உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோலும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கிறது.அந்த வெற்றியைப் பெறுவதற்கு அதை ருசிப்பதற்கு அதை தனதாக்கிக் கொள்வதற்கு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்தை கையாளுகிறான்.அந்த விஷயத்தையே வெற்றிக் கான படிக்கட்டாக அமைத்துக் கொள்கிறான்.அந்த வெற்றியை வெகு சீக்கிரம் அடைந்து கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறான். பல்வேறு அர்பணிப்புகளை செய்கிறான்.அதை நோக்கியே தன் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்கிறான்.
Pages
- Home
- மக்தப் சிறுவர் நிகழ்ச்சிகள்
- மக்தப் - பட்டி மன்றம்
- மக்தப் - உரையாடல்கள்
- ஆடியோ உரைகள்
- இறையருள்
- சிறுவர் பயான்கள்
- மக்தப் - சிறுவர் கருத்தரங்கம்
- மக்தப் - கீதங்கள்
- தராவீஹ் பயான்
- ஜும்ஆ பயான்
- வாரம் ஒரு அமல்
- ரியாளுஸ் ஸாலிஹீன்
- தராவீஹ் குறிப்புகள் (2022)
- தராவீஹ் குறிப்புகள் 2023
- தராவீஹ் பயான் 2024
- தராவீஹ் பயான் 2025
- மக்தப் ஆண்டு விழா - ENGLISH & தமிழ்
- மக்தப் - கேள்வி பதில்
Thursday, November 25, 2021
Thursday, November 18, 2021
இறைவன் ஒருவரை நேசித்தால்.....
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் வசந்தமான மாதங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டு மாதங்களில் ரபீவுல் அவ்வல் மாதத்தை நிறைவு செய்து விட்டு இரண்டாம் வசந்தம் என்று சொல்லப்படுகின்ற ரபீவுல் ஆகிரில் நாம் அமர்ந்திருக்கிறோம். உலக முஸ்லிம்களால் போற்றப்படுகிற உயர்த்திப் பேசப்படுகிற பரிசுத்தமான வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட உலகத்திலுள்ள இறைநேசர்கள் வலிமார்களுக்கெலாம் தலைவரான குத்புல் அக்தாப் கௌஸுல் அஃலம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் நினைவுகூறப்படுகிற மாதம் இந்த ரபீவுல் ஆகிர் மாதம். கௌஸுல் அஃலம் பிறந்த இந்த மாதத்தில் இறைநேசம் குறித்து நாம் சிந்திக்கலாம்.
Thursday, November 11, 2021
மழை சொல்லும் செய்தி
உலகத்தில் அல்லாஹுத்தஆலா எண்ணற்ற படைப்பினங்களையும் ஜீவராசிகளையும் படைத்திருக்கிறான். கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள், உருவத்தில் மிகப்பெரிய உயிரினங்கள், நம் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டும் உயிரனங்கள்,சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டாத உயிரனங்கள்,நாம் கேள்விப்பட்ட உயிரனங்கள்,நாம் இதுவரை கேள்விப்படாத உயிரினங்கள்,பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிகின்ற உயிரனங்கள், பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கிற உயினங்கள் என்று எத்தனையோ உயிரங்களை படைத்த இறைவன் அந்த உயிரினங்களிலெல்லாம் மிகச்சிறந்த உயிரினமாக அந்த படைப்புக்களிலெல்லாம் மிக உயர்ந்த படைப்பாக அற்புத படைப்பாக மனிதனை படைத்திருக்கிறான்.
Thursday, November 4, 2021
குழந்தை ஒரு அமானிதம்
அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் மழை காலம் ஆரம்பித்து தமிழகம் முழுக்க பரவலாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹுத்தஆலா பொழிந்து கொண்டிருக்கிற இந்த மழையை யாருக்கும் இடையூறின்றி அனைவருக்கும் பயன் தரும் நன்மழையாக, ஊரை செழிப்பாக்கும் மழையாக ஆக்கி அருள்வானாக!
