Showing posts with label வட்டி. Show all posts
Showing posts with label வட்டி. Show all posts

Sunday, December 14, 2025

உரையாடல் - வட்டி

 

மாணவி - 1

 

1, அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்.அக்கா அஸ்ஸலாமு அலைக்கும். அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்ம்ம்ம்ம்ம்

என்னக்கா இத்தன தடவ ஸலாம் சொல்லிட்ட பதிலே சொல்லவே மாட்டேங்குறீங்க. உங்களுக்கு என்ன காது கேக்கலியா

Friday, August 9, 2024

வட்டியின் கோர முகம்

 கடந்த வாரத்தின் தொடர்....

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை இந்த பூமியில் படைத்து நம் வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் தந்திருக்கின்றான். கடந்த காலத்து மனிதர்களை விட அனைத்திலும் அல்லாஹ் நம்மை உயர்வாகவே வைத்திருக்கின்றான். நிறைய வசதிவாய்ப்புக்களை தந்திருக்கின்றான். வாழ்வின் எல்லா சௌகரீகங்களையும் வழங்கியிருக்கின்றான். கடந்து காலத்து மனிதர்கள் சௌகரீகங்கள் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.மன நிறைவான வாழ்வைப் பெற்றிருந்தார்கள்.ஆனால் இன்றைக்கு அனைத்து வசதிகள் இருந்தும் மகிழ்ச்சியும் இல்லை.மனநிறைவான வாழ்வும் இல்லை. காரணம் ஒன்றே ஒன்று தான். அவர்கள் ஷரீஅத்தை முழுமையாக பின்பற்றினார்கள்.நாம் பின்பற்றுவதில்லை. அவர்கள் அல்லாஹ்விற்கு பயந்து வாழ்ந்தார்கள். நாம் அல்லாஹ்விற்கு பயப்படுவதில்லை. பொருளாதாரத்தைத் தேடுவதில் பேணுதல் இல்லை.