Monday, June 29, 2020

குடியுரிமை சட்டத்தைப் பற்றி பயம் வேண்டாம்



நாட்டிலே தற்போது அச்சுறுத்தலான சூழ்நிலைகள், முஸ்லிம் சமூகத்தை பீதியடையச் செய்கின்ற சூழ்நிலைகள் நிலவிக் கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல் படுத்தி விட்டார்கள். அந்த சட்டத்தை நிலை நிறுத்துவதற்கும் நடைமுறைப் படுத்துவதற்கும் சாத்தியக்கூறுகளை கண்டறிந்து ஒன்றன்பின் ஒன்றாக அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.


நம்மிடமிருந்து ஆவணங்களை பறித்து தங்கள் திட்டத்தில் வெற்றி பெறுவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் கேட்கும் ஆவனங்களை தரா விட்டால் நம்மை இந்தியக்குடிமக்கள் இல்லை என்று சொல்லி நம்மை நாட்டை விட்டு துறத்தி விடுவார்கள்,அல்லது அகதிகள் முகாமில் அடைத்து விடுவார்கள்.நம் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடும் என்ற அச்சத்திலும் பீதியிலும் நாம் இருக்கிறோம். மொத்தத்தில் இன்றைக்கு முஸ்லிம் சமூகத்தின் நிம்மதியும் பாதுகாப்பும் கேளவிக்குறியாக்கப் பட்டிருக்கிறது.

இந்த நிலைக்கு காரணம் இறைவனை நாம் மறந்து விட்டோம். இறைவன் நமக்கு உதவி செய்வான் என்ற உணர்வை இழந்து விட்டோம்,இறைவன் நம்மை பாதுகாப்பான் என்ற நம்பிக்கையை கை விட்டு விட்டோம்.இறைவன் நம்மோடு இருக்கிறான் என்ற யதார்தத்தை புரியத் தவறி விட்டோம்.அதனால் ஏற்பட்ட விளைவு அச்சத்திலும் பீதியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதே அச்சமும் பீதியும் ஸஹாபாக்களுக்கும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் பதற வில்லை,கலங்க வில்லை.

لـما ندموا ـ يعنـي: أبا سفيان وأصحابه ـ علـى الرجوع عن رسول الله صلى الله عليه وسلم وأصحابه وقالوا: ارجعوا فـاستأصلوهم! فقذف الله فـي قلوبهم الرعب، فهزموا، فلقوا أعرابياً، فجعلوا له جعلاً فقالوا: إن لقـيت مـحمداً وأصحابه، فأخبرهم أنا قد جمعنا لهم. فأخبر الله جلّ ثناؤه رسول الله صلى الله عليه وسلم، فطلبهم حتـى بلغ حمراء الأسد، فلقوا الأعرابـي فـي الطريق، فأخبرهم الـخبر، فقالوا: «حَسْبُنا اللَّهُ وَنِعْمَ الوَكِيـلُ» ثم رجعوا من حمراء الأسد، فأنزل الله تعالـى فـيهم وفـي الأعرابـي الذي لقـيهم: { ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدْ جَمَعُواْ لَكُمْ فَٱخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَـٰناً وَقَالُواْ حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ
இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் போர்க்களம் உஹத் போர்க்களம். இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரும் இழைப்பை ஏற்படுத்திய போர்க்களம்.பத்ரில் 70 எதிரிகளை இஸ்லாமியர்கள் வீழ்த்தினார்கள். ஆனால் உஹதில் 70 ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப் பட்டார்கள். போர்க்களம் முடிந்து நபி  அவர்களும் அவர்களது தோழர்களும் மதினாவை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்கள் இங்கே அபூஸுஃப்யான் அவருடைய படையும் மக்காவை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது. அவ்வேளையில் அவர்களுக்கு சிந்தனை வந்தது. இஸ்லாமியர்களை தோற்கடித்து விட்டோம். அவர்களில் 70 நபர்களை கொன்று விட்டோம். ஆனால் முக்கிய தலைகளை விட்டுவிட்டோமே அவர்களையும் கொண்டிருந்தால் இஸ்லாமியர்களை பூண்டோடு அழித்து இருக்கலாமே என்று சிந்தித்தார்கள். எனவே மறுபடியும் இஸ்லாமியர்களை தாக்குவதற்கு புறப்பட்டார்கள். ஆனால் அல்லாஹுத்தஆலா இஸ்லாமியர்களைப் பற்றிய பயத்தை அவர்களின் உள்ளத்தில் போட்டான். அச்சத்தை ஏற்படுத்தினான். மீதி உள்ளவர்களையும் அழிக்க வேண்டும் என்று புறப்பட்டவர்கள், முன் வைத்த காலை பின் வைத்து பயந்து போய் திரும்பினார்கள். இருந்தாலும் நபியையும் தோழர்களையும் பயமுறுத்த வேண்டும் என்று எண்ணினார்கள். உங்களை மறுபடியும் தாக்குவதற்கு மிகப் பெரிய படை திரண்டு வருகிறது என்று நபியின் தோழர்களித்தில் போய் சொல்வதற்கு  ஒருவனை ஏற்பாடு செய்து அனுப்பினார்கள்.

இங்கே நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.ஒருவன் தனக்கு பலமில்லா விட்டாலும் எதிரிக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும். அது தான் அவனோட வெற்றிக்கான முதல்படி. இன்றைக்கு நம்முடைய எதிரிகள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் மேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சி மிக வீரியமாக இருக்கிறது.இப்படியே விட்டு விட்டால் பிற்காலத்தில் நம் கை ஓங்கி விடும். நம்மை ஒடுக்குவதற்கும் நம் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கும் அவர்களுக்கு பலம் இல்லை. எனவே தான் நம்மை அவர்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கு அவர்களும் அதைத்தான் செய்தார்கள். இஸ்லாமியர்களை பயமுறுத்த முயற்சித்தார்கள்.ஆனால் கொஞ்சம் கூட அவர்கள் பதறவில்லை கலங்கிப் போகவில்லை நேற்றைக்கு தான் உஹதில் 70 நபர்களை இழந்து விட்டோம். நிறைய பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். இப்போது மறுபடியும் ஒரு போரா என்று பீதி அடைய வில்லை. மாறாக அவர்களது ஈமான் அதிகரித்தது. அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன் என்று சொன்னார்கள்.அவர்களைக் குறித்துத் தான் (3 : 173) வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். (தஃப்ஸீர் தப்ரீ)

எனவே ஸஹாபாக்கள் எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் கலங்க வில்லை. ஆனால் இன்றைக்கு நாம் பயப்படுகிறோம். கலங்குகிறோம், பீதி அடைகிறோம் என்றால் ஈமானில் நமக்கிருக்கிற பலவீனம். இறை நம்பிக்கையில் நமக்கிருக்கிற பலவீனம்.

நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நிலைகளை விட பன்மடங்கு நிற்கதியான நெருக்கடியான சந்தர்ப்பங்களை நபி அவர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்தார்கள். ஆனால் இறைவன் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அவர்கள் கை விட வில்லை.

நமக்கெல்லாம் தெரியும் நபி அவர்கள் இஸ்லாத்தை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திய அந்த நேரத்தில் கடுமையான எதிர்ப்புகளும் எதிரிகளால் ஆபத்துகளும் சூழ்ந்த போது அவர்களுக்கு மிகப்பெரும் உறுதுணையாகவும் ஆறுதலாகவும் பக்கபலமாகவும் இருந்தது அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களும் அவர்களின் அன்பு மனைவி அன்னை கதீஜா ரலி அவர்களும் தான்.  நபி அவர்களுக்கு நெருக்கடிகள் வரும் பொழுதெல்லாம் அவர்களுக்கு ஆறுதல் கூறும் இடத்தில் அன்னை கதீஜா அவர்களும் நபியை பாதுகாக்கும் இடத்தில் அபூதாலிப் அவர்களும் தான் இருப்பார்கள்.

لمَّا ماتَ أبو طالبٍ عرضَ لرسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ سفيهٌ من قُريشٍ فألقى عليْهِ ترابًا فرجعَ إلى بيتِهِ فأتت بنتُه تمسحُ عن وجهِهِ التُّرابَ وتبكي فجعل يقولُ: أي بنيَّةَ لا تبْكينَ فإنَّ اللَّهَ مانعٌ أباك ويقولُ ما بينَ ذلِكَ: ما نالت منِّي قريشٌ شيئًا أَكرَهُهُ حتَّى ماتَ أبو طالبٍ
அபூதாலிப் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை யாராலும் நபியை நெருங்க முடியவில்லை நபியை சீண்ட முடியவில்ல.ஆனால் அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு எதிரிகளின் கொட்டம் அதிகரித்தது. எதிரிகளின் ஆட்டம் எல்லை மீறியது. செல்லும் இடங்களில் எல்லாம் நபியின் மீது மண்ணை வாரி எறிந்தார்கள். (தாரீஹுல் இஸ்லாம் :1/235)

لما نثر ذلك السفيه على رأس رسول الله صلى الله عليه وسلم ذلك التراب ، دخل رسول الله صلى الله عليه وسلم بيته والتراب على رأسه ، فقامت إليه إحدى بناته ، فجعلت تغسل عنه التراب وهي تبكي ، ورسول الله صلى الله عليه وسلم يقول لها : لا تبكي يا بنية فإن الله مانع أباك . قال : ويقول بين ذلك : ما نالت مني قريش شيئا أكرهه حتى مات أبو طالب
ஒரு நாள் நபி அவர்கள் தன் மகளின் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்கள் தலை முழுக்க மண்ணாக இருக்கிறது. அதைக் கண்ணுற்ற அவர்களின் மகள் அழுது கொண்டு அதை துடைத்து விடுகிறார்கள்.மகள் அழுவதைப் பார்த்த நபி அவர்கள் அருமை மகளே நீ அழாதே நிச்சயமாக அல்லாஹ் உன் தந்தைக்கு அபயம் அளிப்பான் என்றார்கள். (ஸீரத்து இப்னு ஹிஷாம்)

பின்பு நபி அவர்கள்  தாயிஃப் நகரத்துக்கு சென்றார்கள். அந்த மக்கள் தனக்கு உதவி செய்வார்கள். தனக்கு வரவேற்பளிப்பார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் அங்கே சென்றார்கள். ஆனால் அங்கே என்ன நடந்தது என்று நமக்கெல்லாம் தெரியும். அங்கே அவர்களுக்கு ஏமாற்றமும் அவமரியாதையும் தான் மிஞ்சியது. நபியை விரட்டியடித்தார்கள். சிறுவர்களை வைத்து கல்லால் அடித்து அவர்களை துரத்தினார்கள்.

فقال له زيد بن حارثة : كيف تدخل عليهم وقد أخرجوك ؟ يعني قريشا فقال : [ يا زيد إن الله ناصر دينه ومظهر نبيه.
தாயிஃபிலிருந்து திரும்பும் வேளையில் அவர்களோடு இருந்த ஜைத் ரலி அவர்கள், மக்கா வாசிகள் உங்களை விரட்டி விட்டார்கள். எனவே தான் தாயிஃபுக்கு வந்தோம். இங்கும் இதே நிலை.இனி மறுபடியும் எப்படி மக்காவிற்குள் நுழையப் போகிறோம் என்று கேட்டார்கள். அந்நேரம் நபி அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கு உதவி புரிவான். அவனது நபிக்கு வெற்றியைக் கொடுப்பான் என்றார்கள்.

இந்த வார்த்தையை நபி அவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் சொன்னார்கள் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நாமும் இப்படி, அல்லாஹ் எனக்கு உதவி செய்வான். அல்லாஹ் என்ன காப்பாத்துவான், அல்லாஹ் என்ன கைவிட மாட்டான் என்று சொல்லுவோம். எப்போது என்றால், எல்லாம் கைகூடி வருகிற பொழுது, எல்லா உதவிகளும் நம் கண் முன்னால் தெரிகின்ற பொழுது, வெற்றிக்கான வாசல்கள் எல்லாம் திறக்கப்படுகிற போது, சூழ்நிலைகளெல்லாம் நமக்கு சாதகமாக அமைகிற போது சொல்வோம். ஆனால் அன்றைக்கு நபி அவர்களின் சூழ்நிலை என்ன? தனக்கு பக்கபலமாக இருந்த அபூதாலிப் போய் விட்டார்கள். அவ்வப்போது ஆறுதல் வார்த்தைகளை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்திய அன்னை கதீஜா ரலி அவர்கள் போய் விட்டார்கள். சொந்த ஊர் மக்கள் அவர்களை துரத்துகிறார்கள். ஆறுதலும் உதவியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற வெளியூர் மக்களும் அவர்களை விரட்டி அடிக்கிறார்கள். உதவிக்கரம் நீட்ட ஆளில்லை. அரவணைக்க ஆளில்லை. தோள் கொடுக்க ஆளில்லை. சூழ்நிலைகள் அவர்களுக்கு சாதகமாக இல்லை. அப்போது அவர்கள் வெற்றி பெறுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இந்த நிர்க்கதியான சூழ்நிலையிலும் அல்லாஹ் இந்த தீனுக்கு உதவி செய்வான். அல்லாஹ் என்னை பாதுகாப்பான். எனக்கு கண்ணியத்தைத் தருவான் என்று சொன்னார்கள் என்றால் அவர்களின் மிக உயர்ந்த ஈமானிய பலத்தையும் இறை நம்பிக்கையின் ஆழத்தையும் இந்த வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

அதேபோன்று ஹிஜ்ரத் பயணத்தின் போது நபி அவர்களும் அபுபக்கர் ரலி அவர்களும் ஸவ்ர் குகையில் தங்கி இருக்கிறார்கள். ஸவர் குகை என்பது மக்காவிற்கும் மதீனாவிற்கு மிடையில் இருக்கிற குகை அல்ல. அது இன்னொரு டைரக்ஷனில் இருக்கிற குகை. எதிரிகளை திசை திருப்புவதற்காக வேறு ஒரு திசையில் இருக்கிற ஸவ்ரை தேர்வு செய்து அங்கு தங்குகிறார்கள். ஆனால் எதிரிகள் அங்கும் தேடி வந்து விட்டார்கள். குகையின் வாசலில் வந்து நிற்கிறார்கள். சற்று குனிந்தால் நபியையும் அபூபக்கரையும் பார்த்து விடுவார்கள். அந்த அளவுக்கு நெருக்கமாக வந்து விட்டதை பார்த்த அபூபக்கர் ரலி அவர்கள் பதறுகிறார்கள். பதட்டம் அடைகிறார்கள். அப்போது நபி அவர்கள் சொன்ன வார்த்தை இங்கே நாம் அனைவரும் இந்த நேரத்தில் உள்ளத்திலே  நிறுத்த வேண்டிய அற்புதமான வார்த்தை. பிரச்சினைகளும் நெருக்கடிகளும் நம்மை சூழ்கிற பொழுது, நிற்கதியான நிலைகள் நம்மை நெருங்குகிற போது, கவலைகள் தொண்டையை அடைக்கிற போது நம் உள்ளத்தில் நங்கூரமாய் பதிய வைக்க வேண்டிய மிக உயர்ந்த வார்த்தை அது.அது தான் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற அற்புதமான வார்த்தை.
அல்லாஹ் நம்மோடு இருக்கிறான், நம்மை பாதுகாப்பான் என்ற உணர்வு என்றைக்கும் நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். அது தான் நமக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தரும். நெருக்கடியான நேரங்களில் நாம் துவண்டு விடாமல் நம்மை பாதுகாக்கும். இந்த உணர்வு மட்டும் நம் உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டால் எந்த சட்டங்களும் எந்த மசோதாக்களும் எதிரிகளின் எந்த திட்டங்களும் நம்மை அசைக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு உதவி செய்வதாக அல்லாஹ் குர்ஆனில் எண்ணற்ற வசனங்களில் கூறுகிறான்.
إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ ﴾ [غافر: 51]؛ أي: إنا لننصر رُسلنا والمؤمنين كاملي الإيمان في الحياة الدنيا على أعدائهم بالغلبة إن قاتلوهم، وبالحجة إن ناظروهم، وبالانتقام منهم إن قتلوهم وظلموهم،
நிச்சயமாக நாம் நம்முடைய தூதர்களுக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் உலகிலும் மறுமையிலும் உதவி புரிவோம். (40 : 51)

இந்த வசனத்திற்கு இமாம்கள், அவர்கள் போர் புரிந்தால் உங்களுக்கு வெற்றியைக் கொடுத்தும் உங்களோடு தர்க்கம் செய்தால் சரியான ஆதாரத்தைக் கொண்டும் உங்களுக்கு அநீதம் செய்தால் அவர்களை தண்டிப்பதைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவோம் என்று விளக்கம் தருகிறார்கள்.

ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا ) أي : في الدنيا ، بأن يسلطوا عليهم استيلاء استئصال بالكلية ، وإن حصل لهم ظفر في بعض الأحيان على بعض الناس ، فإن العاقبة للمتقين في الدنيا والآخرة
முஸ்லிம்கள் மீது வெற்றி கொள்வதற்கு காஃபிர்களுக்கு எந்த வழியையும் அல்லாஹ் ஆக்க மாட்டான். (4 : 141)

ஆரம்பத்தில் எதிரிகள் வெற்றி பெறுவதைப் போன்று தோற்றம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி இஸ்லாமியர்களின் கைக்கு வந்து சேரும்.(இப்னு கஸீர்)

இறைவனின் வாக்குறுதி அப்படி இருக்கும் பொழுது நாம் ஏன் அச்சப்பட வேண்டும். நாம் ஏன் பயப்பட வேண்டும். தற்போது உள்ள நம் நாட்டு சூழ்நிலைகள் எதிரிகளின் கரங்களில் ஓங்கி இருப்பதை போன்று நமக்கு காட்சி தந்தாலும் அவர்கள் வெற்றி பெற்றதைப் போன்று நமக்கு தெரிந்தாலும் நிச்சயம் இறுதியில் வெற்றி என்பது நமக்கு தான் என்பதை நாம் மறந்து விட வேண்டாம். அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக.


No comments:

Post a Comment