Showing posts with label பத்ர் போர். Show all posts
Showing posts with label பத்ர் போர். Show all posts

Wednesday, March 27, 2024

பத்ர் தரும் படிப்பினை

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

வரலாற்று சிறப்புமிக்க பத்ர் போர்க்களத்தில் கலந்து கொண்ட பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூறுகின்ற தினம் இது. இந்த போரில் சமூகத்திற்குத் தேவையான ஏராளமான பாடங்களும் படிப்பினைகளும் உண்டு. அந்த வகையில் பத்ர் போர்க்களம் நமக்குத் தருகின்ற முதல் பாடம் என்னவென்றால் வெற்றியும் உதவியும் இறைவன் புறத்தில் தான் இருக்கிறது. வெற்றியையும் உதவியையும் இறைவன் தான் நமக்கு தர வேண்டும். வெற்றி இறைவனைக் கொண்டு மட்டும் தான் இருக்கிறது. வேறு எதைக் கொண்டும் அல்ல என்கிற ஒரு ஆழமான இறை நம்பிக்கையை இந்த பத்ர் போர்க்களம் நமக்கு ஊட்டுகிறது.