Saturday, April 9, 2022

வேதனையைத் தடுக்கும் இரண்டு

 

وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏

ஆனால், நீங்கள் அவர்களுக்கிடையில் இருக்கும் வரையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான். அன்றி,  அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். (அல்குர்ஆன் : 8:33)

அல்லாஹ்வுடைய கோபத்தையும் வேதனையையும் விட்டும் மக்கள் தங்கள் பாதுகாத்துக் கொள்வதற்கான 2 வழிமுறைகளை அல்லாஹ் கூறுகிறான். 1, நபி ஸல் அவர்கள் அந்த மக்களோடு இருப்பது. நபியவர்களைக் குறித்து الا رحمة للعالمين என்று கூறுகிறான். எனவே நபியவர்கள் ரஹ்மத்தானவர்கள், அருளானவர்கள்.

அவர்கள் மக்களிடையே இருக்கும் வரை அந்த மக்களுக்கு அல்லாஹ் வேதனையை இறக்குவதில்லை. அவர்களும் அனுமதிப்பதில்லை.

ஒரு கட்டத்தில் மக்கத்துக் காஃபிர்களால் மாநபிக்கு சிரமங்கள் கட்டுக்கடங்காமல் போன போது அல்லாஹ் மலக்கை அனுப்பி வைத்தான்.

فنظرت فإذا فيها جبريل ، فناداني فقال : إن الله قد سمع قول قومك لك ، وما ردوا عليك ، وقد بعث الله إليك ملك الجبال ، لتأمره بما شئت فيهم ، فناداني ملك الجبال ، فسلم علي ، ثم قال : يا محمد ، فقال : ذلك فيما شئت ، إن شئت أن أطبق عليهم الأخشبين ؟ فقال النبي صلى الله عليه وسلم : بل أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله وحده ، لا يشرك به شيئاً ) رواه البخاري

ஜிப்ரயீல் அவர்கள் என்னை ஒருநாள் அழைத்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களது சமூகம் உங்களைப் பார்த்து சொன்ன வார்த்தைகளை அல்லாஹ் கேட்டான். உங்களுக்கு அவர்கள் கொடுத்த பதிலையும் அல்லாஹ் கேட்டு விட்டான். மலைகளின் பொறுப்புதாரியாக இருக்கக்கூடிய ஒரு மலக்கை உங்களிடத்தில் அல்லாஹ் அனுப்பியுள்ளான். அவர்கள் விஷயத்தில் நீங்கள் விரும்புவதை அவருக்கு நீங்கள் உத்தரவிடலாம் என்று சொன்னார்கள். அந்த மலக்கு என்னை அழைத்து எனக்கு சலாம் சொன்னார். பின்பு முஹம்மதே! நீங்கள் விரும்பியதை செய்வதற்கு நான் வந்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் அவர்களை இரு மலைகளைக் கொண்டு மூடி நசுக்கி விடுகிறேன் என்று சொன்னார். அப்போது நபி ஸல் அவர்கள் இல்லை, அவர்களது சந்ததிகளில் இருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடிய அவனுக்கு இணை வைக்காத ஒரு கூட்டத்தை அல்லாஹ் வெளியாக்குவான் என்று நான் நம்புகிறேன் என்றார்கள். (புகாரி ; 3231)

எனவே அவர்கள் இருப்பது ரஹ்மத்துக்கான அடையாளம். எனவே அவர்கள் இருந்தால் அல்லாஹ் வேதனையை இறக்குவதில்லை

 

2 இஸ்திக்ஃபார். பாவமன்னிப்பும் ஒரு சமூகத்திற்கு வரும் வேதனையைத் தடுக்கிறது.

வேதனையைத் தடுக்கிற இந்த 2 ல் முதல் விஷயம் நபி  ஸல் அவர்கள் உடன் இருப்பது. அவர்கள் மறைமுகமாக இன்றும் மதீனத்து மண்ணில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நம்மிடையே இல்லை. எனவே இப்போது வேதனைத் தடுப்பதற்காக நம்மிடம் இருப்பது இஸ்திக்ஃபார் தான்.

قال ابن عباس : إن الله جعل في هذه الأمة أمانين لا يزالون معصومين مجارين من قوارع العذاب ما داما بين أظهرهم : فأمان قبضه الله إليه ، وأمان بقي فيكم ، قوله : ( وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون )

அல்லாஹுத்தஆலா இந்த சமூகத்திற்கு இரண்டு பாதுகாப்பை தந்திருக்கிறான். அவ்விரண்டும் அந்த சமூகத்திற்கு இடையில் இருக்கும் வரை அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்கள் பாதுகாக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அதில் ஒரு பாதுகாப்பை அல்லாஹ் தன் வசம் எடுத்துக் கொண்டான். இன்னொரு பாதுகாப்பு உங்களுக்கிடையே இருக்கிறது என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் தருவார்கள்.

