Thursday, March 30, 2023

பிளவு ஆபத்தானது

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏

அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 8:46)

பொதுவாக ஒரு குடும்பமாக இருக்கட்டும் ஒரு சமூகமாக இருக்கட்டும் அல்லது ஒரு நாடாக இருக்கட்டும் பிரிவினை இல்லாமல் பிழவுகள் இல்லாமல் சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையோடு பயணிக்க வேண்டும்.அப்போது தான் அந்த குடும்பத்திலும் அந்த சமூகத்திலும் அந்த நாட்டிலும் அமைதி நிலவும்.அவைகளுக்கு பலமும் ஏற்படும்.

ஒரு சமூகத்தின் அடிப்படை ஒற்றுமை.ஒற்றுமை தான் ஒரு சமூகத்தின் பலம்.ஒற்றுமை இல்லாமல் போனால் ஒரு சமூகம் அடையாளம் தெரியாமல் போய் விடும் என்ற  இந்த வசனத்தின் பொருள் எந்தளவு உண்மையானது என்பதை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிற நிதர்சனங்கள் நமக்கு கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.

நபித்தோழர்கள் இந்த இறைவசனத்திற்கு கட்டுப்பட்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.அதனால் தான் அவர்கள் வீரத்தில் சிறந்து விளங்கினார்கள். பலம் மிக்க சமூகமாக காட்சி தந்தார்கள். பல நாடுகளை மட்டுமல்ல எண்ணற்ற மக்களின் இதயங்களையும் வென்றார்கள். அவர்கள் வெற்றி கொண்ட நாடுகளின் படைபலத்துடன் ஒப்பிடும் போது அந்த நபித்தோழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு தான்.என்றாலும் 30 வருடங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் கிழக்கிலும் மேற்கிலும் எண்ணற்ற நாடுகளை கைப்பற்றி அங்கே இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்கள்.

 

இன்றைக்கு ஆசியாவில்- 46 நாடுகள்; ஆப்பிரிக்காவில்- 30 நாடுகள் ; ஐரோப்பாவில் – 4 ; அமெரிக்காவில் – 2 என மொத்தம்  82  முஸ்லிம் நாடுகள் இருக்கிறது.  இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 17 விழுக்காடு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் உலக மக்கட்தொகையில் கால் பகுதி முஸ்லிம்கள். அவ்வாறு இருந்தும்அரசியல், அதிகாரம், அறிவியல், இராணுவம், ஆயுதம்,பொருளாதாரம், வளர்ச்சி இப்படி எல்லாவற்றிலும் குறிப்பிட்டுச் சொல்லும் இடத்தில் முஸ்லிம்களோ முஸ்லிம் நாடுகளோ இல்லை.சொல்லப்போனால் எதிரிகளைப் பார்த்து இன்றைக்கு முஸ்லிம் சமூகம் அஞ்சுகிறது.அவர்களால் வஞ்சிக்கப் படுகிறது.

عَنْ ثَوْبَانَ - مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يُوشِكُ أَنْ تَدَاعَى عَلَيْكُمُ الْأُمَمُ مِنْ كُلِّ أُفُقٍ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ عَلَى قَصْعَتِهَا ". قَالَ : قُلْنَا : يَا رَسُولَ اللَّهِ، أَمِنْ قِلَّةٍ بِنَا يَوْمَئِذٍ ؟ قَالَ : " أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنْ تَكُونُونَ غُثَاءً كَغُثَاءِ السَّيْلِ، تُنْتَزَعُ الْمَهَابَةُ مِنْ قُلُوبِ عَدُوِّكُمْ، وَيُجْعَلُ فِي قُلُوبِكُمُ الْوَهْنُ ". قَالَ : قُلْنَا : وَمَا الْوَهْنُ ؟ قَالَ : " حُبُّ الْحَيَاةِ وَكَرَاهِيَةُ الْمَوْتِ

சாப்பிடுபவர்கள் உணவுத் தட்டை நோக்கி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதைப் போல் உங்களுக்கு எதிராக மக்கள் ஒருவரை ஒருவர் அழைக்கும் காலம் வெகு சீக்கிரம் வரும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது நாங்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்போமா ? என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பீர்கள். ஆனால் வெள்ளத்தின் நுரை போல ஆகி விடுவீர்கள். உங்கள் மீதுள்ள பயம் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து எடுக்கப்பட்டு விடும். உங்கள் உள்ளத்தில் வஹ்ன்வந்து விடும்.அதன் பின் நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன்என்றால் என்ன?. என்று கேட்டார்கள். அதற்கு நபி   அவர்கள் இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் மரணத்தை அஞ்சுவதும்.என்றார்கள். (முஸ்னத் அஹ்மது ; 22397)

உலகத்தின் கால் பகுதியைப் பிடித்திருக்கிற நம்மால் ஏன் எதிலும் காலூன்ற முடிய வில்லை என்று ஆராய்ந்து பார்த்தால் அன்றைக்கு அந்த ஸஹாபாக்களிடம் இருந்த இறை நம்பிக்கையும் ஈமானும் நம்மிடம் இல்லை என்று உள்ரங்கமான ஒரு காரணம் சொல்லப் பட்டாலும் வெளிப்படையான காரணம் என்னவென்றால் நம்மிடம் ஏற்பட்டிருக்கும் பிரிவினைகளும்,பிழவுகளும்,சண்டை சச்சரவுகளும், உட்பூசல்களும் தான்.

ஒற்றுமையைக் கொண்டு தான் ஒரு சமூகம் உயர முடியும், உயர்ந்து நிற்க முடியும். பிற சமூகத்திற்கு முன்னால் தன்னை பலம் மிக்க சமூகமாக அடையாளப் படுத்திக் கொள்ள முடியும்.எந்த சமூகம் ஒற்றுமையை கையில் எடுக்கிறதோ அந்த சமூகத்தை யாராலும் அசைக்க முடியாது. எந்த சமூகம் ஒற்றுமை கை விட்டு விடுகிறதோ அந்த சமூகம் அனைவராலும் சீண்டப்படும் ஒரு சமூகமாக பலவீனப்பட்டுப் போய் நிற்கும்.

இன்றைக்கு உலகத்தில் யூதர்களைப் பார்க்கிறோம். 1900 க்கு முன்னால வரைக்கும் யூதர்களுக்கென்று தனி நாடே கிடையாது.உலகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு சூழ்ச்சிகளை செய்து சதித்திட்டங்களைத் தீட்டி இஸ்லாமியர்கள் வாழ்ந்த இஸ்லாமியர்களின் பூமியான பலஸ்தீனைக் கைப்பற்றி 1948 ல் தான் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினார்கள். உலகத்தின் மிக குட்டி நாடு மிகக்குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இஸ்ரேல்.உலக மக்கள் தொகையில் 0.2 % தான் யூதர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் அகில உலகத்தின் மறைமுகமான ஆட்சியும் அதிகராமும் அவர்களின் கையில் தான் இருக்கிறது.

பூமியில் 78 % நீர் தான் இருக்கிறது .மீதி 22 % தான் நிலம். அதிலும் 60 % சதவீதம் தான் மனிதர்கள் வாழக்கூடிய பூமி.அந்த மனிதர்கள் வாழக்கூடிய 22 நிலமும் ஒரே ஆள் கையில் ஒரு ஆளுடைய கன்ரோலில் தான் இருக்கிறது. ஆம், ராபர்ட் முர்டோக் என்ற ஒரு யூதன் தான் உலகில் இருக்கிற அனைத்து சேட்டர்லைட் சேனல் களுக்கும் ஹெட். இந்தியாவிலும் உலகத்தில் இருக்கிற மற்ற எல்லா நாடுகளிலும் ஒளிபரப்பாகிற சேனல்களில் 99 சதவீதம் அவனுடையது தான். உலக மக்கள் தொகையில் 1 % கூட இல்லாத யூதர்கள் மொத்த உலகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்காக அவர்கள் பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் ஒற்றுமை.

1876 இத்தாலியில் இருக்கிற வெனிஸ் நகரத்தில் யூதர்கள் ஒரு மாநாடு நடத்தினார்கள். அதற்குப் பெயர் ஒற்றுமை மாநாடு. அதில் கலந்து கொண்டவர்கள் வெறும் 6 பேர் தான். வெறும் 6 பேரை வைத்துக் கொண்டு மாநாடு என்று பெயர் வைத்திருக்கிறீர்களே என்று கேட்ட போது, இன்றைக்கு நாங்கள் 6 பேர் இருக்கலாம். ஆனால் ஒரு காலம் வரும். அப்போது நாங்கள் தான் உலகத்தில் நம்பர் 1 ஆக இருப்போம். மொத்த உலகத்தின் கன்ட்ரோலும் எங்க கையில் தான் இருக்கும் என்றார்கள். இன்றைக்கு அதை நடத்திக் காட்டி விட்டார்கள். காரணம் அவர்களின் ஒற்றுமை. ஒற்றுமையால் தான் யூதர்களின் கை ஓங்கி நிற்கிறது.

