Friday, October 27, 2023

வலிமார்கள்

 

வலிமார்களின் தலைவர் குத்புல் அக்தாப் கௌஸுல் அஃலம் ரலி அவர்களின் நினைவு நாளான இன்று வலிமார்கள் என்றால் யார் அவர்களின் தன்மைகள் என்ன அவர்களின் அந்தஸ்து என்ன என்று இறைநேசர்களைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களில் அல்லாஹ்வினால் விஷேசமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வலிமார்கள்.

اَللّٰهُ يَجْتَبِىْۤ اِلَيْهِ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ يُّنِيْبُ‏

அல்லாஹ், தான் விரும்பியவர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். அவனை நோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கின்றான். (அல்குர்ஆன் : 42:13)

அல்லாஹ்விற்கு விருப்பமானதை மட்டுமே பேசக்கூடிய தூய்மையான வாழ்க்கைக்காக, அல்லாஹ்வுக்கு விருப்பமானதை மட்டுமே செய்யக்கூடிய  பரிசுத்தமான வாழ்க்கைக்காக, அல்லாஹ்வுக்கு விருப்பமானதை மட்டுமே உள்ளத்தில் சுமந்திருக்கிற அப்பழுக்கற்ற வாழ்க்கைக்காக, ஒரு துளி கூட உலக ஆசைகளோ உலகத்தின் மோகங்களோ தவறான சிந்தனைகளோ தவறான எண்ணங்களோ ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொண்ட மாசற்ற வாழ்க்கைக்காக அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் இறை நேசர்கள். அவர்கள் தூய்மையான வாழ்க்கைக்குறியவர்கள் பரிசுத்தமான வாழ்வுக்குறியவர்கள்.

வலிமார்கள் அனைத்து காரியங்களிலும் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள். தனிமையிலும் இறையச்சத்தை பேணக்கூடியவர்கள். சின்னச் சின்ன காரியங்களிலும் மிகவும் பேணுதலாக நடப்பவர்கள்.

قيل: يا رسولَ اللهِ أيُّ النّاسِ أفضلُ؟ قال: كلُّ مَخمومِ القلبِ صَدوق اللِّسانِ. قالوا: صَدوقُ اللِّسانِ نعرِفُه، فما مَخمومُ القلبِ؟ قال: هو التَّقيُّ النَّقيُّ لا إثمَ فيه ولا بَغيَ، ولا غِلَّ، ولا حسَدَ

மக்களில் சிறந்தவர் யார் என்று நபி அவர்களிடம் கேட்கப்பட்ட போது மஹ்மூமுல் கல்ப் ஸதூகுல்லிஸான் என்று சொன்னார்கள். ஸதூகுல்லிஸான் என்றால் உண்மை பேசக்கூடியவர்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது. மஹ்மூமுல் கல்ப் என்றால் என்ன என்று கேட்டார்கள். அதற்கு பாவங்களோ அக்கிரமங்களோ பொறாமையோ குரோதங்களோ இல்லாத உள்ளத்தூய்மையுள்ள இறையச்சமுள்ள மனிதர் என்று கூறினார்கள். (இப்னுமாஜா : 4216)

இறைநேசர்கள் ஹராமைப் பார்ப்பதிலிருந்து கண்களைப் பாதுகாத்துக் கொண்டவர்கள். ஹராமைக் கேட்பதிலிருந்து காதுகளைப் பாதுகாத்துக் கொண்டவர்கள். ஹராமைத் தொடுவதிலிருந்து கரங்களைப் பாதுகாத்துக் கொண்டவர்கள். ஹராமின் பக்கம் செல்வதிலிருந்து கால்களைப் பாதுகாத்துக் கொண்டவர்கள்.ஹராமைப் பேசுவதிலிருந்து நாவைப் பாதுகாத்துக் கொண்டவர்கள். ஹராமை உட்கொள்வதிலிருந்து வயிற்றைப் பாதுகாத்துக் கொண்டவர்கள். தங்களுக்கு அனுமதி இல்லாத ஒரு பொருள் அது ஒரு துளியாக இருந்தாலும் அது தன் வாழ்க்கைக்குள் வந்து விடக்கூடாது என்பதில் அதீத  அக்கறையும் எச்சரிக்கையும் கொண்டவர்கள் வலிமார்கள்.

جاءت أخت بشر الحافي إلى أحمد بن حنبل ـ رحمه الله ـ وقالت: إنا نغزل على سطوحنا بشعلة الملك، هل يجوز لنا الغزل في شعاعها، وقد وقع علينا المشاعل الظاهرية؟ فقال: من أنت عافاك الله؟ قالت: أخت بشر الحافي، فبكى أحمد، وقال: من بيتكم يخرج الورع الصادق، لا تغزلي في شعاعها

ஒரு பெண் ஹள்ரத் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ் அவர்களிடம் வந்து இரவு நிலா வெளிச்சத்தில் நாங்கள் நூல் திரித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் இரவுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடக்கூடியவர்கள் கையில் விளக்குகளோடு வந்தார்கள்.எங்கள் வீட்டுக்கு முன்னால் சற்று நேரம் நின்று விட்டார்கள். அப்போது அவர்களின் அந்த விளக்கிலிருந்து வந்த வெளிச்சத்தில் சிறிது நேரம் திரித்து விட்டோம். அது எங்களுக்கு ஹலாலா என்று கேட்டார். அதனைக் கேட்ட இமாம் அவர்கள் அழுது விட்டார்கள். நீ யார் என்று கேட்டார்கள். நான் பிஷ்ருல் ஹாஃபி அவர்களின் சகோதரி என்றார். உங்கள் வீட்டிலிருந்து தான் உண்மையான பேணுதல் வெளிப்படுகிறது என்று கூறி அவ்வாறு வரும் வெளிச்சத்தில் நூல் திரிக்க வேண்டாம் என்று பதிலளித்தார்கள்.

قال حبيب ابن أبي ثابت رحمه الله تعالى: «لا يُعجبْكم كثرةُ صلاة امرئ ولا صيامه، ولكن انظروا إلى وَرَعِه، فإن كان وَرِعا مع ما رزقه الله من العبادة فهو عبدٌ لله حقّا»

ஹபீப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஒருவர் அதிகம் தொழுவதோ அதிகம் நோன்பு வைப்பதோ உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அவரிடம் பேணுதல் இருக்கிறதா என்று பாருங்கள். வணக்கத்தோடு பேணுதலும் யாரிடம் இருக்கிறதோ அவரே அல்லாஹ்விடம் சிறந்த மனிதர்.

இறைநேசர்களிடம் இருக்கும் மிக முக்கியமான அம்சம் பேணுதல்.

وَهَذَا رَجُلٌ جَاءَ إِلَى الْحَسَنِ الْبَصْرِيِّ -رَحْمَةُ اللهِ عَلَيْهِ- مِنْ بِلَادٍ بَعِيدَةٍ، جَاءَ يَسْأَلُ عَنِ الْأَكْلِ الْحَلَالِ، كَانَ يَتَوَرَّعُ، فَسَأَلَ عَنِ الْأَكْلِ الْحَلَالِ، فَدُلَّ عَلَى الْحَسَنِ الْبَصْرِيِّ -رَحْمَةُ اللهِ عَلَيْهِ-، أَبِي سَعِيدٍ الْإِمَامِ، الْوَرِعِ الزَّاهِدِ، الْعَفِيفِ الْمُتَعَفِّفِ

فَقَالَ: يَا إِمَامَ! جِئْتُكَ مِنْ بِلَادٍ بَعِيدَةٍ أَسْأَلُ عَنِ الْحَلَالِ الصِّرْفِ -عَنِ الْحَلَالِ الْمَحْضِ

فَقَالَ: يَا هَذَا أَنَا رَجُلٌ مِنَ الْوُعَّاظِ أَكَلَ مِنْ هَدَايَا الْأَصْحَابِ، وَأَخَذَ مِنْ عَطَايَا الْأَحِبَّاءِ، فَلَسْتُ هُنَالِكَ، وَلَكِنْ أَدُلُّكَ عَلَى رَجُلٍ بِـطَرَسُوسَ

فَهَذَا الرَّجُلُ عِنْدَهُ مَزْرَعَةٌ، إِذَا مَا جِئْتَهُ وَجَدَتْهُ قَائِمًا فِيهَا، وَعِنْدَهُ بَقَرَةٌ، جَعَلَهَا تَمُرُّ بِطَرِيقٍ فِيهِ تِبْنٌ وَشَعِيرٌ، وَطَرِيقٌ بِهِ مَاءٌ، فَإِذَا مَرَّتْ بِالتِّبْنِ وَالشَّعِيرِ عَرَضَهُمَا عَلَى الْبَقَرَةِ فَتَأْخُذُ حَاجَتَهَا مِنْهُمَا، ثُمَّ يَعْرِضُهَا عَلَى الْمَاءِ فَتَأْخُذُ حَاجَتَهَا مِنْهُ، فَهَذَا هُوَ الَّذِي أَعْلَمُ يَأْكُلُ مِنَ الْحَلَالِ الْمَحْضِ فَائْتِهِ

فَذَهَبَ الرَّجُلُ فَوَجَدَ الْأَمْرَ كَمَا قَالَ الْحَسَنُ -رَحْمَةُ اللهِ عَلَيْهِ-، فَقَالَ: جِئْتُكَ مِنْ عِنْدِ الْحَسَنِ أَبِي سَعِيدٍ، وَقَالَ لِي: كَذَا وَكَذَا، وَوَصَفَ لِي مِنَ الْأَمْرِ كَيْتَ وَكَيْتَ

فَبَكَى الرَّجُلُ، وَقَالَ: إِنَّ الْأَمْرَ لَكَمَا قَالَ الْإِمَامُ أَبُو سَعِيدٍ، وَلَكِنْ شُغِلْتُ يَوْمًا بِصَلَاتِي عَنِ الْبَقَرَةِ، فَذَهَبَتْ إِلَى أَرْضِ جَارِي، فَاخْتَلَطَ بِقَوَائِمِهَا طِينٌ مِنْ أَرْضِ جَارِي، ثُمَّ عَادَتْ إِلَى الْأَرْضِ، فَاخْتَلَطَ طِينُ أَرْضِ جَارِي بِأَرْضِي، فَصَارَتْ شُبْهَةً، فَلَمْ أَعُدْ ذَلِكَ الَّذِي وَصَفَ لَكَ الْإِمَامُ الْحَسَنُ، فَعُدْ إِلَيْهِ حَتَّى يَدُلَّكَ عَلَى غَيْرِي

ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் இந்த ஊரில் இறையச்சமுள்ள மிகவும் பேணுதல் மிக்க கொஞ்சமும் ஹராம் கலந்து விடாமல் ஹலாலான உணவை மட்டுமே சாப்பிடக்கூடிய ஸாலிஹான மனிதர் யாரும் இருக்கிறாரா என்று விசாரித்தார். மக்கள் ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்களை அடையாளம் காட்டினார்கள். அவர் வந்து தன் நோக்கத்தை சொன்னார். அதற்கு அவர்கள் நான் மக்களிடையே பிரசங்கம் செய்பவன். மக்கள் தரும் ஹதியாக்களையும் அன்பளிப்புகளையும் பெற்றுக் கொள்பவன். எனவே நீ சொல்லுகின்ற அந்த பேணுதல் என்னிடத்தில் இல்லை என்று சொல்லி விட்டு, சிரியாவில் தர்தூஸ் என்ற ஊரில் ஒரு மனிதர் இருக்கிறார். அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்கிறார். தன் கரத்தால் உழைத்து அதிலிருந்து அவர் சாப்பிடுகிறார். எனவே அவருடைய உணவு, சம்பாத்தியம் அனைத்தும் ஹலாலாகவே இருக்கிறது. எனவே நீ அவரிடத்தில் செல் என்று கூறினார்கள். அவரும் சிரியாவுக்கு வந்து அந்த மனிதரை சந்தித்து விஷயத்தைக் கூறினார் அதைக் கேட்ட அந்த மனிதர் அழுதார். ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள் என்னைப் பற்றி அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஒரு நாள் நான் தொழுது கொண்டிருந்த போது என்னுடைய மாடு பக்கத்து வீட்டுக்காரனுக்கு சொந்தமான நிலத்தில் நுழைந்து விட்டது. அந்த நிலத்தினுடைய மண் என்னுடைய மாட்டின் கால்களில் ஓட்டி விட்டது. அதே நிலையில் என்னுடைய விவசாய நிலத்திற்கு வந்து விட்டது. அவனுடைய நிலத்தில் உள்ள அந்த மண் என்னுடைய மாட்டின் மூலம் என் நிலத்தில் கலந்து விட்டது. அது ஹலாலா ஹராமா என்று எனக்கு தெரிய வில்லை. ஆகவே நீ நினைப்பதை போன்று ஹலாலை மட்டுமே உண்ணக்கூடியவனாக நான் இல்லை. எனவே நீ ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்களிடமே திரும்பிச் செல். அவர் வேறொரு மனிதரை அடையாளம் காட்டுவார் என்று சொல்லி அனுப்பி விட்டார். (முக்தஸரு ஷுஃபுல் ஈமான்)

لَقَدْ كَانَتِ الْمَرْأَةُ الصَّالِحَةُ تَعْجِنُ عَجِينَهَا، فِيَأَتْي نَعْيُ زَوْجِهَا، فَتُخْرِجُ يَدَهَا مِنَ الْعَجِينِ، وَتَقُولُ: ((هَذَا طَعَامُ أَصْبَحَ لَنَا فِيهِ شُرَكَاءُ، هَذَا طَعَامٌ أَصْبَحَ لَنَا فِيهِ وَرَثَةٌ مُشَارِكُونَ

ஒரு பெண் ரொட்டிக்கு மாவு குழைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவருடைய கணவன் இறந்து விட்டதாக செய்தி சொல்லப்பட்டது. உடனே இது என் கணவருக்குரியது.அவர் இறந்து விட்டார். எனவே இப்போது இது எனக்கு மட்டும் சொந்தமானதல்ல. மற்ற வாரிசுதாரர்களுக்கும் இதில் பங்கிருக்கிறது என்று கூறி அந்த மாவிலிருந்து தன் கையை எடுத்து விட்டார். (அல்வரஃ லிஇப்னி அபித்துன்யா)

இந்த மாதிரியான பேணுதலை இறைநேசர்களிடமே பார்க்க முடியும். காரணம் அவர்கள் தடுக்கப்பட்ட அனைத்து காரியங்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டவர்கள். சொல்லப்போனால், அவர்கள் அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டவர்கள். அவர்களுக்கே அறியாமல் தடுக்கப்பட்ட விஷயத்தை எடுக்க முற்பட்டால் அல்லாஹ் அவர்களை அதிலிருந்து பாதுகாத்து விடுவான்.

قال الشبلي رحمه الله تعالى: "عزمت أن لا آكل إلا حلالاً وأنا أطوف بالبراري، فرأيت شجرة فمددت يدي إليها فنادتني الشجرة: تأدب يا شبلي مع الله تعالى فإني لرجل يهودي، فتركتها وانصرفت

ஷிப்லி ரஹ் அவர்கள் மரங்கள் நிறைந்த ஒரு பகுதியை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மரத்தைப் பார்த்து அதன் பக்கம் தன் கையை நீட்டினார்கள். அப்போது அந்த மரம் ஷிப்லியே அல்லாஹ்விடம் ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். நான் ஒரு யூதனுக்குரிய மரம் என்று கூறியது. உடனே அவர்கள் தன் கையை தடுத்துக் கொண்டார்கள்.

அவர்களை மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களையும் அல்லாஹ் பாதுகாத்து விடுவான். ஹலால் ஹராமைப் பேணக்கூடிய இறையச்சமுள்ள குடும்பத்திலிருந்து தான் அல்லாஹ் வலிமார்களை வெளியாக்குவான்.

عن عبد الله بن زيد بن أسلم عن أبيه عن جده أسلم قال:" بينما أنا مع عمر بن الخطاب وهو يعس المدينة إذ أعيا واتكأ على جانب جدار في جوف الليل وإذا امرأة تقول لابنتها يا ابتناه قومي إلى ذلك اللبن فامذقيه بالماء فقالت لها يا أمتاه وما علمت ما كان من عزمة أمير المؤمنين اليوم قالت وما كان من عزمته يا بنية قالت إنه أمر مناديا فنادى ألا يشاب اللبن بالماء فقالت لها يا بنية قومي إلى اللبن فامذقيه بالماء فانك بموضع لا يراك عمر ولا منادي عمر فقالت الصبية لآمها يا أمتاه ما كنت لأطيعه في الملأ واعصيه في الخلاء وعمر يسمع كل ذلك فقال يا أسلم علم الباب واعرف الموضع ثم مضى في عسسه حتى أصبح فلما أصبح قال يا أسلم امض إلى الموضع فانظر من القائلة ومن المقول لها وهل لهم من بعل فأتيت الموضع فنظرت فإذا الجارية أيّم لا يعل لها وإذا تيك أمها وإذ ليس لهم رجل فأتيت عمر بن الخطاب فأخبرته فدعا عمر ولده فجمعهم فقال: هل فيكم من يحتاج إلى امرأة أزوجه ولو كان بأبيكم حركة إلى النساء ما سبقه منكم أحد إلى هذه المرأة, فقال عبد الله لي زوجة وقال عبد الرحمن لي زوجة وقال عاصم يا أبتاه لا زوجة لي فزوجني, فبعث إلى الجارية فزوجها من عاصم فولدت لعاصم بنتا وولدت البنت وولدت الابنة عمر بن عبد العزيز

ஹள்ரத் உமர் ரலி அவர்கள் இரவு நேரத்தில் ஊரை வலம் வந்து கொண்டிருந்த போது ஒரு சுவற்றுக்குப் பின்னால் ஒரு தாயும் மகளும் பேசிக் கொண்டிருந்த சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அந்த தாய் மகளிடத்திலே பாலுடைய அளவை கூட்டுவதற்காக அதில் தண்ணீரை கலந்து விடு என்று சொன்னார். அப்போது அந்த மகள் அவ்வாறு செய்யக்கூடாது. ஏனென்றால் அவ்வாறு செய்வதை ஜனாதிபதி உமர் அவர்கள் தடுத்திருக்கிறார்கள் என்று கூறினாள். அப்போது அந்த தாயார் ஜனாதிபதி அவர்கள் இப்போது உன்னை பார்க்க வில்லை. அவருடைய பார்வையை விட்டும் நீ மறைந்திருக்கிறாய். பிறகு ஏன் அஞ்சுகிறாய் என்று கேட்டார். அப்போது அந்த மகள், கூட்டத்தில் இருக்கும் பொழுது அவருக்கு கட்டுப்பட்டு விட்டு, தனியாக இருக்கிற பொழுது அவருக்கு என்னால் மாறு செய்ய முடியாது என்று கூறினார். அதனைக் கேட்டு ஆச்சரியமடைந்த உமர் ரலி அவர்கள் அது யாருடைய வீடு ? அந்த வீட்டில் யார் இருக்கிறார் ? அந்த பெண்ணுக்கு கணவர் இருக்கிறாரா ? என்றெல்லாம் விசாரித்து வரச் சொன்னார்கள். அந்த பெண்ணுக்கு கணவர் இல்லை என்று விசாரித்து செய்து சொல்லப்பட்ட போது உமர் ரலி அவர்கள் அந்த பெண்ணை தன்னுடைய மகன் ஆஸிம் ரலி அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள்.அந்த தம்பதிக்கு ஒரு மகள் பிறந்தார். அவர் தான் உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களின் தயார். (ஹில்யதுல் அவ்லியா)

சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் சிந்தனையாலும் தூய்மையான வாழ்விற்கு அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் இறைநேசர்கள். இவ்வாறு எண்ணத்தாலும் செயல்களாலும் தூய்மையானவர்களாக இருந்த காரணத்தினால் தான் அவர்களால் மறைவான விஷயங்களைப் பார்க்க முடிந்தது.

وجاء في كتاب ( قلائد الجواهر ) لمحمد بن يحيي التادفي : ( قال أبو الفرج بن الحمامي : كنت كثيراً ما أٍمع عن الشيخ عبد القادر أشياء أستبعد وقوعها وأنكرها , وكنت بحسب ذلك أتشوُّق إلأى لقائه , واتفق لي أني مضيت إلأى باب الأزج لحاجة كانت لي هناك فلما عدت مررت بمدرسته والمؤذن يقيم الصلاة , فتنبهت بالإقامة على ما كان في نفسي , وقلت : أصلي العصر وأسلّم على الشيخ , وذهب عني أنني على غير وضوء , فصلى بنا العصر , فلما فرغ من الصلاة والدعاء , أقبل عليّ وقال : أي بني لو قدّمتني بالقصد على حاجتك لقُضيت لك , ولكن الغفلة شاملة لك بحيث قد صليت على غير وضوء . وقد سهوت عن ذلك , قال : فتداخلني العجب بحاله مما أدهشني وأذهل عقلي ... ومن حينئذ لازمت صحبته وتعلقت بمحبته وخدمته )

அபுல் ஃபரஜ் பின் ஹம்மாமி கூறுகிறார் ; நான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரஹ் அவர்களைப் பற்றி தவறான அபிப்ராயத்தில் இருந்தேன். அவர்களைப் பற்றிய விஷயங்களை, அவர்களின் கராமத்துகளை நம்பாமல் இருந்தேன்.இருந்தாலும் அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு எனக்கிருந்தது. ஒரு நாள் என் தேவைக்காக சென்று விட்டு திரும்பும் வழியில் அவர்களின் இடத்தைக் கடக்க நேரிட்டது. அந்த நேரம் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. நான் அவர்களை சந்திக்கும் எண்ணத்தில் அங்கு சென்று தொழுகையில் சேர்ந்து கொண்டேன். தொழுகை முடிந்ததும் அவர்கள் என்னைப் பார்த்து மறந்து கவனமின்றி ஒழுயில்லாமல் தொழுது விட்டாயே என்று கேட்டார்கள். அதைக் கேட்டு அதிசயித்துப் போனேன். பின்பு அவர்களின் மகத்துவத்தை புரிந்து கொண்டு அவர்களின் நெருக்கத்தை அதிகமாக்கிக் கொண்டேன். (கலாயிதுல் ஜவாஹிர்)

 

4 comments:

  1. மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ஹஜ்ரத் அவர்களுக்கு அல்லாஹ் தஃஆலா மென்மேலும் கல்வி ஞானத்தைத்தருவானாக ஹஜ்ரத் அவர்களின் கல்வித்தேடலை மென்மேலும் அதிகப்படுத்தித்தருவானாக ஆமீன்...

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் தங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் ஆனால் வியாழக்கிழமை குல் பதிவிட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete