Friday, April 8, 2022

ஸுஜூத்

وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ‌   فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَ لَمْ يَكُنْ مِّنَ السّٰجِدِيْنَ‏

நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி)    உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை)  உருப்படுத்தினோம். பின்னர் நாம் மலக்குகளை நோக்கி  "ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்" எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை. (அல்குர்ஆன் : 7:11)

ஆதம் நபிக்கு ஸுஜூத் செய்யும்படி அல்லாஹ் இப்லீஸுக்கு உத்தவிட்ட போது அவன் ஸுஜுத் செய்ய மறுத்தான். ஸுஜுத் என்பது ஷைத்தானுக்கு மிகவும் பிடிக்காத, அவனுக்கு வெறுப்பைத் தருகின்ற ஒரு விஷயம்.ஷைத்தான் உங்களுக்கு விரோதி என்று அல்லாஹ் குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான். நம் எதிரிக்கு ஒரு விஷயம் வெறுப்பைத் தரும் என்றால் அது நமக்கு விருப்பமான ஒன்றாக இருக்க வேண்டும். அது உண்மையான ஈமானுக்கான அடையாளம்.

وَجَاءَ في البِدَايَةِ وَالنِّهَايَةِ، حَكَى السُّهَيْلِيُّ عَنْ تَفْسِيرِ بَقِيِّ بْنِ مَخْلَدٍ الْحَافِظِ: أَنَّ إِبْلِيسَ رَنَّ أَرْبَعَ رَنَّاتٍ؛ حِينَ لُعِنَ، وَحِينَ أُهْبِطَ، وَحِينَ وُلِدَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعلى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ، وَحِينَ أُنْزِلَتِ الْفَاتِحَةُ.

அவன் சபிக்கப்பட்ட போது,சுவனத்திலிருந்து பூமிக்கு இறக்கப்பட்ட போது, நபி ஸல் அவர்கள் பிறந்த போது, ஃபாத்திஹா சூரா இறக்கி அருளப்பட்ட போது, ஆகிய சந்தர்ப்பங்களில் ஷைத்தான் தேம்பி அழுதான். (அல்பிதாயா வன் நிஹாயா)

அந்த வரிசையில் ஒரு அடியான் ஸஜ்தா செய்யும் போது ஷைத்தான் அழுகிறான்.

إذا قرأ ابن آدم السجدة فسجد، اعتزل الشيطان يبكي، يقول: يا ويله. أُمر ابن آدم بالسجود فسجد فله الجنة، وأُمرت بالسجود فأبيت فلي النار

ஒரு மனிதன் ஸஜ்தாவின் வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் அழுது கொண்டே அங்கிருந்து விலகி விடுகிறான். எனக்கு ஏற்பட்ட கைசேதமே மனிதன் ஸஜ்தா செய்யும் படி ஏவப்பட்டு அவன் செய்தான். அவனுக்கு சொர்க்கம் இருக்கிறது. நானும் ஏவப்பேன். மறுத்தேன். எனக்கு நரகம் இருக்கிறது என்று அவன் கூறுகிறான். (முஸ்லிம் ; 81)

ஸஜ்தா என்று சொல்லப்படக் கூடிய சிரவணக்கம் இஸ்லாத்தின் பார்வையில் மிகுந்த சிறப்புக்குரியது. எண்சாண் உடம்பையும் கூனிக்குறுகி ஏழு உறுப்புக்கள் தரையில் படுமாறு தங்களைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே மனிதர்கள் செய்யும் வணக்கம் தான் ஸஜ்தா என்பது. ஸஜ்தா என்ற சிரவணக்கம் மனிதன் காட்டக்கூடிய பணிவுகளின் இறுதி எல்லைக்கோடு அல்லது மரியாதைகளின் உச்சகட்ட நிலை என்று சொன்னால் அது மிகையாகாது.

உச்சகட்ட பணிவாக இருக்கிற அந்த ஸஜ்தாவை இறைவன் விரும்புகிறான்.

وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا

அன்றி, அவர்கள் தங்கள் இறைவனை, நின்றவர்களாகவும் சிரம் பணிந்தவர்களாகவும் இரவெல்லாம் வணங்கிக் கொண்டு இருப்பார்கள்.

(அல்குர்ஆன் : 25:64)

كُنْتُ أبِيتُ مع رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ فأتَيْتُهُ بوَضُوئِهِ وحَاجَتِهِ فَقالَ لِي: سَلْ فَقُلتُ: أسْأَلُكَ مُرَافَقَتَكَ في الجَنَّةِ. قالَ: أوْ غيرَ ذلكَ قُلتُ: هو ذَاكَ. قالَ: فأعِنِّي علَى نَفْسِكَ بكَثْرَةِ السُّجُودِ

ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொள்வதற்கும், உளூச் செய்து கொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!’’ என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான், “சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன்’’ என்றேன். அதற்கு வேறு ஏதேனும் (கோருவீராக!)’’ என்றார்கள். நான் “(இல்லை) அதுதான்’’ என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக!’’ என்று சொன்னார்கள். (முஸ்லிம் ; 843)

ஸஜ்தா செய்த காரணத்தினால் சிலர் நரகத்திலிருந்து விடுதலை பெறுவார்கள்.

أنَّ النَّاسَ قالوا: يا رَسولَ اللَّهِ هلْ نَرَى رَبَّنَا يَومَ القِيَامَةِ؟ قالَ: هلْ تُمَارُونَ في القَمَرِ لَيْلَةَ البَدْرِ ليسَ دُونَهُ سَحَابٌ قالوا: لا يا رَسولَ اللَّهِ، قالَ: فَهلْ تُمَارُونَ في الشَّمْسِ ليسَ دُونَهَا سَحَابٌ قالوا: لَا، قالَ: فإنَّكُمْ تَرَوْنَهُ كَذلكَ، يُحْشَرُ النَّاسُ يَومَ القِيَامَةِ، فيَقولُ: مَن كانَ يَعْبُدُ شيئًا فَلْيَتَّبِعْ، فَمِنْهُمْ مَن يَتَّبِعُ الشَّمْسَ، ومِنْهُمْ مَن يَتَّبِعُ القَمَرَ، ومِنْهُمْ مَن يَتَّبِعُ الطَّوَاغِيتَ، وتَبْقَى هذِه الأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا، فَيَأْتِيهِمُ اللَّهُ فيَقولُ: أنَا رَبُّكُمْ، فيَقولونَ هذا مَكَانُنَا حتَّى يَأْتِيَنَا رَبُّنَا، فَإِذَا جَاءَ رَبُّنَا عَرَفْنَاهُ، فَيَأْتِيهِمُ اللَّهُ فيَقولُ: أنَا رَبُّكُمْ، فيَقولونَ: أنْتَ رَبُّنَا، فَيَدْعُوهُمْ فيُضْرَبُ الصِّرَاطُ بيْنَ ظَهْرَانَيْ جَهَنَّمَ، فأكُونُ أوَّلَ مَن يَجُوزُ مِنَ الرُّسُلِ بأُمَّتِهِ، ولَا يَتَكَلَّمُ يَومَئذٍ أحَدٌ إلَّا الرُّسُلُ، وكَلَامُ الرُّسُلِ يَومَئذٍ: اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ، وفي جَهَنَّمَ كَلَالِيبُ مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، هلْ رَأَيْتُمْ شَوْكَ السَّعْدَانِ؟ قالوا: نَعَمْ، قالَ: فإنَّهَا مِثْلُ شَوْكِ السَّعْدَانِ غيرَ أنَّه لا يَعْلَمُ قَدْرَ عِظَمِهَا إلَّا اللَّهُ، تَخْطَفُ النَّاسَ بأَعْمَالِهِمْ، فَمِنْهُمْ مَن يُوبَقُ بعَمَلِهِ، ومِنْهُمْ مَن يُخَرْدَلُ ثُمَّ يَنْجُو، حتَّى إذَا أرَادَ اللَّهُ رَحْمَةَ مَن أرَادَ مِن أهْلِ النَّارِ، أمَرَ اللَّهُ المَلَائِكَةَ: أنْ يُخْرِجُوا مَن كانَ يَعْبُدُ اللَّهَ، فيُخْرِجُونَهُمْ ويَعْرِفُونَهُمْ بآثَارِ السُّجُودِ، وحَرَّمَ اللَّهُ علَى النَّارِ أنْ تَأْكُلَ أثَرَ السُّجُودِ، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ، فَكُلُّ ابْنِ آدَمَ تَأْكُلُهُ النَّارُ إلَّا أثَرَ السُّجُودِ، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ

 

