அருள் நிறைந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் நாம்
அமர்ந்திருக்கிறோம்.உலகம் முழுக்க அத்தனை இடங்களிலும் தன் உள்ளத்தில் உன்னத
நபியின் பிரியத்தை தாங்கியிருக்கிற ஒவ்வொருவரும் அந்த பிரியத்தை வெளிப்படுத்தும்
வகையில், அவர்களது
பிறப்பை நினைத்து மகிழ்வுறும் வகையில் இந்த மாதத்தில்
அவர்கள் வாழ்க்கை குறித்தும்
அவர்களின் அழகிய நடைமுறைகள் குறித்தும் சமூகத்தில் அவர்கள் செய்த சாதனைகள்
குறித்தும் தன் உம்மத்திற்காக அவர்கள் செய்த தொண்டுகள் குறித்தும், இப்படி அவர்களை
மையப்படுத்தியே பேசுவது வழக்கம். ஏனென்றால் அவர்களது வருகையால் தான் இந்த உலகம்
ஒழுங்காது, சீரானது,ஒளி பெற்றது,ஷைத்தானுக்கு தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்
கொள்ளும் நிலை உருவானது.எனவே அவர்களது வருகை ஷைத்தானுக்கு மிகப்பெரும் சவாலாக
இருக்கும் அதே நேரத்தில் ஈமானிய உணர்வை உள்ளத்தில் தாங்கியிருக்கிற நமக்கு
நிச்சயம் மாபெரும் வெற்றியாகவும் ஈடேற்றமாகவும் தான் இருக்க வேண்டும். நமது
வெற்றிக்கும் ஈடேற்றத்திற்கும் காரணமாக இருக்கிற அண்ணலம் பெருமானார் ﷺ
அவர்கள் வருகை புரிந்த இந்த மாதத்தில் அவர்களைக் குறித்துப் பேசுவது தான்
மிகப்பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் எல்லா இடங்களிலும் அவர்களது
சீரத்துகள் பேசப்படுகிறது. நாமும் பேசிக்கொண்டிருக் கிறோம்.அல்லாஹுத்தஆலா அவர்களது பரிசுத்தமான வாழ்க்கை
குறிப்புகள் அனைத்தையும் தெரிந்து கொள்வதற்கும் அவர்களை பின்பற்றுவதற்கும்
தவ்ஃபீக் செய்வானாக
அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் ﷺ
அவர்கள், தான் உலகிற்கு
அனுப்பப்பட்ட நோக்கம் குறித்து பல சமயங்களில் பல்வேறு விதமாக
சொல்லியிருக்கிறார்கள். انما بعثت داعيا ஈமானின் பக்கம் இஸ்லாத்தின் பக்கம் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகள் பக்கம்
இஸ்லாமிய கலாச்சாரத்தின் பக்கம் இஸ்லாமிய நாகரீகத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்காக
நபியாக அனுப்பப்பட்டிருக்கிறேன். انما
بعثت رحمة உலகத்திற்கும் உலகத்தில் அல்லாஹ்வின்
படைப்பினங்களுக்கும் அருளாக அனுப்பப்பட்டிருக்கிறேன். انما بعثت لاتمم مكارم الاخلاق நற்குணங்கள் அனைத்தையும் பரிபூரணப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டிருக் கிறேன்.
இப்படி தன் வருகை குறித்த பல காரணங்களையும் பல நோக்கங் களையும் கூறிய அருமை நாயகம்
ﷺ
அவர்கள் ஒரு கட்டத்தில் انما بعثت معلما நான் ஒரு ஆசிரியனாக, சமூகத்திற்கு நல்ல பல விஷயங்களை கற்றுத்தரும் ஆசானாக
அனுப்பப்பட்டிருககிறேன் என்று சொன்னார்கள்.
அண்ணல் நபி ﷺ அவர்களை நல்ல குடும்பத்தலைவர்
என்றும், ஆன்மீகத் தலைவர்
என்றும், ஆட்சித் தலைவர்
என்றும், வீரம் செறிந்தவர்
என்றும், படைத்தளபதி
என்றும், நல்ல தோழர்
என்றும், சமூக நல்லிணக்கம்
பேணியவர் என்றும், சட்ட வல்லுநர்
என்றும், தத்துவ அறிஞர்
என்றும், இப்படி பல்வேறு பரிணாமங்களில்
நாம் அவர்களை அறிந்து வைத்திருக்கிறோம்.இப்படி பல பரிநாமங்களில் நபி ﷺ
அவர்கள் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதைப் போலவே தன்னை ஒரு ஆசிரியர் என்றும்
அறிமுகப்படுத்தினார்கள்.
அல்லாஹ்வும் தன் திருமறையின் பல இடங்களில்
இந்தக் கருத்தை மையப்படுத்தி பேசுகிறான்.
هو الذي
بعث في الاميين رسولا منهم
அவன் தான் எழுத்தறிவில்லாத மக்களிடம் தன்னுடைய
வசனங்களை ஓதிக்காட்டுகிற அவர்களை பரிசுத்தப்படுத்துகிற அவர்களுக்கு வேதத்தையும்
ஞானத்தையும் கற்றுத்தருகிற தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். (அல்குர்ஆன் : 62 ; 2)
இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா நபி ﷺ
அவர்களின் 4 பணிகளை
குறிப்பிடப்படுகிறான். அந்த நான்கு பணிகளுமே ஆசிரியர் பணியோடு தொடர்புடையதாகத்தான்
இருக்கிறது. ஒருவர் குர்ஆனை
ஓதிக்காட்டுவதாக இருந்தாலும் உள்ளத்தை பரிசுத்தப்படுத்தவதாக இருந்தாலும் வேதத்தை
போதிப்பதாக இருந்தாலும் நுட்பங்களையும் நுண்ணறிவுகளையும் ஞானங்களையும்
பயிற்றுவிப்பதாக இருந்தாலும் ஆசிரியராக இருக்க வேண்டும். ஒரு ஆசிரியராக இருப்பவர்
தான் இந்த நான்கு பணிகளையும் செய்வார். அவரால் தான் இந்த நான்கு பணிகளையும் செய்ய
முடியும்.
நபி ﷺ அவர்களின் நபித்துவ பணிகளில் மிக முக்கியமான
மிகப் பிரதானமான பணியாக ஆசிரியர் பணி என்று அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். العلماء ورثة الانبياء அறிஞர்கள் தான் நபிமார்களின் வாரிசுகள்' என்ற
வார்த்தையும் இதைத்தான் நமக்கு கோடிட்டுக்காட்டுகிறது.
சமூகத்தில் மார்க்கம் சார்ந்த கல்வியாக
இருக்கட்டும் உலகம் சார்ந்த கல்வியாக இருக்கட்டும் அதைக் கற்றுத்தருகின்ற ஆசிரியர்
பணி என்பது மகத்தான பணிகளில் ஒன்று. சமூகத்தில் எத்தனை பணிகள் இருந்தாலும்,எத்தனை பொறுப்புகள் இருந்தாலும்
ஆசிரியர் பணியைப் போன்று ஆசிரியருக்கு இருக்கிற பொறுப்பைப் போன்று வேறு எந்த
பணியும் கிடையாது. பொறுப்பும் கிடையாது.
وعن سلمان قال : لا يزال الناس بخير ما بقي الأول
حتى يتعلم الآخر ، فإذا هلك الأول قبل أن يتعلم الآخر هلك الناس
ﷺமான் ஃபாரிஸி ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; அடுத்து வருபவர்கள் கற்றுக் கொள்ளும் வரை
முன்னோர்கள் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மக்கள் நலவில் இருந்து கொண்டே
இருப்பார்கள். அடுத்து வருபவர்கள் கற்றுக் கொள்வதற்கு முன்பு முன்னோர்கள் அழிந்து
விட்டால் மக்கள் அழிந்து போவார்கள். (தஃப்ஸீர் பகவி)
وقيل للاسكندر إنك تعظم مؤدبك أكثر من تعظيمك والدك
قال لأن أبي كان سبب حياتي الفانية ومؤدبي هو سبب حياتي الباقية وفي رواية لأن أبي
كان سبب حياتي ومؤدبي سبب تجويد حياتي وفي رواية لأن أبي كان سبب كوني ومؤدبي كان سبب
نطقي
நீங்கள் உங்கள் தந்தையை விட உங்கள் ஆசிரியரை
அதிகம் மதிப்பதற்கு காரணம் என்னவென்று அல்லாமா இஸ்கன்தர் ரஹ் அவர்களிடம்
கேட்கப்பட்டது. அதற்கவர்கள், என் தந்தை அழிந்து போகும் இந்த வாழ்க்கைக்கு
காரணமானவர். ஆனால் என் ஆசிரியர் நிலையான மறுமை வாழ்க்கைக்குக் காரணமாக இருப்பவர்.
என் தந்தை என்னை வாழ வைத்தவர். ஆனால் என் ஆசிரியர் என் வாழ்க்கையை
அழகுபடுத்தியவர், என் தந்தை என் பிறப்புக்கு காரணமானவர். ஆனால் என் ஆசிரியர் என்
அறிவுக்கு காரணமானவர் என்று கூறினார்கள்.
ஒரு குடும்பாக இருந்தாலும் ஒரு சமூகமாக
இருந்தாலும் ஒரு ஊராக இருந்தாலும் ஒரு நாடாக இருந்தாலும் அதை வழிநடத்திச் செல்ல
தகுதியான தலைவர்கள் இருக்க வேண்டும்.தகுதியான தலைவர்களால் தான் ஒரு
குடும்பத்தையும் ஒரு சமூகத்தையும் ஒரு ஊரையும் ஒரு நாட்டையும் சிறப்பான முறையில்
வழி நடத்திச் செல்ல முடியும்.தலைவர்கள் தங்கள் பொறுப்பை சரியான முறையில் செய்ய
வில்லையென்றால் எல்லாம் சீர்குலைந்து விடும்.
بينَما رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يُحدِّثُ
القومَ جاءه أعرابيٌّ فقال: متى السَّاعةُ ؟ فمضى صلَّى اللهُ عليه وسلَّم يُحدِّثُ
فقال بعضُ القومِ: سمِع ما قال وكرِه ما قال، وقال بعضُهم: بل لم يسمَعْ حتَّى إذا
قضى حديثَه قال: ( أين السَّائلُ عن السَّاعةِ ؟ ) قال: ها أنا ذا قال: ( إذا ضُيِّعتِ
الأمانةُ فانتظِرِ السَّاعةَ ) قال: فما إضاعتُها ؟ قال: ( إذا اشتدَّ الأمرُ فانتظِرِ
السَّاعةَ ) .
الراوي: أبو هريرة المحدث: ابن حبان - المصدر: صحيح
ابن حبان - الصفحة أو الرقم: 104
அமானிதம் வீணடிக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள்
என்று நபி ﷺ அவர்கள்
சொன்னார்கள். அமானிதம் வீணடிக்கப்படுதல் என்றால் என்ன என்று கேட்ட போது, தகுதியற்றவர்களுக்கு
பொறுப்பு கொடுக்கப்பட்டால் மறுமையை எதிர் பாருங்கள் என பதிலளித்தார்கள். (இப்னு ஹிப்பான் ; 104)
எந்த காரியமாக இருந்தாலும் தலைவர்கள் சரியான
முறையில் அமைய வேண்டும். தலைவர்கள் தங்கள் பொறுப்பை சரியாக உணர்ந்து செயல்பட வேண்டும்.ஆனால்
இந்த உயர்ந்த பொறுப்பையுடைய எதிர்கால தலைவர்கள் இன்றைய இளைஞர்கள் தான். இன்றைய
இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள். தலைவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டுமானால் இளைஞர்கள்
நல்லவர்களாக உருவாக வேண்டும்.இளைஞர்களை நல்லவர்களாக உருவாக்கத் தவறி விட்டோம்
என்றால் எதிர் காலத்தில் சிறந்த தலைவர்களை நாம் எதிர் பார்க்க முடியாது.அந்த நல்ல இளைஞர்களை
உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் இருக்கிறது.
ஒரு ஆசிரியரால் தான் நல்ல இளைஞர்களையும்
உருவாக்க முடியும். பிற்காலத்தில் நல்ல தலைவர்களையும் சமூகத்திற்குத் தர முடியும்.
அரிஸ்டாட்டில் உலகில் தலைசிறந்த கிரேக்க
தத்துவஞானிகளில் ஒருவர். பல்துறை வல்லுநர்களில் ஒருவர். அவர் ஒரு தடவை தன் மாணவர்களுடன்
ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என
பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம் அவரின் ஒரு மாணவர் தண்ணீரில்
நீந்தி செல்வதைக் கண்டார். மறுகரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே சுழல்கள் இல்லை நாம் தைரியமாக ஆற்றைக் கடக்கலாம்
என்றார். அந்த நிலையில் அரிஸ்டாட்டில் உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி
இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், “இந்த அலெக்சாண்டர் போனால் ஆயிரம் அலக்சாண்டரை உருவாக்க
முடியும். ஆனால் உங்களைப் போன்ற ஒரு அரிதான குருவை இழந்து விட்டால் இந்த சமூகம் பேரிழப்பை சந்திக்க
வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று கூறினார்.
எனவே ஆசிரியர் பணி என்பது மகத்தான உயர்வான
பணிகளில் ஒன்று.அதனால் நபிகள் நாயகம் ﷺ அவர்களை ஒரு முஅல்லிமாக ஒரு
தலைசிறந்த ஆசிரியராக அல்லாஹ் உலகிற்கு அனுப்பி வைத்தான். நபி ﷺ
அவர்களும் ஆசிரியர் என்ற தன் பணியை செம்மையாக செய்து தன் காலத்தில் சிறந்த
சமூகத்தையும் சிறந்த இளைஞர்களையும் உருவாக்கியதோடு மட்டமின்றி எதிர்காலத்தில்
மிகச்சிறந்த தலைமுறையும் விட்டுச் சென்றார்கள்.
வெறும் கல்வியையும் அறிவையும் கொடுப்பவர்
மட்டும் ஆசிரியரல்ல. தன் பிள்ளைகளுக்கு தன் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கங்களையும்
நல்ல குணங்களையும் நல்ல கலாச்சாரங்களையும் நல்ல பண்பாடுகளையும் கொடுத்து அவர்களை
நல்வழிப்படுத்துவதோடு அவர்கள் தவறு செய்கின்ற போது அதை தடுத்து அதை கண்டித்து அவர்களை சீர்திருத்துபவர் தான்
உண்மையான ஆசிரியாக இருக்க முடியும்.அந்த வகையில் நபி ﷺ
அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். மார்க்கத்தையும் ஷரீஅத்தின் சட்ட
திட்டங்களையும் ஸஹாபாக் களுக்கு கற்றுத்தருவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல்
அவர்கள் எதோ வேளையில் தவறு செய்கின்ற போது அந்த தவறை தடுத்து அதைக் கண்டித்து
அவர்களை நல்வழிப்படுத்தினார்கள்.
استأذن أبو بكر رحمة الله عليه على النبي
صلى الله عليه وسلم فسمع صوت عائشة عاليا فلما دخل تناولها ليلطمها وقال ألا أراك ترفعين
صوتك على رسول اللهِ صلى الله عليه وسلم فجعل النبي صلى الله عليه وسلم يحجزه وخرج
أبو بكر مغضبًا فقال النبي صلى الله عليه وسلم حين خرج أبو بكر كيف رأيتني أنقذتك من
الرجل قال فمكث أبو بكر أياما ثم استأذن على رسول اللهِ صلى الله عليه وسلم فوجدهما
قد اصطلحا فقال لهما أدخلاني في سلمكما كما أدخلتماني في حربكما فقال النبي صلى الله
عليه وسلم قد فعلنا قد فعلنا
ஒரு நாள் ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் நபியின்
வீட்டிற்கு வந்தார்கள். அங்கே ஹள்ரத் ஆயிஷா ரலி அவர்கள் சப்தமிட்டு பேசிக்
கொண்டிருந்தார்கள். நபியின் சப்தத்தை விட உன் சப்தத்தை உயர்த்துகிறாயா? என்று சொல்லி அவர்களை அபூபக்கர் ரலி அவர்கள்
அடிப்பதற்கு முற்பட்டார்கள்.உடனே நபி ﷺ அவர்கள் தடுத்து
விட்டார்கள். அபூபக்கர் ரலி அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்கள்.
அவர்கள் சென்ற பிறகு, அவரிடமிருந்து உன்னை எப்படி காப்பாற்றினேன் பார்த்தாயா? என்று ஆயிஷா ரலி அவர்களைப் பார்த்து
கேட்டார்கள்.சில நாட்கள் கழித்து மீண்டும் அபூபக்கர் ரலி அவர்கள் வந்தார்கள். அப்போது நபி ﷺ
அவர்களும் ஆயிஷா ரலி அவர்களும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள்
சண்டையில் என்னை அனுமதித்ததைப் போன்று இப்போது உங்கள் மகிழ்ச்சியிலும் என்னை
அனுமதிப்பீர்களா ? என்று
கேட்டார்கள். ஆம் என்று நபி ﷺ அவர்கள் சொன்னார்கள். (அபூதாவூத் ; 4999)
இந்த நிகழ்வில் இரண்டு விஷயங்கள் உண்டு.ஒன்று
நபி நபி ﷺ
அவர்கள் கண்ணியமானவர்கள். அவர்களிடத்தில் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் குர்ஆனில்
لا ترفعوا اصواتكم فوق صوت النبي
உங்கள் சப்தத்தை நபியின் சப்தத்திற்கு மேலாக
உயர்த்த வேண்டாம். (அல்குர்ஆன் : 49 ; 2) என்று
கூறுகிறான்.
ஹள்ரத் ஆயிஷா ரலி அவர்கள் நபி ﷺ
அவர்கள் தன் கணவர் என்ற உரிமையில் கொஞ்சம் சப்தமாக பேசியிருக்கலாம்.இருந்தாலும்
அது மரியாதைக்குறைவு என்பதை உணர்ந்த அபூபக்கர் ரலி அவர்கள் அதை தடுக்கிறார்கள். 2
வது விஷயம் தவறு செய்கின்ற போது அதை தடுக்க வேண்டும்,கண்டிக்க வேண்டும் என்பது
உண்மை தான்.இருந்தாலும் பிள்ளைகளை அதுவும் பெண் பிள்ளைகளை வேகமாக அடிப்பதை நபி ﷺ
அவர்கள் விரும்ப வில்லை. அதனால் அடிக்க வந்த அபூபக்கர் ரலி அவர்களைத் தடுக்கிறார்கள்.
தவறுகள் நடக்கிற போது நபி ﷺ
அவர்கள் என்றைக்கும் அதை தடுக்க தவறியதில்லை. அதுவும் தவறு செய்பவர்களது மனம்
புன்படாத வகையில் நளினமாக பக்குவமாக அதை உணர்த்தி அவர்களை சீர்திருத்தினார்கள்.
بيْنَا أنَا أُصَلِّي مع رَسولِ اللهِ صَلَّى
اللَّهُ عليه وسلَّمَ، إذْ عَطَسَ رَجُلٌ مِنَ القَوْمِ، فَقُلتُ: يَرْحَمُكَ اللَّهُ
فَرَمَانِي القَوْمُ بأَبْصَارِهِمْ، فَقُلتُ: واثُكْلَ أُمِّيَاهْ، ما شَأْنُكُمْ؟
تَنْظُرُونَ إلَيَّ، فَجَعَلُوا يَضْرِبُونَ بأَيْدِيهِمْ علَى أفْخَاذِهِمْ، فَلَمَّا
رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ، فَلَمَّا صَلَّى رَسولُ اللهِ صَلَّى
اللَّهُ عليه وسلَّمَ، فَبِأَبِي هو وأُمِّي، ما رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ ولَا
بَعْدَهُ أحْسَنَ تَعْلِيمًا منه، فَوَاللَّهِ، ما كَهَرَنِي ولَا ضَرَبَنِي ولَا شَتَمَنِي،
قالَ: إنَّ هذِه الصَّلَاةَ لا يَصْلُحُ فِيهَا شيءٌ مِن كَلَامِ النَّاسِ، إنَّما
هو التَّسْبِيحُ والتَّكْبِيرُ وقِرَاءَةُ القُرْآنِ
நான் நபி ﷺ
அவர்களோடு தொழுது கொண்டிருந்தேன்.
அப்போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார். அதற்கு நான் “யர்ஹமுகல்லாஹ்” அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக! என்றேன். உடனே அங்குள்ளோர்
அனைவரும் என்னை கூர்ந்து பார்த்தார்கள். அப்போது நான் “ஏன் என்னை நீங்கள் இவ்வாறு முறைத்துப் பார்க்கிறீர்கள்?
உங்கள் தாய்மார்கள் உங்களை
இழக்கக் கூடாது” என்றேன். அப்போது
அவர்கள் தம் தொடைகளில் தமது கைகளை அடித்தார்கள். அவர்கள் என்னை மெளனமாக இருக்கும்படி
சிமிக்கை செய்வதாக உணர்ந்து நான் மெளனமாக இருந்து கொண்டேன்.
நபி ﷺ அவர்கள் தொழுது முடித்தவுடன், அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னை அவர்கள் அதட்டவோ,
அடிக்கவோ. ஏசவோ,
பேசவோ செய்யவில்லை,
எனது தாயையும். தந்தையையும்
அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களுக்கு முன்னரும், பின்னரும் அவர்களை விடச் சிறியதொரு அழகான ஆசிரியரை
நான் கண்டதேயில்லை.
அப்போது அவர்கள் என்னை நோக்கி, நிச்சயமாக தொழுகை என்பது, இதில் மனிதர்களின் எவ்விதமான
பேச்சுக்கும் இடமில்லை. தொழுகை என்றால் “தஸ்பீஹ்” செய்தல், தக்பீர் கூறல், குர்ஆன் ஓதுதல் ஆகியவையேயாகும் என்றார்கள். (முஸ்லிம் ; 537)
இது தான் நபி ﷺ அவர்கள் தவறுகளை தடுத்த
விதம்.நாமாக இருந்தால் ஒன்று அந்த தவறுகளை கண்டும் காணாமல் விட்டு
விடுவோம்.இல்லையென்றால் தடுக்கிறோம் என்ற பெயரில் வேகமாக பேசி அவர்களது மனதை
காயப்படுத்தி விடுவோம்.ஆனால் நபி ﷺ அவர்கள் எந்த வகையிலும்
அவர்களது மனம் காயப்படாத வகையில், எப்படி கூறினால் அவர் புரிந்து அதிலிருந்து தவிர்ந்து கொள்வாரோ அப்படி
பக்குவமாக நளினமாக கூறி தவறைத் தடுத்தார்கள்.
நபி ﷺ அவர்கள் தவறுகளை தடுத்த
முறையும் அதற்காக அவர்கள் கையாண்ட விதமும் எந்தளவுக்கு இருந்தது என்றால் தவறு
செய்தவர்கள் அந்த தவறை உணர்ந்து புரிந்து கொண்டதோடு மட்டுமின்றி வாழ்க்கையில்
இனிமேல் அந்த தவறை நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு அவர்களை
பரிசுத்தப்படுத்தியது. இதற்கு நபி ﷺ
அவர்களின் வாழ்வில் எண்ணற்ற செய்திகள் உண்டு.
أنَّ فَتًى شابًّا أتى النَّبيَّ - صلَّى اللَّه
عليهِ وعلى آلِهِ وسلَّمَ - فقالَ : يا رسولَ اللَّهِ ، إئذَنْ لي بالزِّنا ، فأَقبلَ
القومُ علَيهِ فزَجروهُ وقالوا: مَهْ. مَهْ. فقالَ: أدنُهْ ، فدَنا منهُ قريبًا. قالَ:
فجَلسَ قالَ: أتحبُّهُ لأُمِّكَ ؟ قالَ: لا. واللَّهِ جعلَني اللَّهُ فداءَكَ. قالَ:
ولا النَّاسُ يحبُّونَهُ لأمَّهاتِهِم. قالَ: أفتحبُّهُ لابنتِكَ ؟ قُل: لا. واللَّهِ
يا رسولَ اللَّهِ جَعلَني اللَّهُ فداءَكَ قالَ: ولا النَّاسُ يحبُّونَهُ لبَناتِهِم.
قالَ: أفتُحبُّهُ لأُخْتِكَ ؟ قُل: لا. واللَّهِ يا رسول اللَّه جعلَني اللَّهُ فداءَكَ.
قالَ: ولا النَّاسُ يحبُّونَهُ لأخواتِهِم. قالَ: أفتحبُّهُ لعمَّتِكَ ؟ قُل: لا. واللَّهِ
يا رسولَ اللَّه جَعلَني اللَّهُ فداءَكَ. قالَ: ولا النَّاسُ يحبُّونَهُ لعمَّاتِهِم.
قالَ: أفتحبُّهُ لخالتِكَ ؟ قل: لا. واللَّهِ يا رسولَ اللَّهِ جَعلَني اللَّهُ فداءَكَ.
قالَ: ولا النَّاسُ يحبُّونَهُ لخالاتِهِم. قالَ: فوَضعَ يدَهُ عليهِ وقالَ: اللَّهمَّ
اغفِرْ ذنبَهُ وطَهِّر قلبَهُ ، وحصِّن فَرجَهُ فلم يَكُن بعدُ ذلِكَ الفتَى يَلتَفِتُ
إلى شيءٍ . .
ஒரு இளைஞர் நபி ﷺ
அவர்களிடம் வந்து,
‘‘அல்லாஹ்வின் தூதரே! விபச்சாரம்
செய்ய எனக்கு அனுமதி தாருங்கள்’’ என்று கேட்டார். உடனே மக்கள் கூட்டம் அவரை முன்னோக்கி வந்து, ‘‘நிறுத்து நிறுத்து’என அவரைத் தடுத்தார்கள். நபி ﷺ
அவர்கள் அவரை நெருங்கி வா
என அழைக்க அவர் நெருங்கி வந்து அமர்ந்து கொண்டார். அப்போது நபியவர்கள், ‘‘இதை உன் தாய்க்கு
விரும்புவாயா?’’ என்று கேட்க அவரோ,
‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு
அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாய்க்கு
இதை விரும்ப மாட்டார்கள்’ என்றார்.
உன் மகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்க, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்.
அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப
மாட்டேன். மக்களும் தம் மகள்களுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
உன் சகோதரிக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்ட போது, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்.
அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப
மாட்டேன் மக்களும் தம் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
உன் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’
என்ற போது, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்.
அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப
மாட்டேன். மக்களும் தம் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’
என்றார்.
உன் தாயின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’
என்ற போது அல்லாஹ் என்னைத்
தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, அவ்வாறு நான் விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாயின்
சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
அப்போது நபியவர்கள் தனது கரத்தை அவர் மீது வைத்து,
‘‘இறைவா! இவரது பாவத்தை மன்னிப்பாயாக!
இவரது உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவாயாக! இவரது கற்பைப் பாதுகாப்பாயாக!’’ என்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அதற்குப் பிறகு அவர் எந்த தவறின் பக்கமும்
திரும்ப வில்லை. (முஸ்னத் அஹ்மத் ; 501)
இங்கே அவர் வந்து அனுமதி கேட்ட போது நபி ﷺ
அவர்கள் கோபப்பட வில்லை.அவரைக் கடிந்து கொள்ள வில்லை.அது தவறு, அதற்கு இன்ன தண்டனை இருக்கிறது என்றும் சொல்ல
வில்லை. மாறாக வந்து கேட்டவரின் மனோ நிலையை புரிந்து செயல்படுகிறார்கள்.
வந்தவருக்கு விபச்சாரத்தின் விளைவுகளோ அதன் விபரீதங்களோ விளங்க வில்லை. அதனால்
அந்த நேரத்தில் அவரின் மீது கோபப்படுவதிலோ அது பாவம் என்று சொல்வதிலோ அர்த்தம்
இல்லை.எனவே தான் அவருக்கு அதன் விளைவுகளையும் அதன் விபரீதங்களையும் புரிய
வைக்கிறார்கள்.அதனால் விபச்சாரம் செய்வதற்கு மக்கள் முன்னிலையில் அதுவும் நபி ﷺ
அவர்களிடம் வந்து அனுமதி கேட்டவருக்கு அதன் பிறகு அந்த எண்ணமோ சிந்தனையோ ஏற்படாத
அளவிற்கு அவரை பரிசுத்தப்படுத்தியது. (முஸ்னத் அஹ்மத் ; 501)
كُنْتُ أَضْرِبُ غُلَامًا لي بالسَّوْطِ، فَسَمِعْتُ
صَوْتًا مِن خَلْفِي، اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، فَلَمْ أَفْهَمِ الصَّوْتَ مِنَ الغَضَبِ،
قالَ: فَلَمَّا دَنَا مِنِّي إذَا هو رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ،
فَإِذَا هو يقولُ: اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، قالَ: فألْقَيْتُ
السَّوْطَ مِن يَدِي، فَقالَ: اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، أنَّ اللَّهَ أَقْدَرُ عَلَيْكَ
مِنْكَ علَى هذا الغُلَامِ، قالَ: فَقُلتُ: لا أَضْرِبُ مَمْلُوكًا بَعْدَهُ أَبَدًا.
[وفي رواية]: غيرَ أنَّ في حَديثِ جَرِيرٍ، فَسَقَطَ مِن يَدِي السَّوْطُ مِن هَيْبَتِهِ
الراوي: أبو مسعود عقبة بن عمرو المحدث: مسلم -
المصدر: صحيح مسلم - الصفحة أو الرقم: 1659
அபூமஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நான் என் அடிமையை சாட்டையால் அடித்துக்
கொண்டிருந்தேன்.அபூ மஸ்வூதே! அறிந்து கொள் என்ற
ஒரு சப்தம் கேட்டது. கோபத்தில் அது யாரென்று எனக்கு தெரிய வில்லை. திருப்பித்
திருப்பி அதே சப்தம் கேட்டது. பிறகு அது நபி ﷺ
அவர்கள் தான் என்று
அறிந்து கொண்டேன். பிறகு, இவரின்
மீது உன்னை விட அல்லாஹ் உன் மீது அதிகம் ஆற்றலுள்ளவன் என்று சொன்னார்கள். பயத்தில்
என் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விட்டது. இனிமேல் நான் எந்த அடிமையையும்
அடிக்க மாட்டேன் என்று சொன்னேன். (முஸ்லிம் ; 1659)
كانَ الرَّجُلُ في حَيَاةِ رَسولِ اللهِ صَلَّى
اللَّهُ عليه وسلَّمَ، إذَا رَأَى رُؤْيَا، قَصَّهَا علَى رَسولِ اللهِ صَلَّى اللَّهُ
عليه وسلَّمَ، فَتَمَنَّيْتُ أَنْ أَرَى رُؤْيَا أَقُصُّهَا علَى النبيِّ صَلَّى اللَّهُ
عليه وسلَّمَ، قالَ: وَكُنْتُ غُلَامًا شَابًّا عَزَبًا، وَكُنْتُ أَنَامُ في المَسْجِدِ
علَى عَهْدِ رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، فَرَأَيْتُ في النَّوْمِ كَأنَّ
مَلَكَيْنِ أَخَذَانِي فَذَهَبَا بي إلى النَّارِ، فَإِذَا هي مَطْوِيَّةٌ كَطَيِّ
البِئْرِ، وإذَا لَهَا قَرْنَانِ كَقَرْنَيِ البِئْرِ، وإذَا فِيهَا نَاسٌ قدْ عَرَفْتُهُمْ،
فَجَعَلْتُ أَقُولُ: أَعُوذُ باللَّهِ مِنَ النَّارِ، أَعُوذُ باللَّهِ مِنَ النَّارِ،
أَعُوذُ باللَّهِ مِنَ النَّارِ، قالَ فَلَقِيَهُما مَلَكٌ فَقالَ لِي: لَمْ تُرَعْ،
فَقَصَصْتُهَا علَى حَفْصَةَ، فَقَصَّتْهَا حَفْصَةُ، علَى رَسولِ اللهِ صَلَّى اللَّهُ
عليه وسلَّمَ، فَقالَ النبيُّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: نِعْمَ الرَّجُلُ عبدُ
اللهِ لو كانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ. قالَ سَالِمٌ: فَكانَ عبدُ اللهِ، بَعْدَ ذلكَ،
لا يَنَامُ مِنَ اللَّيْلِ إلَّا قَلِيلًا. وفي روايةٍ : عَنِ ابْنِ عُمَرَ، قالَ:
كُنْتُ أَبِيتُ في المَسْجِدِ، وَلَمْ يَكُنْ لي أَهْلٌ، فَرَأَيْتُ في المَنَامِ كَأنَّما
انْطُلِقَ بي إلى بئْرٍ. .
அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் தன்னை இரு
மலக்குமார்கள் நரகத்தின் வாசலுக்கு அழைத்துச் செல்வதைப் போன்று ஒரு கனவு
கண்டார்கள். அதை தன் சகோதரியான அன்னை ஹஃப்ஸா ரலி அவர்களிடம் வந்து சொன்னார்கள்.
அவர்கள் அதை நபி ﷺ அவர்களிடம்
சொன்னார்கள். அப்போது நபி ﷺ
அவர்கள் அப்துல்லாஹ்
நல்லவர் தான். அவர் இரவுத் தொழுகையைத் தொழுது கொண்டிருக்கலாமே என்றார்கள். இதற்குப்
பிறகு அப்துல்லாஹ் ரலி அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டும் தான் தூங்குபவர்களாக
இருந்தார்கள். (முஸ்லிம் ; 2479)
سأَلْتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فأعطاني ثمَّ سأَلْتُ رسولَ
اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فأعطاني ثمَّ سأَلْتُه فأعطاني ثمَّ سأَلْتُ فأعطاني
ثمَّ قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم ( يا حكيمُ بنَ حِزامٍ إنَّ هذا المالَ
حُلْوةٌ خضِرةٌ فمَن أخَذه بسخاوة نفسٍ بورِك له فيه ومَن أخَذه بإشرافِ نفسٍ لم يُبارَكْ
له فيه وكان كالَّذي يأكُلُ ولا يشبَعُ واليدُ العليا خيرٌ مِن اليدِ السُّفلى ) قال
حكيمٌ: فقُلْتُ: يا رسولَ اللهِ والَّذي بعَثك بالحقِّ لا أرزَأُ أحدًا بعدَك شيئًا
حتَّى أُفارقَ الدُّنيا قال عروةُ وسعيدٌ: فكان أبو بكرٍ يدعو حكيمًا فيُعطيه العطاءَ
فيأبى ثمَّ كان عمرُ بنُ الخطَّابِ يُعطيه فيأبى فيقولُ عمرُ: إنِّي أُشهِدُكم يا معشرَ
المسلِمينَ على حكيمِ بنِ حزامٍ أنِّي أعرِضُ عليه حقَّه الَّذي قُسِم له مِن هذا الفَيءِ
فيأبى يأخُذُه قال: فلم يرزَأْ حكيمٌ أحدًا مِن النَّاسِ بعدَ رسولِ اللهِ صلَّى اللهُ
عليه وسلَّم حتَّى توفِّي قال عروةُ وسعيدٌ: فكان أبو بكرٍ يدعو حكيمًا فيُعطيه العطاءَ
فيأبى ثمَّ كان عمرُ بنُ الخطَّابِ يُعطيه فيأبى فيقولُ عمرُ: إنِّي أُشهِدُكم يا معشرَ
المسلِمينَ على حكيمِ بنِ حِزامٍ أنِّي أعرِضُ عليه حقَّه الَّذي قُسِم له مِن هذا
الفَيءِ فيأبى يأخُذُه قال: فلم يرزَأْ حكيمٌ أحدًا مِن النَّاسِ بعدَ رسولِ اللهِ
صلَّى اللهُ عليه وسلَّم حتَّى توفِّي
ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள் ; நான் நபி நபி ﷺ அவர்களிடம் உதவி கேட்டேன்.
அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.
மீண்டும் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு ‘இந்தச் செல்வம் பசுமையானதும் இனிப்பானதுமாகும்.
யார் இதனைத் தூய மனதுடன் பெறுகிறாரோ, அவருக்கு பரக்கத் வழங்கப்படும். யார் இதனைப் பேராசையுடன்
எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு பரகத் வழங்கப்படாது. அவர் சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவரைப்
போன்று. கொடுக்கும் கை வாங்கும் கையை விடச் சிறந்தது’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
அப்போது ஹகீம் (ரலி), ‘அல்லாஹ் வின் தூதரே! உங்களை சத்தியத்துடன் அனுப்பி
வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் எவரிடத்திலும் எதையும் நான் தர்மமாகக் கேட்க
மாட்டேன்’ என்று கூறினார். இதன்
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸகாத்தைக் கொடுக்க அழைத்தார். அவர் அதை ஏற்றுக்
கொள்ளவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் அவருக்கு தர்மம் கொடுப்பதற்காக
அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அப்போது உமர் (ரலி) அவர்கள்,
‘முஸ்லிம் சமுதாயமே! நான் ஹகீமை
கனீமத் பொருட்களில் அவருக்குள்ள பங்கைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கிறேன். அவரோ அதை
மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ என்று கூறினார்கள். (புகாரி ; 1472)
‘ஹகீம் நபியவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம்
மரணிக்கும் வரை எதையும் கேட்கவே இல்லை’ என ஸயீத் இப்னு முஸய்யப் (என்ற தாபியி) கூறுகிறார்.
நபியவர்களின் உபதேசத்தைக் கேட்டு விட்டு அன்றிலிருந்து
யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து,
தான் மரணிக்கும் வரை தனக்கு
அரசாங்கத்தில் கிடைக்க விருந்த மானியத்தையும் கூட வேண்டாம் என்று ஒதுக்கித் தன்மானத்தை நிலைநாட்டியதிலிருந்து
நபி ﷺ அவர்கள்
ஸஹாபாக்களை உருவாக்கிய விதமும் அவர்களை பக்குவப்படுத்திய விதமும் இங்கே
விளங்குகிறது.
நபி ﷺ அவர்களின் இந்த
நடைமுறையும் இந்த பக்குவமும் தான் சிறந்த ஸஹாபாக்களை உருவாக்கியது. தலைசிறந்த
தலைமுறையை சமூகத்திற்கு தந்தது.
جزاك الله خيرا كثيرا في الدارين
ReplyDeleteجزاكم الله خيرا
ReplyDeleteجزاكم الله خيرا
ReplyDeleteآمين آمين يارب العالمين
ReplyDeleteமாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அருமை ஹஜ்ரத்
ReplyDelete