Friday, November 1, 2024

அர்த்தமுள்ள மார்க்கம்

إنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ

நிச்சயமாக தீனுல் இஸ்லாம் தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாக இருக்கிறது. (அல்குர்ஆன்:3;19)

உலகத்தில் தோன்றிய சமயங்களில் தனித்துவம் பெற்ற சமயமாக இஸ்லாம் இருக்கிறது. தன்னிகரில்லாத ஈடுஇணையற்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. எண்ணற்ற விஷயங்களில் இஸ்லாம் மற்ற சமயங்களை விட்டும் மற்ற மதங்களை விட்டும் தனித்து விளங்குகிறது.

இஸ்லாம் ஓர் அர்த்தமுள்ள மார்க்கம். இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள், அதன் சித்தாந்தங்கள், இஸ்லாம் கூறும் அடிப்படைச் சட்டங்கள், இஸ்லாம் அடையாளப்படுத்தும் நாகரீகங்கள், கலாச்சாரங்கள், இஸ்லாம் கூறுகின்ற வணக்க வழிபாடுகள் என ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை.

கடவுள் கொள்கை

உலகில் இன்று சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறு சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட தெய்வம் என்று கூறி அவர்களை வழிப்பட்டு வருகின்றனர்.

இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் மனித அவதாரம் எடுப்பதும் கிடையாது எனக் கூறி கடவுளின் பெயரால் அரங்கேற்றப்படும் அத்தனை மூடநம்பிக்கைகளையும் அடியோடு மறுக்கின்றது.

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் அதைப் பகுத்தறிவு வாதம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் தானாகவோ, தற்செயலாகவோ உருவானது என்பது எப்படி பகுத்தறிவாகும்? படைப்பினங்கள் இருப்பதே படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான பலமான ஆதாரமாகும்.நுணுக்கமான இந்தப் பிரபஞ்ச ஒழுங்குகளும் அற்புதமான மனித படைப்பும் உயிரினங்களின் அற்புதமான வடிவமைப்பும் மிகப்பெரும் ஆற்றல்மிக்க படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான எடுத்துக் காட்டுக்கள் தான் என்பதை அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டார்கள்.

اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَ

அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? (அல்குர்ஆன் : 52:35)

اَمْ خَلَـقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌ بَلْ لَّا يُوْقِنُوْنَ

அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் : 52:36)

இந்தப் பிரபஞ்சம் தானாக உருவாகுவதோ தானாக இயங்குவதோ சாத்தியமில்லை என்பதை இறைவன் உறுதிபட உரைக்கின்றான்.

ويحكى عن أبي حنيفة ـ رحمه الله ـ أن قوما من أهل الكلام أرادوا البحث معه في تقرير توحيد الربوبية، فقال لهم: أخبروني قبل أن نتكلم في هذه المسألة عن سفينة في دجلة تذهب فتمتلئ من الطعام والمتاع وغيره بنفسها وتعود بنفسها فترسي بنفسها وتتفرغ وترجع كل ذلك من غير أن يدبرها أحد، فقالوا: هذا محال لا يمكن أبدا، فقال لهم: إذا كان هذا محالا في سفينة فكيف في هذا العالم كله علوه وسفله

அபு ஹனிஃபா ரஹ் அவர்களிடம் நாத்திகவாதிகள் சிலர் தர்க்கம் செய்ய வந்தனர். இப்போது அபு ஹனிஃபா ரஹ் அவர்கள் தர்க்கம் தொடங்கும் முன் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு பதில் கூறுங்கள் என்று சொன்னார்கள். ஒரு கடலில் கப்பல் ஒன்று தானாக சரக்குகளையும் தானியங்களையும் உணவுகளையும் ஏற்றிக் கொள்கிறது. அவைகளை சேர்க்க வேண்டிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கிறது. அதே போன்று மக்களை தானாக ஏற்றிக் கொண்டு அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கிறது. இப்படி அந்த கப்பலை இயக்குவதற்கு எந்த மாலுமியும் இல்லாமல் தானாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்ன பொழுது விவாதம் செய்வதற்காக வந்த அந்த மக்கள் அது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டார்கள். ஒரு கப்பலை இயக்குவதற்கே ஒருவன் தேவைப்படுகிற பொழுது இந்த உலகம் மட்டும் தானாக இயங்குமா என்று அபுஹனீஃபா ரஹ் அவர்கள் கேட்டார்கள். அதைக் கேட்ட அவர்கள் வாயடைத்து போனார்கள்.

لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (அல்குர்ஆன் : 112:3)

இறைவனுக்கு குழந்தைகள் இல்லை என இஸ்லாம் கூறுகின்றது. இறைவனுக்கு குழந்தை உண்டு என்று சொன்னால் அந்தக் குழந்தையும் இறைவனாகவே இருக்கும். அந்தக் குழந்தைக்கும் குழந்தை பிறக்கும், அதுவும் இறைவனாக இருக்கும்… இப்படிப் போனால் மனிதப் படைப்பை விட கடவுள்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். அது அறிவுக்குப் பொருந்தாததாகும்.

எனவே தான் இறைவனுக்கு பிறப்பு இருக்க முடியாது. பிறப்பவனும் இறப்பவனும் கடவுளாக இருக்க முடியாது என இஸ்லாம் தெளிவாக கூறுகின்றது. இதுவே அறிவுக்குப் பொருத்தமான கடவுள் கொள்கையாகும்.

 

இறை வணக்கம்

பக்தி என்ற பெயரால் மக்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வதையே வணக்கம் என்று சில மதங்கள் கூறுகின்றன.

Ø  நெருப்பை வளர்த்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் அதில் நடந்து பாதங்களை ரணமாக்கிக் கொள்வார்கள்.சமயங்களில் நிலை தடுமாறி அதில் விழுந்து விடுவதும் உண்டு.

Ø  நாக்கிலும், கன்னங்களிலும் ஊசியை, ஈட்டியைக் குத்திக் கொள்வார்கள்.

Ø  குளிரிலும், வெயிலிலும் செருப்பு கூட அணியாமல் கால் நடையாக பல மைல் தூரம் நடந்து செல்வார்கள்.

Ø   நடுங்கும் குளிரில், குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் வணக்கஸ்தலத்தை சுற்றி வருவார்கள்.

Ø  கரடு முரடான தரைகளில் ஆண்களும், பெண்களும் படுத்து உருளுவார்கள்.

Ø  தமது தலையில் தேங்காயை உடைத்து காயப்படுத்திக் கொள்வார்கள்.

Ø  படுத்திருக்கும் பெண்கள் மீது பூசாரியை நடக்க சொல்லுவார்கள். அல்லது மாடுகளை அவர்கள் மீது நடக்க வைப்பார்கள்.

இப்படி வணக்கங்கள் என்று மற்ற மதங்கள் கூறுகின்ற இது போன்ற காரியங்களில் ஒன்று தன்னைத்தானே வருத்திக் கொள்ளுதல் இருக்கும். அல்லது அறிவுக்கு பொருந்தாத விஷயங்கள் இருக்கும். ஆனால் இஸ்லாம் வகுத்துக் கொடுத்திருக்கிற வணக்கங்கள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை. அறிவுக்கு பொருத்தமானவை. உலக மக்களுக்கு நன்மை பயப்பவை.

 

தொழுகை

மனிதனுக்கு இயற்கையிலேயே ஆணவமும் கர்வமும் உண்டு. யாரிடத்திலும் கைகட்டி நிற்பதை விரும்ப மாட்டான். யாருக்கும் தலை வணங்குவதை அவனுடைய உள்ளம் ஏற்காது. சக மனிதர்களுக்கிடையில் இவ்வாறு நடந்து கொள்வதை இஸ்லாம் எதிர்க்க வில்லை. அது சுயமரியாதை. ஆனால் படைத்தவனுக்கு முன்னால் அந்த பெருமையின் ஒரு துளி கூட வெளிப்பட்டு விடக்கூடாது. அப்படி வெளிப்பட்டால் அந்த பெருமையும் கர்வமும் மனிதனை அழித்து விடும். நான் ஒரு சாதாரண அடிமை. எனக்கு மேலே என்னை படைத்தாளும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வை ஏற்படுத்துவது தான் தொழுகை. ஒருவன் ஒரேயடியாக உலக இன்பங்களில் மூழ்கி அழிவின் பாதைக்கு சென்று விடாமல் அவனைப் பாதுகாத்து அவனுக்கு அப்போது இறைவனுடைய ஞாபகத்தை ஏற்படுத்தி மனிதனை பக்குபடுத்தும் ஒன்றாக தொழுகை இருக்கிறது.

 

நோன்பு

தனக்கு அனுமதிக்கப்பட்ட உணவை இறைவன் தவிர்க்கச் சொல்கிறான் என்பதற்காக சிறிது நேரம் உணவைத் தியாகம் செய்பவன், தனக்கு உரிமையில்லாத பொருட்களைப் பிறரிடமிருந்து திருடி, கொள்ளையடித்து, லஞ்சம் வாங்கி, மோசடி செய்து பறித்துக் கொள்ளத் துணிய மாட்டான். அந்தப் பயிற்சியை நோன்பு தருகிறது. மட்டுமல்ல பசித்தவர்களின் உணர்வை புரிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தையும் நோன்பு மனிதனுக்கு ஏற்படுத்துகிறது.

 

வணக்கஸ்தலங்கள்

இன்று கடவுளை வழிபாடு செய்யும் ஆலயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. குறிப்பிட்ட இனத்தவர்கள் கடவுளுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்று வழிபாடு செய்யலாம். மற்றும் சிலர் தூரத்தில் நின்று தான் வழிபாடு நடத்த வேண்டும். இன்னும் சிலர் ஆலயத்திற்குள் நுழையவே கூடாது என்ற பிற்போக்குத்தனம் இன்று நடைமுறையில் இருக்கிறது. கட்டணம் செலுத்துவோருக்கு கடவுளை வழிபடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதையும், தர்ம தரிசனம் செய்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதையும் முக்கியப் பிரமுகர்கள், நடிகர்கள்,தலைவர்கள் வரும் போது அவர்களுக்கு தனி மரியாதை தரப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் பள்ளிவாயில்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். இந்த நாட்டினுடைய ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின்னால் வந்தால் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும். வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்கள் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்க மாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்தங்கள் என்று அவரும் கேட்க முடியாது. நாட்டின் முதல் குடிமகனாக இருந்தாலும் தொழுகை அணிவகுப்பில் நிற்கின்ற போது தனக்கு முன்னால் நிற்கின்ற ஒரு சாதாரண கூலித் தொழிலாளியின் கால்களை ஒட்டித்தான் அவரின் தலை இருக்கும். இஸ்லாம் தொழுகை என்ற வணக்கத்தின் வழியாகவே சமத்துவத்திற்கான அறைகூவலை விடுக்கின்றது.எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை, ஜாதிய வேறுபாடுகள் இல்லை என்பதை உறத்துக்கூறும் இடங்களாக பள்ளிவாசல்கள் இருக்கின்றன.

உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமை தான். இந்த வியாதி மிகப் பெரியது. இது புற்று நோய் போன்றது. வெகு நாளைய நோய்” என்றும்இந்த நோயிலிருந்து விடுதலை பெற ஒரே வழி இஸ்லாம் தான்! இதைத் தவிர வேறு மருந்து இல்லை  என்று தந்தை பெரியார் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

பண்டிகைகள்

இன்றைக்கு உலகெங்கும் கடைபிடிக்கப்படும் பண்டிகைகளும் திருவிழாக்களும் ஏராளம்.அந்த பண்டிகைகளுக்கான அடிப்படையை தேடிப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.அந்த பண்டிகைகளை அவர்கள் கொண்டாடும் விதம் வேதனையாக இருக்கும்.இன்று கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றது.பட்டாசுத் தயாரிப்பில் முதன்மையான ஊர் சிவகாசி.

சிவகாசியில் இருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் ஆண்டுதோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட தீபாவளிக்காக இந்த ஆண்டு சிவகாசியில் ரூ.6000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பட்டாசு விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பட்டாசின் பாதிப்புகள்

1. பொருளாதாரம் வீண்விரயம் செய்யப்படுகின்றது.

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவன். (அல்குர்ஆன் : 17:27)

كلوا واشربوا ولا تسرفوا انه لا يحب المسرفين

உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிப்பதில்லை”. (அல்குர்ஆன் : 7 ; 31)

 

வீண்விரயம் செய்பவர்களின் நிலை மோசமானதாக இருக்கும்

كان المعتمد بن عباد أميرًا من أمراء الأندلس يعيش حياة مترفة غاية في الإسراف والترف، وفي يوم من الأيام جلس هو وزوجته وبناته على مشارف قصره، فرأت زوجته أناسًا يمشون في الطين، فاشتهت أن تخوض في الطين كما يفعلون، فقام الأمير بنثر الطين والزعفران في ساحة القصر، ثم عجنوا الطين بماء الورد والمسك والكافور لتخوض به هي وبناتها حتى تحقق رغبتها

ثم دارت الأيام فتلاشى حكمه وزال ملكه، وسُجن بسجن أغمات في بلاد المغرب، وبينما هو في السجن دخلن عليه بناته يوم العيد يزُرْنَه وهن في ملابس رثة جائعات حافيات، قد غير الجوع صورهن، ولطخت الدموع نظرهن، ومعهن المغازل يغزلن الثياب للناس، فتصدع قلبه، وبكت عينه من هذا المشهد،

ஸ்பெய்னை பல மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்களுள் முஃதமித் பின் அப்பாத் என்பவரும் ஒருவர். அவர் ஒரு நாள் தன் மனைவி மற்றும் பிள்ளைகளோடு அரண்மனை மேல்தளத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கீழே சிலர் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அதேபோன்று மண்ணில் விளையாட ஆசை வந்தது. அதைப் பார்த்த அந்த மன்னர் தனது அரண்மனை முற்றத்தில் மண்ணையும் குங்குமப்பூவையும் கொண்டு வந்து நிரப்பினார்.தன் பெருமையையும் பகட்டையும் வெளிப்படுத்துவதற்காக அதை பன்னீர் கஸ்தூரி மற்றும் கற்பூரத்தைக் கொண்டு குழைத்து அவர்கள் விளையாடுவதற்காக அதை தயாரித்தார்.விளையாடுவதற்கு மண் மட்டுமே போதுமானது. ஆனால் அவர் பெருமைக்காக வீண் விரயம் செய்தார்.

 

ஆனால் சிறிது காலத்தில் அவரை அல்லாஹ் தண்டித்து விட்டான். அவருடைய ஆட்சி பிடுங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆட்சி அதிகாரம் செல்வாக்கு செல்வம் அனைத்தும் பறிபோய் அவரின் குடும்பத்தினர் நடுத்தெருவுக்கு வந்தார்கள்.  

 

2. அடுத்தவருக்கு தொந்தரவு தருவது.

பட்டாசு வெடிப்பவர்கள் தனது சந்தோஷத்திற்காகவும் கொண்டாட்டத்திற் காகவும் பிறருக்கு தொந்தரவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்து கிறார்கள். அதன் மூலம் நோயாளிகள்,பலவீனமானவர்கள்,வயதானவர்கள், குழந்தைகளின் சாபத்திற்கும் பழிப்பிற்கும் ஆளாகிறார்கள்.

ஒரு மனிதனால் ஒரு குறிப்பிட்ட அளவு சப்தத்தை மட்டுமே கேட்க முடியும். அளவைத் தாண்டி அதிக இரைச்சலை அவனால் கேட்க முடியாது. அது மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வல்லுநர்களின் கூற்றுப்படி, காதுகளுக்கு மிக அருகில் பட்டாசு வெடித்தால் காது கேட்கும் திறனை இழக்கக் கூட நேரிடும்.

லூதியானாவில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் ‘ENT’ துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். நவ்நீத் குமார் bbc  யிடம் பேசுகையில், “பட்டாசுகளின் சத்தம் காதுகளில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. பல சந்தர்ப்பங்களில், கேட்கும் திறனை வாழ்நாள் முழுவதும் இழக்கும் அபாயமும் உள்ளது.

நீண்ட நேரம் உரத்த சத்தங்கள் தொடர்ந்து வெளிப்படுவது கர்ப்பிணி பெண்ணுக்கு ஆபத்தானது. இது 90-100 டெசிபல்களுக்கு மேல் நீண்ட நேரம் மற்றும் திரும்ப திரும்ப வெளிப்படுவது ஆபத்தானது. இந்த வகையான உரத்த சத்தம் காது கேளாமையுடன் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக பட்டாசின் மூலம் அண்டை வீட்டார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.அண்டை வீட்டாருக்கு தொந்தரவு தராதவன் தான் உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்.

ولا يضايقه بصوته،

அண்டை வீட்டாரின் விஷயத்தில் 20 கும் மேற்பட்ட கடமைகள் இருப்பதாக சொல்லும் இமாம் கஸ்ஸாலி ரஹ் அதில் ஒன்று அதிக இரைச்சலால் அவருக்கு தொந்தரவு தரக்கூடாது என்று குறிப்பிடுகிறார்கள்.

ورد سؤال إلى دار الإفتاء المصرية يقول: "ما حكم ما يقوم به بعض الناس في الأفراح من الضوضاء؟" وبعد العرض على لجنة الفتاوى جاءت الإجابة على النحو التالي

عن أبي موسى الأشعري رضي الله عنه قال: قلت: يا رسول الله، أي الإسلام أفضل؟ قال: «مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ» أخرجه البخاري ومسلم في "صحيحيهما"، وقد حرم الله تعالى على المسلم إيذاء الناس، ومن أشكال الإيذاء التي يمكن أن يتعرض لها الإنسان، الضوضاء والتلوث الصوتي الذي يقلق نوم النائمين، ويزيد من آلام المرضى، ويمنع الطلبة من المذاكرة، ويفسد على الناس معيشتهم.

وقد تفشَّى التلوث الصوتي والضوضائي في عصرنا الحديث، ومن أشكال هذا الإزعاج ما يحدث في الأفراح اليوم من أصوات صاخبة، وإطلاق للأعيرة النارية في الأفراح، وكل هذا حرام شرعًا؛ لأن هذا يؤدي إلى ترويع الناس وإيذائهم، وربما أدى إلى قتل الأبرياء، وترويع المسلم حرام شرعًا، فعن النعمان بن بشير رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم قال: «لا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا» رواه الطبراني في "المعجم الكبير".

 

பட்டாசைக் குறித்து உலமாக்களிடம் ஃபத்வா கேட்கப்பட்ட போது, ஒரு முஸ்லிம் பிறருக்கு தன் நாவாலோ கரத்தாலோ தொந்தரவு தரக்கூடாது ஒரு முஸ்லிம் பிறரை பயமுறுத்தக்கூடாது என்ற இரு ஹதீஸ்களின் அடிப்படையில் அது ஹராம் என்று ஃபத்வா வழங்குகிறார்கள்.

 

3. சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.பட்டாசு வெடிப்பதின் மூலம் காற்று மாசுபடுகிறது.

மார்க்கம், மனிதன் தன்னை பாதுகாக்க வேண்டும் என்பதோடு தன்னைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலையும் பூமியின் இயற்கை வழங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறது. மனிதன் உலகில் வாழ்வதற்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கிற காடுகள்மலைகள்மரம் செடி கொடிகள்காற்றுநீர்வானம்பறவைகள்மிருகங்கள் போன்ற இயற்கைச் சூழல்களை பாதுகாப்பதற்கும் மனிதன் கடமைப்பட்டிருக்கிறான் என்றும் உணர்த்துகிறது. நம் இயற்கை சூழலைப்பாதுகாப்பதில் தான் நம் வருங்கால சந்ததிகளின் நல்வாழ்வு அமைந்திருக்கிறது.

இந்த அடிப்படையிலும் பட்டாசு ஷரீஅத்திற்கு முரணானது.

 

4. ஆபத்து

தமிழ்நாடு முழுவதும் இன்று பிற்பகல் 12 மணிக்குள் பட்டாசு வெடித்து 82 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 27 அன்று ஹைதராபாத் சுல்தான் பஜார் பகுதியில் உள்ள பராஸ் பட்டாசு ஆலையில் அன்று தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஒரு உணவகம் முற்றிலுமாக எரிந்து போனது. சுமார் 8 கார்கள் தீக்கிறையாகின. ஒரு பெண் காயமடைந்தார்.

அதேபோன்று கேளாவில், காசர்கோடு அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமுற்று 8 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். 150 பேர் பலத்த காயமுற்றனர்.

இப்படி எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

 இப்படி பிற சமயத்தின் பண்டிகைகள் மற்றவர்களுக்கு தொந்தரவு தருபவைகளாக இருக்கின்றன. அவர்களின் கொண்டாட்டம் பிறருக்கு திண்டாட்டமாக அமைகின்றது.ஆனால் இஸ்லாமிய பண்டிகைகள் அர்த்தமுள்ளவை. பிறரை மகிழ்ச்சிபடுத்துபவை.

ஈகைத்திருநாளில் ஃபித்ரா என்ற தர்மத்தின் மூலம் பசித்தவர்களை மகிழ்விக்கிறோம். தியாகத்திருநாளில் குர்பானியின் மூலம் ஏழைகளின் உள்ளங்களில் மகிழ்ச்சியை வரவழைக்கின்றோம். சொந்தபந்தங்கள் அண்டை வீட்டாருக்கு அதை வழங்கி ஆனந்தமடைகிறோம். இஸ்லாமிய பண்டிகைகள் சகோதரத்துவத்தும், மனிதநேயம் மற்றும் சமயநல்லிணக்கத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. 

10 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்... அருமையான பதிவு

    ReplyDelete
  2. ماشاء اللغ

    ReplyDelete
    Replies
    1. மாஷா அல்லாஹ் பாரகல்லாஹூ ஃபீகும்

      Delete
    2. ஆயத்துஹதீதுநிகழ்வு

      Delete
  3. ما شاء الله

    ReplyDelete
  4. ما شاء الله تبارك الله

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா கட்டுரை சூப்பர் அல்லாஹ் போதுமானவன் துஆ செய்கிறேன். பணிவுடன் மௌலவி முஹம்மது காலித் மன்பஈ ஹழ்ரத் மஹாராஜபுரம்

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ கட்டுரை நன்றாக உள்ளது.ஆனால் கொஞ்சம் தொடர்படியாக உங்கள் கட்டுரைகளை வாரம் வாரம் நன்றாக இருக்கும் ஹஜ்ரத்

    ReplyDelete