Thursday, June 9, 2022

அவர்கள் மோசமான முடிவுகளைத் தான் சந்திப்பார்கள்

 

கடந்த மே மாதம் 27 ம் தேதி டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் ஞானவாபி பள்ளிவாசல் சர்ச்சை குறித்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா அங்கே பேசப்பட்ட விவாதப் பொருளை விட்டு விட்டு இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் தன்னுடைய வெறுப்புணர்வை கக்கும் வகையில் நாம் நம் உயிரை விட மேலாக மதிக்கின்ற நபி பெருமானார் ஸல் அவர்களை மரியாதைக் குறைவாக அவமதிக்கும் முகமான வார்த்தைகளை சொல்ல அது இப்போது உலகம் முழுக்க இஸ்லாமியர்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் கொந்தளிப்பு ஈரான் கத்தார் குவைத் ஓமன் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் வரை வெளிப்பட்டிருக்கிறது.

இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் தொடர்புகளும் இருக்கிறது. வளைகுடா நாடுகளிலிருந்து 60 சதவீதம் கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறது. மட்டுமல்லாது குவைத்,ஓமன், பஹ்ரைன்,ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் இந்தியர்களின் பெரும் பெரும் சூப்பர் மார்க்கெட்களும் ஹோட்டல்களும் இயங்கி வருகின்றன. 2019- 2020 ல் ஐக்கிய அமீரத்திற்கு மட்டும் 222000 கோடி அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தில் 6 இலட்சம் கோடி அரபு நாடுகளிலிருந்து வருகிறது.இப்படி வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகத் தொடர்பு மிக அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் அந்த நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தால் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்படும்.

ஆனால் தற்போது அங்கிருக்கிற குப்பைத் தொட்டிகளில் மோடியின் புகைப்படத்தை ஓட்டும் அளவுக்கு அங்கே எதிர்ப்புக்கள் அதிகமாகி இருக்கிறது. முஹம்மது நபி ஸல் அவர்களின் மீது அவதூறான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிற இந்திய நாட்டின் தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டும். இந்தியாவிலிருந்து பிழைப்பைத் தேடி வந்து இங்கு வேலை செய்கிற இந்தியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சொல்லப்படும் அளவிற்கு அரபு நாடுகளில் அதற்கு கடும் எதிர்ப்பு கிழம்பி விட்டது. வளைகுடா நாடுகளில் மொத்தம் 84 இலட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள்.ஐக்கிய அமீரகத்தில் 34.25 இலட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள்.இவர்கள் செய்த இந்த காரியத்தால் அவர்கள் அத்தனை பேருடைய வாழ்வும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இதனால் இந்தியாவிற்கே மிகப்பெரும் தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்திய நாடு கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருக்கிறது. இப்போது இந்த பிரச்சனையால் இந்திய நாட்டின் பொருளாதாரம் இன்னும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என நாட்டின் நடுநிலையாளர்கள் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நபி ஸல் அவர்களை அவமதிக்கும் விதமான கருத்துக்களை அவர்கள் சொல்வது இது முதல் முறையல்ல. தொடர்ந்து அவ்வப்போது இதுமாதரி கருத்துக்களை கூறி நாட்டு மக்களின் கோபத்தை தூண்டும் வேலையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் பேசிய வார்த்தையைப் பார்த்து உலகத்தின் பல்வேறு அரபு நாடுகள் தங்களின் கண்டனக் குரலை பதிவு செய்ய ஆரம்பித்தவுடன் கதிகலங்கிப் போன அவர்கள் பா.ஜ.க அனைத்து மதங்களையும் மதிக்கிறது.எந்த மதத்தின் சித்தாந்தம் மீதும் நடத்தப்படும் அவமரியாதையை பா.ஜ.க பொறுத்துக் கொள்ளாது என்றெல்லாம் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். நபி ஸல் அவர்கள் மீது அவதூறான வார்த்தைகளை பதிவு செய்த நுபுர் ஷர்மாவை செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்தும் அதற்கு ஆதாரவாக ட்வீட் செய்த நவீன் ஜிண்டாலை பா.ஜ.க வின் கட்சியிலிருந்தும் நீக்கி அறிக்கையை வெளியிட்டார்கள்.இது ஒரு வாரமாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. அரபு நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகள் நீங்கி அவர்களை சமாதானம் செய்வதற்கு நாட்டின் பிரதமர் நேரடியாக மன்னிப்பு கேட்பது தான் சரியான அனுகுமுறை என்று பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.     