Thursday, October 28, 2021
விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞான தூதர்.
இஸ்லாமியர்களாக இருக்கக்கூடிய நாம் வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் நபிகள் பெருமானார் ஸல் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நம் வாழ்வில் எதைக்குறித்து பேசுவதானாலும் நபியைத் தொடாமல் நபியின் ஹதீஸ்களை மேற்கோள் காட்டாமல் அவர்களை உதாரணப் படுத்தாமல் நாம் பேசி விட முடியாது.அப்படி பேசினாலும் அது மார்க்கமாக ஆகாது.
Monday, October 25, 2021
ஹதீஸ் எண் 55 دع ما يريبك
عَنْ أَبِي مُحَمَّدٍ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: حَفِظْتُ مِنْ رَسُول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ؛ فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ، وَالْكَذِبَ رِيبَةٌ»[1]؛ رواه الترمذي
உனக்கு சந்தேகமானதை விட்டு விட்டு உனக்கு சந்தேகம் இல்லாததின் பக்கம் நீ செல். நிச்சயமாக உண்மை என்பது அமைதியைத் தரும். பொய் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தும். (திர்மிதி ; 2518)
ஹதீஸ் எண் 54 ان الصدق يهدي الي البر
عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ،
عن النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إنَّ الصِّدقَ يَهْدِي إِلَى
البرِّ، وَإِنَّ البر يَهدِي إِلَى الجَنَّةِ، وإنَّ الرَّجُلَ لَيَصدُقُ حَتَّى يُكْتَبَ
عِنْدَ اللهِ صِدِّيقًا، وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ
يَهدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكتَبَ عِنْدَ اللهِ
كَذَّابًا». متفق عليه
நிச்சயமாக உண்மை பேசுதல் நல்லது செய்வதின் பக்கம் வழிகாட்டும் நல்லது செய்தல் சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் நிச்சயமாக உண்மை பேசுபவர் இதில் உண்மையாளர் என அந்த இடம் பதிவு செய்யப்படுவார் நிச்சயமாக பொய் பேசுதல் தவறுகள் செய்வதை வழிகாட்டும் தவறுகள் நரகத்தைப் பெற்றுத் தரும் நிச்சயமாக ஒருவர் பொய் பேசினால் அல்லாவிடம் பொய்யர் என பதிவு செய்யப் படுவார். (புகாரி ; 6094)
Sunday, October 24, 2021
ஹதீஸ் எண் 53 لا تتمنوا لقاء العدو
عَنْ أَبِي إِبْرَاهِيمَ عَبْدِاللهِ بْنِ
أَبِي أَوفَى رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
فِي بعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ، انْتَظَرَ حَتَّى إِذَا مَالَتِ
الشَّمْسُ قَامَ فِيهِمْ، فَقَالَ: «يَا أيُّهَا النَّاسُ، لَا تَتَمَنَّوا لِقَاءَ
الْعَدُوِّ، وَاسْأَلُوا اللهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا،
وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيوفِ متفق عليه
நபி ஸல் அவர்கள் எதிரிகளைச் சந்தித்த போர்க்களங்களில் ஒரு போரின் போது, சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரை காத்திருந்து பின், மக்களே எதிரிகளை சந்திக்க விரும்பாதீர்கள். அல்லாஹ்விடம் உடல் ஆரோக்கியத்தைக் கேளுங்கள் எதிரிகளை நீங்கள் சந்தித்து விட்டால் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக சொர்க்கம் வாள்களின் நிழல்களுக்குக் கீழே உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். (புகாரி ; 2818)
ஹதீஸ் எண் 52 الا تستعملني كما استعملت فلانا
فعن أبي يحيى أسيد بن حضير أن رجلاً من
الأنصارِ جاء رسولَ اللهِ صلى الله عليه وسلَّم فقال: ألا تستعملني كما استعملتَ فلانًا؟
قال إنكم ستلقون بعدي أثَرَةً فاصبروا، حتى تلقوني على الحوضِ. متفق عليه
அன்சாரிகளில் ஒருவர் நபி ஸல் அவர்களிடத்திலே வந்து இந்த மனிதருக்கு நீங்கள் பொறுப்பைக் கொடுத்தது போன்று எனக்கும் நீங்கள் தரக்கூடாதா என்று கேட்டார். அப்போது நபியவர்கள் நிச்சயமாக நீங்கள் எனக்கு பின்னால் உரிமை மீறலை நீங்கள் சந்திப்பீர்கள். எனவே மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தில் என்னை சந்திக்கும் வரை நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள் என்றார்கள். (புகாரி ; 7057)
ஹதீஸ் எண் 51 ستكون بعدي اثرة
عن ابن مسعود أن رسول الله ﷺ قال: إنها ستكون بعدي أثَرة وأمور تنكرونها،
قالوا: يا رسول الله، فما تأمرنا؟، قال: تؤدون الحق الذي عليكم، وتسألون الله الذي
لكم[1] متفق عليه.
எனக்கு பின் உரிமை பறித்தலும் நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே எங்களுக்கு இது விஷயமாக நீங்கள் இடும் கட்டளை என்ன என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குத் தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்றார்கள். (புகாரி ; 7052)
ஹதீஸ் எண் 47 من كظم غيظا
عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الجُهَنِيِّ،
عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ يَسْتَطِيعُ أَنْ يُنَفِّذَهُ
دَعَاهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ عَلَى رُءُوسِ الخَلَائِقِ حَتَّى يُخَيِّرَهُ
فِي أَيِّ الحُورِ شَاءَ .رواه الإمام أحمد في "المسند" (24
/
ஒருவர் கோபத்தை வெளிப்படுத்த சக்தியிருந்தும் அதை அவர் அடக்கினால் மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முந்நிலையில் அவரை அல்லாஹ் அழைப்பான். இறுதியாக அவர் விரும்பிய ஹூருல்ஈன் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க அவருக்கு அல்லாஹ் சலுகை வழங்குவான். (திர்மிதி ; 2021)
ஹதீஸ் எண் 45 ليس الشديد بالصرعة
عن أبي هريرة أن رسول الله
ﷺ قال: ليس الشديد بالصُّرَعة، إنما الشديد
الذي يملك نفسه عند الغضب[1] متفق عليه.
வீரன் என்பது மல்யுத்தம் செய்வதைக் கொண்டல்ல. கோபம் ஏற்படும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவன் தான் வீரன். (புகாரி ; 6114)
ஹதீஸ் எண் 44 بارك الله لكما في ليلتكما
عن أنس -رضي الله عنه- قال: كان ابن لأبي
طلحة -رضي الله عنه- يشتكي، فخرج أبو طلحة، فَقُبِضَ الصَّبي، فلما رجع أبو طلحة، قال:
ما فعل ابني؟ قالت أم سليم وهي أم الصَّبي: هو أسْكَن ما كان، فَقَرَّبَت إليه العشاء
فتَعَشَّى، ثم أصاب منها، فلما فَرَغ،َ قالت: وارُوا الصَّبي فلما أصبح أبو طلحة أتى
رسول الله -صلى الله عليه وسلم- فأخبره، فقال:«أعَرَّسْتُمُ اللَّيلَةَ؟» قال: نعم،
قال: «اللَّهُمَّ بارِك لهما»، فولدت غلامًا، فقال لي أبو طلحة: احْمِلْهُ حتى تأتي
به النبي -صلى الله عليه وسلم- وبعث معه بتمرات، فقال: «أمَعَه شيء؟» قال: نعم، تَمَرات،
فأخذها النبي -صلى الله عليه وسلم- فمَضَغَها، ثم أخذها من فِيه فجعلها في فِيِّ الصَّبي،
ثم حَنَّكَهُ وسماه عبد الله. وفي رواية: قال ابن عيينة: فقال رجل من الأنصار: فرأيت
تِسْعَة أولاد كلهم قد قرؤوا القرآن، يعني: من أولاد عبد الله المولود
அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அபூதல்ஹா(ரலி) அவர்களின் மகன் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அபூதல்ஹா அவர்கள் (ஏதோ ஒரு பணிக்காக) வெளியே சென்றிருந்தார்கள். அப்பொழுது அந்தச் சிறுவர் மரணம் அடைந்தார். அபூதல்ஹா திரும்பி வந்தபொழுது கேட்டார்கள்: ‘என் மகனின் நிலை என்ன?’ அதற்கு ‘அவர் முன்னைவிடவும் மிக அமைதியாக இருக்கிறார்’ என்று சிறுவரின் தாயாராகிய உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள் சொன்னார்கள்;. பிறகு இரவு உணவை அவர்கள் முன்னால் வைத்தார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்கள் உணவு உட்கொண்டார்கள். பிறகு மனைவியுடன் தாம்பத்திய உறவும் கொண்டார்கள். அவர்கள் ஓய்வு பெற்றபொழுது உம்மு ஸுலைம் சொன்னார்கள்:‘எல்லோரும் சிறுவனை அடக்கம் செய்யுங்கள்!’ பொழுது விடிந்ததும் அபூதல்ஹா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் செய்தி சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்:‘இன்று இரவு நீங்கள் வீடு கூடினீர்களா?’ அதற்கு அபூ தல்ஹா ‘ஆம் ‘ என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், ‘யா அல்லாஹ்! இவ்விருவருக்கும் அருள்பாக்கியம் புரியாயாக! ‘ என்று பிரார்த்தனை செய்தார்கள் – அவ்வாறே உம்மு ஸுலைம் அவர்கள் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தார்கள்.
ஹதீஸ் எண் 42 فمن يعدل اذا لم يعدل الله ورسوله
عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ،
قَالَ: لَمَّا كَانَ يَومُ حُنَينٍ آثَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
نَاسًا فِي الْقِسْمَةِ، فَأَعْطَى الْأَقْرَعَ بْنَ حَابِسٍ مِائَةً مِنَ الْإِبِلِ،
وَأَعْطَى عُيَيْنَةَ بْنَ حِصْنٍ مِثْلَ ذَلِكَ، وَأَعْطَى نَاسًا مِنْ أَشْرَافِ
الْعَرَبِ، وَآثَرَهُمْ يَوْمَئِذٍ فِي الْقِسْمَةِ، فَقَالَ رَجُلٌ: وَاللهِ إِنَّ
هَذِهِ قِسْمَةٌ مَا عُدِلَ فِيهَا، وَمَا أُرِيدَ فِيهَا وَجْهُ اللهِ، فَقُلْتُ:
وَاللهِ لَأُخْبِرَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ
فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ، فَتَغَيَّرَ وَجْهُهُ حَتَّى كَانَ كَالصِّرْفِ، ثُمَّ
قَالَ: «فَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ يَعْدِلِ اللهُ وَرَسُولُهُ؟»، ثُمَّ قَالَ: «يَرْحَمُ
اللهُ مُوسَى، قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ»، فَقُلْتُ: لَا جَرَمَ
لَا أَرْفَعُ إِلَيْهِ بَعْدَهَا حَدِيثًا[1]؛ متفق عليه
ஹுனைன் போரின் போது நபி ஸல் அவர்கள் அந்தப் போரில் கிடைத்த கனிமத் பொருள்களை பங்கீடு செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா பின் மிஹ்ஸன் அவர்களுக்கும் அதே போல் கொடுத்தார்கள். மேலும் அரபு மக்களில் முக்கியமானவர்களுக்கும் கொடுத்தார்கள். அந்நாளில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக இந்த பங்கீட்டில் நீதி கடைப்பிடிக்கப்பட வில்லை, அல்லாஹ்வின் திருப்பியும் இதில் நாடப்பட வில்லை என்று ஒரு மனிதர் கூறினார். அதைக் கேட்டு விட்டு அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதை நான் நபி ஸல் அவர்களிடம் கூறுவேன் என்று சொல்லி விட்டு உடனே அவர்களிடம் வந்து அவர் கூறியதை சொன்னேன். அப்போது சிவப்பு சாயம் போல் அவர்களின் முகம் மாறியது. அல்லாஹ்வும் அவனது தூதரும் நீதமாக நடக்க வில்லை என்றால் வேறு யார் நீதமாக நடப்பார் என்று கூறி விட்டு, அல்லாஹ் மூஸா நபி அவர்களுக்கு அருள் புரிவானாக. இதை விட மிக அதிகமாக அவர் நோவினை செய்யப்பட்டார். அப்போது அவர் பொறுமையாக இருந்தார் என்று கூறினார்கள். இந்த நிகழ்வுக்குப் பின்னர் ஒரு செய்தியை நபி ஸல் அவர்களிடம் நான் கூறாமல் இருப்பது குற்றமல்ல என்று நான் கூறிக் கொண்டேன். (புகாரி ; 3150)
ஹதீஸ் எண் 41 الا تستنصر لنا
فعن أبي عبد الله خباب بن الأرت -رضي الله
عنه- قال: شكونا إلى رسول الله -صلى الله عليه وسلم- وهو متوسد بردة له في ظل الكعبة
فقلنا ألا تستنصر لنا؟ ألا تدعو لنا؟ فقال: ((قد كان مَن قبلكم يُؤخذ الرجل فيُحفر
له في الأرض، فيُجعل فيها، ثم يؤتى بالمنشار فيوضع على رأسه فيجعل نصفين، ويمشط بأمشاط
الحديد ما دون لحمه وعظمه ما يصده ذلك عن دينه، واللهِ ليتمنّ الله هذا الأمر حتى يسير
الراكب من صنعاء إلى حضرموت لا يخاف إلا الله والذئبَ على غنمه، ولكنكم تستعجلون))[1]،
رواه البخاري وفي رواية: "وهو متوسد بردة، وهو في ظل الكعبة، وقد لقينا من المشركين
شدة"[2]
கஃபாவின் நிழலில் தனக்குரிய மேலாடையை தலையணையாக வைத்த நிலையில் படுத்திருந்த நபி ஸல் அவர்களிடம் நாங்கள் எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடக்கூடாதா எங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யக்கூடாதா என்று கூறியவர்களாக முறையிட்டோம். அதற்கு நபி ஸல் அவர்கள் உங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒருவர் பிடிக்கப்பட்டு அவருக்காக பூமியில் குழி தோண்டப்பட்டு அதில் போடப்பட்டார். பின்பு ரம்பத்தைக் கொண்டு வரப்பட்டு அவரது தலையில் வைக்கப்பட்டு அறுக்கப்பட்டது. இரு பாதியாக அவர் அறுக்கப்பட்டார். எஞ்சிய அவரது இறைச்சியும் எலும்பும் இரும்புச் சீப்பால் சீவப்பட்டது. இது, அவரை அவரது மார்க்கத்தை விட்டும் மாற்ற வில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப் படுத்துவான். சன்ஆ என்ற ஊரிலிருந்து ஹள்ர்மவ்த் என்ற ஊர் வரைக்கும் ஒரு பயணி அல்லாஹ்வைத் தவிர எவரையும் அஞ்ச மாட்டார். தன் ஆட்டுக்காக ஓநாயைக் கண்டும் பயப்பட மாட்டார். இந்த அளவிற்கு மாற்றம் ஏற்படும். என்றாலும் நீங்கள் அவசரப்படுகிறீர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 3612)
Thursday, October 21, 2021
நபி நேசம் மட்டும் போதும்
அகிலத்தின் அருட்கொடையான அண்ணலம் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் புகழை எடுத்துச் சொல்கின்ற மவ்லித் ஷரீஃபும் மீலாது ஷரீஃபும் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வசந்தமான காலம் இது.
Thursday, October 14, 2021
ஹதீீஸ் எண் 40 لا يتمنين احدكم الموت
فعن أنس -رضي الله تعالى عنه- قال: قال
رسول الله -صلى الله عليه وسلم-: ((لا يتمنينّ أحدكم الموت لضُر أصابه، فإن كان
لابدّ فاعلاً فليقل: اللهم أحيني ما كانت الحياة خيراً لي، وتوفني إذا كانت الوفاة
خيراً لي))([1]) متفق عليه
உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட சோதனைக்காக மரணத்தை ஆசைப்பட வேண்டாம். அப்படி ஒருவேளை அவர் செய்வதாக இருந்தால், இறைவா உயிரோடு இருப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக. மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக என்று கூறட்டும். (புகாரி ; 5671)
ஹதீஸ் எண் 39 من يرد الله به خيرا يصب منه
وعن ابي هريرة رض قال قال رسول الله صل
من يرد الله به خيرا يصب منه رواه البخاري
யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ அவரை சோதிக்கிறான். (புகாரி ; 5645)
ஹதீஸ் எண் 38 انك توعك وعكا شديدا
وعن ابن مسعود -رضي الله عنه- قال: دخلت
على النبي -صلى الله عليه وسلم- وهو يُوعَك، فقلت: يا رسول الله، إنك تُوعَك وعْكاً
شديداً، قال: ((أجل، إني أُوعَك كما يوعك رجلان منكم)) قلت: ذلك أن لك أجرين؟
قال:((أجل، ذلك كذلك، ما من مسلم يصيبه أذى، شوكة فما فوقها إلا كفر الله بها سيئاته،
وحُطت عنه ذنوبه كما تَحُطُّ الشجرةُ ورقها
இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; நபி ஸல் அவர்களுக்கு காய்ச்சலாக இருந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். இறைத்தூதர் அவர்களே நீங்களும் கடும் காய்ச்சலினால் அவதிப்படுகிறீர்களே என்று கேட்டேன். ஆம் உங்களில் இருவருக்கு காய்ச்சல் ஏற்படுவது போல் நான் காய்ச்சலுக்கு ஆளாகிறேன் என்று கூறினார்கள். இதற்கு உங்களுக்கு இரண்டு கூலி உண்டா என்று கேட்டேன். ஆம் அவ்வாறு தான். ஒரு முஸ்லிமுக்கு முள் குத்துவது மேலும் அதற்கு மேலாக எந்த நோவினை ஏற்பட்டாலும் அதன் மூலம் அவனது குற்றங்களை அல்லாஹ் மன்னிக்கிறான். மரம் தன் இலைகளை உதிர்ப்பது போல அவனது பாவங்கள் அவனை விட்டும் நீக்கப்படும் என்றார்கள். (புகாரி ; 5647)
Friday, October 8, 2021
ஹதீஸ் எண் 37 ما يصيب المسلم من نصب
فعن أبي سعيد وأبي هريرة -رضي الله عنهما-
عن النبي ﷺ قال: ما يصيب المسلم من نَصَب، ولا وَصَب،
ولا هم، ولا حزن، ولا أذى، ولا غم، حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه
ஒரு முஸ்லிமுக்கு சிரமம் நோய் கவலை துக்கம் நோவினை கடுமையான மன உளைச்சல் மற்றும் அவனுடைய காலில் குத்தி விடும் முள்ளின் வேதனை உட்பட அனைத்திற்கும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான். (புகாரி ; 5641)


