Wednesday, August 19, 2020

கவலை மற்றும் கடன்கள் நீங்க

 


اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِوَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَال

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹஜனி, வஅவூது பிக மினல் அஜ்ஸி வல் கஸலி, வஅவூது பிக மினல் ஜுப்னி வல் புஹ்லி, வஅவூது பிக மின் கலபதித்தைனி வ கஹ்ரிர் ரிஜால்.

 

பொருள் ;-

            யாஅல்லாஹ்! கடந்த காலம் மற்றும் வருங்காலத்தின் கவலை யை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இயலாமை மற்றும் சோம்பலை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். கோழைத் தன்மை மற்றும் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.கடன் மிகைப்பது மற்றும் எதிரிகளின் அடக்குமுறையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

 

دخل رسول اللهِ صلى الله عليه وسلم ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقال له أبو أمامة فقال يا أبًا أمامة ما لي أراك جالسا في المسجد في غير وقت الصلاة قال هموم لزمتني وديون يا رسول اللهِ قال أفلا أعلمك كلاما إذا أنت قلته أذهب الله عز وجل همك وقضى عنك دينك قال قلت بلى يا رسول اللهِ قال قل إذا أصبحت وإذا أمسيت اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال قال ففعلت ذلك فأذهب الله عز وجل همي وقضى عني ديني

ஒரு நாள் நபி அவர்கள் மஸ்ஜிதுக்கு வருகிறார்கள். அங்கே அபூஉமாமா ரலி அவர்கள் அமர்ந்திருந்தார்கள். தொழுகையில்லாத இந்த நேரத்தில் மஸ்ஜிதில் அமர்ந்திருக்க காரணமென்ன? என்று கேட்டார்கள். எனக்கு நிறைய கடன்களும் கவலைகளும் இருக்கிறது என்றார். ஒரு துஆவை சொல்லித்தரட்டுமா? அதை நீ காலையிலும் மாலையிலும் ஓதினால் அல்லாஹ் உன் கவலையைப் போக்கி விடுவான். உன் கடனை அடைத்து விடுவான் என்று சொல்லி அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹுஸ்ன் என்ற துஆவை சொல்லிக் கொடுத்தார்கள். அந்த துஆவை நான் தினமும் ஓதினேன். அல்லாஹ் என் கவலையைப் போக்கி விட்டான். என் கடனையும் அடைத்து விட்டான் என்று அபூஉமாமா ரலி அவர்கள் கூறுகிறார்கள். (அபூதாவூது ; 1555)


No comments:

Post a Comment