அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான, மற்ற மாதங்களில் இல்லாத தனிச்சிறப்பையும் மகத்துவத்தையும் உள்ளடக்கிய மாதமான துல்ஹஜ் மாத்ததை நாம் அடைந்திருக்கிறோம்.
Pages
- Home
- மக்தப் சிறுவர் நிகழ்ச்சிகள்
- மக்தப் - பட்டி மன்றம்
- மக்தப் - உரையாடல்கள்
- ஆடியோ உரைகள்
- இறையருள்
- சிறுவர் பயான்கள்
- மக்தப் - சிறுவர் கருத்தரங்கம்
- மக்தப் - கீதங்கள்
- தராவீஹ் பயான்
- ஜும்ஆ பயான்
- வாரம் ஒரு அமல்
- ரியாளுஸ் ஸாலிஹீன்
- தராவீஹ் குறிப்புகள் (2022)
- தராவீஹ் குறிப்புகள் 2023
- தராவீஹ் பயான் 2024
- தராவீஹ் பயான் 2025
- மக்தப் ஆண்டு விழா - ENGLISH & தமிழ்
- மக்தப் - கேள்வி பதில்
Thursday, July 30, 2020
Tuesday, July 28, 2020
Monday, July 27, 2020
நம் ஆசைகள் எப்படி இருக்க வேண்டும்
உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் ஆசைகளும்
எதிர் பார்ப்புக்களும் உண்டு. ஆனால் அவைகள்
மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒரு நோயாளி ஆரோக்கியத்தை ஆசைப்படுவான். ஒரு ஏழை செல்வத்தை
ஆசைப்படுவான்.ஒரு செல்வந்தன் செல்வாக்கை ஆசைப்படுவான். மக்களிடம் செல்வாக்கைப் பெற்ற
ஒருவன் பதவிக்கும் அதிகாரத்திற்கும் ஆசைப்படுவான். இப்படி மனித உள்ளங்களில் இருக்கிற
ஆசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பல வடிவங்கள் இருக்கிறது. பல தோற்றங்கள் இருக்கிறது.
Thursday, July 2, 2020
Tuesday, June 30, 2020
நபியின் மகத்தான குடும்பம்
இஸ்லாமிய மாதங்களின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். شهر الله அல்லாஹுடைய மாதம் என்று மாநபி ﷺ அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட மாதம் இந்த முஹர்ரம் மாதம். வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களையும் அவர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் நமக்கு நினைவுபடுத்துவதைப் போல வருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதம் அண்ணல் நபி ﷺ அவர்களின் குடும்பமான அஹ்லு பைத்துகளை நமக்கு நினைவுபடுத்தும்.
Monday, June 29, 2020
ரமலான் இறுதியில் மூன்று கவலை
அல்லாஹ்வின் மகத்தான அருளால் அருள் நிறைந்த ரமலான் மாதத்தை அடைந்து அதில் எண்ணற்ற அமல்களை செய்து அந்த மாதத்தை நிறைவு செய்யும் தருணத்தில் நாம் இருக்கிறோம்.இந்த மாதத்தில் நாம் வைத்த நோன்புகள், நாம் தொழுத தராவீஹ் தொழுகைகள், நாம் செய்த தானதர்மங்கள், கடமையான ஜகாத்துகள் உட்பட நாம் செய்த அத்தனை நற்கருமங்களையும் வல்லோன் அல்லாஹ் கபூல் செய்வதோடு அதற்கு ஈருலகத்திலும் சிறந்த பகரத்தை தருவானாக.
குடியுரிமை சட்டத்தைப் பற்றி பயம் வேண்டாம்
நாட்டிலே தற்போது அச்சுறுத்தலான
சூழ்நிலைகள், முஸ்லிம் சமூகத்தை பீதியடையச் செய்கின்ற சூழ்நிலைகள் நிலவிக்
கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல் படுத்தி விட்டார்கள். அந்த சட்டத்தை
நிலை நிறுத்துவதற்கும் நடைமுறைப் படுத்துவதற்கும் சாத்தியக்கூறுகளை கண்டறிந்து ஒன்றன்பின்
ஒன்றாக அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பரக்கத் என்றால் என்ன ?
நாம் இன்று 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களை விட இந்த காலம் பொருளாதாரத்திலும் தொழில்
நுட்பங்களிலும் அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் இன்ன பிற மனித வாழ்வின் அனைத்து வசதி
வாய்ப்புகளிலும் கடந்த காலத்து மனிதனின் சிந்தனையில் கூட உதிக்காத பல்வேறு
முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டு விட்ட காலம்.
அல்லாஹ்வின் அன்பை அல்லாஹ்விடம் அன்பைக் கேட்போம்
அல்லாஹுத்தஆலா உலகத்தில் நம்மைப் படைத்து
நமக்கு மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறான். அன்பு இரக்கம்
என்பது நமக்கு மட்டுமல்ல உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசி களுக்கும் இருக்கிற ஒரு இயற்கைப் பண்பு. அதை
ஏற்படுத்துபவன் அல்லாஹ். நாமாக நம் உள்ளத்திலோ பிறர் உள்ளத்திலோ அன்பை விதைக்க
முடியாது.இரக்கத்தைப் புகுத்த முடியாது.
இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 4 ; திருமணம்
வாழ்க்கையில் அவசரமாக
செய்ய வேண்டும் என்று இஸ்லாம் அடையாளப்படுத்திய வலியுறுத்திய விஷயங்களை நாம் பார்த்து
வருகிறோம். அதில் ஒன்று திருமண வயதை அடைந்த பெண்ணை மணமுடித்து வைப்பது,ஒரு பெண்
திருமண வயதை அடைந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு தகுந்த ஜோடி அமைந்து விட்டால்
அந்தப் பெண்ணை மணமுடித்து வைப்பதில் அவசரம் காட்ட வேண்டும்.
இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 3 ; விருந்தோம்பல்
வாழ்க்கையில் எந்தக் காரியத்தை செய்தாலும் எந்தக் காரியத்தை
செய்வதாக இருந்தாலும் அது உலகம் சார்ந்த காரியமாக இருந்தாலும் மறுமையை நோக்கமாகக்
கொண்ட காரியமாக இருந்தாலும் அதிலே நின்று நிதானமாக அமைதியாக பக்குவமாக பொறுமையாக யோசித்து,
செய்யலாமா? வேண்டாமா? அது நன்மையா? தீமையா? நமக்கு அது தேவையா? தேவை இல்லையா? என்று தீர்க்கமாக முடிவு
செய்து அதற்குப் பிறகு தான் செய்ய வேண்டும். அந்த நிதானமும் பொறுமையும் தான் அந்த
காரியத்தில் நமக்கு வெற்றியைப் பெற்றுத்தரும்.
அவசரம் கூடாது
நாம் வாழ்க்கையில் எந்தக் காரியத்தை செய்தாலும்
அதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு குறிக்கோல் இருக்கும். ஒரு இலக்கு
இருக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் குறிக்கோல் இல்லாமல் எந்த காரியத்தையும் நாம்
செய்வதில்லை. எந்தக் காரியத்திலும் நாம் இறங்குவதில்லை.அப்படி எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்தக் குறிக்கோலும் இல்லாமல் இறங்குபவர்கள் நிச்சயம்
புத்திசாலியாக இருக்க முடியாது.எனவே ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிய பயணம் தான்
நம் வாழ்க்கை.
Subscribe to:
Posts (Atom)


















