உலகில் இருக்கிற முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று கடைபிடித்துக் கொண்டிருக்கிற இஸ்லாம், மனித வாழ்வின் மிகச்சிறந்த வாழ்க்கை நெறியாக இருக்கிறது. மனித வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் நுழைந்து தன் தீர்க்கமான கருத்துக்களை பதிவு செய்திருப்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று. அந்த வகையில் மனித உரிமைகள் குறித்து தெளிவாக இஸ்லாம் பேசியிருக்கிறது. மனிதனுடைய எண்ணற்ற உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, உரிமைகள் மீறப்படுகிற இன்றைய சூழலில் அது குறித்து சிந்திக்க வேண்டும்.
ஆண்டு
தோறும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் human
rights day மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு
தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற
மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதுமே
இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும்.
இஸ்லாம் மனிதனுக்கு எல்லா உரிமைகளையும்
வழங்கியிருக்கிறது. மனித உரிமைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது தனி மனித
சுதந்திரம். இஸ்லாம் இதை நிறைவாகவே கொடுத்திருக்கிறது. ஒரு மனிதருடைய
சுதந்திரத்தில் எவரும் கை வைக்கக்கூடாது. ஒருவர் இன்னொருவரின் தனிப்பட்ட
வாழ்க்கையில் அவருடைய அந்தரங்க விவகாரங்களில் தேவையின்றி தலையிடக்
கூடாது.அநாவசியமாக அதை தெரிந்து கொள்ள முற்படக்கூடாது. பிறருக்கு அதை தெரிவிப்பதிலும்
ஆர்வம் காட்டக்கூடாது. அது மனித உரிமை மீறல்.
இன்றைக்கு
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி
மற்றவர்களை உளவு பார்க்கவும், அவர்களின்
உரையாடல்களை அவர்களுக்குத் தெரியாமல் அல்லது அவர்களின் சம்மதமின்றி பதிவு
செய்யவும் முடியும். இதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது.
அதேபோல்,
ஒருவரின் தனிப்பட்ட ஆவணங்களைப் படிப்பது, அவர்களின்
கடிதங்கள் அல்லது நாட்குறிப்பைப் படிப்பது, அவர்களின்
தொலை பேசியைப் பார்ப்பது மற்றும் அவர்களின் அனுமதியின்றி அவர்களின் உரையாடலைக்
கேட்பது. இவைகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இது தனி மனித
சுதந்திரத்திற்கு எதிரானது.
தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் அனைத்தும்
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி
வீட்டிற்குள் நுழைவதற்கு தடை
ஒரு வீட்டிற்கு சென்றால் அனுமதி கேட்க வேண்டும்.
அனுமதி கிடைத்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். அனுமதி கிடைக்க வில்லையென்றால்
உள்ளே செல்வதும் கூடாது. வெளியே இருந்து எட்டிப் பார்ப்பதும் கூடாது. ஏனெனில் அது
தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது.
عن أبي موسى رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : « إذا أستأذن
أحدكم ثلاثا فلم يؤذن له فليرجع » متفق عليه
உங்களில் மூன்று முறை அனுமதி கேட்டு அனுமதி கிடைக்க
வில்லையென்றால் அவர் திரும்பி விடட்டும். (அபூதாவூது ; 5180)
சில நேரங்களில் அவர் வீட்டிற்குள் நுழைவதை அவர்கள்
விரும்பாமல் இருக்கலாம். அல்லது வெளியே வர முடியாத சூழ்நிலையாக இருக்கலாம். அந்த
நேரத்தில் ரொம்ப நேரமாக நின்று கொண்டே இருந்தால் அது அவர்களுக்கு தர்ம சங்கடத்தை
ஏற்படுத்தும். இவருக்கும் நேரம் வீணாகும்.இதை கருத்தில் கொண்டு தான் இப்படி ஒரு
சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
عَنْ عُبَيْدِ
بْنِ عُمَيْرٍ،
أَنَّ أَبَا
مُوسَى الأَشْعَرِيَّ: اسْتَأْذَنَ عَلَى عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ
عَنْهُ، فَلَمْ يُؤْذَنْ لَهُ، وَكَأَنَّهُ كَانَ مَشْغُولًا، فَرَجَعَ أَبُو
مُوسَى، فَفَرَغَ عُمَرُ، فَقَالَ: أَلَمْ أَسْمَعْ صَوْتَ عَبْدِ اللَّهِ بْنِ
قَيْسٍ ائْذَنُوا لَهُ، قِيلَ: قَدْ رَجَعَ، فَدَعَاهُ فَقَالَ: «كُنَّا نُؤْمَرُ
بِذَلِكَ»، فَقَالَ: تَأْتِينِي عَلَى ذَلِكَ بِالْبَيِّنَةِ، فَانْطَلَقَ إِلَى
مَجْلِسِ الأَنْصَارِ، فَسَأَلَهُمْ، فَقَالُوا: لاَ يَشْهَدُ لَكَ عَلَى هَذَا
إِلَّا أَصْغَرُنَا أَبُو سَعِيدٍ الخُدْرِيُّ، فَذَهَبَ بِأَبِي سَعِيدٍ
الخُدْرِيِّ، فَقَالَ عُمَرُ: أَخَفِيَ هَذَا عَلَيَّ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلْهَانِي الصَّفْقُ بِالأَسْوَاقِ يَعْنِي
الخُرُوجَ إِلَى تِجَارَةٍ
உபைத்
பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா)
உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) அவர்கள் வந்து, உள்ளே
வர அனுமதி கோரினார்கள். உமர் (ரலி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்தார்கள். அபூமூஸா
(ரலி) அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை; உடனே
அபூமூஸா (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள். அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள்,
‘‘அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்”
என்றார்கள். ‘‘அவர் திரும்பிச் சென்று விட்டார்” என்று கூறப்பட்டது.
உடனே
உமர் (ரலி) அவர்கள் அபூமூஸா (ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். (‘‘ஏன்
திரும்பிச் சென்று விட்டீர்?” என்று உமர்
(ரலி) அவர்கள் கேட்ட போது) அபூமூஸா (ரலி) அவர்கள், ‘‘இவ்வாறே
நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்” எனக் கூறினார்கள்.
உமர்
(ரலி) அவர்கள், ‘‘இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டு
வாரும்!” எனக் கூறினார்கள். உடனே அபூமூஸா (ரலி) அவர்கள் அன்சாரிகளின் அவைக்குச்
சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘எங்களில்
சிறியவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு
சாட்சியம் சொல்ல மாட்டார்கள்” என்றனர்.
எனவே,
அபூமூஸா (ரலி) அவர்கள், அபூஸயீத்
அல்குத்ரீ (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார்கள்.
(அபூஸயீத் (ரலி) அவர்கள், அபூமூஸா (ரலி) அவர்கள் கூறியதை உறுதிப்
படுத்தியதும்) உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதே? நபி
(ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) சந்தைகளில் நான் வணிகம் செய்து
கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது (போலும்)!” என்று கூறினார்கள்.
(புகாரி : 2062)
உள்ளிருந்து
பதில் வரவில்லையானால் திருக்குர்ஆன் நபிவழியின் அடிப்படையில் திரும்பிச் சென்று விட
வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக வீட்டில் என்ன நடக்கிறது என்பதை வீட்டுக் கதவின்
ஓட்டை வழியாக பார்க்கும் மோசமான நிலை இன்றைக்கு இருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு
இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
عَنْ أَبِي
هُرَيْرَةَ، قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ
أَنَّ امْرَأً اطَّلَعَ عَلَيْكَ بِغَيْرِ إِذْنٍ فَخَذَفْتَهُ بِعَصَاةٍ
فَفَقَأْتَ عَيْنَهُ، لَمْ يَكُنْ عَلَيْكَ جُنَاحٌ»
உன்
அனுமதியின்றி ஒருவர் உன்னை எட்டிப் பார்த்த போது அவரின் மீது நீ சிறு கல்லைச்
சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்து விட்டாலும் உன்
மீது எந்தக் குற்றமுமில்லை. (புகாரி: 6902)
عَنْ أَنَسِ
بْنِ مَالِكٍ أَنَّ رَجُلًا اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ، ” فَقَامَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ بِمِشْقَصٍ، أَوْ: بِمَشَاقِصَ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخْتِلُ
الرَّجُلَ لِيَطْعُنَهُ
ஒருவர்
நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட)
நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனையுடன்’ அல்லது ‘கூர்முனைகளுடன்’
அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரின் கண்ணில்) குத்தப்போனதை
இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது. (புகாரி: 6242)
عَنْ سَهْلِ
بْنِ سَعْدٍ أَنَّ رَجُلًا اطَّلَعَ مِنْ جُحْرٍ فِي دَارِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحُكُّ
رَأْسَهُ بِالْمِدْرَى فَقَالَ: «لَوْ عَلِمْتُ أَنَّكَ تَنْظُرُ، لَطَعَنْتُ
بِهَا فِي عَيْنِكَ، إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ قِبَلِ الأَبْصَارِ»
ஒருவர்
ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தம் தலையைக் கோதிக்
கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததை யறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘நீ
பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த
ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள்,
நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள்
(வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்களின் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்’
என்று கூறினார்கள். (புகாரி: 5924)
பிறருடைய
உரையாடலை இரகசியமாக ஒட்டுக் கேட்பதற்கு தடை
சமீபத்தில் சஞ்சார் சாதி என்ற ஒரு செயலியை
அனைத்து கைபேசிகளிலும் பதிவிறக்கம் செய்வது கட்டாயம், புதிதாக தயாரிக்கப்படுகின்ற
அனைத்து கைபேசிகளிலும் இந்த செயலி இடம் பெற வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது.
ஆனால் அந்த செயலியின் மூலம் கைபேசியை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட ஃபோன் உரையாடல்கள்,
இரகசிய எண்கள், இரகசிய தகவல்களை மத்திய அரசாங்கம் ஒட்டுக் கேட்க, தெரிந்து கொள்ள
முயற்சிக்கின்றது. எனவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர் கட்சிகள்
குரல் எழுப்பியதும் அந்த உத்தரவை திரும்பப் பெற்று விட்டது.
எனவே தன் இரகசியங்களை மற்றவர்கள் தெரிந்து கொள்வதை
எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இஸ்லாமும் அதை தடை செய்திருக்கிறது.
عَنِ ابْنِ
عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
مَنِ
اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ، وَهُمْ لَهُ كَارِهُونَ، أَوْ يَفِرُّونَ مِنْهُ،
صُبَّ فِي أُذُنِهِ الآنُكُ يَوْمَ القِيَامَةِ
தாம்
கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும்
நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில்
மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும்.(புகாரி: 7042)
قال الإمام
ابن هبيرة الشيباني في "الإفصاح عن معاني الصحاح" (3/ 196، ط. دار
الوطن): [المستمع إلى حديثِ مَن لا يُحِبُّ استماعَهُ سارقٌ، إلا أنه لم يسرق
بتناول دراهم فكانت تُقطَعُ، ولكنه تناول ذلك عن باب السمع فَصُبَّ فيه الآنك،
والآنك: نوعٌ من الرصاص فيه صلابة
பிறருடைய உரையாடலை அவருக்கு தெரியாமல் ஒட்டுக்
கேட்பது திருட்டுக் குற்றம் என்று இமாம்கள் கூறுகிறார்கள். பொருளைத் திருடுவதை விட
இது மோசமானது. எனவே தான் நபி ஸல் அவர்கள் இவ்வாறு எச்சரித்தார்கள் என்று
குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது அந்த மனிதரின் கண்ணியத்தையும் மரியாதையையும்
கெடுத்து விடும். மனிதனின் மானம் விலை உயர்ந்தது.
இரகசியத்தை
வெளிப்படுத்துவதற்கு தடை
اذا حدث الرجل
الحديث ثم التفت فهي امانة
ஒரு மனிதர் ஒரு விஷயத்தை
கூறி விட்டு திரும்பினால் அது அமானிதமாகும். (திர்மிதி ; 1959)
ஒருவர் நம்மிடம் பேசிக்
கொண்டிருக்கின்ற போது அங்கும் இங்கும் திரும்பிப் பார்ப்பார். யாரும் நம்மை
கவனிக்கிறார்களா? நாம் பேசுவதை
கேட்கிறார்களா? என்று பதட்டப்படுவார்.
அவ்வாறு ஒருவர் ஒரு விஷயத்தை நம்மிடம் பகிர்ந்தால் அது இரகசியம். அவரின்
அனுமதியின்றி அதை எவரிடம் கூறக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த
பொருளில் தான் இந்த ஹதீஸ் சொல்லப்பட்டுள்ளது.
இரண்டு
பேரைக் கடந்து விட்டால் எதுவும் இரகசியம் அல்ல என்று கூறுவார்கள்.ஓர் அறிஞரிடம்
கேட்கப்பட்டது. யார் அந்த இருவர்? அந்த அறிஞர்
கேள்விக்குப் பதில் கூறாமல் தமது இரு உதடுகள் மீது விரல் வைத்து 'இதுதான்'
என்று சுட்டிக்காட்டினார்.
அதாவது இரண்டு
பேரை அல்ல, இரு உதடுகளையும் கடந்து வெளியே செல்லும் எதுவும் இரகசியம் அல்ல. அது
வெளிப்படையான அறிவிப்பு. ஆகவே நம்மிடம் இருக்கும் இரகசியம் இரு உதடுகளைத் தாண்டி
வெளியேறக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு
வாட்ஸ்அப் தளத்தில் மற்ற
நண்பர்களுக்கோ அல்லது மற்ற குழுக்களுக்கோ வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன்
கலந்துரையாடல், கருத்துப் பகிர்வுகள், விவாதங்கள்
மற்றும் வாதங்கள் அல்லது பகிரப்பட்ட ஆவணங்கள் இருந்தால், முன் அனுமதியின்றி அந்த
கருத்துகளையோ அல்லது உரையாடல்களையோ பகிர அல்லது பரப்ப நமக்கு அனுமதி இல்லை.
ஒருவர்
கூறிய இரகசியத்தை நாம் வெளிப்படுத்தும் போது சொன்னவருக்கு சிக்கல் ஏற்படலாம். அது
அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். சமயங்களில் அவரின் மானம் போய் விடலாம். அது
தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது. எனவே தான் இஸ்லாம் அதை தடுக்கின்றது.
ஓர்
உண்மை முஸ்லிம் எப்போதும் இரகசியம் பேணுபவனாகவே இருப்பான். நம்பிக்கையோடு தன்னிடம்
பிறர் கூறிய இரகசியத்தை ஒருநாளும் கசிய விட மாட்டான்.
عَنْ أَنَسٍ،
قَالَ
أَتَى عَلَيَّ
رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا أَلْعَبُ مَعَ
الْغِلْمَانِ، قَالَ: فَسَلَّمَ عَلَيْنَا، فَبَعَثَنِي إِلَى حَاجَةٍ،
فَأَبْطَأْتُ عَلَى أُمِّي، فَلَمَّا جِئْتُ قَالَتْ: مَا حَبَسَكَ؟ قُلْتُ
بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَةٍ، قَالَتْ: مَا
حَاجَتُهُ؟ قُلْتُ: إِنَّهَا سِرٌّ، قَالَتْ: لَا تُحَدِّثَنَّ بِسِرِّ رَسُولِ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدًا قَالَ أَنَسٌ: وَاللهِ لَوْ
حَدَّثْتُ بِهِ أَحَدًا لَحَدَّثْتُكَ يَا ثَابِتُ
அனஸ்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
நான்
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சேவகனாக இருந்தபோது) என்னிடம் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் சிறுவர்களுடன் சேர்ந்து
விளையாடிக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு முகமன் (சலாம்)
சொன்னார்கள். பிறகு என்னை ஓர் அலுவல் நிமித்தம் (ஓரிடத்திற்கு) அனுப்பி வைத்தார்கள்.
நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். நான் (வீட்டுக்கு) வந்தபோது என் தாயார்,
“உன் தாமதத்திற்கு என்ன காரணம்?” என்று
கேட்டார்கள். நான்,
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அலுவலுக்காக என்னை அனுப்பி
வைத்தார்கள்” என்று பதிலளித்தேன். அப்போது என் தாயார், “என்ன
அலுவல்?” என்று கேட்டார்கள். நான், “அது
இரகசியம்” என்று சொன்னேன். என் தாயார், “நீ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசியத்தை யாரிடமும் சொல்லாதே” என்று
கூறினார்கள்.
(இதன்
அறிவிப்பாளரான) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அனஸ் (ரலி)
அவர்கள் இந்த ஹதீஸை என்னிடம் அறிவித்தபோது) “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த
இரகசியத்தை நான் யாரிடமாவது சொல்வதாயிருந்தால் ஸாபித்தே! உங்களிடம் அதைச்
சொல்லியிருப்பேன் (அதை நான் என்றைக்கும் யாரிடமும் அதைச் சொல்ல மாட்டேன்)” என்று
கூறினார்கள். (முஸ்லிம்: 4891)
அனஸ்
(ரலி) அவர்களின் மரணம் வரை அது என்ன இரகசியம் என்று எவருக்கும் தெரியாது.
பெருமானார் (ஸல்) அவர்கள் எதற்காக அவரை அனுப்பினார் என்று இன்று வரையிலும்
யாருக்கும் தெரியாத அளவு அந்த இரகசியம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.
أَنَّهُ
سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يُحَدِّثُ
أَنَّ عُمَرَ
بْنَ الخَطَّابِ، حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسِ بْنِ
حُذَافَةَ السَّهْمِيِّ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَدْ شَهِدَ بَدْرًا، تُوُفِّيَ بِالْمَدِينَةِ، قَالَ عُمَرُ:
فَلَقِيتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ، فَقُلْتُ: إِنْ
شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ، قَالَ: سَأَنْظُرُ فِي أَمْرِي،
فَلَبِثْتُ لَيَالِيَ، فَقَالَ: قَدْ بَدَا لِي أَنْ لاَ أَتَزَوَّجَ يَوْمِي
هَذَا، قَالَ عُمَرُ: فَلَقِيتُ أَبَا بَكْرٍ، فَقُلْتُ: إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ
حَفْصَةَ بِنْتَ عُمَرَ، فَصَمَتَ أَبُو بَكْرٍ فَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا،
فَكُنْتُ عَلَيْهِ أَوْجَدَ مِنِّي عَلَى عُثْمَانَ، فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ
«خَطَبَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْكَحْتُهَا
إِيَّاهُ» فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ: لَعَلَّكَ وَجَدْتَ عَلَيَّ حِينَ
عَرَضْتَ عَلَيَّ حَفْصَةَ فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ:
فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرْجِعَ إِلَيْكَ فِيمَا عَرَضْتَ، إِلَّا
أَنِّي قَدْ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ
ذَكَرَهَا، فَلَمْ أَكُنْ لِأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، وَلَوْ تَرَكَهَا لَقَبِلْتُهَا
அப்துல்லாஹ்
பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர்
பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி)
அவர்கள் இறந்து விட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையான போது (அவர்களை வேறொருவருக்குத்
திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.) குனைஸ் அவர்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ர்
போரில் கலந்து கொண்ட வருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில்
இறந்தார்கள்-
உமர்
(ரலி) அவர்கள் கூறினார்கள்:
எனவே,
நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து (என் மகள்)
ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, “நீங்கள்
விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் செய்துவைக்கிறேன்” என்று
கூறினேன். (அதற்கு) உஸ்மான் (ரலி) அவர்கள், “(உங்கள்
மகளை நான் மணம் புரிந்துகொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது;
(யோசித்தபின் எனது முடிவைக் கூறுகிறேன்)” என்று சொன்னார்கள்.
சில
நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானைச் சந்தித்த போது) அவர், “இப்போது
திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன்” என்று கூறினார்கள். ஆகவே,
நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) “நீங்கள்
விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்”
என்று கூறினேன். அபூபக்ர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்தப்
பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான் (ரலி) அவர்களைவிட அபூபக்ர்
(ரலி) அவர்கள் மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள்
பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண்
கேட்டார்கள்.
எனவே,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன்.
பிறகு (ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்த போது, “நீங்கள்
என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்ன போது நான் உங்களுக்குப் பதில் எதுவும்
கூறாததால் உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்” என்று கூறினார்கள்.
நான்,
“ஆம்’ என்று கூறினேன். (அதற்கு அபூபக்ர்-ரலி) அவர்கள், “நீங்கள்
கூறியபோது நான் உங்களுக்குப் பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றிப் பேசியதை
நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த ரகசியத்தை நான்
வெளிப்படுத்தவும் விரும்ப வில்லை. (எனவேதான், உங்களுக்குப்
பதிலேதும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்)
விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன்”
என்று கூறினார்கள். (புகாரி: 4005)
எனவே நாம் தனி மனித சுதந்திரத்தை
பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். அதில் கேடு விளைவிப்பவர்களாக பிறரின் தனிப்பட்ட
உரிமைகளை பறிப்பவர்களாக இருக்கக்கூடாது. அது பிறரின் மானத்தில் விளையாடுவதாகும்.
பிறரின் மானத்தை நாம் பாதுகாத்தால் அல்லாஹ் நம் மானத்தை பாதுகாப்பான். பிறரின்
மானத்தில் விளையாடுவது பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
قال ابن
الجوزي – رحمه الله: «فمن حفظ لسانه لأجل الله تعالى في الدنيا، أطلق الله لسانه
بالشهادة عند الموت ولقاء الله. ومن سرَّح لسانه في أعراض المسلمين، واتبع
عوراتهم، أمسك الله لسانه عن الشهادة عند الموت
பிறரைக்
குறை கூறுவதிலிருந்தும் பிறரின் மரியாதைக் கெடுக்கும் காரியங்களில்
ஈடுபடுவதிலிருந்தும் ஒருவர் தன் நாவை அல்லாஹ்விற்காக பாதுகாத்துக் கொண்டால்
மரணிக்கும் நேரத்தில் அவரின் நாவில் அல்லாஹ் கலிமாவை இலேசாக்கி விடுவான். அந்த
மாதிரியான காரியங்களில் ஒருவர் தன் நாவைப் பயன்படுத்தினால் மரணிக்கும் நேரத்தில்
கலிமாமை மொழிவதிலிருந்து அல்லாஹ் தடுத்து விடுவான் என்று இப்னுல் ஜவ்ஸீ ரஹ்
அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!


جزاكم الله خيرا كثيرا في الدارين...
ReplyDeleteجزاكم الله خيرا وبارك الله فيكم
ReplyDelete