இன்னொரு பக்கம் நம் இஸ்லாமிய சமூகத்தைப் பார்க்கலாம், இன்றைக்கு உலகில் சுமார் 82   முஸ்லிம் நாடுகள் இருக்கிறது.   உலக மக்கட்தொகையில் கால் பகுதி முஸ்லிம்கள். உலகில் 4 பேருக்கு ஒரு முஸ்லிம். இந்தளவு மெஜாரிட்டியாக இருந்தும்  ஆட்சிஅதிகாரம், அறிவியல்இராணுவம்ஆயுதம்,பொருளாதாரம் இப்படி எதிலும் குறிப்பிட்டுச் சொல்லும் படி இஸ்லாமியர்களும் இல்லை. இஸ்லாமிய நாடுகளும் இல்லை. காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. உலகளாவிய அளவில் யூதர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கும் நாம் ஒரு மஹல்லாவில் பத்து அல்லது பதினைந்து பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறோம். 

பிளவு என்பது மிக ஆபத்தானது. ஒரு சமூகம் பிளவு பட்டு விட்டால் உடைந்து போய் விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்.

قَالَ يٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَيْتَهُمْ ضَلُّوْٓا ۙ‏

(மூஸா அவர்களிடம் வந்த பின் ஹாரூனை நோக்கி) "ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீங்கள் அறிந்த சமயத்தில் (என்னை நீங்கள் பின்பற்றி நடக்க) உங்களைத் தடை செய்தது எது? (அல்குர்ஆன் : 20:92)

 

اَلَّا تَتَّبِعَنِ‌ اَفَعَصَيْتَ اَمْرِىْ‏

நீங்கள் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? நீங்கள் என்னுடைய கட்டளைக்கு மாறு செய்யவே கருதினீரா?" (என்று கூறி அவருடைய தாடியையும் தலை முடியையும் பிடித்து இழுத்தார்.) (அல்குர்ஆன் : 20:93)

قَالَ يَابْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْيَتِىْ وَلَا بِرَاْسِىْ‌ اِنِّىْ خَشِيْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَيْنَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِىْ‏

அதற்கவர் "என் தாய் மகனே! என் தலையையும் தாடியையும்  பிடி(த்திழு)க்காதீர்கள். (நான் அச்சமயமே அவர்களை விட்டு விலகி இருந்தால்) "இஸ்ராயீலின் சந்ததிகளுக்கிடையில் நீங்கள் பிரிவினையை ஏற்படுத்தி விட்டீர்கள். நீங்கள் என்னுடைய வார்த்தைகளை கவனிக்கவில்லை என்று நீங்கள் என்னைக் கடுகடுப்பீரென்று நிச்சயமாக நான் பயந்(தே அவர்களுடன்  இருந்)தேன்" என்று கூறினார். (அல்குர்ஆன் : 20:94)

மூஸா அலை அவர்கள் தூர்ஸினா மலைக்கு சென்ற நேரத்தில் தன்னுடைய சகோதரர் ஹாரூன் அலை அவர்களை தனக்குப் பகரமாக விட்டுச் சென்றார்கள். அந்த நேரத்தில் அந்த சமூகத்தில் ஒரு பிரிவினர் சாமிரி என்பவனின் பேச்சைக் கேட்டு காளைக்கன்றை தெய்வமாக வணங்க ஆரம்பித்து விட்டார்கள். இதை அறிந்து கொண்ட மூஸா நபி அலை அவர்கள் தன் சகோதரர் ஹாரூன் அலை அவர்களிடத்தில் சென்று என் சமூகத்தில் ஒரு பிரிவினர் காளைக்கன்றை வணங்க ஆரம்பித்த அந்த நேரத்திலேயே உங்களைப் பின்பற்றிக் கொண்டிருந்த அந்த ஒரு பிரிவினரை அழைத்துக் கொண்டு என்னிடத்தில் வந்திருக்கக் கூடாதா என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் அவ்வாறு நான் ஒரு பிரிவினரை அழைத்து உங்களிடத்தில் வந்திருந்தால் என் சமூகத்தை இரண்டாக பிளவு படுத்தி விட்டீர்களே என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்பீர்களோ என்று அஞ்சினேன். எனவே  சமூகம் பிளவு பட்டு விடக் கூடாது என்பதற்காகவே நான் அவ்வாறு செய்ய வில்லை என்று கூறினார்கள்.

ஒரு சமூகம் எதோ ஒரு காரணத்தினால் வழிதவறிப் போய் விட்டால் கூட பேசி அவர்களை திருத்தி விடலாம். ஆனால் சமூகம் இரு கூறாக பிளவு பட்டு விட்டால் அவர்களை ஒன்று சேர்ப்பது மிக கடினம். எனவே ஒரு சமூகம் வழிதவறிப் போவதை விட பிளவுபடுவது ரொம்ப ஆபத்தானது என்பதை மூஸா அலை ஹாரூன் அலை அவர்களின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

பிரிவினை செய்யும் நோக்கத்துடன் கட்டப்பட்ட மஸ்ஜிதை இடிக்கச் சொன்ன நாயகம் அவர்கள்

وَالَّذِيْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِيْقًا بَيْنَ الْمُؤْمِنِيْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ‌ وَلَيَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰى‌ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏

எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கையாளர்களுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு இழைப்பதற்காக முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு பள்ளியைக் கட்டி இருக்கின்றார்களோ அவர்கள்; (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) "நிச்சயமாக நாங்கள் நன்மையையன்றி (தீமையைக்) கருதவில்லை" என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று சாட்சி கூறுகின்றான். (அல்குர்ஆன் : 9:107)

ونزلت الآية فيما روي في أبي عامر الراهب ; لأنه كان خرج إلى قيصر وتنصر ووعدهم قيصر أنه سيأتيهم ، فبنوا مسجد الضرار يرصدون مجيئه فيه ; قاله ابن عباس ومجاهد وقتادة وغيرهم ، وقد تقدمت قصته في الأعراف وقال أهل التفسير : إن بني عمرو بن عوف اتخذوا مسجد قباء وبعثوا للنبي صلى الله عليه وسلم أن يأتيهم فأتاهم فصلى فيه ; فحسدهم إخوانهم بنو غنم بن عوف وقالوا : نبني مسجدا ونبعث إلى النبي صلى الله عليه وسلم يأتينا فيصلي لنا كما صلى في مسجد إخواننا ، ويصلي فيه أبو عامر إذا قدم من الشام ; فأتوا النبي صلى الله عليه وسلم وهو يتجهز إلى تبوك فقالوا : يا رسول الله ، قد بنينا مسجدا لذي الحاجة ، والعلة والليلة المطيرة ، ونحب أن تصلي لنا فيه وتدعو بالبركة ; فقال النبي صلى الله عليه وسلم إني على سفر وحال شغل فلو قدمنا لأتيناكم وصلينا لكم فيه فلما انصرف النبي صلى الله عليه وسلم من تبوك أتوه وقد فرغوا منه وصلوا فيه الجمعة والسبت والأحد ، فدعا بقميصه ليلبسه ويأتيهم فنزل عليه القرآن بخبر مسجد الضرار ; فدعا النبي صلى الله عليه وسلم مالك بن الدخشم ومعن بن عدي وعامر بن السكن ووحشيا قاتل حمزة ، فقال : انطلقوا إلى هذا المسجد الظالم أهله فاهدموه وأحرقوه فخرجوا مسرعين ، وأخرج مالك بن الدخشم من منزله شعلة نار ، ونهضوا فأحرقوا المسجد وهدموه ، وكان الذين بنوه اثني عشر رجلا

அல்லாஹ்வின் தூதர் கூறிக்காட்டிய பன்னிரெண்டு நபர்கள் அச்சமூகத்தில் அறியப்பட்டவர்களாக இருந்தார்கள். பனு அம்ரு பின் அவ்ஃப் குலத்தார்கள் குபா மஸ்ஜிதை அமைத்து அல்லாஹ்வின் தூதரிடம் அங்கே வரும்படி வேண்டினார்கள். நபி அவர்கள் அங்கே வந்து தொழுகை  நடத்தினார்கள். இதைக் கண்ட அவர்களின் சகோதர குலத்தைச்சார்ந்த பனூ கனமு இப்னு அவ்ஃப் கூட்டத்தார்கள் நாமும் ஒரு மஸ்ஜிதை எழுப்பி அங்கே அல்லாஹ்வின் தூதர் அவர்களை தொழ வைக்குமாறு வேண்டிக்கொள்ளலாம் என்றும் அபூஆமிர் சிரியாவிலிருந்து திரும்பி வந்ததும் அங்கே தொழுவார் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரை அழைக்கச்சென்ற போது அவர்கள் தபூக் போருக்காக புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.   அப்போது அல்லாஹ்வின்  தூதர் அவர்கள் பயணம் முடித்து வரும் போது தொழவைக்கிறேன் என்றார்கள். நபி அவர்கள் அங்கிருந்து திரும்பிவருவதற்குள் அதனை  கட்டிமுடித்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தொழுகையும் நிறைவேற்றியிருந்தார்கள் நபி அவர்கள் அவர்களை நோக்கி புறப்படும் வேளையில் மஸ்ஜிதுல் ளிரார் தொடர்பான வசனம் இறங்கியது. அப்போது நபி அவர்கள் மாலிக் பின் துஹ்ஷும், மஅன் பின் அதீ, ஆமிர் பின் ஸகன் இன்னும் வஹஷி ஆகியோர்களை அழைத்து அநியாயக்காரர்களால் உறுவாக்கப்பட்ட இந்த மஸ்ஜிதை நோக்கி செல்லுங்கள் அதை இடித்து எரித்துவிடுங்கள் என்று கூறினார்கள். அவர்களும் விரைவாக சென்று அதை இடித்து எறித்து சாம்பலாக்கினார்கள். (குர்துபீ)

  

No comments:

Post a Comment