ومن كل شيئ خلقنا زوجين
لعلكم تذكرون
ஒவ்வொரு வஸ்துக்களையும் ஜோடி ஜோடியாக நாம்
படைத்திருக்கிறோம். அதைக் கொண்டு நீங்கள் உணர்வு பெறுவீர்கள். (அல்குர்ஆன் : 51 ; 49)
உலகில் அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு வஸ்துக்களையும் ஜோடி ஜோடியாக படைத்திருக்கிறான். வானம் பூமி இரவு பகல், உஷ்ணம் குளிர், சூரியன் சந்திரன், வெற்றி தோல்வி, பாக்கியம் அபாக்கியம், நேர்வழி வழிகேடு, ஈமான் நிராகரிப்பு, மனிதன் ஜின், கடல் திடல், ஒளி இருள், வாழ்க்கை மரணம், சொர்க்கம் நரகம், கஷ்டம் இலகுவானது, நன்மை தீமை, இவ்வாறு அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வகையில் ஆணுக்கு ஜோடியாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் பெண்ணைப் படைத்திருக்கிறான். பெண்ணை ஜோடியாக படைத்ததோடு ஆணுக்கு வழங்கியதைப் போன்று அனைத்து விஷயங்களிலும் சம உரிமைகளையும் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் பெண் சமூகத்திற்கும் வழங்கியிருக்கிறான்.