Sunday, April 10, 2022

நம் அமல்களை இறைவன் மட்டுமா பார்க்கிறான் ?

 

وَقُلِ اعْمَلُوْا فَسَيَرَى اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ وَالْمُؤْمِنُوْنَ‌ وَسَتُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‌‏

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். அன்றி மறைவானவற்றையும், வெளிப்படையான வற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான். (அல்குர்ஆன் : 9:105)

وقل اعملوا فسيرى الله عملكم) نص بليغ جامع للترغيب والترهيب؛ وذلك لأن المعبود إذا كان لا يعلم أفعال العباد لم ينتفع العبد بفعله؛ لأنه لن يجازيه، لعدم علمه بما عمله العبد،

இந்த வசனத்தில் இறைவன் பார்க்கிறான். நீங்கள் நற்காரியங்களை செய்யுங்கள். அவன் உங்களுக்கு அதற்கு தகுந்த கூலியைத் தருவான் என்ற ஆர்வமூட்டுதலும் இருக்கிறது. இறைவன் பார்த்துக் கொண்டிருக் கிறான். நீங்கள் அவனுக்கு மாறு செய்யாதீர்கள். உங்களை அவன் தண்டிப்பான் என்ற எச்சரிக்கையும் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அடியார்கள் செய்யும் காரியங்களைப் பார்த்தால் தால் கூலியும் தண்டனையும் கொடுக்க முடியும். எனவே பார்வை என்பது இறைவனுடைய மிக முக்கியமான தன்மைகளில் ஒன்று.

يَا أَبَتِ لِمَ تَعْبُدُ مَا لا يَسْمَعُ وَلا يُبْصِرُ وَلا يُغْنِي عَنْكَ شَيْئًا

எதையும் கேட்காத எதையும் பார்க்காத ஒன்றை நீங்கள் ஏன் வணங்குகிறீர்கள் என்று இப்ராஹீம் அலை அவர்கள் கேட்டார்கள்.

اعْمَلُوا مَا شِئْتُمْ إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

நீங்கள் விரும்பியதை செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவற்றை அவன் உற்று நோக்குபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 41 ; 40)

நம்மைப் படைத்த எல்லாம் ரப்புல் ஆலமீன் நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு நமக்கு இருக்க வேண்டும். அந்த உணர்வு இருந்தால் நம்மிடம் நன்மைகள் அதிகமாகும். பாவங்கள் குறைந்து விடும்.

أتى رجل إبراهيم بن أدهم رحمه الله تعالى فقال: يا أبا إسحاق، إنـي مـسرفٌ على نفسي، فاعرضْ عليَّ ما يكون به زجرٌ ووعظٌ لها!!

فقال: إن قبلتَ مني خمسَ خصال وقَدِرْتَ عليها لم تضرَّكَ المعصيةُ ما حييت.

قال الرجل: هاتِ يا أبا إسحاق.

قال: أما الأولى: فإذا أردتَ أن تعصيَ الله تعالى، فلا تأكلْ مِن رزقه!!

قال الرجل: فمن أين آكلُ إذاً، وكلُّ ما على الأرض مِن رزقِ الله تعالى؟؟

قال: يا هذا، أفيحسنُ بك أن تأكلَ مِن رزقهِ وتعصِيَهُ أيضاً!!!

قال الرجل: لا والله..، هاتِ الثانية.

قال: وإذا أردتَ أن تعصِيَهُ على أرضٍ، فلا تسكنْ شيئاً مِن بلاده.

قال الرجل: هذه أعظم، فأينَ أسكُن، والأرضُ والبلادُ كلُّها لله تعالى!!!

قال: يا هذا، أفيحسُنُ بك أن تأكلَ مِن رزقهِ، وتسكن أرضَهُ، ثم أنت بعد ذلك تعصيه!!

قال الرجل: لا والله..، هاتِ الثالثة.

قال: وإذا أردتَ أن تعصيهُ وأنت تأكلُ مِن رزقهِ، وتسكنُ بلادَهُ، فانظر مكاناً لا يراك فيه، فاعصِه فيه؟؟!!

قال الرجل: يا إبراهيم!! ما هذا، وكيف يكونُ ذلك والله مطلعٌ على السرائرِ، ولا تخفى عليه خافية!!

قال: يا هذا، أفيحسنُ بكَ أن تأكلَ مِن رزقهِ، وتسكنَ أرضهُ، ثم أنتَ تعصيهُ وهو يراك، ويعلمُ ما تجاهرُ به!!

قال الرجل: لا والله..، هاتِ الرابعةَ.

قال: فإذا جاء ملك الموت ليقبض روحكَ وأنتَ على غير ما يرضى الله تعالى، فقلْ له: أخِّرني حتّى أتوبَ إلى الله تعالى توبةً نصوحاً، وأعملَ صالحاً.

قال الرجل: إنّ مَلَكَ الموتِ إن جاءني ليقبضَ رُوحي لا يقبلُ مني ما تقول!!

قال: يا هذا، إنك إذا لم تقدر أن تدفعَ عنك الموتَ لتتوبَ، وتعلمُ أنه إذا جاء لم يكن له تأخير، فكيف تتجرّأُ على الله بأنواعِ المعاصي، ولا تكون على استعدادٍ دائمٍ للرحيل!!

قال الرجل: هاتِ الخامسة.

قال: إذا قُبِضْتَ على المعصية، وأمر الله تعالى بك إلى النار، وجاء الزبانية ليأخذوك إلى النار، فلا تذهبْ معهم!!

قال الرجل: إنهم ملائكة أقوياء أشداء، ولن يَدَعُوني أو يَقْبلوا مني!!

قال إبراهيم: فكيف ترجو النجاة إذاً وأنت على هذه الحال من المعاصي والغفلة؟!

قال الرجل: يا إبراهيم حسبي.. حسبي.. أستغفر الله العظيم وأتوب إليه..

ثُمَّ تابَ الرجلُ من بعدِ هذا اللقاء توبةً نصوحاً، فلزمَ العبادةَ والاستقامةَ حتى فارقَ الدنيا.

இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்  அவர்களிடத்தில் ஒருவர் வந்து நான் அதிகம் பாவம் செய்து கொண்டிருக்கிறேன். அந்த பாவத்தை நான் விடுவதற்கு எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள். அந்த பாவத்தை விட்டும் நான் விலகிக் கொள்ளும் படியான ஏதாவது எச்சரிக்கையை எனக்கு ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் ஐந்து விஷயத்தின் மீது நீ சக்தி பெற்றால் நீ செய்யக் கூடிய எந்த பாவமும் உனக்கு எந்த இடையூறையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறினார்கள். அது என்ன ஐந்து விஷயம் என்று அவர் கேட்டார்.

 

1 வது, நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவனுடைய உணவை நீ உண்ணக் கூடாது என்றார்கள். அப்போது அவர் அது எப்படி சாத்தியமாகும்? பூமியிலே இருக்கிற அத்தனையும் இறைவன் கொடுத்த உணவு அல்லவா! என்று கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவனுக்கு மாறு செய்து கொண்டு இறைவன் தரக்கூடிய உணவை உண்ணலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

இரண்டாவது நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவனுடைய பூமியிலே நீ தங்கக்கூடாது என்றார்கள். அது எப்படி சாத்தியமாகும்? உலகத்தில் இருக்கும் அனைத்தும் இறைவனுடைய பூமி அல்லவா! என்று அவர் கேட்ட பொழுது, இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவனுடைய உணவை உண்டு கொண்டு இறைவனுடைய பூமியில் நீ தங்கிக் கொண்டு அவனுக்கு மாறு செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

மூன்றாவது ; நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவன் பார்க்காத இடத்திலிருந்து நீ பாவம் செய் என்றார்கள். அதற்கு அவர் அது எப்படி சாத்தியமாகும்? இறைவன் எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லவா! அவனுக்கு உள்ளும் புறமும் தெரியும். எல்லாம் அறிந்தவன். அவனுடைய பார்வையை விட்டும் நான் எப்படி தப்பிக்க முடியும்? என்று கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் நீ பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

நான்காவது ;  நீ பாவம் செய்து கொண்டிருக்கின்ற நிலையில் உன் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு உன்னிடத்திலே வந்தால் நான் தவ்பா செய்ய வேண்டும். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேள் என்றார்கள். அப்போது அவர் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு வந்து விட்டால் எப்படி அவகாசம் கிடைக்கும்? தவ்பா செய்வதற்கு எப்படி சந்தர்ப்பம் கிடைக்கும்? என்று அவர் கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு வந்து விட்டால் அதை தாமதப்படுத்த முடியாது. தவாஃப் செய்வதற்கு அவகாசம் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நீ எப்படி பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள் இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

ஐந்தாவது ; நீ பாவம் செய்து அதே நிலையில் மவ்த்தாகி அல்லாஹ் உனக்கு நரகத்தைக் கொண்டு தீர்ப்பளித்து விட்டால் நரகத்திற்கு உன்னை இழுத்துச் செல்லக்கூடிய மலக்குகள் உன்னிடத்தில் வரும்பொழுது நீ அவர்களோடு செல்லாதே என்றார்கள். அது எப்படி சாத்தியமாகும்? அவர்கள் ரொம்பவும் சக்தி பெற்றவர்கள். வலு உள்ளவர்கள். அவர்களோடு நான் எப்படி செல்லாமல் இருக்க முடியும்? என்னை எப்படி அவர்கள் விடுவார்கள்? நான் ஏதாவது சொன்னால் என்னிடத்திலிருந்து எப்படி அதை ஏற்றுக் கொள்வார்கள்? என்றெல்லாம் அவர் கேட்டார். இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அவர்களை விட்டும் தப்பிக்க முடியாது என்று தெரிந்திருந்தும் நீ பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக் கொண்டார்.

இந்த ஐந்து விஷயங்களையும் கேட்ட பிறகு அவர் மனம் திருந்தி வருந்தி இறைவனிடத்தில் தவ்பா செய்து மீண்டு தூய்மையான வாழ்க்கைக்குத் தயாராகி கொண்டார்.

எனவே இறைவன் நம்மைப் பார்க்கிறான் என்ற உணர்வு வந்து விட்டால் பாவங்களை விட்டும் நாம் தூய்மையாகி விடலாம்.

அடுத்து நம் அமல்களை நபிகள் நாயகம் அவர்களும் பார்க்கிறார்கள் என்பது இந்த வசனம் கூறும் அடுத்த செய்தி.

وعن أوس بن أوس رَضِيَ اللَّهُ عَنهُ قال، قال رَسُول اللَّهِ : (إن من أفضل أيامكم يوم الجمعة فأكثروا عليّ من الصلاة فيه فإن صلاتكم معروضة علي) فقالوا: يا رَسُول اللَّهِ وكيف تعرض صلاتنا عليك وقد أَرِمْت (قال: يقول بَلِيْتَ) قال: (إن اللَّه حرم على الأرض أجساد الأنبياء

உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். அன்றைய தினம் என் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்லுங்கள். உங்கள் ஸலவாத்து எனக்கு எடுத்துக் காட்டப்படும்என்று நபி அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உக்கி மண்ணோடு மண்ணாக மாறிய பின்னர் எமது ஸலவாத்துக்கள் எப்படி உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும்? என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் அல்லாஹுதஆலா நபிமார்களின் உடலை உண்பதை பூமி (மண்ணு)க்கு தடை விதித்து விட்டான்என்று கூறினார்கள். (அத்தர்கீப் வத்தர்ஹீப் ; 1 / 336)

மூன்றாவது நம் அமல்களை முஃமின்களும் பார்க்கிறார்கள் என்பது இந்த வசனம் கூறும் மூன்றாவது செய்தியாகும்.

عن سفيان ، عمن سمع أنسا يقول : قال النبي صلى الله عليه وسلم : " إن أعمالكم تعرض على أقاربكم وعشائركم من الأموات ، فإن كان خيرا استبشروا به ، وإن كان غير ذلك قالوا : اللهم ، لا تمتهم حتى تهديهم كما هديتنا

உங்களின் அமல்கள் மரணித்து விட்ட உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது. அது நல்லமல்களாக இருந்தால் அவர்கள் நற்செய்தி பெறுகிறார்கள். நல்லமல்களாக இல்லையென்றால் இறைவா எங்களுக்கு நேர்வழியைக் காட்டியதைப் போல் அவர்களுக்கும் நீ நேர்வழி காட்டும் வரை அவர்களை மரணிக்கச் செய்யாதே என்று கூறுவார்கள். (இப்னுகஸீர்)

وقال أبو مسلم: إن المؤمنين شهداء الله يوم القيامة، كما قال: {وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ} [البقرة:143]، والشهادة لا تصح إلا بعد الرؤية، فالمؤمنون يشهدون بما رأوا من أعمال لهذا الإنسان أو لذاك

(நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான வகுப்பினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக் கூடிய) சாட்சிகளாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு (வழி  காட்டக் கூடிய) சாட்சியாக இருப்பார். (அல்குர்ஆன் : 2 ; 143)

இந்த வசனத்தில் முஃமின்களும் அல்லாஹ்வின் தூதர் நபி  அவர்களும் சாட்சி சொல்வார்கள் என்று கூறுகிறான். ஒரு விஷயத்திற்கு ஒருவர் சாட்சி சொல்ல வேண்டுமென்றால் அதை அவர்  பார்த்திருக்க வேண்டும். பார்க்காமல் சாட்சி சொல்ல முடியாது. அதை மார்க்கம் ஏற்காது. எனவே முஃமின்களும் அல்லாஹ்வின் தூதர் நபி  அவர்களும் நம் அமல்களைப் பார்க்கிறார்கள் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

قيل : رؤية النبي صلى الله عليه وسلم بإعلام الله تعالى إياه ، ورؤية المؤمنين بإيقاع المحبة في قلوبهم لأهل الصلاح ، والبغضة لأهل الفساد . تفسير البغوي

நபி அவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்கு பொருள் அவர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுக்கிறான் என்பதாகும். முஃமின்கள் பார்க்கிறார்கள் என்பது நல்லமல் புரிபவர்கள் மீது அவர்களுக்கு பிரியமும் தீயமல்கள் புரிபவர்கள் மீது அவர்களுக்கு வெறுப்பும் ஏற்படுவதாகும். (தஃப்ஸீர் பகவீ) இவ்வாறும் ஒரு கருத்து கூறப்படுகிறது.

 

1 comment: