Showing posts with label உறவு. Show all posts
Showing posts with label உறவு. Show all posts

Sunday, November 30, 2014

உறவுகளை ஆதரிப்போம்!!!


இஸ்லாம் வலியுறுத்தும் வணக்க வழிபாடுகளில் குடும்ப உறவைப் பேணுவதும் மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.துரதிஷ்டவசமாக பலரிடம்  இன்றைய சமூக சூழலில் இரத்த உறவைப் பேணும் நிலை இரத்த உறவுகளை பாதுகாக்கும் நிலை குறைந்து கொண்டே வருவதைப் பார்க்கிறோம். எத்தனையோ தேவையில்லாத அவசியம் இல்லாத பல்வேறு விஷயங்களுக்காக நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள நம்மில் பலர் குடும்ப உறவுக்காக,சொந்த பந்தங்களுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் முன்வருவதில்லை.

Friday, August 29, 2014

நன் நட்பு


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் பல்வேறு உறவுகளைப் பெறுகிறான். ஒரே மனிதன் தந்தை,மகன், கணவன், அண்ணன்,மாமா என்று பல உறவுப் பெயர்களைத் தாங்கி  நிற்பதைப் பார்க்கிறோம்.