இந்த நேரத்தில் ஷரீஅத்தின் பார்வையில் நபி ஸல் அவர்களுக்கு தன் கரங்களால் தன் சொற்களால் தன் செயல்களால் நோவினைகள் கொடுப்பவர்களின் நிலை என்ன ? அவர்களுக்கு  அல்லாஹ்வுடைய கோபத்தின் வெளிப்பாடாக அவன்  கொடுத்த தண்டனைகள் என்ன என்பதைப்  பார்க்க வேண்டும்.

قال ابن المنذر أجمع عوام أهل العلم على أن حدّ من سب النبي صلى الله عليه وسلم القتل. وممن قاله مالك، والليث، وأحمد، وإسحاق، وهو مذهب الشافعي

ஒருவன் நபியை திட்டினால் அவனுக்கான தண்டனை அவனைக் கொல்வது தான் என்பது அநேக உலமாக்களின் கருத்தாக இருக்கிறது.

ولما سئل الإمام أحمد عن رجل من أهل الذمة شتم النبي صلى الله عليه وسلم ماذا عليه؟ قال: إذا قامت عليه البينة يقتل من شتم النبي صلى الله عليه وسلم مسلمًا كان أو كافرًا

ஒரு திம்மி நபியை திட்டினால் அவனுக்கான தண்டனை என்ன என்று அஹமது  ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஒருவன் நபியைத் திட்டினான் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அவன் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவனாக இருந்தாலும் கொல்லப்பட வேண்டும் என்று கூறினார்கள்.

நபியைத் திட்டுபவன் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரும் குற்றம் என்பது தான் ஷரீஅத்தின் பார்வை. மட்டுமல்ல அவ்வாறு நபியைத் திட்டியவனை அதற்காக ஒருவர் கொன்று விட்டால் அவ்வாறு கொன்றவர் மீது கொலைக்குற்றம் கிடையாது.

عن ابْنُ عَبَّاسٍ أَنَّ أَعْمَى كَانَتْ لَهُ أُمُّ وَلَدٍ تَشْتُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقَعُ فِيهِ فَيَنْهَاهَا فَلاَ تَنْتَهِي وَيَزْجُرُهَا فَلاَ تَنْزَجِرُ- قَالَ- فَلَمَّا كَانَتْ ذَاتَ لَيةٍ جَعَلَتْ تَقَعُ فِي النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَشْتِمُهُ فَأَخَذَ الْمِغْوَلَ فَوَضَعَهُ فِي بَطْنِهَا وَاتَّكَأَ عَلَيْهَا فَقَتَلَهَا فَوَقَعَ بَيْنَ رِجْلَيْهَا طِفْلٌ فَلَطَخَتْ مَا هُنَاكَ بِالدَّمِ فَلَمَّا أَصْبَحَ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَمَعَ النَّاسَ فَقَالَ: ((أَنْشُدُ اللَّهَ رَجُلاً فَعَلَ مَا فَعَلَ لِي عَلَيْهِ حَقٌّ إِلاَّ قَامَ)). فَقَامَ الأَعْمَى يَتَخَطَّى النَّاسَ وَهُوَ يَتَزَلْزَلُ حَتَّى قَعَدَ بَيْنَ يَدَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَنَا صَاحِبُهَا كَانَتْ تَشْتِمُكَ وَتَقَعُ فِيكَ فَأَنْهَاهَا فَلاَ تَنْتَهِي وَأَزْجُرُهَا فَلاَ تَنْزَجِرُ وَلِي مِنْهَا ابْنَانِ مِثْلُ اللُّؤْلُؤَتَيْنِ وَكَانَتْ بِي رَفِيقَةً فَلَمَّا كَانَتِ الْبَارِحَةَ جَعَلَتْ تَشْتِمُكَ وَتَقَعُ فِيكَ فَأَخَذْتُ الْمِغْوَلَ فَوَضَعْتُهُ فِي بَطْنِهَا وَاتَّكَأْتُ عَلَيْهَا حَتَّى قَتَلْتُهَا. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَلاَ اشْهَدُوا أَنَّ دَمَهَا هَدَرٌ)).

நபி ஸல் அவர்களின் பள்ளிவாசலில் சுபுஹு பாங்கு சொல்லும் பணியில் இருந்த நபி நேசரான  அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் ரழி அவர்களுக்கு ஒரு அடிமைப்பெண் இருந்தாள்.  அவள் நபியை தரக்குறைவாக திட்டும் பழக்கமுள்ளவளாகவும் இருந்தாள்.  அதை இந்த ஸஹாபி கண்டித்தும்,எச்சரித்தும் வந்தார்கள். அவள் ஒவ்வாரு நாளும் தான் உறங்கும் போது படுக்கையில் நபியை திட்டக்கூடியவளாக இருந்தாள்.ஒரு நாள் இந்த ஸஹாபி,இன்றைய தினம்  இவள் நபியைத் திட்டினால் இவளை வெட்டி விட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்கள். அவர்கள் அன்று உறங்கும் போது வழமைப்போல் அவள் திட்ட ஆரம்பித்தாள். அவள் தூங்கியதும் கோடாரியை எடுத்து அவளின் வயிற்றில் வேகமாக வெட்டிக்கொன்றார். காலையில் இந்த தகவலறிந்த நபி ஸல் மக்களைத்திரட்டி "இறைவன் மீது ஆணையாக, கொலையாளி நடந்ததை ஒப்புக் கொள்ளட்டும்.இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்கள். அப்போது அந்த கண்தெரியாத ஸஹாபி மக்களை தாண்டி வந்து நபியிடம் நடந்ததை கூறினார்.நபியே!அவள் மீது எனக்கு தனிப்பட்ட பகையேதுமில்லை. வீட்டில் அவள் என் இனிய தோழி.ஆனால் அவள் உங்களை கேவலமாக திட்டுவதை நான் எச்சரித்தும்,கண்டித்தும் பார்த்தேன். அவள் கேட்க வில்லை.அதனால் தான் இன்றும் உங்களை  திட்டினால் அவளைக் கொன்றுவிட வேண்டும் என்ற உறுதியோடு இருந்து  அவளைக் கொன்றேன் என ஒப்புக்கொண்டார்கள்.அதற்கு நபி(ஸல்)இந்தக் கொலை அல்லாஹ்,ரஸுலுக்கான கொலை.இக்கொலை அல்லாஹ்,ரஸுலுக்காக நடந்ததால் அவருக்கு தண்டனை கிடையாது என வழக்கை தள்ளுபடி செய்தார்கள். (அபூதாவூத்:4363)

பொதுவாக கொலைக் குற்றத்திற்கான தண்டனை அவரை கொலை செய்வது தான். அதாவது கொலை செய்தவர் கொலை செய்யப்பட வேண்டும். இது தான் ஷரீஅத்தினுடைய சட்டம். ஆனால் ஒருவர் நபியைக் குறை சொல்கிறார். நபியை இழிவுபடுத்தி பேசுகிறார். நபியின் மீது அவதூறான வார்த்தைகளை கூறுகிறார். அதனால் கோபமடைந்து வேகப்பட்டு ஒருவர் அவரை கொலை செய்து விட்டால் கொலை செய்தவர் மீது கொலை குற்றம் ஏற்படாது என்று சொன்னார்கள் என்றால் நபியை இழிவுபடுத்தி பேசுபவர் கொல்லப்பட வேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வும் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

இந்த நிகழ்வில் கண் தெரியாத ஒரு சஹாபி உயிருக்கு உயிராக உயிரினும் மேலாக மதிக்கிற தன் நபியைத் திட்டுவதைப் பார்த்தவுடன் ரோஷப்படுகிறார்கள். தன்னுடைய அடிமை தன்னோடு ஒரே வீட்டில் வாழ்பவள் என்று கூட பாராமல் அவளைக் கொலை செய்கிறார்கள் என்றால் இதற்குப் பெயர் தான் நபி நேசம். இது தான் உண்மையான பிரியம்.இன்றைக்கு நம்மில் ஒரு சிலர் இருக்கிறார்கள். நபியைப் பார்த்து இப்படி பேசி விட்டார்கள் என்று கூறினால் கேட்டும் கேட்காதது போல் கண்டும் காணாதது போல் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விட்டு அப்படியே கடந்து போய் விடுகிறார்கள். கண்முன்னே ஒரு தவறு நடக்கிற பொழுது அதைத் தடுக்க வேண்டும். தட்டிக்கேட்க வேண்டும்.இது ஈமான் உள்ளவர்களின் கடமை. ஆனால் நம் உயிரை விட மேலாக மதிக்கிற நபிகள் நாயகம் ஸல் அவர்களை ஒருவர் இழிவுபடுத்தி பேசுகிறார் என்றால் அதை விட மிகப்பெரிய குற்றம் உலகத்திலே வேறென்ன இருக்க முடியும். அதை பார்த்தும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஒருவர் கடந்து போகிறார் என்றால் உண்மையில் அவருடைய ஈமான் பரிசோதனைக் கூறியதாகத்தான் இருக்கும். நம் நபியைக் குறித்து ஒருவர் பேசினால் ரத்தம் கொதிக்க வேண்டும். ரத்தம் சூடாக வேண்டும்.நாம் கொதித்தெழ வேண்டும். இதுதான் உண்மையான முஃமின்கள் என்பதற்கான அடையாளம்.

எப்பொழுதெல்லாம் இவ்வாறு நபியைக் குறித்து தவறாக பேசப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அல்லாஹ்வே நேரடியாக வந்து பதில் கூறி விடுவான். அல்லது யார் குறை கூறினார்களோ அவர்களில் ஒருவரை வைத்தே பதில் சொல்லி விடுவான்.இன்றைக்கும் நாம் பார்க்கிறோம் இந்த பிரச்சினையில் இஸ்லாமியர்களைத் தாண்டி சகோதர சமயத்தைச் சார்ந்தவர்கள் தான் இதற்கு தக்க பதிலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கா நகரில் வலீதுப்னு முகீரா என்ற கொடியவன் இருந்தான். "ஒரு தடவை நபி ஸல் அவர்களை பைத்தியக்காரர் எனக் கூறி விட்டான்.!" அந்த ஒரு வார்த்தையைக் கண்டித்து "அல்லாஹூ தஆலா கோபம் கொண்டு அவனைப் பற்றி  கடுமையான வார்த்தைகளால்  குர்ஆன் வசனத்தை  இறக்கி விட்டான்."

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ (10) هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ (11) مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ (12) عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ 

அவன் பொய் சத்தியம்  செய்யும் அற்பன். அவன் புறம் பேசி குறைக் கூறி கோள் சொல்லி திரிபவன். அவன் நன்மையான செயலை செய்ய விடாமல் தடுக்கும் பெரும்பாவி. அவன் கடின  சுபாவ முள்ளவன் இழிவான வழியில் பிறந்தவன். (68 :10،11،12، 13)

ويروى أنه لما نزلت قال الوليد لأمه: إن محمدا وصفني بتسع صفات أعرفها غير التاسع منها فإن لم تصدقيني الخبر ضربت عنقك فقالت له 

إن أباك عنين فخفت على المال فمكنت الراعي من نفسي فأنت منه

இந்தத் திருக்குர்ஆன் வசனங்கள் இறங்கியதும்... "வலீதுப்னு முகீரா வேகமாக வீட்டுக்குச் சென்று அவனுடைய தாயின் கழுத்தில் வாளை வைத்து "என்னைப் பற்றி முஹம்மத் சொன்னதெல்லாம் உண்மை தான். நான் அயோக்கியன் தான்!" ஆனால்  "முஹம்மத் என்னை விபச்சாரத்தில்  பிறந்தவன் என சொல்லி விட்டார். அவர் பொய் சொல்ல மாட்டார்." "உண்மையைச் சொல். நான் விபச்சாரத்தில்  பிறந்தவனாஎன் தந்தை யார்முகீரா இல்லையா?" எனக் கேட்டான். "ஆமாம்..! நான் ஆட்டு இடையனை வைத்திருந்தேன். நீ அவனுக்கு பிறந்தவன் தான் என்ற உண்மையைக் கூறினாள்.

"அவன் மூக்கின் மீது மிக விரைவில் ஓர் அடையாளம்  விடுவோம்! (68:16) என்றும் அல்லாஹ் ஆயத்  இறக்கினான்.

அல்லாஹ் சொன்னதைப் போன்றே "பத்ருப் போரில் அவன் மூக்கில் வாள் முனைப்பட்டு பெரிய காயம் ஏற்பட்டதால் அவன் முகமும் விகாரமாகி விட்டது!" அதனால் "வலீதுப்னு முகீரா  மக்களுக்கு முன் வெளியில் வர வெட்கப்பட்டு மனம் நொந்து இறந்து போனான்.! (குர்துபீ)

நபியின் மீது அவதூறுகளை சொன்னவர்கள் மிகவும் மோசமான முடிவுகளை சந்தித்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாறு சான்றாக இருக்கிறது.

كان رجُلٌ يكتُبُ للنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم وكان قد قرَأ البقرةَ وآلَ عِمرانَ عُدَّ فينا ذو شأنٍ وكان النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يُمِلُّ عليه { غَفُورًا رَحِيمًا } فيكتُبُ: ( عَفُوًّا غَفُورًا ) فيقولُ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم : ( اكتُبْ ) ويُملي عليه { عَلِيمًا حَكِيمًا } فيكتُبُ: ( سَمِيعًا بَصِيرًا ) فيقولُ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم : ( اكتُبْ أيَّهما شِئْتَ ) قال : فارتدَّ عنِ الإسلامِ فلحِق بالمُشرِكينَ فقال : أنا أعلَمُكم بمُحمَّدٍ ـ صلَّى اللهُ عليه وسلَّم ـ إنْ كُنْتُ لَأكتُبُ ما شِئْتُ فمات فبلَغ ذلك النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم فقال : ( إنَّ الأرضَ لنْ تقبَلَه ) قال : فقال أبو طَلحةَ : فأتَيْتُ تلكَ الأرضَ الَّتي مات فيها وقد علِمْتُ أنَّ الَّذي قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم كما قال فوجَدْتُه مَنبوذًا فقُلْتُ : ما شأنُ هذا ؟ فقالوا : دفَنَّاه فلَمْ تقبَلْه 

ஒருவர் நபிக்காக வஹி எழுதக் கூடியவராக இருந்தார். எங்களிடத்தில் அவருக்கு சிறந்த அந்தஸ்தும் இருந்தது ஆனால் திடீரென்று அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இணை வைப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டார். அங்கே சென்று எனக்கு நபியைப் பற்றி நன்கு தெரியும்.அவர் சொல்வது இறைச் செய்தியல்ல.  நான் விரும்பியதை எழுதக்கூடியவனாக இருந்தேன். அதைத் தான் அவர் உங்களிடம் கூறிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். இது நபிக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. ஒருநாள் அவர் இறந்து போன பொழுது அவரை பூமி ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்கள். அபூதல்ஹா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; அவர் எந்த ஊரில் மரணித்தாரோ அந்த ஊருக்கு நான் சென்றிருந்தேன். நபியவர்கள் சொன்னதைப் போன்றே அவனுடைய சடலம் பூமிக்கு மேலே கிடந்தது. என்னவென்று கேட்ட பொழுது அவ்வூர் மக்கள் இந்த மையத்தை நாங்கள் அடக்கம் செய்தோம் ஆனால் பூமி அதை ஏற்க மறுத்து விட்டது என்று கூறினார்கள்.(இப்னு ஹிப்பான் ; 744)

وقال السهيلي : ويوم يعض الظالم على يديه هو عقبة بن أبي معيط ، وكان صديقا لأمية بن خلف الجمحي ويروى لأبي بن خلف أخي أمية ، وكان قد صنع وليمة فدعا إليها قريشا ، ودعا رسول الله صلى الله عليه وسلم فأبى أن يأتيه إلا أن يسلم . وكره عقبة أن يتأخر عن طعامه من أشراف قريش أحد فأسلم ونطق بالشهادتين ، فأتاه رسول الله صلى الله عليه وسلم وأكل من طعامه ، فعاتبه خليله أمية بن خلف ، أو أبي بن خلف وكان غائبا . فقال عقبة : رأيت عظيما ألا يحضر طعامي رجل من أشراف قريش . فقال له خليله : لا أرضى حتى ترجع وتبصق في وجهه وتطأ عنقه وتقول كيت وكيت . ففعل عدو الله ما أمره به خليله ; فأنزل الله عز وجل : ويوم يعض الظالم على يديه . قال الضحاك : لما بصق عقبة في وجه رسول الله صلى الله عليه وسلم رجع بصاقه في وجهه وشوى وجهه وشفتيه ، حتى أثر في وجهه وأحرق خديه ، فلم يزل أثر ذلك في وجهه حتى قتل

உக்பா பின் அபீ முஐத் என்பவன் ஒருநாள் குறைஷிகளுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தான். அந்த விருந்திற்கு நபியவர்களையும் அழைத்தான். நபியவர்கள் நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் தான் உன் அழைப்பிற்கு நான் பதிலளிப்பேன் என்று சொன்னவுடன் குறைஷிகளில் முக்கியஸ்தர்களில் ஒருவர் தன் விருந்துக்கு வராமல் இருப்பதை அவன் கண்ணியக் குறைவாக நினைத்தான். எனவே நபியவர்களும் தன் விருந்துக்கு வர வேண்டும் என்பதற்காக ஷஹாதத் கலிமாவை கூறி விட்டான். நபியவர்களும் அங்கு விருந்துக்கு சென்றார்கள். ஆனால் இதை கேள்விப்பட்ட அவனுடைய நண்பன் உமையா பின் கலஃப் என்பவன் அவனைக் கடிந்து கொண்டான். ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டான். குறைஷிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவர் என் விருந்தில் கலந்து கொள்ளாமல் இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. எனவே அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு கலிமா சொல்லி விட்டேன் என்று சொன்னான். இருந்தாலும் நீ செய்தது மிகப் பெரிய தவறு. எனவே நீ செய்த தவறுக்காக முஹம்மது நபியின் மீது காறி உமிழ வேண்டும். நீ அவ்வாறு செய்யாத வரை உன்னை பொருந்திக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான். இவனும் நண்பனுடைய பேச்சைக் கேட்டு அவனை திருப்தியடையச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் அவன் சொன்னதைப் போன்றே நபியின் முகத்தில் காறி உமிழ்ந்தான். ஆனால் அந்த எச்சிலை அவன் மீதே அல்லாஹ் திருப்பி விட்டான். அந்த எச்சில் அவன் முகத்தையும் அவன் உதடுகளையும் அவன் கன்னத்தையும் கறித்து அவன் முகத்தை அலங்கோலப் படுத்தியது. அவன் மரணிக்கும் வரை அதன் அடையாளங்கள் அவன் முகத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. (தஃப்ஸீர் குர்துபி)


நபியின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் மிக மோசமான முடிவுகளைத்தான் இதுவரை சந்தித்திருக்கிறார்கள். நபியின் கண்ணியத்தை மக்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும் என்று எண்ணத்தில் அவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை. அவர்களும் நம்மைப் போன்று சாதாரண மனிதர் தான் என்று சொன்னவர்கள் சமூகத்தில் அசிங்கப்பட்டு நிற்பதை நாம் இன்றைக்கும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் நபியின் மீது அவதூறுகளை அள்ளி வீசிய ஈனப்பிறவிகளுக்கு தக்க பாடத்தை விரைவில் கொடுத்து இனி வரும் காலங்களில் அவ்வாறு வாய் துறப்பதற்கு அச்சப்படும் நிலையை அவர்களுக்கு வழங்குவானாக!

        

9 comments:

  1. காலத்திற்கேற்ற சிறந்த பதிவு
    அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக... ஆமீன்

    ReplyDelete
  2. ஆமீன்

    ReplyDelete
  3. JAZAAKALLAHU HAIRAL JAZAAI

    ReplyDelete
  4. ما شاء الله تبارك الله.. 🌹🌼🌷

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் தேவையான
    பதிவு

    ReplyDelete
  6. ما شاء الله! بارك الله في علمك !

    ReplyDelete
  7. ماشاء الله بارك الله في علمك و نيتك

    ReplyDelete
  8. அருமையான பதிவு

    ReplyDelete