 

كان رجل من العرب في زمن النبي صلى الله عليه وسلم مسرفا على نفسه ، لم يكن يتحرج ; فلما أن توفي النبي صلى الله عليه وسلم لبس الصوف ورجع عما كان عليه ، وأظهر الدين والنسك . فقيل له : لو فعلت هذا والنبي صلى الله عليه وسلم حي لفرح بك . قال : كان لي أمانان ، فمضى واحد وبقي الآخر ; قال الله تبارك وتعالى : وما كان الله ليعذبهم وأنت فيهم فهذا أمان . والثاني وما كان الله معذبهم وهم يستغفرون .

 

நமக்கு வரும் வேதனையை தடுப்பதற்காக நமக்கு வழங்கப் பட்டிருக்கும் ஒரே சந்தர்ப்பம் இஸ்திக்ஃபார் மட்டும் தான்.

நாம் செய்யக்கூடிய பாவ மன்னிப்பு நமக்கு வருகின்ற வேதனைகளை சோதனைகளை அல்லாஹ்வின் கோபத்தை அல்லாஹ்வின் அதிர்ப்தியான சூழ்நிலைகளை தடுக்கிறது.

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " مَنْ لَزِمَ الاِسْتِغْفَارَ ، جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجاً ، وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجاً ، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لاَ يَحْتَسِبُ " .

யார் பாவமன்னிப்பை அவசியமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹுத்தஆலா எல்லா கவலைகளிலிருந்து மகிழ்ச்சியையும் எல்லா நெருக்கடியிலிருந்து வெளியேறும் வழியையும் அவருக்குக் கொடுத்து விடுகிறான். மேலும் அவர் அறியாத புறத்திலிருந்து அவருக்கு ரிஜ்க் அளிக்கிறான். (ஷரஹுஸ் ஸுன்னா ; 1296)

عن سعيد بن جبير قال: لما أرسل يونس إلى قومه يدعوهم إلى الإسلام وترك ما هم عليه. قال: فدعاهم فأبوا، فقيل له: أخبرهم أن العذاب مصبِّحهم، فقالوا: إنا لم نجرب عليه كذبًا ، فانظروا، فإن بات فيكم فليس بشيء ، وإن لم يبت فاعلموا أن العذاب مصبحكم. فلما كان في جوف الليل أخذ عُلاثَةً فتزوّد منها شيئًا ، (11)ثم خرج، فلما أصبحوا تغشَّاهم العذاب ، كما يتغشَّى الإنسان الثوبَ في القبر، ففرقوا بين الإنسان وولده ، وبين البهيمة وولدها، ثم عجُّوا إلى الله فقالوا: آمنا بما جاء به يونس وصدّقنا! فكشف الله عنهم العذاب، فخرج يونس ينظر العذاب فلم ير شيئًا ، قال: جَرَّبوا عليّ كذبًا! فذهب مغاضبًا لربه حتى أتى البحر.

ஹஜரத் யூனுஸ் நபி அவர்கள் அவர்களது சமூகத்தை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார்கள். அவர்கள் ஏற்க மறுத்தார்கள். ஒரு கட்டத்தில் அல்லாஹ்வின் வேதனை உங்களுக்கு காலையில் வந்து விடும் என்று சொன்னார்கள். அப்போது அந்த மக்கள் யூனுஸ் இதுவரை நம்மிடம் பொய்யுரைத்து நாம் பார்த்ததில்லை. காலையில் வேதனை வரும் என்று சொல்லுகிறார் என்றால் அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும். அவர் இரவு நம்மிடையே இருக்கிறாரா என்று பார்ப்போம். நம்மிடையே தங்கினால் பிரச்சனை இல்லை. இங்கிருந்து அவர் கிளம்பி விட்டால் நிச்சயம் அல்லாஹ்வின் வேதனை வந்து விடும் என்று சொன்னார்கள். அவர்கள் நினைத்தது போலவே யூனுஸ் நபி அவர்கள் இரவிலேயே ஊரை விட்டும் கிளம்பி விட்டார்கள். காலையில் அவர்களுக்கு வேதனையின் அடையாளம் தெரிந்தது. அத்தனை பேரும் நாங்கள் ஈமான் கொண்டு விட்டோம். நாங்கள் தவ்பா செய்கிறோம் என்று சொன்னார்கள். அல்லாஹுத்தஆலா அவர்களது தவ்பாவை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வர இருந்த வேதனையை நீக்கினான்.

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِيْمَانُهَاۤ اِلَّا قَوْمَ يُوْنُسَ  لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ‏

தங்களுடைய நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) "யூனுஸ்" உடைய மக்களைப் போல மற்றொரு ஊரார் இருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கவும் அவர்களை நாம் விட்டு வைத்தோம். (அல்குர்ஆன் : 10:98)

قال  عمر بن عبد العزيز  : " أيها الناس مَن ألمَّ بذنبٍ فليستغفر الله وليتب ، فإن عاد فليستغفر الله وليتب ، فإن عاد فليستغفر وليتب ، فإنما هي خطايا مطوَّقة في أعناق الرجال ، وإن الهلاك في الإصرار عليها "

உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் மக்களே உங்களில் ஒருவர் பாவம் செய்து விட்டால் உடனே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கட்டும். அவன் அவரை மன்னித்து விடுவான். மீண்டும் பாவம் செய்தால் மறுபடியும் பாவ மன்னிப்பு கேட்கட்டும். அல்லாஹ் மீண்டும் அவரை மன்னிப்பான். மீண்டும் பாவம் செய்து மன்னிப்புக் கேட்டாலும் அவரை அல்லாஹ் மன்னித்து விடுவான். யார் பாவம் செய்து விட்டு மன்னிப்பு கேட்காமல் அதிலேயே நீடித்திருக்கிறாரோ அவருக்கு அழிவு ஏற்படும் என்றார்கள்.

பாவமன்னிப்பால் இறையன்பைப் பெற முடியும்.

إِنَّ اللهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ المُتَطَهِّرِينَ

நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து வருந்தி மீளுபவர்களையும் பரிசுத்தமானவர்களையும் விரும்புகிறான். (அல்குர்ஆன் ; 2  : 222)

قال بعض العلماء: «دعوتُ الله سبحانه وتعالى ثلاثين سنة أن يرزقني توبةً نصوحاً ثم تعجبتُ في نفسي وقلت: سبحان الله، حاجةٌ دعوتُ اللهَ فيها ثلاثين سنة فما قُضيت إلى الآن، فرأيت فيما يرى النائم قائلاً يقول لي: أتعجبُ من ذلك؟ أتدري ماذا تسألُ الله تعالى؟ إنما تسأله سبحانه أن يحبك، أما سمعت قول الله تعالى (إِنَّ اللهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ المُتَطَهِّرِينَ ) [البقرة:222](5).

 

ஒரு அறிஞர் கூறுகிறார் ;  நான் அல்லாஹ்விடம் முப்பது ஆண்டுகளாக தவ்பா செய்து வருகிறேன். மேலும்  அல்லாஹ்விடம் ஒரு தேவையையும் முப்பதாண்டுகளாக கேட்டு வருகிறேன்.ஆனால் இதுவரை அது எனக்கு நிறைவேற வில்லை. ஒருநாள் கனவில் ஒருவர் வந்து நீ ஏன் ஆச்சரியப்படுகிறாய்? நீ அல்லாஹ்விடம் என்ன கேட்டாய்? அவனின் அன்பைக் கேட்டாய்.அல்லாஹ் உன் மீது அன்பு வைத்து விட்டான் என்பதற்கு அடையாளமே அவனிடம் நீ தவ்பா செய்வது தானே. நிச்சயமாக அல்லாஹ் தவ்பா செய்பவர்களை நேசிக்கிறான் என்று குர்ஆனில் இல்லையா? என்றார்.

அதிகம் இஸ்திக்ஃபார் செய்பவர்களுக்கு மன்னிப்பு மட்டுமல்ல இன்னும் ஏராளம் நிஃமத்துக்களை அல்லாஹ் கொடுக்கிறான்.

شكا رجل إلى الحسن الجدوبة : فقال له : استغفر الله، وشكا آخر إليه الفقر فقال له : استغفر الله وقال له آخر : ادع الله أن يرزقني ولداً فقال له : استغفر الله، وشكا إليه آخر جفاف بستانه، فقال له : استغفر الله، فقال له الربيع بن صبيح أتاك رجال يشكون أنواعاً فأمرتهم كلهم بالاستغفار ! فقال : ما قلت من عندي شيئاً ! إن الله عز وجل يقول في سورة نوح : " قُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا * يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا * وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا

ஒருவர் இமாம் ஹஸன்பஸரி ரஹ் அவர்களிடம் வந்து பாவத்தை முறையிட்டார்.தவ்பா செய்யுங்கள் என்றார்கள். இன்னொருவர் வந்து,தன் ஊரில் மழை பொழிய வேண்டும் என்றார். அவருக்கும் தவ்பா செய்யுங்கள் என்றார்கள். மூன்றாவது ஒருவர் வந்து,வறுமை நீங்க என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அவருக்கும் தவ்பா செய்யுங்கள் என்றார்கள். நான்காவதாக ஒருவர் வந்து,குழந்தை இல்லை.குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்றார். அவருக்கும் தவ்பா செய்யுங்கள் என்று கூறினார்கள். அதை பார்த்துக் கொண்டிருந்த ரபீஃ என்பவர் வெவ்வேறு தேவையுடன் வந்த நான்கு நபர்களுக்கும் ஒரே பதிலை சொல்கிறீர்களே?என்று கேட்ட போது ஹ்ஸன் ரஹ் அவர்கள் இதை நான் சொல்ல வில்லை, அல்லாஹ் சொல்கிறான் என்று கூறி நூஹ் அத்தியாயத்தின் இந்த வசனங்களை ஓதிக் காட்டினார்கள். (அல்ஜாமிவு லி அஹ்காமில் குர்ஆன்)

2 comments: