Friday, July 25, 2025

கனவை வைத்து கனவு காணாதே

 


நாம் நம் வாழ்வின் 3 ல் ஒரு பங்கை தூக்கத்தில் செலவிடுகிறோம். அந்த அடிப்படையில் நாம் வாழ்வில் அதிகமான கனவுகளை காணுகின்றோம். உலகில் கனவு காணாதவர்கள் இல்லை என்றளவிற்கு கனவு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது.

இன்றைய விஞ்ஞானம் கனவைப் பற்றி அது நம் நினைவுகள் மற்றும் சிந்தனைகளின் பிம்பங்கள் என்றும் நாம் தூங்கும் சமயம் நமது மூளை மிகக் குறைந்த அளவில் வேலை செய்யும் போது அதில் தோன்றும் சில படக்காட்சிகள் என்றும் பல விதமான கருத்துக்கள் கூறுகின்றது.ஆனால் இதுவெல்லாம் யூகங்கள் தானே தவிர திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல,

கனவுகள் என்றால் என்ன? கனவு ஏன் ஏற்படுகிறது? என்ற கேள்விக்கு அறிவியலிடம் திட்டவட்டமான பதில் கிடையாது.

மார்க்க அறிஞர் பெருமக்கள் கனவைப் பற்றி விளக்கம் தருகிற போது “விழித்திருக்கும் ஒரு மனிதனின் உள்ளத்தில் அல்லாஹ் சில விளக்கங்களை உருவாக்குவது போன்றே, தூங்கும் மனிதனின் உள்ளத்திலும் சில விளக்கங்களைப் போடுகின்றான். அதுவே கனவாகும்” என்று கூறுகிறார்கள்.

 

மூன்று வகையான கனவுகள்

وَالرُّؤْيَا ثَلَاثَةٌ: فَرُؤْيَا الصَّالِحَةِ بُشْرَى مِنَ اللهِ، وَرُؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ، وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ الْمَرْءُ نَفْسَهُ

கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். (முஸ்லிம்: 4555)

رُؤْيا المُؤمِنِ جُزءٌ من سِتَّةٍ وأربعينَ جُزءًا منَ النُّبوةِ

நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்” (புகாரி ; 6983)

 

கனவு கண்டால் நாம் செய்ய வேண்டியது

நல்ல கனவு கண்டால் பிரியத்திற்குரியவரிடம் சொல்ல வேண்டும். மற்றும் கனவிற்கு விளக்கம் தெரிந்த அறிஞரிடம் சொல்ல வேண்டும். அனைவரிடமும் வெளிப்படுத்தக்கூடாது. கெட்ட கனவை முடிந்த வரை மறைத்து விட வேண்டும். அந்த கனவின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்.

عَنْ جَابِرٍ، قَالَ

جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ رَأْسِي ضُرِبَ فَتَدَحْرَجَ فَاشْتَدَدْتُ عَلَى أَثَرِهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْأَعْرَابِيِّ: «لَا تُحَدِّثِ النَّاسَ بِتَلَعُّبِ الشَّيْطَانِ بِكَ فِي مَنَامِكَ»

وَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ، يَخْطُبُ فَقَالَ: «لَا يُحَدِّثَنَّ أَحَدُكُمْ بِتَلَعُّبِ الشَّيْطَانِ بِهِ فِي مَنَامِهِ

கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது தலை வெட்டப்பட்டு அது உருண்டோடிச் செல்வதைப் போன்றும் அதைப் பின்தொடர்ந்து நான் வேகமாகச் செல்வதைப் போன்றும் கனவு கண்டேன்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது கனவில் ஷைத்தான் உம்மிடம் விளையாடியது குறித்து நீர் மக்களிடம் தெரிவிக்காதே” என்று கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்களிடையே) உரை நிகழ்த்திய போது, “உங்களில் ஒருவரது கனவில் ஷைத்தான் அவரிடம் விளையாடியதைப் பற்றி (யாரிடமும்) தெரிவிக்க வேண்டாம்” என்று கூறியதையும் நான் கேட்டேன். (முஸ்லிம்: 4564)

سَمِعْتُ أبا سَلَمَةَ يقولُ: لقَدْ كُنْتُ أرى الرُّؤْيا فَتُمْرِضُنِي، حتّى سَمِعْتُ أبا قَتادَةَ يقولُ: وأَنا كُنْتُ لَأَرى الرُّؤْيا تُمْرِضُنِي، حتّى سَمِعْتُ النَّبيَّ صَلّى اللهُ عليه وسلَّمَ يقولُ: الرُّؤْيا الحَسَنَةُ مِنَ اللَّهِ، فَإِذا رَأى أحَدُكُمْ ما يُحِبُّ فلا يُحَدِّثْ به إلّا مَن يُحِبُّ، وإذا رَأى ما يَكْرَهُ فَلْيَتَعَوَّذْ باللَّهِ مِن شَرِّها، ومِنْ شَرِّ الشَّيْطانِ، ولْيَتْفِلْ ثَلاثًا، ولا يُحَدِّثْ بها أحَدًا؛ فإنَّها لَنْ تَضُرَّهُ.

அபூ ஸலமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் பல கனவுகளைக் கண்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தேன். இறுதியில் அபூ கத்தாதா(ரலி) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இறுதியில் நபி(ஸல்) அவர்கள், ‘நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகிற கனவொன்றைக் கண்டால் தம் நேசத்துக் குரியவரைத் தவிர வேறெவரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். மேலும், அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்த கனவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (தம் இடப் பக்கத்தில்) மூன்று முறை துப்பட்டும். அந்தக் கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம். (அவ்வாறு செய்தால்) அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்திட முடியாது’ என்று கூறியதைக் கேட்டேன். (புகாரி: 7044)

 

கனவை ஏன் சொல்லக்கூடாது?

رُؤيا المؤمنِ جزءٌ مِن ستَّةٍ وأربعينَ جزءًا مِن النُّبوَّةِ والرُّؤيا على رِجْلِ طائرٍ ما لَمْ يُعبَرْ عليه فإذا عُبِرَتْ وقَعَتْ ) قال : وأحسَبُه قال : ( لا يقُصُّها إلَّا على وادٍّ أو ذي رأيٍ

ஒரு முஃமினின் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு அங்கங்களில் ஒரு அங்கமாகும். ஒரு கனவிற்கு விளக்கம் சொல்லப்படாத வரை அது பறவையின் காலின் மீது இருக்கும். விளக்கம் சொல்லப்பட்டு விட்டால் அது நிகழ்ந்து விடும்.கனவைக் கண்டவர் அதை பிரியத்திற்குரியவர் அல்லது விளக்கமுடையவரைத் தவிர சொல்ல வேண்டாம். இப்னு (ஹிப்பான் ; 6050)

 

விளக்கம் தெரிந்த ஒருவர் விளக்கம் சொல்லி விட்டால் நிகழ்ந்து விடும்

وقد ادَّعى رجل عند ابن سيرين - رحمه الله - أنه رأى قدحًا من زجاج فيه ماء، فانكسر القدح وبقي الماء، قال: اتَّقِ الله، فإنك لم ترَ شيئًا، قال: سبحان الله! تكذبني؟! قال: فإن امرأتك ستلد، وتموت هي ويبقى الولد، فخرج من عنده وقال: والله ما رأيت شيئًا، فوقع كما أوَّلَها ابنُ سيرين

கனவுலக மாமேதை இப்னுஸீரீன் ரஹ் அவர்களிடம் ஒருவர் ஒரு கனவைப் பற்றி சொன்னார் ; நான் கனவில் ஒரு கண்ணாடி பாத்திரத்தைப் பார்த்தேன். அதில் தண்ணீர் இருந்தது. அந்த பாத்திரம் உடைந்து விட்டது. இருந்தாலும் தண்ணீர் அப்படியே இருந்தது. அதைக் கேட்ட இப்னு ஸீரீன் ரஹ் அவர்கள், அல்லாஹ்வை பயந்து கொள்! அப்படி ஒரு கனவை நீ பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றார்கள். அப்படியென்றால் நான் பொய் சொல்கிறேன் என்கின்றீர்களா? என்று அந்த மனிதர் கேட்டார். அவர் அவ்வாறு கேட்டவுடன் இப்னு ஸீரீன் ரஹ் அவர்கள் அதற்கான விளக்கத்தை சொன்னார்கள் ;

உன் மனைவிக்கு குழந்தை பிறக்கும். பிறந்த பிறகு மனைவி இறந்து விடுவாள். குழந்தை உன்னோடு இருக்கும் என்றார்கள். உடனே அவர் அதிர்ச்சியடைந்து நான் பொய் சொல்லி விட்டேன். எந்தக் கனவையும் காண வில்லை என்று கூறினார். ஆனாலும் இப்னு ஸீரீன் ரஹ் அவர்கள் கூறியதைப் போன்றே அவருக்கு நடந்தது.

 

கனவைக் கேட்டவுடன் அது உண்மையா? இல்லையா? என்பதை மேதைகள் கண்டு பிடித்து விடுவார்கள்.

ذكر ابن سعد في الطبقات الكبرى عن "عمر بن حبيب بن قليع قال: كنت جالساً عند سعيد بن المسيب يوماً وقد ضاقت عليَّ الأشياء ورهقني دين فجلست إلى ابن المسيب وما أدري أين أذهب فجاءه رجل فقال: يا أبا محمد إني رأيت رؤياً.

قال: ما هي؟

قال: رأيت كأني أخذت عبدالملك بن مروان فأضجعته إلى الأرض ثم بطحته فأوتدت في ظهره أربعة أوتاد.

قال: أنت رأيتها؟

قال: بلى أنا رأيتها.

قال: لا أخبرك أو تخبرني.

قال: ابن الزبير رآها وهو بعثني إليك.

قال: لئن صدقت رؤياه قتله عبدالملك بن مروان وخرج من صلب عبدالملك أربعة كلهم يكون خليفة.

ஒரு மனிதர் சஈத் பின் முஸய்யப் ரஹ் அவர்களிடத்தில் வந்து நான் ஒரு கனவு கண்டேன். அதில் ஆட்சியாளர் அப்துல் மலிக் பின் மர்வானைப் பிடித்து கீழே படுக்க வைத்து நான்கு குச்சிகளை அவரின் முதுவுக்கு மேலே அடுக்கி வைத்தேன். இப்படி ஒரு கனவு எனக்கு வந்தது என்று குறிப்பிட்டார் .அதைக் கேட்டு அவர்கள் உண்மையைச் சொல் நீ தான் இந்த கனவை கண்டாயா என்று மீண்டும் கேட்டார்கள். நீ உண்மையை சொல்லும் வரை அதற்கான விளக்கத்தை கூற மாட்டேன் என்று மறுத்தார்கள். உடனே அந்த மனிதர் இந்த கனவை நான் காண வில்லை. அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரலி அவர்கள் கண்டார்கள் என உண்மையை ஒத்துக் கொண்டார். அப்போது அவர்கள், இந்த கனவைக் கண்டது உண்மை என்றால் அப்துல் மலிக் பின் மர்வானால் அவர்கள் கொல்லப்படுவார்கள். ஆட்சியாளருக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள்.அந்த 4 பேரும் கலீபாவாக இருப்பார்கள் என்று விளக்கம் கூறினார்கள்.அவ்வாறே நடந்தது.

قال النووي: قوله صلى الله عليه وسلم في الرؤية المكروهة: ولا يحدث بها أحدا فسببه أنه ربما فسره تفسيرا مكروها على ظاهر صورتها، وكان ذلك محتملا فوقعت بتقدير الله تعالى

விருப்பமில்லாததைக் கண்டால் அதை சொல்லக்கூடாது என்று சொல்லப்பட்டதற்குக் காரணம் ; அந்த கனவிற்கான நேரடியான பொருளை அதாவது விரும்பாத ஒரு செய்தியை விளக்கமாக சொல்லி விட்டால் அது கண்டவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும். அப்படியே நடந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். அந்த எண்ணத்தினால் சமயத்தில் அது நடந்து விடும் என அல்லாமா நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

கனவில் நல்ல செய்தி எதுவும் இருந்தால் அதைக் கேட்டு பிடிக்காதவர்களுக்கு பொறாமையும் அதன் மூலம் சில எதிர் பாராத ஆபத்துக்களும் நிகழ வாய்ப்பிருக்கிறது. எனவே அதை அனைவரிடமும் சொல்லக்கூடாது.

 

கனவின் விளக்கத்தை அனைவரும் சொல்லி விட முடியாது. சொல்லும் விளக்கம் சமயங்களில் தவறாகவும் அமையலாம்.

أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ فِي المَنَامِ ظُلَّةً تَنْطُفُ السَّمْنَ وَالعَسَلَ، فَأَرَى النَّاسَ يَتَكَفَّفُونَ مِنْهَا، فَالْمُسْتَكْثِرُ وَالمُسْتَقِلُّ، وَإِذَا سَبَبٌ وَاصِلٌ مِنَ الأَرْضِ إِلَى السَّمَاءِ، فَأَرَاكَ أَخَذْتَ بِهِ فَعَلَوْتَ، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَعَلاَ بِهِ، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَعَلاَ بِهِ، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَانْقَطَعَ ثُمَّ وُصِلَ. فَقَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ، وَاللَّهِ لَتَدَعَنِّي فَأَعْبُرَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:44]: «اعْبُرْهَا» قَالَ: أَمَّا الظُّلَّةُ فَالإِسْلاَمُ، وَأَمَّا الَّذِي يَنْطُفُ مِنَ العَسَلِ وَالسَّمْنِ فَالقُرْآنُ، حَلاَوَتُهُ تَنْطُفُ، فَالْمُسْتَكْثِرُ مِنَ القُرْآنِ وَالمُسْتَقِلُّ، وَأَمَّا السَّبَبُ الوَاصِلُ مِنَ السَّمَاءِ إِلَى الأَرْضِ فَالحَقُّ الَّذِي أَنْتَ عَلَيْهِ، تَأْخُذُ بِهِ فَيُعْلِيكَ اللَّهُ، ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ مِنْ بَعْدِكَ فَيَعْلُو بِهِ، ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ آخَرُ فَيَعْلُو بِهِ، ثُمَّ يَأْخُذُهُ رَجُلٌ آخَرُ فَيَنْقَطِعُ بِهِ، ثُمَّ يُوَصَّلُ لَهُ فَيَعْلُو بِهِ، فَأَخْبِرْنِي يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ، أَصَبْتُ أَمْ أَخْطَأْتُ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَبْتَ بَعْضًا وَأَخْطَأْتَ بَعْضًا» قَالَ: فَوَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لَتُحَدِّثَنِّي بِالَّذِي أَخْطَأْتُ، قَالَ: «لاَ تُقْسِمْ»

ஒருவர் இறைத்தூதர்  (ஸல்) அவர்களிடம் வந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்று விட்டீர்கள். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து) விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது’ என்றார்.

அப்போது (அங்கிருந்த) அபூபக்கர் (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்’ என்றார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்கள், ‘அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்’ என்று கூறிவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்’ என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)’ என்றார்கள். (புகாரி: 7046)

قيل للإمام مالك رحمه الله: أيعبر الرؤيا كل أحد؟ فقال: أبالنبوة يلعب؟ لا يعبر الرؤيا إلا من يحسنها

இமாம் மாலிக் ரஹ் அவர்களிடம் கனவிற்கு அனைவரும் விளக்கம் தரலாமா என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நபித்துவத்தைக் கொண்டு விளையாடுகிறீர்களா? விளக்கம் தெரிந்தவர் மட்டுமே சொல்ல முடியும் என்றார்கள்.

 

ஒரே கனவு. பல மாறுபட்ட விளக்கங்கள்

قال الحافظ ابن بطال رحمه الله: رؤيا المرأة في المنام يختلف من وجوه: منها أن يتزوج الرائي حقيقة بمن يراها أو شبهها, ومنها أن يدل على حصول دنيا أو منزلة فيها أو سعة في الرزق...وقد تدل المرأة بما يقترن بها في الرؤيا على فتنة تحصل للرائي

ஒரு பெண்ணை ஒருவர் கனவில் கண்டால் அவளை அல்லது அவளைப் போன்ற ஒரு பெண்ணை அவர் திருமணம் முடிப்பார். அல்லது உலகத்தில் அந்தஸ்தும் உயர்வும் ஏற்படும் அல்லது விசாலமான உணவு கிடைக்கும் அல்லது அவருக்கு சோதனைகள் ஏற்படும் என்று பலவகையான வியாக்கியானங்கள் சொல்லப்படும்.

கனவுக்கான காரணங்கள்

ஒருவரிடம் இருக்கும் குறையை சுட்டிக் காட்டி அவர் தன்னை திருத்திக் கொள்வதறகான காரணமாக கனவு அமையும்.