அல்லாஹ்வின் தூதரே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா? என்று கெட்டார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இல்லை என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் இல்லை என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதேப்போல்தான் நீங்கள் உங்கள் இறைவனைக் காண்பீர்கள் என்று கூறினார்கள். தொடர்ந்து கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப்பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதனை பின்பற்றி செல்லட்டும் என்ற இறைவன் கூறுவான்.சிலர் சூரியனை பின்பற்றுவர்.சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீயசக்திகளைப் பின்பற்றுவர் அப்போது இறைவன் அவர்களை நோக்கி நான் தான் உங்கள் இறைவன் என்பான். அதற்கு அவர்கள் எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம்.எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம் என்பார்கள். பின்னர் அல்லாஹ், அவர்களிடம் வந்து நான்தான் உங்கள் இறைவன என்பான். அதற்கு அவர்கள் நீ எங்கள் இறைவன் தான்! என்பார்கள்;

பின்பு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும். நபிமார்கள், தத்தமது சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறு யாரும் பேச மாட்டார்கள். இறைவா! காப்பாற்று! இறைவா காப்பாற்று! என்பதே அன்றைய தினம் பேச்சாக இருக்கும். நரகத்தில் கருவேல மரத்தின் முட்கள் போன்ற இரும்பு ஆயுதங்கள் இருக்கும். என்ற நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு நீங்கள் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா? என்ற கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றுதான் இருக்கும் என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும்.

நல்லறங்கள் முழுவதும் அழிக்கப்பட்டவர்களும் அவர்களில் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர். நரகவாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்வர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான்.வானவர்கள் அவர்களை வெளியேற்று வார்கள் ஸஜ்தா செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம்; காண்பார்கள்.

ஸஜ்தாச் செய்ததினால் வடுக்களை நரகம் தீண்டாது நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக்கி வைத்து விட்டான். அவர்கள் நரகலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத்தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். நரகிலிருந்த கரிந்தவர்களாக வெளியேறுவார்கள். (புகாரி ; 806)

எனவே தான் ஸஜ்தா என்பது நம் முன்னோர்களுக்கு மிகப் பிரியமான ஒன்றாக இருந்திருக்கிறது.

 

 عن أبي الدرداء أنه قال: «لولا ثلاثٌ ما أحببْتُ البقاءَ في الدنيا: ساعةُ ظمأٍ في الهواجر ـ يعني: صيامٌ في شدة الحرـ، والسجودُ في الليل، ومجالسة أقوامٍ ـ أي: أصدقاءٍ صالحين ـ ينتقون أَطَايبَ الكلام كما ينتقي أحدُهُمْ أطايبَ التَّمْر».  

மூன்று விஷயம் இல்லை என்றால் நான் உலகத்தில் இருப்பதை விரும்ப மாட்டேன். கடுமையான உஷ்ணமான நேரத்தில் நோன்பு வைப்பது. இரவில் ஸுஜூது செய்வது, நல்லவர்களோடு அமர்வது என்று அவர் அபுத்தர்தா ரலி அவர்கள் கூறினார்கள்.

ஸஜ்தா செய்யாதவர்களின் நிலை

وَاِذَا قِيْلَ لَهُمُ اسْجُدُوْا لِلرَّحْمٰنِ قَالُوْا وَمَا الرَّحْمٰنُ اَنَسْجُدُ لِمَا تَاْمُرُنَا وَزَادَهُمْ نُفُوْرًا

(ஆகவே,) அந்த ரஹ்மானைச் சிரம் பணிந்து வணங்குங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், அவர்களுக்கு வெறுப்பு அதிகரித்து "ரஹ்மான் யார்? நீங்கள் கூறியவைகளுக்கெல்லாம் நாம் சிரம் பணிந்து வணங்குவதா?" என்று கேட்கின்றனர். (அல்குர்ஆன் : 25:60)

அதிகம் ஸஜ்தா செய்வதால் நம் உள்ளத்தின் கவலைகள் நீங்கும்.

وَلَـقَدْ نَـعْلَمُ اَنَّكَ يَضِيْقُ صَدْرُكَ بِمَا يَقُوْلُوْنَۙ

(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உங்கள் உள்ளத்தை நெருக்குகிறதென்பதை   நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீங்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்கள்.)

(அல்குர்ஆன் : 15:97)

 

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِيْنَۙ‏

நீங்கள் உங்கள் இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குங்கள்; (அல்குர்ஆன் : 15:98)

  

No comments:

Post a Comment