Tuesday, January 21, 2014

கடனும் இஸ்லாமும்


 இன்றைக்கு உலகில் வாழும் அன்றாடங்காட்சி முதல் அரசாட்சி புரியும் ஆட்சியாளன் வரை எல்லோரிடத்திலும் இருப்பது கொடுக்கல்,வாங்கல். இதில் ஈடுபடாதவர்  உலகில் யாருக்கும் இருக்க முடியாது.

அளவான உணவு வழமான வாழ்வு



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அன்பு நேயர்களே! இன்று நோய்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதனால் நமது ஆரோக்கியமும் குறைந்து கொண்டே வருகிறது. இஸ்லாம், நோயில்லாமல் நலமாக வாழ நமக்கு வழிவகை செய்துள்ளது. பொதுவாக உண்ணக்கூடிய உணவு முறையில் கட்டுப்பாடு இல்லாததே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என இன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த உண்மையை இஸ்லாம்,1400 வருடங்களுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டது.

இனிய இரவு தூக்கம்



சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். அதுபோல நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் நெடுநாள் வாழ்ந்து சாதனைகள் புரிய முடியும். அந்த ஆரோக்கியத்திற்குத் தேவை நல்ல இரவு தூக்கம். ஆனால் இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில்
பார்ட்டி, அரட்டை,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இரவு தூக்கத்தைத் தொலைப்பவர் சிலர். உழைப்பு என்ற பெயரில்,சம்பாத்தியம் என்ற பெயரில் கண்களுக்கும் மூளைக்கும் ஓய்வு கொடுக்காமல் இரவு தூக்கத்தை இழப்பவர் பலர்.

வாழ்க்கைக்கு உழைப்பு அவசியம் தான்.ஆனால் அந்த உழைப்புக்கு அவசியம் உடல் ஆரோக்கியம்.அந்த உடல் ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக அமைவது இரவு தூக்கம். தூக்கத்தைத் துறந்து உழைப்பைத் துரத்தினால் பிறகு தூக்கமின்மையைத் துரத்த மருந்துகளைத் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படும்.

உழைக்க வேண்டிய நேரத்தில் உழைத்து உறங்க வேண்டிய நேரத்தில் உறங்கி வாழ்வில் உயர்ந்தவர்கள் சிலர். தூக்கத்தை விலையாக்கி மாடி மேல் கட்டி இறுதியில் மன இறுக்கம் கண்டு வாழ்வின் நிம்மதியை இழந்தவர்கள் பலர்.

தூக்கம் மனித உடலுக்கும்,உள்ளத்திற்கும் தேவை.ஆனால் மனிதனின் தேவைகள் அவனைத் தூங்க விடுவதில்லை. வருவாய்க்காக அதிக நேரம் உழைப்பதால் ஏழைகளின் உறக்கம் குறைகிறது. இருக்கும் செல்வத்தைப் பெருக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்ற பேராசையால் பணக்காரர்களின் உறக்கம் பறிபோகிறது.

தூக்கம் என்பது அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற மாபெரும் அருட்கொடை.பகலில் வாழ்க்கைப் பிரச்சனைகளில் உழன்று,உழைத்து கலைப்படைவதால் குறைந்து விட்ட தேக ஆற்றலைப் புதுப்பித்துக் கொள்ளவும்,கலைத்துப் போன நரம்பு மண்டலத்திற்கும்,உடலுக்கும் ஓய்வு கிடைக்கவும் அல்லாஹ் செய்த ஓர் ஏற்பாடு தான் இரவு தூக்கம். 

உறக்கம் என்பது மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் தவிர்க்க முடியாத ஓர் ஆயுட்காலத் தேவையாகும்.அறவே உறக்கமின்றி எந்த உயிரினமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருந்தால் உயிரிழந்து விடும் என்பதினால் உயிர்களின் நலன் கருதி அல்லாஹ்வே உறக்கத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்துகிறான். உறங்கவே கூடாது என்று ஒருவர் முடிவெடுத்து அதற்காக முயற்சித்தாலும் அவரை தூக்கம் விடாது கவ்விக் கொள்ளும்.

உறக்கத்தில் இருப்பவர்,உறங்கும் தருணத்தில், தாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உணர முடியாதவாறு இருக்கிறார். விழித்தெழுந்த பின்பும் கூட உறக்கத்தின் நிலைகள் பற்றி அவர் அறியாதவராகவே இருக்கிறார் என்பதை பார்க்கும் போது, உறக்கம் மரணத்தின் சகோதரன் என்று நபிகள் நாயகம் [ஸல்] குறிப்பிட்டது தின்னமாகிறது.

குறிப்பாக இரவு உறக்கம் இல்லாதவர்களுக்கு மூளை செயல்பாடு குறைந்து போவதாகவும்,உயிரணுக்கள் குறைவதாகவும் உடல் பலகீனமடைவதாகவும் இன்றைய மருத்துவம் குறிப்பிடுகிறது. மனிதர்களே! நீங்கள் பகலில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை தேடுவதற்காகவும்,இரவில் அமைதி பெறுவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் உங்களுக்கு அல்லாஹ் இரவு பகலை ஏற்படுத்தியுள்ளான்” என்ற திருக்குர்ஆனின் வசனம் இன்றைய மருத்துவ கண்டுபிடிப்பை ஊர்ஜிதம் செய்கிறது.

நபி [ஸல்] அவர்கள் கூட இரவு உணவுக்குப் பிறகு தூங்காமல் பேசிக்கொண்டிருப்பதை வெறுத்திருக்கிறார்கள்.

எனவே அல்லாஹ் வழங்கிய சிறந்த அருட்கொடையான உறக்கத்தை முறையாக பயன்படுத்துவோம்.வாழ்க்கையில் பல சாதனைகள் புரிவோம். வஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

   

நோயாளிகளை நலம் விசாரிப்போம்



 உலகலாவிய மார்க்கமான இஸ்லாம்,வெறும் ஆன்மீகத்தை மட்டும் போதிக்கும் மார்க்கமல்ல.மாறாக முழு வாழ்க்கை திட்டத்தையும் எடுத்தியம்பக் கூடிய மார்க்கம்.

மனித சமூகத்தின் அமைதிக்கு முழு வழிகாட்டி இஸ்லாம் ஆகும்.சமுதாய நலன்களை முக்கியத்துவப் படுத்துவதிலும்,மனித நேயம் வளர்ப்பதிலும், பிறர் உரிமைகளை பேணுவதிலும் இஸ்லாம் முன்னிலை வகிக்கிறது. அந்த வரிசையில் நோயுற்றவர்களை நலம் விசாரித்தலும் ஒன்று.

Friday, January 10, 2014

ஈடு இணையற்ற ஏந்தல் நபி [ஸல்] அவர்கள்

அல்லாஹ்வின் கிருபையால் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அகிலத்தில் அவதரித்த மாதமான,இருளில் மூழ்கியிருந்த உலகம் கியாமத் வரை மங்கா மாபெரும் பிரகாசத்தைப் பெற்ற மாதமான,அனாச்சாரங்களும், அட்டூழியங்களும்,அநியாயங்களும் இருந்த இடம் தெரியாமல் மறையத் தொடங்கிய மாதமான,  புனித ரபீவுல் அவ்வல் மாதத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ்.

Tuesday, December 24, 2013

இஸ்லாம் விரும்பும் மைகள்

                                


1. பேச்சில் வேண்டும்  ண்மை.                            

2. செயலில் வேண்டும் - பொறுமை.

Saturday, December 21, 2013

சிறந்தவர்கள் யார்?

                                                                                     

1.ஆண்களில்  சிறந்தவர் யார்?                                                                                                            

 தன் மனைவியிடத்தில் நல்ல பெயரை வாங்குபவரே ஆண்களில் சிறந்தவர்.             

2.பெண்களில் சிறந்தவர் யார்?                                                                                                            

 கணவன் பார்த்தால் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளே பெண்களில் சிறந்தவர்.  

இஸ்லாமியப் பார்வையில் பரக்கத் part -4

பரக்கத்தைப் பெற்றுத்தரும் அம்சங்கள் :-
நமது வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் பரக்கத் [அபிவிருத்தி] ஏற்படுவதற்கு மார்க்கம் ஒரு சில விஷயங்களை அடையாளம் காட்டுகிறது.அவற்றை நாம் பேணி வந்தால் இன்ஷா அல்லாஹ் பரக்கத்தைப் பெற்றி மகிழலாம்.
  1-வது விஷயம்  இறையச்சம்.

Thursday, December 19, 2013

மரம் வளர்ப்போம்




அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நிறைந்த நேயர்களே! படைப்புகளில் சிறந்த படைப்பாக நம்மை இறைவன் படைத்துள்ளான். சிறந்தவர்களாக இருக்கிற நாம், இறைவனின் பிரதிநிதியாக ஆக்கப்பட்டு, பிற படைப்புகள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பும் வழங்கப் பட்டுள்ளோம். அவன் தான் {தன்} பிரதிநிதிகளாகப் பூமியில் உங்களை ஆக்கியுள்ளான் என அல்குர்ஆன் அத்தியாயம் 6 ன் 165 வது வசனம் குறிப்பிடுகிறது.

ஆறுதல் தரும் பிரார்த்தனை




அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அன்பு நேயர்களே ! நவீங்கள் பெருகி விட்ட இக்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை இயந்திரங் களைப் போல் மாறிவிட்டது.மனிதர்களிடம் இருந்த சகோதர பாசம் குறைந்து விட்டது, மனிதாபிமானம் கரைந்து விட்டது, நட்பும் உருகி விட்டது, சுற்றத்தாரின் ஆதரவும் காணல் நீராய் போய் விட்டது.இதனால் மனிதன் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டவனாக மாறி, தான்என்ற வட்டத்திற்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான்.

எங்கே நிம்மதி?

    


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! இன்றைக்கு நாம் எல்லா விஷயங்களிலும் முன்னேறி வருகிறோம்.கல்வி, பொருளா தாரம் என்று எல்லா விஷயங்களிலும் வளர்ச்சிக்கு மேல் வளர்ச்சியைப் பெற்று வருகிறோம். நினைத்ததை சாதித்து விடுகிறோம், இலட்சியங்களை அடைந்து கொள்கிறோம், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி காணுகிறோம்.

நாவின் தீங்கு

      


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! அல்லாஹுத்தஆலா தன் அருள்மறை வேதமான அல்குர்ஆன் ஷரீஃபில், ரஹ்மான் என்ற அத்தியாயத்தின் 3 மற்றும் 4 வது வசனத்தில் நானே மனிதனைப் படைத்தேன்.நானே மனிதனுக்கு விளக்கமாக பேசவும் கற்றுக் கொடுத்தேன் எனக் குறிப்பிடுகிறான்.

துன்பத்திற்குப் பின் இன்பம்

  

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! நாம் வாழ்கின்ற இந்த உலக வாழ்க்கை, இன்பமும்,துன்பமும் கலந்த கலவை.துன்பத்தை அனுபவிக்காமல் இன்பத்திலேயே மூழ்கியவனும் கிடையாது.இன்பத்தை சுவைக்காமல் துன்பத்திலேயே சிக்கியவனும் கிடையாது. நம்மைப் படைத்த இறைவன் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தருகிறான்.

இஸ்லாம் கூறும் அறம்.

   


அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அன்பு நேயர்களே! உலகத்தில் அறம் என்ற தர்மத்தை வலியுறுத்தாத சமயங்களே இல்லை. மனிதனை உயர்வு படுத்துகின்ற, அவனுக்கு வரும் சோதனைகளிலிருந்து அவனைக் காக்கின்ற உயர்ந்த தர்மத்தைக் குறித்து எல்லா சமயங்களும் பேசுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு

     


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே!உலகில் மனிதனும், மற்ற ஜீவராசிகளும் ஜீவிக்கத் தேவையான,அவசியமான பொருள் தண்ணீராகும்.தண்ணீர் என்பது பூமியில் கிடைக்கும் மதிப்பு மிகுந்த சொத்துக்களில் ஒன்று. அகிலத்தின் எல்லா  வளங்களுக்கும் மூலம் நீர் தான்.

உலகை உலா வருவோம்

   

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! நம்மைப் படைத்த இறைவன் நம்மீது அன்பு கொண்டு நமக்காக அளித்த மிக அரிய பரிசு, நாம் வாழும் இந்த பூமி.
      
அவன் தான் உங்களுக்குப் பூமியை {நீங்கள் வசிப்பதற்கு} வசதியாக ஆக்கி வைத்தான்.ஆகவே அதன் பல கோணங்களிலும் செல்லுங்கள். அவன் {உங்களுக்கு} அளித்திருப்பவைகளைப் புசித்துக் கொள்ளுங்கள் என அல்குர்ஆன் 67-வது அத்தியாயத்தின் 15-வது வசனம் பேசுகிறது.

இஸ்லாத்தில் பெண்ணியம்.

  

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நிறைந்த நேயர்களே! இன்றைய கால கட்டத்தில் பெண்ணியம் என்பது பலராலும் பரவலாக பேசப்படும் தலைப்புகளில் ஒன்று. பெண் என்பவள்,அடக்க ஒடுக்கமாக, கற்பொழுக்க முள்ளவளாக,கீழ்படிபவளாக,குழந்தைகளையும், வீட்டையும் நன்கு பராமரிப்பவளாக,சமைப்பவளாக,துணிகளை துவைப்பவளாக, வீட்டை சுத்தம் செய்பவளாக,எதிலும் கால் வைக்காமல் வீட்டில் அடங்கிக் கிடப்பவளாக,கணவனுக்காக தன்னை அழித்துக் கொள்பவளாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆணாதிக்க நோக்கில், பெண்ணியத்தைப் பேசும் காலம் இது.

இஸ்லாம் கற்றுத்தந்த ஆட்சி முறை




அன்பு நிறைந்த நேயர்களே! அல்லாஹுத்தஆலா ; அண்ணல் நபி {ஸல்}அவர்கள் குறித்து
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறதுஎன்பதாக அல்குர்ஆன் அத்தியாயம்-33.வசனம்-22-ல் குறிப்பிடுகிறான்.அண்ணல் நபியவர்கள் இவ்வுலக மக்களுக்கு முன்மாதிரியான வாழ்க்கைத் திட்டத்தை

Wednesday, December 18, 2013

இங்லிஷ் தமிழ் உகைல் ரலி நிகழ்வு

    BISMILLAH-HIR-RAHMAN-NIR-RAHIMUkail  Ibnu  Abeethalib(rali)  says: once  i   had   an   opportunity  to   journey  with  Rasul(sal)  I  gained   three   valuable  messages  from  him  in  this  journey.  The  impact  of   there   three   messages      made    me  to  realise   the   beauty   and  truth  of  islam.   Let   us  known   about  the  messages

இங்கிலிஷ் தமிழ் தொழுகை


        
1. What is meaning prayer?                                       

2.Prayer brings the gods  satisfaction.                    

3.prayeris one of the greatest  worship of the prophets.