பணவீக்கம் என்பது தற்போது பயன்படுத்தப்படும் வார்த்தையாக இருக்கின்றது. நமக்கு கிடைக்கும் பணத்துடன் ஒப்பிடும் போது காலப்போக்கில் ஏற்படும் விலை உயர்வை இந்த வார்த்தை குறிக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொண்டு பல வருடங்களுக்கு முன்பு நாம் வாங்கிய ஒரு பொருளை இப்போது அதே விலையில் வாங்க முடியாது. அதன் விலை அதிகரித்திருக்கும்.இதற்கே பணவீக்கம் என்று சொல்லப்படுகிறது.சுருக்கமாக ஒவ்வொரு காலத்திலும் ஏற்படும் விலைவாசி உயர்வை குறிக்கும் வார்த்தை தான் பணவீக்கம்.
தற்போது விலைவாசி உயர்வு என்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.எங்கு
திரும்பினாலும் மக்கள் விலைவாசி உயர்வு குறித்து புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தள்ளுவண்டிக் கடைகளில் ஒரு இட்லியின் விலை ரூ.7 ஆக
இருந்தது. இப்போது அது ரூ.10. டீயின் விலை ரூ.10 ஆக
இருந்தது. இப்போது ரூ.12. சென்னை - திருநெல்வேலி தனியார்
பேருந்து கட்டணம் ரூ.700 ஆக இருந்தது. இப்போது ரூ.1500.
பெட்ரோல், டீசல், கேஸ்
சிலிண்டர்,சமையல் எண்ணை, காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக
உயர்ந்துள்ளது.
விலைவாசி உயர்வால் ஏற்படும் பாதிப்புகள்
இந்த விலைவாசி
உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்களும் அன்றாடங்காட்சிகளும் தான்.
இந்தியாவில் பொருளாதார ரீதியாக மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.
இந்தியாவில்
பொருளாதாரரீதியாக மேல் நிலையில் உள்ள 10
சதவீதத்தினரிடம் நாட்டின் மொத்த வருவாயில் 57
சதவீதம் செல்கிறது என்றும் பொருளாதாரரீதியாக கீழ் நிலையில் உள்ள 50
சதவீத மக்களிடம் நாட்டின் மொத்த வருவாயில் 13
சதவீதம் மட்டுமே செல்கிறது என்றும் ‘உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022’ குறிப்பிடுகிறது.
மேலும், இந்தியாவில்
நடுத்தர மற்றும் கீழ் வர்க்கத்தினர் தங்கள் தகுதிக்கு மீறி வரி கட்டி வருவதாகவும்,
பில்லியனர்களிடம் அவர்களின் வருவாய்க்கு பொருத்தமான வரி வசூலிக்கப்பட
வில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மாத சம்பளம்
வாங்குபவர்களை எடுத்துக் கொண்டாலும் பெரிய வித்தியாசங்கள் இருக்கிறது. ஐடி
துறையில் வழங்கப்படும் ஊதியத்துக்கும் ஏனைய துறைகளில் வழங்கப்படும் ஊதியத்துக்கும்
அவ்வளவு வேறுபாடு நிலவுகிறது.
ஐடி துறையில்
ஐந்து ஆண்டு அனுபவம் பெற்றிருப்பவர் இன்று ரூ.1
லட்சம் சம்பளம் ஈட்டக்கூடும். அதுவே வேறு துறையில் அதே ஆண்டுகால அனுபவம் கொண்டவர்
மாதம் ரூ.30,000
வருமானம் ஈட்டுவதே அதிகபட்சம்.
ஆனால், ஐடி
துறையில் வழங்கப்படும் ஊதியத்தையே இந்தியாவின் சராசரி ஊதியமாக பார்க்கும் போக்கு
நிலவுகிறது.அதன் விளைவாக, ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களின்
வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நிர்ணயம்
செய்யப்படுகிறது.
அந்த வகையில்
இந்தியாவில் பொருளாதாரம் - வாழ்க்கைத் தரம் கட்டமைப்பு என்பது மேல்தட்டு மக்களை
மையப்படுத்தியதாகவே இருக்கிறது. ஐடி துறையில் பணிபுரிவர்கள் மட்டுமே தங்கள்
குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்க்க முடிகிறது. நல்ல மருத்துவ வசதியைப் பெற
முடிகிறது. இந்த வருவாய் ஏற்றத்தாழ்வு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மிக மோசமான
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசு வரி
நிர்ணயம் செய்யும் போது கூட சாமான்ய மக்களைக் கருத்தில் கொள்வதாகத் தெரிய வில்லை.
பெரும் பணக்காரர்களுக்கு சாதகமான வகையிலே பொருளாதாரக் கொள்கைகள்
வகுக்கப்படுகின்றன.
எனவே நாட்டில்
நிலவும் விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
விலைவாசி
உயர்கின்ற அளவுக்கு மக்களின் வருமானம் உயர்வதில்லை.விளைச்சல் குறைவு, வரி,
கச்சா எண்ணை விலை உயர்வு போன்ற காரணங்களால் விலைவாசி உயர்ந்து கொண்டே
போனாலும் இதை அடிப்படையாக கொண்டு மக்களின் வருமானம் சம்பளம் அதிகரிக்கின்றதா
என்றால் இல்லை. எனவே இதன் காரணமாக பாதிப்பு சிக்கல் நெருக்கடி இன்னும்
அதிகமாகிறது.
உழைக்கும்
மக்களின் வாங்கும் சக்தியில் எந்த உயர்வும் ஏற்படாத நிலையில், இந்த
விலை உயர்வினால் நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் எத்தகைய
பாதிப்புக்கு ஆளாவர் என்பது வெட்ட வெளிச்சமானது. ஏழை மக்களின் அன்றாட உணவே
சிக்கலுக்குரியதாக மாறி இருக்கிறது. இந்தியாவில் ஏற்படும் இந்த தொடர்ச்சியான
விலைவாசி உயர்வு, நாட்டு மக்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டில்
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய செய்தி.
விலைவாசி
உயர்விற்கான காரணங்கள்
விலைவாசி உயர்வு
வெவ்வேறு காரணங்களால் ஏற்படுவதுண்டு. பயிர்விளைச்சல் பாதிக்கப்படும் போது அந்தக்
குறிப்பிட்ட பயிருக்கான விலை உயரும். அதன் உற்பத்தி அதிகரிக்கும்போது விலை தானாகவே
குறைந்துவிடும். ஆனால், இதுபோன்ற
காரணங்களால் ஏற்படுகின்ற சில விலை உயர்வு நிரந்தரமாக மாறிவிடும்.
உதாரணத்திற்கு கடைகளில் நாம் அருந்தும் டீயை குறிப்பிடலாம். டீ தூள், சர்க்கரை,
பால் விலை உயரும் போது டீ விலையை உயர்த்துவார்கள். ஆனால் மீண்டும் அந்த
பொருட்களின் விலை குறைந்தாலும் டீயின் விலை குறையாது. இது தான் நம் நாட்டின் நிலை.
இன்னொரு பக்கம்
“சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் மாற்றங்கள், பொருட்களின்
விலை ஏற்ற இறக்கங்கள், எதிர்பாராத வானிலை மாற்றங்கள் இவைகளும்
விலைவாசி உயர்விற்கான காரணங்கள்.
விலைவாசி
உயர்வுக்கு மேற்கூறிய விசயங்கள் என்பது பிரதான காரணமல்ல. உணவுப் பொருட்களின்
கொள்முதல், சேமிப்பு, விநியோகம்
ஆகியவற்றிற்கான சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்படுத்துகின்றனர் என்பது தான்
பிரதான காரணம். இதனால் பொருட்களை பதுக்கி வைத்து, செயற்கையான
பற்றாக்குறையை உருவாக்கி, விலைகளை உயர்த்தி கொழுத்த லாபத்தை
பார்க்கின்றனர்.
தனியார்மயம் –
தாராளமயம் – உலகமயக் கொள்கைகளின் அடிப்படையில் உணவு கொள்முதல், விநியோகம்
சார்ந்த கட்டுப்பாட்டை அரசு தளர்த்திக் கொண்டு கார்ப்பரேட் கும்பல்
கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதற்காக ஏழை மக்களின்
முக்கிய உணவு ஆதாரமாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி
சமநிலையில் வைப்பதற்கான அம்சமாகவும் உள்ள பொதுவிநியோக முறையை ஊற்றி மூடும்
காரியங்களைத்தான் மத்திய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. டெல்லி 2.0
போராட்டத்தில் ”உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து வெளியேறு” என்ற கோரிக்கை
முழக்கத்தை விவசாயிகள் முன்வைத்ததை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
மேலும்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரி உயர்வும்
விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.இதன் காரணமாக
பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதுவும் சங்கிலித் தொடர்
நிகழ்வின் அடிப்படையில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்குக் காரணமாக
அமைகின்றது.
இஸ்லாம் கூறும் தீர்வுகள்
தீர்வு 1.
வியாபாரிகள்
அத்தியாவசிய பொருட்களை தேவையான நேரத்தில் விற்காமல் பதுக்கி வைக்கக்கூடாது.
الاحتكار في
الإسلام هو شراء سلعة ما وتخزينها بهدف بيعها بسعر أعلى عند الحاجة الشديدة إليها،
وهو أمر محرم شرعاً لما فيه من إلحاق الضرر بالناس واستغلال حاجتهم
ஒரு அத்தியாவசிய பொருளை வாங்கி மக்களுக்கு தேவைப்படும் நேரத்தில்
சந்தைக்கு கொண்டு வராமல் அதை பதுக்கி வைத்து தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதை
அநியாயமாக அதிக விலைக்கு விற்பது. இதை ஷரீஅத் தடை செய்திருக்கிறது.
يَحْرُمُ
احتِكارُ قُوتِ النَّاسِ، وذلك باتِّفاقِ المَذاهِبِ الفِقْهيَّةِ الأربَعةِ:
الحَنَفيَّةِ ، والمالِكيَّةِ ، والصَّحيحُ عِندَ الشَّافِعيَّةِ ، والحَنابِلةِ
يَحْرُمُ
احتِكارُ كُلِّ ما يَضُرُّ بالعامَّةِ، قوتًا كانَ أو لباسًا أو غَيرَهما، وهو
مَذْهَبُ المالِكيَّةِ ، وأبي يُوسُفَ مِنَ الحَنَفيَّةِ ، وقَولٌ عند الحَنابِلةِ
، واختاره ابنُ حَزمٍ
உணவுப் பொருட்களை பதுக்கக்கூடாது என்பதில் இமாம்களுக்கு இடையில்
கருத்து வேறுபாடு இல்லை.உணவுப் பொருள் மட்டுமல்ல அத்தியாவசியப் பொருட்கள் எதுவாக
இருந்தாலும் அது பதுக்கக்கூடாது என்பது மாலிகி மத்ஹபின் சட்டம். ஹனஃபி மத்ஹபைச்
சார்ந்த அபூயூசுஃப் ரஹ் அவர்களின் கருத்தும் அது தான்.
لا يحتكر إلّا
خاطىء» مسلم
“பாவியைத் தவிர வெறெவனும் பதுக்க மாட்டான்” என
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
الجالب مرزوق،
والمحتكر ملعون
“தேவையான பொருட்களைப் பதுக்கி வைக்காமல் அவற்றை
கடைவீதிக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வினால் ரிஸ்களிக்கப்படுவான்.
தேவையான பொருட்களைப் பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவன். (இப்னுமாஜா)
பதுக்கல் நிலையை தடுக்க முன்னோர்கள் சொன்ன
வழிமுறைகள்
1.
அந்த பொருட்களை வாங்காமல் தவிர்ப்பது
جاء في الأثر
أن الناس في زمن الخليفة عمر بن الخطاب - رضي الله عنه - جاؤوا إليه وقالوا: نشتكي
إليك غلاء اللحم فسعِّرْه لنا، فقال: أرخصوه أنتم؟ فقالوا: نحن نشتكي غلاء السعر
واللحم عند الجزَّارين، ونحن أصحاب الحاجة، فتقول: أرخصوه أنتم؟ فقالوا: وهل نملكه
حتى نرخصه؟ وكيف نرخصه وهو ليس في أيدينا؟ فقال قولته الرائعة: اتركوه لهم.
ஹழ்ரத் உமர் ரலி
அவர்கள் காலத்தில் பொதுமக்களில் சிலர் ஜனாதிபதி உமர் ரலி அவர்களிடத்தில் வந்து
தற்போது இறைச்சியின் விலை ரொம்ப அதிகமாக இருக்கிறது. இறைச்சி கடைக்காரர்கள்
அவர்கள் இஷ்டத்திற்கு விலையை தாறுமாறாக ஏற்றி விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் அதற்கு நடுத்தரமான ஒரு விலையை நிர்ணயம் செய்யுங்கள். அல்லது அந்த விலையை
எங்களுக்கு குறைத்துத் தாருங்கள் என்று முறையிட்டனர். அப்போது உமர் ரலி அவர்கள்
அந்த இறைச்சியின் விலையை நீங்களே குறைத்து விடலாமே என்று சொன்னார்கள். அதற்கு
அம்மக்கள், இறைச்சியை அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். அது அவர்களின்
கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்கள் தான் வியாபாரிகள். நாங்கள் பொதுமக்கள். தேவை
உடையவர்கள். பொருட்களை வாங்கக் கூடியவர்கள். எனவே அவர்கள் தானே குறைக்க வேண்டும்.
நாங்கள் எப்படி குறைக்க முடியும் என்று ஆச்சரியத்தோடு கேட்ட போது, உமர் ரலி
அவர்கள் அந்த பொருள்களின் விலையை குறைப்பதற்கான ஒரே வழி, அதை வாங்காமல் விட்டு விடுவது.
பொதுமக்கள் அனைவரும் அதை வாங்காமல் தவிர்த்து விட்டால் தானாக அது மலிவு விலைக்கு
சந்தைக்கு வந்து விடும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
2. அதற்குப்
பகரமாக மாற்று பொருளை பயன்படுத்துவது
عن رزين بن
الأعرج مولى لآل العباس، قال: غلا علينا الزبيب بمكة، فكتبنا إلى على بن أبى طالب
بالكوفة: أن الزبيب قد غلا علينا، فكتب أن أرخصوه بالتمر؛ أي: استبدلوه بشراء
التمر الذي كان متوفِّرًا في الحجاز وأسعاره رخيصة، فيقل الطلب على الزبيب فيرخص.
ரஸீன் அவர்கள்
கூறுகிறார்கள் ; ஹழ்ரத்
அலி ரலி அவர்களின் காலத்தில் மக்காவில் உலர் திராட்சை அதிகமான விலைக்கு
விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. இது குறித்து முறையிடும் விதமாக அலி ரலி
அவர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை நாங்கள் அனுப்பினோம். அப்போது அதற்கு பதில் அளித்த
அலி ரலி அவர்கள், இனிமேல் யாரும் உலர் திராட்சையை வாங்க வேண்டாம். அதற்குப் பகரமாக
பேரித்தம் பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள். பேரீத்தம் பழங்கள் அரபு மாகாணத்தில்
அதிகமாக கிடைக்கின்றன. மலிவான விலையிலும் விற்கப்படுகின்றன என்று சொன்னார்கள்.
நாம் தினமும் பயன்படுத்துகின்ற தவிர்க்க முடியாத அத்தியாவசியப்
பொருட்களில் இந்த நடைமுறை கடைபிடிக்க முடியா விட்டாலும் அத்தியாவசியமில்லாத பொருட்களிலாவது
இந்த நடைமுறையை கடைபிடிக்கலாம். அது நல்ல மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.
தீர்வு 2.
தொழிலாளர்களுக்கு தகுந்த ஊதியத்தை முதலாளிகள் வழங்க வேண்டும். விலைவாசி
உயர்வை சமாளிப்பதற்கு இது உதவும்.
பொதுவாக இன்றைக்கு ஒருவர் செய்கின்ற வேலையைக் கவனித்து அவருக்கு
ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது,வழங்கப்படுகின்றது. அவரின் குடும்ப சூழ்நிலைகளையோ நாட்டு
நிலவரங்களையோ கவனிப்பதில்லை. ஆனால் இஸ்லாம் ஊழியர்களின் குடும்ப சூழ்நிலையை
கருத்தில் கொண்டு ஊதியம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.
عن النبي -صلى
الله عليه وسلم- أنه قال: »من ولى لنا
عملاً، وليس له منزل، فليتخذ منزلاً، أو ليست له امرأة فليتزوج، أو ليست له دابة
فليتخذ دابة «.
நம்முடைய காரியத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் ஒரு அதிகாரி அவருக்கு
தங்குவதற்கு வீடு இல்லையென்றால் (அரசாங்க
பொது நிதியிலிருந்து) தனக்கு ஒரு வீட்டை
அமைத்துக் கொள்ளலாம். திருமணம் முடிக்க வில்லையென்றால் அந்த திருமணத்தின் மஹர்
தொகையை எடுத்துக் கொள்ளலாம். வாகனம் இல்லையென்றால் அவர் தனக்கான வாகனத்தை ஏற்படுத்திக்
கொள்ளலாம் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள். (அபூதாவூது)
وذكر الحافظ
ابن حزم في “المحلى” : أنّ على الدولة أنْ توفّر للعامل الغذاء الكافي ، والكساء
الكافي ، والمسكن الذي يليق بمثله ، وأنْ تستوفي فيه كل المرافق الشرعية ، ويجب
أنْ تكون الأجرة محققة لكل هذا ؛ وإلا كان ظلماً . المحلى
ஒரு அரசாங்கம், அதில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு தகுந்த
உணவு,தகுந்த உடை,தகுந்த இருப்பிடம் இவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும். இவைகளை
ஏற்படுத்திக் கொள்வதற்குத் தேவையான ஊதியத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் அது
அவருக்கு அரசாங்கம் செய்யும் அநீதமாகும்
என்று மஹல்லீயின் ஆசிரியர் இமாம் இப்னு ஹஸ்ம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
தொழிலாளியின் கடமைகளில் குறை வைத்தல் கூடாது.
وَاِلٰى
مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا قَالَ
يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ
فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ
وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ
مُّؤْمِنِيْنَ
‘மத்யன்'
(என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐபை' (நம்
தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே
வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. உங்கள்
இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கிறது. ஆகவே,
அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க
வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் எதையும் குறைத்து விடாதீர்கள். பூமியில்
(சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பமும் கலகமும்
செய்யாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால்
இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்'' என்று கூறினார். (அல்குர்ஆன் : 7:85)
عَنْ أَبِي
هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، قَالَ: ” قَالَ اللَّهُ
ثَلاَثَةٌ
أَنَا خَصْمُهُمْ يَوْمَ القِيَامَةِ: رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ
بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى
مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ
மறுமை நாளில் மூவருக்கெதிராக நான்
வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறினான்.
ஒருவன் என்
பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன்
சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன்
ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!’ என அபூ
ஹுரைரா(ரலி) அறிவித்தார் (புகாரி:2227)
உமர் ரலியின் உதவித் தொகையை
அதிகரிக்க விரும்பிய நபித்தோழர்கள்
لما ولي عمر
بن الخطاب رضوان الله عليه، فعد رزق أبي بكر رضوان الله عليه، الذي كانوا فرضوا
له، و كان بذلك يسد حاجته فاجتمع نفر من المهاجرين، فيهم عثمان و علي و طلحة و
الزبير رضوان الله عليهم.
فقال الزبير:
لو قلنا لعمر في زيادة نزيدها إياه في رزقه
فقال علي:
وددنا أنه فعل ذلك، فانطلقوا بنا.
உமர் ரலி அவர்கள் கலீஃபாக பொறுப்பேற்ற போது அபூபக்கர் ரலி அவர்களுக்கு
நிர்ணயிக்கப்பட்டிருந்த உதவித் தொகையை அப்படியே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனால் ஒரு கட்டத்தில் அது போதாக்குறையாக இருப்பதை உணர்ந்த சில
நபித்தோழர்கள்.., அலி (ரலி), உஸ்மான்
(ரலி), ஸுபைர் (ரலி) மற்றும் தல்ஹா (ரலி) ஆகியோர்,
இது விஷயத்தில் தலையிட்டு உமர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டு
வருகின்ற உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர். ஆனால், இந்த
விஷயத்தை உமர் (ரலி) அவர்களிடம் நேரடியாகத் தெரிவிக்கப் பயந்தனர். எனவே, இது
விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் மகளும், இன்னும் இறைத்தூதர்
(ஸல்) அவர்களின் மனைவியுமான அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களை இந்த விவகாரத்தில் தலையிடுமாறு
கோரினார்கள்.அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் இந்த விஷயத்தை உமர் (ரலி) அவர்களிடம்
எடுத்துச் சொன்ன பொழுது உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வில்லை.
தீர்வு 3
அரசாங்கம் மக்கள் நலனில் அக்கரை செலுத்தும் அரசாங்கமாக இருக்க
வேண்டும். இன்றைக்கு மக்களின் குரல் வளையை நெறிக்கின்ற இந்த விலைவாசி உயர்விற்கு
முழுக்க முழுக்க காரணம் அரசாங்கம் தான். அவர்களின் சுயநலம் தான் நாட்டின் இந்த
நிலைக்கு காரணம்.
மக்கள் உரிமைகளைப் பேணிய, நாட்டு
மக்களின் நலனில் அக்கரை செலுத்திய, நாட்டை வளப்படுதுவதில் கவனம் செலுத்திய
முஸ்லிம் மன்னர்
1296
முதல் 1316 வரை இந்தியாவை ஆண்ட அலாவுத்தீன் கில்ஜீ என்ற
இஸ்லாமிய மன்னர் தான் முதன் முறையாக இந்தியாவில் விலைவாசியை கட்டுப்படுத்தினார்.அவர்
தனது ஆட்சியில் இந்த மண்ணிற்கு செய்த நன்மைகள் அதிகம்.
பிரபுக்கள்
குவித்து வைத்திருந்த செல்வம், அவர்களுக்கு ஓய்வையும் சதிகள்
செய்வதற்கான வசதி வாய்ப்புகளையும் அளிப்பதாக அலாவுதீன் கருதினார். எனவே அவர்
எடுத்த முதல் நடவடிக்கை அதை அவர்களிடமிருந்து பறித்தது தான். சுல்தானின்
ஒப்புதலோடு மட்டுமே பிரபுக் குடும்பங்களுக்கிடையில் திருமண உறவுகள்
அனுமதிக்கப்பட்டன. பரிசாகவோ, மதம் சார்ந்த அறக்கொடையாகவோ
அளிக்கப்பட்டுச் சொத்துரிமை அடிப்படையில் வைத்திருந்த கிராமங்களை மீண்டும் அரச
அதிகாரத்தின் கீழ் கொண்டு வர சுல்தான் ஆணையிட்டார். கிராம அலுவலர்கள் அனுபவித்து வந்த
மரபுரிமைகளைப் பறித்து, பரம்பரை கிராம அலுவலர்களின்
அதிகாரங்களைத் தடை செய்தார். ஊழல் வயப்பட்ட அரச அலுவலர்களைக் கடுமையாகத்
தண்டித்தார். மதுவும் போதை மருந்துகளின் பயன்பாடும் தடை செய்யப்பட்டன. சூதாட்டமும்
தடை செய்யப்பட்டது; சூதாடிகள் நகரத்துக்கு வெளியே விரட்டப்பட்டனர்.
உழவர்களிடமிருந்து
நிலவரிகள் நேரடியாக வசூலிக்கப்பட்டன. இதனால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து
வந்த வரிகள் வசூலிக்கும் உரிமை பறிபோனது. அலாவுதீன் விதித்த வரிச்சுமை செல்வர்கள்
மீது இருந்ததேயன்றி ஏழைகள் மீது அல்ல. தனது பேரரசின் அனைத்துப் பகுதிகளுடனும்
தொடர்பில் இருப்பதற்காக அலாவுதீன் அஞ்சல் முறையை ஏற்படுத்தினார்.
அலாவுதீன் ஒரு
பெரிய, திறமை வாய்ந்த படையைப் பராமரிக்க
வேண்டியிருந்தது.அந்த படை வீரர்களுக்குக் கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம்
வழங்கிய முதல் சுல்தான் அலாவுதீன் ஆவார். படை வீரர்களுக்குக் குறைந்த ஊதியமே
அளிக்கப்பட்டது; இதனால், விலைகளைக்
கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டியிருந்தது.
அத்தியாவசியப்
பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளச்சந்தை,
பதுக்கல் குறித்த விவரங்களைச் சேகரிப்பதற்கு விரிவான ஒற்றாடல்
வலைப்பின்னலை ஏற்படுத்தினார். சந்தைகளில் நடந்த கொடுக்கல்- வாங்கல், வாங்குவது,
விற்பது, பேரங்கள் என அனைத்து விவரங்களையும் ஒற்றர்கள்
மூலம் அறிந்து கொண்டார். அத்தியாவசியப் பொருள்களின் விலை குறித்துச் சந்தை
கண்காணிப்பாளர்களும் அறிக்கை அளிப்பவர்களும் ஒற்றர்களும் அவருக்கு அன்றாடம்
அறிக்கை அளித்தல் வேண்டும். விலை ஒழுங்குமுறை விதிகளை மீறுவோர் கடுமையாகத்
தண்டிக்கப்பட்டனர். ஏதேனும் எடைக் குறைவு கண்டுபிடிக்கப்பட்டால், விற்பவரின்
உடலிலிருந்து அதற்குச் சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண் முன்னேயே வீசப்பட்டது.
எனவே அவரின் ஆட்சியில் மக்கள் நசுக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டனர்.
இத்தகைய மக்களுக்காக அவர்களின் நலனுக்காக ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும்
ஆட்சியும் அமையாத வரை விலைவாசி உயர்வை தடுக்க முடியாது. மக்கள் நசுக்கப்படுவதையும்
தடுக்க முடியாது. அல்லாஹ் பாதுகாப்பானாக! சிறந்த மாற்றத்தை நம்
நாட்டிற்கு வழங்குவானாக!
No comments:
Post a Comment