Showing posts with label நன்மை. Show all posts
Showing posts with label நன்மை. Show all posts

Thursday, March 13, 2025

தராவீஹ் 14 - எதில் கனம்? எதில் கவனம்?

 

فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

ஆகவே, எவர்களுடைய நன்மையின் எடைகள் கணக்கிறதோ அவர்கள்தான் வெற்றி அடைவார்கள்.(அல்குர்ஆன் : 23:102)

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِىْ جَهَـنَّمَ خٰلِدُوْنَ‌

எவர்களுடைய (நன்மையின்) எடைகள் குறைகிறதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள் (அல்குர்ஆன் : 23:103)

Thursday, June 6, 2024

இதுவும் நன்மைக்கே

நாம் நம் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை ஆசைப்படுகிறோம். அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கிற விஷயங்கள் நடக்கும். சமயங்களில் நாம் எதிர் பார்க்காத, சற்றும் அதைப் பற்றி சிந்திக்காத காரியங்களும் நடந்து விடும். நாம் எதிர் பார்த்த விஷயங்கள் நடந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ்! நாம் நினைத்தது நடந்து விட்டது. இனிமேல் எந்தக் கவலையும் இல்லை. எல்லாம் கைராக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் அது தீங்காக அமைந்து விடும். நாம் எதிர் பார்க்காத விஷயங்கள் நடக்கும் போது ஆகா இப்படி நடந்து விட்டதே! இனி என்ன ஆகப் போகுதோ! ஏது ஆகப் போகுதோ! என்று கவலைப்படுவோம், அச்சப்படுவோம். ஆனால் அது நன்மையாக அமைந்து விடும். எனவே நடக்கின்ற காரியங்களில் எது நலவானது? எது தீங்கானது? என்று நமக்குத் தெரியாது. அதை அறிந்தவன் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் மட்டும் தான்.