Showing posts with label நலம் விசாரித்தல். Show all posts
Showing posts with label நலம் விசாரித்தல். Show all posts

Tuesday, January 21, 2014

நோயாளிகளை நலம் விசாரிப்போம்



 உலகலாவிய மார்க்கமான இஸ்லாம்,வெறும் ஆன்மீகத்தை மட்டும் போதிக்கும் மார்க்கமல்ல.மாறாக முழு வாழ்க்கை திட்டத்தையும் எடுத்தியம்பக் கூடிய மார்க்கம்.

மனித சமூகத்தின் அமைதிக்கு முழு வழிகாட்டி இஸ்லாம் ஆகும்.சமுதாய நலன்களை முக்கியத்துவப் படுத்துவதிலும்,மனித நேயம் வளர்ப்பதிலும், பிறர் உரிமைகளை பேணுவதிலும் இஸ்லாம் முன்னிலை வகிக்கிறது. அந்த வரிசையில் நோயுற்றவர்களை நலம் விசாரித்தலும் ஒன்று.