إنَّ رِجالًا مِن أصْحابِ رَسولِ اللَّهِ ﷺ، كانُوا يَرَوْنَ الرُّؤْيا على عَهْدِ رَسولِ اللَّهِ ﷺ، فَيَقُصُّونَها على رَسولِ اللَّهِ ﷺ، فيَقولُ فِيها رَسولُ اللَّهِ ﷺ ما شاءَ اللَّهُ، وأَنا غُلامٌ حَديثُ السِّنِّ، وبَيْتي المَسْجِدُ قَبْلَ أنْ أنْكِحَ، فَقُلتُ في نَفْسِي: لو كانَ فِيكَ خَيْرٌ لَرَأَيْتَ مِثْلَ ما يَرى هَؤُلاءِ، فَلَمّا اضْطَجَعْتُ ذاتَ لَيْلَةٍ قُلتُ: اللَّهُمَّ إنْ كُنْتَ تَعْلَمُ فِيَّ خَيْرًا فأرِنِي رُؤْيا، فَبيْنَما أنا كَذلكَ إذْ جاءَنِي مَلَكانِ، في يَدِ كُلِّ واحِدٍ منهما مِقْمعةٌ مِن حَدِيدٍ، يُقْبِلانِ بي إلى جَهَنَّمَ، وأَنا بيْنَهُما أدْعُو اللَّهَ: اللَّهُمَّ إنِّي أعُوذُ بكَ مِن جَهَنَّمَ، ثُمَّ أُرانِي لَقِيَنِي مَلَكٌ في يَدِهِ مِقْمعةٌ مِن حَدِيدٍ، فَقالَ: لَنْ تُراعَ، نِعْمَ الرَّجُلُ أنْتَ، لو كُنْتَ تُكْثِرُ الصَّلاةَ. فانْطَلَقُوا بي حتّى وقَفُوا بي على شَفِيرِ جَهَنَّمَ، فَإِذا هي مَطْوِيَّةٌ كَطَيِّ البِئْرِ، له قُرُونٌ كَقَرْنِ البِئْرِ، بيْنَ كُلِّ قَرْنَيْنِ مَلَكٌ بيَدِهِ مِقْمعةٌ مِن حَدِيدٍ، وأَرى فِيها رِجالًا مُعَلَّقِينَ بالسَّلاسِلِ، رُؤُوسُهُمْ أسْفَلَهُمْ، عَرَفْتُ فِيها رِجالًا مِن قُرَيْشٍ، فانْصَرَفُوا بي عن ذاتِ اليَمِينِ. فَقَصَصْتُها على حَفْصَةَ، فَقَصَّتْها حَفْصَةُ، على رَسولِ اللَّهِ ﷺ، فَقالَ رَسولُ اللَّهِ ﷺ: إنَّ عَبْدَ اللَّهِ رَجُلٌ صالِحٌ، لو كانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فَقالَ نافِعٌ: فَلَمْ يَزَلْ بَعْدَ ذلكَ يُكْثِرُ الصَّلاةَ.

 

 

இப்னு உமர்(ரலி) அவர்களின் தோழர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அல்லாஹ் நாடிய (விளக்கத்)தைக் (கனவுக்குக்) கூறுவார்கள். நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னல் இளம் வயது வாலிபனாய் இருந்த சமயம் பள்ளிவாசலே என் வீடாய் இருந்தது. (அங்கு தான் உறங்குவேன்.) அப்போது நான் மனத்துக்குள்ளே 'உனக்கு ஏதேனும் நன்மை நடப்பதாயிருந்தால் இவர்களைப் போன்று நீயும் (கனவு) கண்டிருப்பாய்'' என்று சொல்லிக் கொள்வதுண்டு. ஒரு (நாள்) இரவு நான் உறங்கப்போனபோது, 'அல்லாஹ்வே! என் விஷயத்தில் நீ ஏதேனும் நன்மையை அறிந்திருந்தால் எனக்கும் கனவைக் காட்டு'' என்று பிரார்த்தித்தேன். நான் அவ்வாறே (உறக்கத்தில்) இருந்தபோது (கனவில்) இரண்டு வானவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் முனை வளைந்த இரும்புத் தடி ஒன்று இருந்தது. அவர்கள் இருவரும் என்னை நரகத்திற்கு அழைத்துச் சென்றனர். நான் அவர்கள் இருவரிடையே இருந்து கொண்டு அல்லாஹ்விடம், 'அல்லாஹ்வே! நரகத்தைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று இறைஞ்சிக் கொண்டிருந்தேன்.

பிறகு தம் கையில் இரும்புத் தடி இருக்க இன்னொரு வானவர் என்னைச் சந்திக்கக் கண்டேன். அவர் (என்னிடம்) 'இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்; நீங்கள் அதிகமாகத் தொழுதால் நீங்கள் நல்ல மனிதர்தாம்'' என்றார். அப்போது அந்த வானவர்கள் (இருவரும்) என்னை நரகத்தின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தினர். கிணற்றின் சுற்றுச் சுவரைப் போன்று அதற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. கிணற்றின் இரண்டு பக்கவாட்டிலுமுள்ள கல் தூண்களைப் போன்று தூண்கள் அதற்கும் இருந்தன. ஒவ்வோர் இரண்டு தூண்களுக்கும் இடையே ஒரு வானவர் இருந்தார். அவரின் கையில் முனை வளைந்த ஓர் இரும்புத் தடி இருந்தது. அந்த நரகத்தில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த பல மனிதர்களை கண்டேன். அதில் (எனக்கு அறிமுகமான) குறைஷியர் சிலரை நான் கண்டுகொண்டேன். பிறகு அவ்வானவர்கள் (சொர்க்கவாசிகளின் வழித்தடமான) வலப்பக்கத்தில் என்னைக் கொண்டுசென்றார்கள்.

7029 (தொடர்ந்து) இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (நான் உறங்கி எழுந்ததும்) இதை (என் சகோதரியும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் விவரித்துச் சொன்னேன். ஹஃப்ஸா(ரலி) அவர்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் நல்ல மனிதர்தாம் (இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால்)'' என்றார்கள்.

 

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இதைக்கேட்ட பின் இப்னு உமர்(ரலி) அவர்கள் (இரவில்) அதிகமாகத் தொழுது கொண்டேயிருந்தார்கள். (புகாரி 7028)

 

பாவத்தைக்குறித்து எச்சரிக்கும் கனவு

بعث أمير الكوفة, المسيب بن زهير الضبي, إلى عمار بن سيف بألفين فردها, فطلبتها زوجته, فأنفذ إليها المسيب بالألفين, فباتت عندها, فأصبح عمار يقول: قد أحدثت في هذه الخزانة حدثاً, لقد رأيت في النوم كأنها تضطرم علينا ناراً, فقالت: الألفين أخذتها فهي في الخزانة, قال: كدت أن تحرقينا, رديها, فردتها. 

கூஃபா நகரத்து ஆட்சியாளர் அம்மார் பின் ஸைஃப் என்ற கூஃபா நகரத்து நல்ல மனிதருக்கு 2000 தினாரை கொடுத்து அனுப்பினார். அவர்கள்  வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். ஆனால் அவருடைய மனைவியோ அதை வாங்கி வைத்துக் கொண்டார். அன்று இரவு படுத்து காலை எழுந்திருந்து சொன்னார்கள் நான் ஒரு கனவு கண்டேன். அதில் நெருப்பு ஜுவாலை ஒன்று நம்மை நோக்கி கொழுந்து விட்டு எரிவதைப் போன்று கண்டேன். அப்போது அவர்களின் மனைவி நீங்கள் வேண்டாம் என்று மறுத்த அந்த 2000 தீனார்களை நான் எடுத்துக் கொண்டேன் என்று சொன்னார்கள். அதை கேட்டவுடன் என்ன காரியம் செய்து விட்டாய் நம்மை எரித்து விட விரும்புகிறாயா என்று கேட்டு விட்டு அதை திருப்பி கொடுத்து விடுமாறு சொன்னார்கள்.

 

நபிமார்களின் கனவு

நபிமார்களுக்கு வரும் கனவு சத்தியமானது. உண்மையானது. அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு கிடைக்கும் இறைச் செய்தியாகும்.

فَأَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

بَيْنَمَا أَنَا نَائِمٌ، رَأَيْتُ فِي يَدَيَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، فَأَهَمَّنِي شَأْنُهُمَا، فَأُوحِيَ إِلَيَّ فِي المَنَامِ: أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَطَارَا، فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ، يَخْرُجَانِ بَعْدِي ” فَكَانَ أَحَدُهُمَا العَنْسِيَّ، وَالآخَرُ مُسَيْلِمَةَ الكَذَّابَ، صَاحِبَ اليَمَامَةِ

நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, ‘அதை ஊதி விடுவீராக!’ என்று கனவில் எனக்கு (இறைக் கட்டளை) அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, நான் அவற்றை ஊதி விட, அவையிரண்டும் பறந்து போய்விட்டன.

நான் அவ்விரண்டும் எனக்குப் பின் தோன்றவிருக்கிற (தம்மை இறைத்தூதர்கள் என்று வாதிக்கப் போகும்) இரண்டு பொய்யர்கள் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் (அஸ்வத்) அல்அன்ஸிய்யாகவும் மற்றொருவன் யமாமா வாசியான பெரும் பொய்யன் முஸைலமாவாகவும் அமைந்தார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (புகாரி: 3621)

 

பின்னால் நடக்கயிருக்கும் நிகழ்வுகளை அல்லாஹ் நபிமார்களுக்கு கனவின் மூலம் அறிவிப்பான்.

 

இப்ராஹீம் அலை அவர்கள் கண்ட கனவு

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏

(அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்தபொழுது, அவர் (தன் மகனை நோக்கி) ‘‘என் அருமை மைந்தனே! நான் உன்னை (என் கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என் கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?'' என்று கேட்டார். அதற்கவர், ‘‘என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதைச் சகித்துக் கொண்டு) உறுதியாயிருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்'' என்று கூறினார். (அல்குர்ஆன் : 37:102)

 

யூசுஃப் அலை அவர்கள் கண்ட கனவு

اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏

யூஸுஃப் (நபி, யஅகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்'' என்று கூறிய சமயத்தில், (அல்குர்ஆன் : 12:4)

 

நபி ஸல் அவர்கள் கண்ட கனவு

لَـقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْيَا بِالْحَـقِّ‌  لَـتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَـرَامَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِيْنَۙ مُحَلِّقِيْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِيْنَۙ لَا تَخَافُوْنَ‌ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِيْبًا

நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு அவர் கண்ட கனவை மெய்யாகவே உண்மையாக்கி வைத்து விட்டான். அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர்களாகவும், உங்கள் தலை முடிகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்படமாட்டீர்கள். (அப்போது) நீங்கள் அறியாதிருந்ததை (ஏற்கனவே அல்லாஹ்) அறிந்திருந்தான். ஆகவே, இதையன்றி உடனடியான மற்றொரு வெற்றியையும் உங்களுக்குக் கொடுத்தான். (அல்குர்ஆன் : 48:27)

 

முஃமின்களின் கனவு

واعلم ان ما يراه الرائي في نومه قد يتحقق في اليقظة، وقد لا يتحقق؛ ولذا لا ينبغي الاعتقاد بأن ما رآه في منامه سيقع لا محالة، كما لا ينبغي الخوف منه،

முஃமின்கள் காணும் கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். ஆனால் கனவில் கண்ட கண்டதைப் போன்றே நிச்சயம் நடக்கும் என்று உறுதியிட்டு கூற முடியாது. நடக்கவும் செய்யலாம். நடக்காமலும் போகலாம். அதன் மூலம் நன்மையும் ஏற்படலாம். தீமையும் ஏற்படலாம்.ஷைத்தானின் சூழ்ச்சியாகவும் இருக்கலாம். எனவே கனவு கண்டவர், தான் கண்ட கனவு நிச்சயம் நிகழும் நம்புதல் கூடாது.கெட்ட கனவு கண்டால் அவ்வாறு நடந்து விடுமோ என்று அஞ்சவும் கூடாது. நல்லதை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். ஆபத்திலிருந்து பாதுகாப்பு தேட வேண்டும்.

 

கனவைப் பார்த்து ஏமாந்து விடக்கூடாது

قال المروذي: أدخلت إبراهيم الحميدي على أبي عبدالله وكان رجلاً صالحاً, فقال: إن أمي رأت لك كذا وكذا, وذكرت الجنة, فقال: يا أخي, إن سهل بن سلامة كان الناس يخبرونه بمثل هذا, وخرج سهل إلى سفك الدماء, وقال: الرؤيا تسرّ المؤمن, ولا تغره.

ஒரு ஸாலிஹான மனிதரிடம் உங்களுக்கு சொர்க்கம் கிடைத்து விட்டதாக கனவில் காணப்பட்டது என்று மக்கள் சுப்ச்செய்தி சொன்னார்கள். அதைக் கேட்டு விட்டு அவர், கனவு ஒரு முஃமினுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும். அதே நேரத்தில் அதைக் கொண்டு அவர் ஏமாந்து போய் விடக்கூடாது என்று சொன்னார்கள்.

 وهيب بن الورد, كانوا يرون له الرؤيا أنه من أهل الجنة. فإذا أخبر بها اشتد بكاؤه, وقال: قد خشيت أن يكون هذا الشيطان

உஹைப் பின் வர்த் ரஹ் அவர்களிடம் நீங்கள் சொர்க்கவாதி என்று கனவில் காண்பிக்கப்பட்டது என்று கூறினால் கடுமையாக அழுவார்கள். இது ஷைத்தானின் ஏமாற்று வேலையாக இருக்கும் என்று நான் அஞ்சுகிறேன் என்று சொல்வார்கள்.

 

قال الشيخ عبد القادر الجيلاني : رأيت عرشًا بين السماء والأرض، فناداني صوت قال: يا عبد القادر أنا ربك قد أسقطت عنك الفرائض، وأبحت لك المحارم كلها، أسقطت عنك جميع الواجبات، قال: فقلت له: اخسأ يا عدو الله، فتمزق ذلك العرش، وذلك النور، وقال: نجوت مني بحلمك وعلمك يا عبد القادر وقد فتنت بهذه الفعلة سبعين صديقا أو كما قال. قيل له: كيف عرفت يا عبد القادر أنه شيطان. قال: عرفت بقوله: أسقطت عنك الواجبات، وأبحت لك المحرمات، وعرفت أن الواجبات لا تسقط عن أحد إلا من فقد عقله، وقال: إنه لم يستطع أن يقول: أنا الله، بل قال: أنا ربك.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரஹ் அவர்கள் ஒரு நாள் ஒரு சப்தமொன்றைக் கேட்டார்கள். அதில் நான் தான் உன் இறைவன். இன்று முதல் உனக்கு எல்லா கடமைகளையும் நான் நீக்கி விட்டேன். தடுக்கப்பட்டவை அனைத்தையும் உனக்கு ஆகுமாக்கி விட்டேன் என்று சொல்லப்பட்டது. உடனே அவர்கள் அல்லாஹ்வின் விரோதியே போய் விடு என்று சொல்லி ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடினார்கள். அப்போது அந்த இப்லீஸ், இந்த மாதிரி மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த 70-க்கும் மேற்பட்டவர்களை நான் ஏமாற்றி இருக்கிறேன். ஆனால் நீங்கள் உங்களுடைய பொறுமையாலும் அறிவாலும் தப்பித்துக் கொண்டீர்கள் என்று சொன்னான். அவர்களிடத்தில் அவன் ஷைத்தான் என்பதை எப்படி நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்று கேட்கப்பட்ட போது, அவனுடைய வார்த்தைகளைக் கொண்டு தான் நான் அறிந்து கொண்டேன் என்று சொன்னார்கள். நிச்சயமாக எப்போதும் ஒரு மனிதருக்கு கடமைகள் நீக்கப்படாது. தடுக்கப்பட்டவை ஆகுமாகி விடாது. மேலும் அவன் தன்னைப் பற்றி சொல்லுகின்ற பொழுது நான் அல்லாஹ் என்று சொல்ல வில்லை. நான் உன்னுடைய எஜமானன் என்று கூறினான் அதை வைத்தும் நான் அறிந்து கொண்டேன் என்றார்கள்.

 

காணாத கனவை கண்டாக கூறினால்

مَن تَحَلَّمَ بحُلم لم يَرَه، كُلِّف أن يعقد بين شعيرتين ولن يفعل

யார் கனவை பொய்யாக கூறுவாரோ கியாமத் நாளில் அல்லாஹு தஆலா இரண்டு கோதுமைகளை அவரிடம் கொடுத்து (இரண்டு கயிறுகளுக்கு மத்தியில் முடிச்சு போடுவதைப் போன்று) ஒரு கோதுமையை மற்றொன்றில் முடிச்சு போடச் சொல்லி நிர்ப்பந்திப்பான்.        (நூல் : இப்னு ஹிப்பான்)

سَمِعْتُ وَاثِلَةَ بْنَ الأَسْقَعِ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِنَّ مِنْ أَعْظَمِ الفِرَى أَنْ يَدَّعِيَ الرَّجُلُ إِلَى غَيْرِ أَبِيهِ، أَوْ يُرِيَ عَيْنَهُ مَا لَمْ تَرَ، أَوْ يَقُولُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ يَقُلْ

பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதன் தன்னைத் தன் தந்தையல்லாதவருடன் இணைத்து (நான் அவரின் மகன் என்று) கூறுவதும், தன் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்தாகக் கூறுவதும், இறைத்தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என வாஸிலா இப்னு அல் அஸ்கவு (ரலி) அறிவித்தார்.(புகாரி: 3509)

 

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் யஃகூப் என்பவர் நான் ஒரு கனவு கண்டேன். அதில் மஹ்தி என்று அடையாளம் காணப்பட்டேன். எனவே பின்னால் நான்  மஹ்தீ என்று அறிவிக்கப்படுவேன் என்று சொல்லி கனவில் மிதந்து கொண்டிருக்கிறார். மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரின் குழப்பத்திலிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அல்லாஹ் பாதுகாப்பானாக!

 

 

7 comments:

  1. அற்புதமான மிம்பர் மலர்களின் தொகுப்பு..
    அருமை அருமை
    வல்ல அல்லாஹ் தங்கள் சேவைகளை ஏற்று பொருந்திக் கொள்வானாக மவ்லானா

    ReplyDelete
  2. ماشاء الله مر كويس ياتيك العافيه

    ReplyDelete
  3. அருமை மௌலவி...

    அல்லாஹ் அருள் புரிவானாக

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ் சிறப்பான குறிப்புகள்.. அல்லாஹ் தங்களுக்கு அருள்புரியட்டும்

    ReplyDelete
  5. அருமையான குறிப்பு அல்லாஹ் தங்களுக்கு பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  6. ஜஸாகல்லாஹூ கைரல் ஜஸா

    ReplyDelete