலா நயவஞ்சகனாகிவிட்டான் என்று கூறினேன். அதற்கு அவர்கள் என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டும் போது கண்கூடாக (சொர்க்கம் நரகத்தை) காணுவதைப் போன்ற நிலையில் உங்களிடத்தில் இருக்கிறோம். ஆனால் உங்களிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டால் மனைவிமக்களுடன் விளையாட ஆரம்பித்துவிடுகிறோம். வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விசயங்களை மறந்துவிடுகிறோம் என்று கூறினேன்.

 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக என்னிடத்தில் நீங்கள் இருப்பதைப் போன்றும் இறைதியானத்திலும் நீங்கள் எப்போது திளைத்திருந்தால் வானவர்கள் (போட்டி போட்டுக்கொண்டு) நீங்கள் உறங்கச் செல்லும் இடங்களிலும் செல்லும் வழிகளிலும் உங்களிடத்தில் கை கொடுப்பார்கள்.

எனவே ஹன்ளலாவே சிறிது நேரம் (மார்க்க விசயங்களில் கவனத்தைச் செலுத்துங்கள்) சிறிது நேரம் (மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்) என்று மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம் ; 2750)

 

பெருமானார் அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி மகிழ்ச்சியும் நகைச்சுவையும் நிறைந்தது.

أَنَّ رَجُلاً أَتَى النَّبِىَّ -صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ احْمِلْنِى. قَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ ». قَالَ وَمَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- وَهَلْ تَلِدُ الإِبِلَ إِلاَّ النُّوقُ

ஒரு மனிதர் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே (வாகனத்தில்) என்னை ஏற்றிவிடுங்கள் என்று கூறினார். அதற்கு நபி அவர்கள் ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றிவிடுவோம் என்று கூறினார்கள். அம்மனிதர் ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே) என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் (எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத்தானே இருக்கின்றன? (அபூதாவூது ; 4998)

 

وَكَانَ الصَّحَابَةُ يَضْحَكُونَ، إِلَّا أَنَّ الْإِكْثَارَ مِنْهُ وَمُلَازَمَتَهُ حَتَّى يَغْلِبَ عَلَى صَاحِبِهِ مَذْمُومٌ مَنْهِيٌّ عَنْهُ قرطبي

நபி அவர்கள் சிரித்திருக்கிறார்கள். அருமை ஸஹாபாக்கள் சிரித்திருக்கிறார்கள். எனவே சிரிப்பது தவறல்ல, ஆனால் அளவு கடந்து சிரிப்பது, அதையே வழமையாக்கிக் கொள்வது கூடாது. ஏனெனில் அதிகம் சிரித்தால் உள்ளம் மரணித்து விடும்.

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهنّ أو يعلمهنّ من يعمل بهنّ؟)، قال أبو هريرة: فقلت أنا يا رسول الله، فأخذ بيدي فعدّ خمسًا، قال: (اتّق المحارم تكُن أعبدَ النّاس، وارضَ بما قسَم الله لك تكُن أغنى النّاس، وأَحسن إلى جارك تكُن مؤمنًا، وأحِبّ للنّاس ما تحبّ لنفسك تكن مُسلمًا، ولا تُكثر الضّحك فإنّ كثرةَ الضّحك تُمِيتُ القلب) رواه أحمد، والتّرمذي، وحسّنه الألباني.

 

ஒரு முறை நபி அவர்கள் தன்னுடைய தோழர்களை நோக்கி தோழர்களே! நான் இங்கு சில அறிவுரைகளை சொல்ல விரும்புகிறேன். என்னிடமிருந்து அதை பெற்றுக்கொண்டு செயல்படுத்துவது யார் அல்லது செய்பவருக்கு அதனைக் கற்றுக் கொடுப்பவர் யார் என்று கேட்டார்கள். நான் என்று கூறினேன். உடனே நபியவர்கள் என் கையைப் பிடித்து ஐந்து விஷயங்களை எண்ணிச் சொன்னார்கள்.

அல்லாஹ் எதை ஹராமாக ஆக்கியிருக்கின்றானோ அவற்றைச் செய்யாமல் தவிர்ந்திருங்கள். மக்களிலே மிகப்பெரும் வணக்க சாலியாகிவிடுவீர். அல்லாஹ் உமக்கு எதை (முடிவுசெய்து) பங்கு வைத்து தந்தானோ அதை பொருந்திக் கொள். நீதான் பெரும் செல்வந்தன். உன் அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள். அப்பொழுது.தான் நீ உண்மையான முஃமினாக ஆகுவாய். உமக்கு எதை விரும்புகிறாயோ அதையே மற்ற மக்களுக்கும் நீ விரும்பு. அவ்வாறு செய்தால் நீ உண்மையான முஸ்லிமாக ஆகி.விடுவாய். அதிகம் சிரிக்காதீர் அதிகம் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்து விடும் என்றார்கள். (இப்னுமாஜா ; 4217) 

 

ஸஹாபாக்களின் அழுகை

 

خَطَبَ رَسولُ اللَّهِ ﷺ خُطْبَةً ما سَمِعْتُ مِثْلَها قَطُّ؛ قالَ: لو تَعْلَمُونَ ما أعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، ولَبَكَيْتُمْ كَثِيرًا، قالَ: فَغَطّى أصْحابُ رَسولِ اللَّهِ ﷺ وُجُوهَهُمْ، لهمْ خَنِينٌ، فَقالَ رَجُلٌ: مَن أبِي؟ قالَ: فُلانٌ، فَنَزَلَتْ هذِه الآيَةُ: ﴿لا تَسْأَلُوا عَنْ أَشْياءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ﴾ [المائدة: ١٠١].

இறைத்தூதர் அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், ‘நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது இறைத்தூதர் அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி அவர்கள், ‘இன்னார்” என்று கூறினார்கள். அப்போது தான் ‘இறை நம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் இந்த (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனம் அருளப்பட்டது.  (புகாரி ; 4621)

அபூபக்கர் ரலி அவர்களின் அழுகை

أنَّ عَائِشَةَ زَوْجَ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، قالَتْ: ثُمَّ بَدَا لأبِي بَكْرٍ، فَابْتَنَى مَسْجِدًا بفِنَاءِ دَارِهِ، فَكانَ يُصَلِّي فيه ويَقْرَأُ القُرْآنَ، فَيَقِفُ عليه نِسَاءُ المُشْرِكِينَ وأَبْنَاؤُهُمْ، يَعْجَبُونَ منه ويَنْظُرُونَ إلَيْهِ، وكانَ أبو بَكْرٍ رَجُلًا بَكَّاءً، لا يَمْلِكُ عَيْنَيْهِ إذَا قَرَأَ القُرْآنَ، فأفْزَعَ ذلكَ أشْرَافَ قُرَيْشٍ مِنَ المُشْرِكِينَ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

ஒரு பள்ளி கட்ட வேண்டும் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தோன்றிய போது தமது வீட்டின் வெளிப்புறத்தில் பள்ளி ஒன்றைக் கட்டினார்கள். அதில் தொழுது கொண்டும் குர்ஆன் ஓதிக் கொண்டும் இருப்பார்கள். இணை வைப்பவர்களின் பெண்களும், குழந்தைகளும் அவர்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அபூபக்ர் மிகுதியாக அழுபவராக இருந்தார். குர்ஆனை ஓதும் போது அவரால் தமது கண்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. இணை வைக்கும் குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. (புகாரி ; 3905)

2022 வேதனையைத் தடுக்கும் இரண்டு

2023 பிளவு ஆபத்தானது

வாஹிதிகள் பேரவை இறைஇல்லங்கள்

No comments:

Post a Comment