கடந்த 31 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கல்யாண ராமன் உலகத்தில் வாழும் 200 கோடி மக்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கின்ற அனைவரோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, உலகத்தார் அனைவராலும் பாராட்டப்படுகின்றன போற்றப்படுகின்ற உயிரினும் மேலாக மதிக்கிற நம் நபி ﷺ அவர்களை அவதூறாக கேவலமாக இழிவு படுத்தும் முகமாக கொச்சை படுத்தும் முகமாக உலகத்தில் வாழுகின்ற அனைத்து முஸ்லிம்களிடத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் படியான விஷமத்தனமான வார்த்தைகளை பேசியது நாம் அறிந்த விஷயம்.
இஸ்லாமியர்களாக இருந்தாலும் சகோதர சமயத்தைச்
சார்ந்தவர்களாக இருந்தாலும் தொப்புள்கொடி உறவுகள்
என்று சொல்லி அனைவரும் கைகோர்த்து மதம் இனம் மொழி நிறம் என எந்த பாகுபாடும் இல்லாமல்
உடன் பிறந்த சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அமைதிப் பூங்காவான இந்த தமிழ்நாட்டில்
கொந்தளிப்பை ஏற்படுத்தும் படியான கலவரத்தை தூண்டும் படியான விஷமத்தனமான கருத்துக்களை
பேசக்கூடிய இதுபோன்ற விஷமிகளை தமிழ்நாட்டில் எங்கும் பேசுவதற்கும் மேடை ஏறுவதற்கும்
அனுமதிக்கக்கூடாது என்பதும் அவ்வாறு பேசிய கல்யாணராமனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில்
கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதும் தான் இன்றைக்கு முஸ்லிம்கள்
மட்டுமல்லாது அனைத்து நடுநிலைவாதிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
النبي اولي بالمومنين من انفسهم
நபி ﷺ அவர்கள் முஃமின்களிடத்தில் அவர்களின் உயிரை விட
மேலானவர்கள். (அல்குர்ஆன் : 33 ; 6)
நாம் முஃமின்கள், ஈமானிய ஒளியை கையில் ஏந்திவர்கள்,
ஈமானிய உணர்வை உள்ளத்தில் சுமந்தவர்கள், மாநபியை நம் உயிரை விட மேலாக மதிப்பவர்கள்.
அவர்கள் நம் உள்ளத்திலே இருக்கிறார்கள். நம் உணர்வில் இருக்கிறார்கள். நம் உயிரோடு
கலந்திருக்கிறார்கள்.நம் மூச்சோடு நிறைந்திருக்கிறார்கள். எனவே நம்மைப் பற்றி பேசினால்
பொறுத்துக் கொள்ளலாம்.நம் குடும்பத்தை பற்றி பேசினால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால்
நம் உயிரை விட மேலாக மதிக்கிற நம் நபியைப் பற்றி
பேச வேண்டாம், அவர்களுக்கு எதிராக யாராவது மூச்சு விட்டாலும் நம் மூச்சு இருக்கிற
வரை நாம் விட முடியாது. அது தான் உண்மையான ஈமானின் அடையாளம்.
நபி ﷺ அவர்களை இழிவாகப் பேசியிருக்கிற இவ்வேளையில்
அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தனித்தன்மைகள் குறித்தும் அவர்களுக்கு அல்லாஹ்வினால்
வழங்கப்பட்ட விஷேசமான ஆற்றல்கள் குறித்தும் அசை போட்டுப் பார்ப்பது பொறுத்தம்.
நபித்துவம் என்பது இறைவனால் வழங்கப்படுகின்ற
மாபெரும் அந்தஸ்து. நபிமார்கள் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.
: وَإِنَّهُمْ عِندَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ
الْأَخْيَارِ
நிச்சயமாக அவர்கள் நம்மிடத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லோர்களில் உள்ளவர்கள். (அல்குர்ஆன் : 38 ; 47)
اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ
) الأنعام:
தன் தூதுத்துவத்தை எங்கு அமைக்க வேண்டும்
என்பதை அல்லாஹ் நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் : 6 ; 124)
நபிமார்கள் அனைவரும் மஃஸூம்கள். அதாவது
இறைவனால் பாதுகாக்கப்பட்டவர்கள். நபிமார்களை இறைவன் பல விஷயங்களிலிருந்து
பாதுகாத்திருக்கிறான்.
من
الكفر: فالأنبِياء والرُّسل لا شكَّ أنَّهم معصومون من الوقوع في الكُفْر
والشِّرْك، وقد نقل الجرْجاني إجْماع الأمَّة على عِصْمة الأنبِياء من الكفر والشِّرْك
قبل النبوَّة وبعدها،
1, நபிமார்கள் அனைவரும் இறை நிராகரிப்பை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள்.
இறைவனால் அனுப்பப்பட்ட அத்தனை தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு
முன்பும் நபித்துவம் கிடைத்த பின்பும் இறை நிராகரிப்பில் இருந்தும் இணைவைப்பில் இருந்தும்
பாதுகாக்கப்பட்டவர்கள் என்பது தான் அனைத்து மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.
لا شكَّ أنَّ الكبائر ممَّا يحطُّ قدْر
العبد عند الله - عزَّ وجل - وعصمة الأنبياء من الكبائر أمرٌ دلَّت عليه النصوص من
القرآن والسنَّة، فكيف لا يكون النبي معصومًا من الكبائر، والأمر لا يتعلَّق بنفسه
فقط؛ بل يتعدَّاه لغيره بكونه هو القدوةَ للنَّاس والمرشد لهم، بل كلّ أفعاله وأقواله
تعدُّ تشريعًا تأخذ بها الأمَّة إلى قيام الساعة
2,நபிமார்கள் அனைவரும் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள். ஏனென்றால் நபித்துவம்
என்பது அவர்களோடு முடிந்து விடக்கூடிய விஷயமல்ல. அவர்களைப் பின்பற்றக் கூடிய அத்தனை
பேருக்கும் மார்க்கத்தையும் ஷரீஅத்தின் சட்டங்களயும் சொல்ல வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு
இருக்கிறது. அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்து செயல்படக்கூடியவர்கள். அவர்களிடத்தில்
பாவங்கள் ஏற்படுமானால் அது, அவர்களைப் பின்பற்றக்கூடிய அத்தனை பேருக்கும் மிகப்பெரிய
பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
من خصائص الأنبياء والمرسلين أنَّهم معصومون في تحمُّل الوحي، وفيما يخبرون عن الله تعالى، فقد اتَّفقت الأمَّة أنَّ الرسل معصومون في تحمُّل الرِّسالة[52]، فلا ينسون شيئًا مما أوحاه الله إليهم إلا شيئًا قد نسخ
3, நபிமார்கள் இறைச் செய்தியை சுமந்திருக்கும் விஷயத்தில்
பாதுகாக்கப்பட்டவர்கள். அதாவது அவர்களுக்கு இறை செய்தியாக வந்த (எதாவது நோக்கத்திற்காக அல்லாஹ்வாக எதை
மறக்கடிக்கச் செய்கிறானோ அதைத் தவிர) எந்த விஷயத்தையும் மக்களுக்குச் சொல்லாமல் மறந்து
விட மாட்டார்கள். அந்த மறதியை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள்.
وهم أيضًا معصومون في التَّبليغ، فالرُّسل لا يكتمون شيئًا ممَّا أوْحاه الله إليهم؛ وذلك لأنَّ الكتمان خيانة والرُّسل يستحيل أن يكونوا كذلك؛ قال تعالى: ﴿ يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ
4, நபிமார்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட நபித்துவத்தினுடைய
செய்திகளை மக்களுக்கு சொல்வதிலும் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். அதாவது அவர்களுக்கு
இறைச்செய்தியாக வந்த எந்த விஷயத்தையும் மக்களுக்குச் சொல்லாமல் மறைத்து விட
மாட்டார்கள். அந்த நிலையிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள்.
ومن عصمته في هذا الشَّأن عصمته من الكذب
مطلقًا في أيِّ حال من الأحوال، سواء في تبليغ الرِّسالة أو في غيره من أخْباره وأحواله
الدنيويَّة قبل البعثة وبعدها
5, நபிமார்கள் மார்க்கத்தினுடைய விஷயத்திலும் உலகம்
சார்ந்த விஷயத்திலும் அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். அதிலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள்.
قال النَّووي: "ومنها ما قاله القاضي
وغيرُه أنَّ الأنبياء - صلوات الله وسلامه عليهم - منزَّهون عن النَّقائص في الخَلق
والخُلق، سالمون من العاهات والمعايب، قالوا: ولا التِفات إلى ما قاله مَن لا تحقيق
له من أهل التَّاريخ في إضافة بعض العاهات إلى بعضهم، بل نزَّههم الله تعالى من كل
عيب، وكلّ شيء يبغض العيون، أو ينفر القلوب
شرح النووي على مسلم (ج8/ ص 102 - 4373
6, நபிமார்கள் அனைவரும் சாதாரண மனிதர்களுக்கு இருக்கிற
எல்லாக் குறைகளை விட்டும் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் பிறக்கிறார்கள். பிறப்பிலிருந்தே
அந்த பாதுகாப்பை அல்லாஹுதஆலா நபிமார்களுக்கு வழங்கி விடுகிறான். பார்ப்பதற்கு வெறுக்கும்
படியான நெருங்குவதற்கு யோசிக்கும் படியான எந்தக் குறைகளும் நபிமார்களிடத்தில்
இருக்காது. மனிதர்களிடத்தில் எதுவெல்லாம் குறையாக பார்க்கப்படுமோ அவை அனைத்தை
விட்டும் நபிமார்கள் தூய்மையாக்கப் பட்டவர்கள். (ஷரஹு முஸ்லிம் ; 8/102)
الثقل الذي كان في لسان موسى عليه السلام
لم يكن عيبا أصليا ، والمشهور أنه عيب طارئ بسبب جمرة كان قد وضعها في فمه وهو صغير
، كما ذكره بعض المفسرين .
மூஸா நபியவர்களுக்கு அவர்களது நாவிலே இருந்த முடிச்சு
என்பது அது அவர்களுக்கு அடிப்படையில் இருந்த குறையல்ல. மாறாக அவர்களது வாழ்க்கையின்
இடையில் ஏற்பட்ட பதிப்பாகும்.
فإنه قد ذكر ابن كثير في التفسير والرازي في
تفسيره: أن موسى عليه السلام امتحنه فرعون بهذا لما نتف شيئاً من لحيته
فهم بقتله، فقالت له آسية: إنه صبي لا يعقل وعلامته أن تقرب منه التمرة والجمرة فقربتا
إليه فأخذ الجمرة. انتهى.
முஸா நபியவர்கள் சிறு குழந்தையாக இருக்கிற பொழுது
ஃபிர்அவ்னுடைய தாடியிலிருந்து ஒரு பகுதியைப் பிடுங்கி விட்டார்கள். அந்த நேரத்தில்
மூஸா நபியை கொல்வதற்கு ஃபிர்அவ்ன் முற்பட்டான். அப்போது அவனது மனைவி ஆசியா அம்மையார்
அவர்கள், அவர் சிறு பிள்ளை அவருக்கு என்ன தெரியும் என்று சொல்கிறார்கள். அப்போது மூஸா
நபியை சோதித்துப் பார்ப்பதற்காக பேரீத்தம் பழத்தையும் நெருப்புக் கங்கையும் வைக்கப்பட்டது.
மூஸா நபியவர்கள் பேரித்தம் பழத்தை விட்டு விட்டு அந்த நெருப்புக் கங்கை எடுத்து தன்
வாயில் போட்டு விட்டார்கள். (இப்னு கஸீர்)
மட்டுமல்ல அவர்களுக்கு இருந்த அந்த பாதிப்பு
அவர்களின் துஆவினால் நீக்கப்பட்டு விட்டது.
القول في تأويل قوله تعالى : قَالَ قَدْ
أُوتِيتَ سُؤْلَكَ يَا مُوسَى (
மூஸாவே நீங்கள்
கேட்டது உங்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. (அல்குர்ஆன் : 20 ; 36)
يقول تعالى ذكره: قال الله لموسى صلى الله
عليه وسلم: قد أعطيت ما سألت يا موسى ربك من شرحه صدرك وتيسيره لك أمرك، وحلّ عقدة
لسانك، وتصيير أخيك هارون وزيرا لك، وشدّ أزرك به، وإشراكه في الرسالة معك
இந்த ஆயத்திற்கான தஃப்ஸீரில் அல்லாமா தப்ரீ ரஹ்
அவர்கள், தாஹா சூராவில் ஆயத் 25 முதல் 32 வரை இருக்கிற மூஸா நபி அவர்கள் கேட்ட
அத்தனை கோரிக்கைகளும் கொடுக்கப்பட்டது என்று எழுதியிருக்கிறார்கள்.
يقول الحافظ ابن حجر - رحمه الله -: وأنَّ
الأنبياء قد يصابون ببعض العوارض الدنيويَّة من الجراحات والآلام والأسقام ليعظم لهم
بذلك الأجر، وتزداد درجاتُهم رفعة، وليتأسَّى بهم أتباعهم في الصبر على المكاره، والعاقبة
للمتقين فتح الباري (ج11/ ص409).
நபிமார்களுக்கு அவர்களது வாழ்க்கையில் காயங்களும்
வேதனைகளும் நோய்களும் அவ்வப்போது இடையில் ஏற்படும். இவைகள், அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா
நற்கூலியை அதிகப்படுத்திக் கொடுப்பதற்கும் அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்கும் அவர்களின்
சமூகம் தங்களுக்கு ஏற்படும் சோதனையான தருணங்களில் அவர்களைப் பார்த்து ஆறுதல் பெறுவதற்குமாகும்.
(ஃபத்ஹுல் பாரி ; 11 /409)
எனவே நபிமார்கள் எல்லாக் குறைகளை விட்டும்
தூய்மையானவர்கள். அப்படித்தான் ஒரு முஃமினின் நம்பிக்கை இருக்க வேண்டும். யாராவது
ஒருவர் நபிமார்கள் குறையுள்ளவர்கள் என்று நினைத்தால் அவரின் ஈமான்
சந்தேகத்திற்குரியதாகத் தான் இருக்கும்.
قال ابن حجر العسقلاني معقباً على الحديث
: " وَفِيهِ : أَنَّ الْأَنْبِيَاءَ فِي خَلْقِهِمْ ، وَخُلُقِهِمْ ، عَلَى غَايَةِ
الْكَمَالِ ، وَأَنَّ مَنْ نَسَبَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ إِلَى نَقْصٍ فِي خِلْقَتِهِ
فَقَدْ آذَاهُ ، وَيُخْشَى عَلَى فَاعِلِهِ الْكُفْرُ" انتهى من "فتح
الباري"
நபிமார்கள் அவர்களின் குணங்களிலும் அவர்களின் படைப்பிலும்
மிகவும் முழுமை பெற்றவர்கள். நபிமார்களின் விஷயத்தில் யார் குறைகளை இணைத்துப் பேசுகிறாரோ
அவர் நபிமார்களை நோவினை படுத்தி விட்டார். அவ்வாறு செய்பவர் விஷயத்தில் இறை நிராகரிப்பை
அஞ்சப்படும். (ஃபத்ஹுல் பாரி ; 6 / 438)
நபிமார்களுக்கு எந்தக்குறைகளையும் அல்லாஹ்
வைப்பதில்லை. ஒரு வேளை அவர்களை மக்கள் எதாவது குறைகளைக் கொண்டு பேசினால் அவ்வாறு
சந்தேகப்பட்டால் அதை அம்மக்களுக்கு அல்லாஹ் தெளிவுபடுத்தி விடுவான்.
برأ الله كليمه موسى لما آذاه بنو إسرائيل
، ورموه بعيب في جسده ؛ لأنهم كانوا يغتسلون عراة ينظر بعضهم إلى بعض وكان موسى يغتسل
وحده مستترا ، فقالوا : " وَاللَّهِ مَا يَمْنَعُ مُوسَى أَنْ يَغْتَسِلَ مَعَنَا
إِلَّا أَنَّهُ آدَرُ فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ
فَفَرَّ الْحَجَرُ بِثَوْبِهِ فَخَرَجَ مُوسَى فِي إِثْرِهِ يَقُولُ ثَوْبِي يَا حَجَرُ
حَتَّى نَظَرَتْ بَنُو إِسْرَائِيلَ إِلَى مُوسَى فَقَالُوا وَاللَّهِ مَا بِمُوسَى
مِنْ بَأْسٍ وَأَخَذَ ثَوْبَهُ فَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا " رواه البخاري
(278) ومسلم (339) .
இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக,
நிர்வாணமாகவே குளிப்பார்கள்.
மூஸா அலை அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர்.
எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை' என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா அலை
அவர்கள் குளிப்பதற்காகச் சென்ற போது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்து விட்டுக்
குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடி விட்டது. உடனே மூஸா அலை அவர்கள்
அதைத் தொடர்ந்து 'கல்லே! என்னுடைய ஆடை!'
என்று சப்தமிட்டுச் சென்றார்கள்.
அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா
அலை அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்து விட்டு 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை'
என்று கூறினார்கள். மூஸா அலை
அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்'
(புகாரி ; 278)
அந்த வகையில் நபிமார்களுக்கெல்லாம் தலைவரான நபி
அவர்கள் எந்தக் குறைகளும் இல்லாத பரிசுத்தமானவர்கள். இன்றைக்கு அவர்களை குறைப்படுத்தி
கல்யானராமன் பேசியிருக்கிறான். (அவன் பேசிய விஷயத்தை ஜும்ஆ மேடைகளில் மக்களுக்கு தெளிவு படுத்தாமல் இருப்பது
சிறப்பு)
இந்த நேரத்தில் நபியின் ஆற்றலையும் அவர்களின்
வீரத்தையும் உணர்த்தும் ஒரு சில செய்திகளைப் பார்க்கலாம்.
إنَّا يَومَ الخَنْدَقِ نَحْفِرُ، فَعَرَضَتْ
كُدْيَةٌ شَدِيدَةٌ، فَجَاؤُوا النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَقالوا: هذِه كُدْيَةٌ
عَرَضَتْ في الخَنْدَقِ، فَقَالَ: أنَا نَازِلٌ. ثُمَّ قَامَ وبَطْنُهُ مَعْصُوبٌ بحَجَرٍ،
ولَبِثْنَا ثَلَاثَةَ أيَّامٍ لا نَذُوقُ ذَوَاقًا، فأخَذَ النبيُّ صَلَّى اللهُ عليه
وسلَّمَ المِعْوَلَ فَضَرَبَ، فَعَادَ كَثِيبًا أهْيَلَ، أوْ أهْيَمَ،
நாங்கள் அகழ் போரின் போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம்.
அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால்
உடைக்க முடிய வில்லை. உடனே இது பற்றித் தெரிவிக்க) நபி ﷺ
அவர்களிடம் சென்று,
'இதோ ஒரு பாறாங்கல் அகழில்
காணப்படுகிறது' என்று கூறினோம். அதற்கு
நபி ﷺ
அவர்கள், 'நான் இறங்கிப் பார்க்கிறேன்' என்று கூறி விட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களின்
வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்), நாங்கள்
மூன்று நாட்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு நபி ﷺ
அவர்கள் குந்தாலி எடுத்து
பாறை மீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. (புகாரி 4101)
قال ابن إسحاق وحدثني أبي
إسحاق بن يسار قال : وكان ركانة بن عبد يزيد بن هاشم بن المطلب بن عبد مناف أشد قريش
، فخلا يوما برسول الله في بعض شعاب مكة ، فقال له رسول الله - صلى
الله عليه وسلم - : " يا ركانة ألا تتقي الله وتقبل ما أدعوك إليه
؟ " قال : إني لو أعلم أن الذي تقول حق لاتبعتك . فقال له رسول الله - صلى الله
عليه وسلم - : " أفرأيت إن صرعتك ، أتعلم أن ما أقول حق ؟ " . قال : نعم
. قال : " فقم حتى أصارعك " . قال : فقام ركانة إليه فصارعه ،
فلما بطش به رسول الله - صلى الله عليه وسلم - أضجعه لا يملك من نفسه شيئا ، ثم قال
: عد يا محمد . فعاد فصرعه ، فقال : يا محمد ، والله إن هذا للعجب
أتصرعني ؟ ! قال : " وأعجب من ذلك إن شئت أريكه ، إن اتقيت الله واتبعت أمري
" . قال وما هو ؟ قال : أدعو لك هذه الشجرة التي ترى فتأتيني " . قال : ادعها
. فدعاها ، فأقبلت حتى وقفت بين يدي رسول الله - صلى الله عليه وسلم - . فقال لها
: " ارجعي إلى مكانك " . فرجعت إلى مكانها ، قال : فذهب ركانة إلى
قومه . فقال : يا بني عبد مناف ، ساحروا بصاحبكم أهل الأرض ، فوالله ما رأيت أسحر منه [ ص: 256
] قط . ثم أخبرهم بالذي رأى والذي صنع سيرة ابن هشام
நபியின் காலத்தில் ருக்கானா என்ற மனிதர் குறைஷிகளில்
வலிமை மிக்கவராகவும் அன்றைக்கு மல்யுத்த வீரராகவும் இருந்தார். ஒருநாள் அவர் நபியவர்களை
மக்காவின் ஒரு இடத்தில் தனியாக சந்தித்தார். அவரைப் பார்த்த நபியவர்கள். ருக்கானா! நீ அல்லாஹ்வை அஞ்சக் கூடாதா இஸ்லாத்தின் பக்கம்
நீ வரக்கூடாதா என்று கேட்டார்கள். அப்போது அவர் நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால்
நான் உங்களை பின்பற்றுகிறேன் என்று சொன்னார். அப்போது நபியவர்கள், நான் உன்னோடு
சண்டையிட்டு உன்னை வீழ்த்தி விட்டால் நான் சொல்வது உண்மை என்று ஏற்றுக் கொள்வாயா என்று
கேட்டார்கள். அவரும் சரி என்று சொல்ல, நபியவர்களுக்கும் அவருக்கும் மல்யுத்தம் நடந்தது.
அதில் நபியவர்கள் அவனை பிடித்து வேகமாக தள்ளினார்கள். அவர் கீழே விழுந்து திரும்பி
எழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மீண்டும் ஒருமுறை என்னோடு மோதுங்கள் என்று சொல்லி
மறுபடியும் மோதினார். ஆனால் அந்த தடவையும் நபியவர்களே அவனை வீழ்த்தினார்கள். என்ன ஆச்சரியம்! மக்களிடையே மிகப் பெரும் வலிமை மிக்கவனாக, மிகப் பெரும் வீரனாக இருக்கிற என்னையே நீங்கள்
வீழ்த்தி விட்டீர்களே என்று அவர் ஆச்சரியப்பட்டார். அப்போது நபியவர்கள், நீ விரும்பினால்
இதை விட ஆச்சரியமான ஒன்றை உனக்கு நான் காட்டட்டுமா என்று கேட்டார்கள். என்னவென்று கேட்ட
பொழுது அங்கே இருக்கிற மரத்தை நான் அழைத்தால் அது என் அழைப்புக்கு பதில் தரும் என்று
சொல்லி அந்த மரத்தை அழைத்தார்கள். அந்த மரம் அங்கிருந்து நகர்ந்து வந்தது. பின்பு திரும்பி
விடு என்று சொன்ன போது மரம் அதன் இடத்திற்கு திரும்பி விட்டது. இதைப்பார்த்த ருக்கானா
தன் இனத்தவர்களிடம் சென்று இவரைப் போன்ற ஒரு சூனியக்காரரை நான் பார்த்ததில்லை என்று
சொன்னார். (ஸீரத்து இப்னு
ஹிஷாம்)
أنَّ رُكَانةَ صارَع النَّبيَّ صلَّى
اللهُ عليه وسلَّم فصرَعه النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم (ابوداود 4078)
ருக்கானா நபியுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். நபியவர்கள் அவரை வீழ்த்தினார்கள். (அபூதாவூது ; 4078)
فعن ابن عباس رضي الله عنهما
قال: "جاء يزيد بن ركانة إلى النبي صلى الله عليه وسلم ومعه ثلاثمائة من الغنم،
فقال: يا محمَّد، هل لك أن تصارعني؟
قال صلى الله عليه وسلم: وما تجعل لي إن
صرعتك؟
قال: مائة من الغنم، فصارعه، فصرعه.
ثم قال: هل لك في العود؟
فقال صلى الله عليه وسلم: وما تجعل لي؟
قال: مائة أخرى، فصارعه، فصرعه.
وذكر الثالثة، فقال: "يا محمَّد، ما
وضع جنبي في الأرض أحد قبلك، وما كان أحد أبغض إليَّ منك وأنا أشهد أن لا إله إلا الله
وأنك رسول الله"، فقام عنه ورد عليه غنمه
).
ஒரு முறை ருக்கானாவின் மகன் யஜீத் நபி ﷺ
அவர்களிடத்தில் வந்து உங்களால்
என்னை வீழ்த்த முடியுமா என்று கேட்டார். அப்போது நபியவர்கள் உன்னை வீழ்த்தினால் எனக்கு
என்ன தருவாய் என்று கேட்டார்கள். நூறு ஆடுகளைத் தருகிறேன் என்று சொன்னார். நபியவர்கள்
அவரை வீழ்த்தினார்கள் 100 ஆடுகளை கொடுத்தார்.
மீண்டும் ஒரு முறை என்னோடு மோத முடியுமா என்று கேட்டார். இந்த தடவை என்ன தருவாய் என்று
நபியவர்கள் கேட்டார்கள். நூறு ஆடுகளைத் தருகிறேன் என்று சொல்லி இருவரும் மோதினார்கள்.
அந்த தடவையும் நபியவர்களே அவரை வீழ்த்தினார்கள். மூன்றாவது தடவையும் அவ்வாறு நபியவர்கள்
அவனை வீழ்த்த அவரிடம் கடைசியாக இருந்த நூறு ஆடுகளையும் கொடுத்து விட்டார். நபியின்
அந்த வீரத்தைப் பார்த்த அவர், உங்களுக்கு முன்னால் வேறு எவரும் என்னை இவ்வாறு பூமியில்
சாய்த்ததில்லை. இந்த பூமியில் உங்களை விட எனக்கு மிகவும் வெறுப்பானவராக யாரும் இருந்ததில்லை.
ஆனால் இப்பொழுது நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி ஷஹதத்தை
மொழிந்தார். அவரிடம் பெற்ற
அத்தனை ஆடுகளையும் நபி ﷺ அவர்கள் அவரிடமே திருப்பிக் கொடுத்தார்கள். (உஸ்துல் காபா ; 5544)
كانَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ
يَدُورُ علَى نِسَائِهِ في السَّاعَةِ الوَاحِدَةِ، مِنَ اللَّيْلِ والنَّهَارِ، وهُنَّ
إحْدَى عَشْرَةَ قالَ: قُلتُ لأنَسٍ أوَكانَ يُطِيقُهُ؟ قالَ: كُنَّا نَتَحَدَّثُ أنَّه أُعْطِيَ قُوَّةَ ثَلَاثِينَ.
وقالَ سَعِيدٌ، عن قَتَادَةَ، إنَّ أنَسًا، حَدَّثَهُمْ تِسْعُ نِسْوَةٍ
நபி ﷺ அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம்
குறிப்பிட்ட நேரத்தில் சுற்றி வருபவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்'
என அனஸ் இப்னு மாலிக் (ரலி)
கூறிய போது நான் அவரிடம், அதற்கு நபி ﷺ
அவர்கள் சக்தி பெறுவார்களா?
என்று நான் கேட்டதற்கு 'நபி ﷺ அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது'
என நாங்கள் பேசிக் கொள்வோம்'
என அனஸ் (ரலி) கூறினார்"
என கதாதா அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில் 'நபி ﷺ அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்"
என்று கூறப்பட்டுள்ளது. (புகாரி ; 268)
சுற்றி வருதல் என்பது உறவு கொள்வதற்கு
சொல்லப்படும் வார்த்தையாகும் என்பது ஹதீஸ் விரிவுரையாளர்களின் கருத்தாகும்.
சுலைமான் நபியைக் குறித்தும் இவ்வாறு ஒரு
செய்தி வருகிறது.
قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَلَيْهِمَا
السَّلاَمُ: لَأَطُوفَنَّ اللَّيْلَةَ بِمِائَةِ امْرَأَةٍ ، تَلِدُ كُلُّ امْرَأَةٍ
غُلاَمًا يُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ ، فَقَالَ لَهُ المَلَكُ: قُلْ إِنْ شَاءَ
اللَّه ُ، فَلَمْ يَقُلْ وَنَسِيَ ، فَأَطَافَ بِهِنَّ ، وَلَمْ تَلِدْ مِنْهُنَّ إِلَّا
امْرَأَةٌ نِصْفَ إِنْسَانٍ ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:"
لَوْ قَالَ: إِنْ شَاءَ اللَّهُ لَمْ يَحْنَثْ ، وَكَانَ أَرْجَى لِحَاجَتِهِ
)
ஒருமுறை இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், 'நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) 'இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்'' என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்'' என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், 'இன்ஷா அல்லாஹ்' என்று கூற வில்லை; மறந்து விட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்க வில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத் தான் பெற்றெடுத்தார். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அவர் 'இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்' என்று கூறியிருந்தால் அவர் தம் சத்தியத்தை முறித்திருக்க மாட்டார். (சபதத்தை நிறைவேற்றியிருப்பார்.) தம் தேவை நிறைவேறுவதைப் பெரிதும் அவர் நம்பியிருப்பார்'' என்று கூறினார்கள். (புகாரி ; 5242)
قال ابن حجر في "فتح الباري"
(6/462) في شرحه لحديث " لأطوفن الليلة على مائة امرأة " :" وَفِيهِ
مَا خُصَّ بِهِ الْأَنْبِيَاءُ مِنَ الْقُوَّةِ عَلَى الْجِمَاعِ الدَّالِّ ذَلِكَ
عَلَى صِحَّةِ الْبِنْيَةِ وَقُوَّةِ الْفُحُولِيَّةِ وَكَمَالِ الرُّجُولِيَّةِ ،
مَعَ مَا هُمْ فِيهِ مِنَ الِاشْتِغَالِ بِالْعِبَادَةِ وَالْعُلُومِ ، وَقَدْ وَقَعَ
لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ أَبْلَغُ الْمُعْجِزَةِ
، لِأَنَّهُ مَعَ اشْتِغَالِهِ بِعِبَادَةِ رَبِّهِ وَعُلُومِهِ وَمُعَالَجَةِ الْخَلْقِ
، كَانَ مُتَقَلِّلًا مِنَ الْمَآكِلِ وَالْمَشَارِبِ الْمُقْتَضِيَةِ لِضَعْفِ الْبَدَنِ
عَلَى كَثْرَةِ الْجِمَاعِ ، وَمَعَ ذَلِكَ فَكَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي لَيْلَة
بِغسْل وَاحِد وَهن إحدى عَشْرَةَ امْرَأَةً ". انتهى
நபிமார்கள் ஆண்மை பலத்திலும் உடல் வலிமையிலும் எந்த
குறைகளும் இன்றி மற்ற மனிதர்களைக் காட்டிலும் அதில் முழுமை பெற்றவர்களாக இருப்பது இவர்களுக்கு
அல்லாஹ் கொடுத்த தனிச்சிறப்பு. இதில் நபி ﷺ அவர்களின் ஆற்றல் மிகவும் வியப்பானது. ஏனென்றால்
மற்றவரை விடவும் வணக்க வழிபாடுகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்களாகவும்
அதில் கவனம் செலுத்தக் கூடியவர்களாகவும், வெளிப்படையில் உடலுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்
படியான மிகக் குறைந்த உணவு மிகக்குறைந்த நீரும் எடுத்துக்கொண்டு தொடர் நோன்புகளையும்
வைத்துக் கொள்வதுடன் இவ்வாறு ஆற்றலில் யாருக்கும் இல்லாத அளவிற்கு அதில் முழுமை பெற்றவர்களாக
இருப்பது மிகவும் வியப்பானது. (ஃபத்ஹுல் பாரி ; 6/462)
انا سنلقي عليك قولا ثقيلا
நிச்சயமாக நாம் உம்மீது கனமான வார்த்தையைப் போடுகிறோம். (அல்குர்ஆன் : 73 ; 5)
كنتُ أكتُبُ لرسولِ اللهِ صلَّى اللهُ عليه
وسلَّمَ، فقال: اكتُبْ {لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي
الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} [النساء: 95]، فجاء عبدُ اللهِ ابنُ
أمِّ مَكْتومٍ فقال: يا رسولَ اللهِ، إنِّي أُحِبُّ الجِهادَ في سبيلِ اللهِ، ولكنْ
بي مِنَ الزَّمانةِ ما قد تَرى، ذهَبَ بَصَرِي، قال زَيدٌ: فثَقُلَتْ فَخِذُ رسولِ
اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ على فَخِذي، حتَّى خَشيتُ أنْ تَرُضَّها، ثمَّ
سُرِّيَ عنه، ثمَّ قال: اكتُبْ {لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ
أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} [النساء: 95].
.
ஜைது பின் ஸாபித் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ;
நான் நபியவர்களுக்கு வஹி எழுதக்
கூடியவனாக இருந்தேன். ஒரு முறை, மூமின்களில் போருக்கு செல்லாமல் அமர்ந்து விட்டவர்களும்
போரில் கலந்து கொண்டு போரிட்டவர்களும் சமமாக மாட்டார்கள் என்ற வசனம் இறங்கியது.
அந்த வசனத்தை எழுதும்படி எனக்குச் சொன்னார்கள் அந்த நேரத்தில் நபியவர்களின் தொடை என்
தொடைக்கு மேலே இருந்தது. அப்போது என் தொடை உடைந்து நொறுங்கி விடுவோ என்று நான் அஞ்சும்
அளவிற்கு எனக்கு மிகப்பெரும் அழுத்தம் ஏற்பட்டது. பின்பு அது என்னை விட்டும் நீங்கியது
என்று கூறுகிறார்கள். (தஃப்ஸீர் இப்னு
கஸீர்)
இந்த வஹியின் கனத்தை 23 வருடங்கள்
சுமந்திருக்கிறார்கள்.
دَخَلْتُ علَى رَسولِ اللَّهِ صَلَّى اللهُ
عليه وسلَّمَ وهو يُوعَكُ وعْكًا شَدِيدًا، فَمَسِسْتُهُ بيَدِي فَقُلتُ:
يا رَسولَ اللَّهِ، إنَّكَ لَتُوعَكُ وعْكًا شَدِيدًا؟ فقالَ رَسولُ اللَّهِ صَلَّى
اللهُ عليه وسلَّمَ: أجَلْ، إنِّي أُوعَكُ كما يُوعَكُ رَجُلانِ
مِنكُم فَقُلتُ: ذلكَ أنَّ لكَ أجْرَيْنِ؟ فقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه
وسلَّمَ: أجَلْ ثُمَّ قالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: ما مِن مُسْلِمٍ
يُصِيبُهُ أذًى، مَرَضٌ فَما سِواهُ، إلَّا حَطَّ اللَّهُ له سَيِّئاتِهِ، كما تَحُطُّ
الشَّجَرَةُ ورَقَها. .
இறைத்தூதர் ﷺ அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் ﷺ அவர்கள் , 'ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்' என்று கூறினார்கள். நான், '(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?' என்று கேட்டேன். இறைத்தூதர் ﷺ அவர்கள் 'ஆம்' என்று கூறிவிட்டுப் பிறகு, 'ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை' என்று கூறினார்கள். (புகாரி ; 5660)
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا
حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ،
وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ لَيْلَةً فَخَرَجُوا نَحْوَ الصَّوْتِ فَاسْتَقْبَلَهُمُ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدِ اسْتَبْرَأَ الْخَبَرَ، وَهْوَ
عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْيٍ وَفِي عُنُقِهِ السَّيْفُ وَهْوَ يَقُولُ: ((لَمْ
تُرَاعُوا لَمْ تُرَاعُوا)). ثُمَّ قَالَ: ((وَجَدْنَاهُ بَحْرًا)). أَوْ قَالَ:
((إِنَّهُ لَبَحْرٌ)).
நபி ﷺ
அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள்
ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். எனவே,
அவர்கள் சத்தம் வரும் திசையை
நோக்கிப் புறப்பட்டார்கள். நபி ﷺ அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூ தல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது
சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்)
தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், 'பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள்' என்று கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு,
'நாம் இந்தக் குதிரையைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டோம்'
என்று கூறினார்கள். அல்லது,
'இந்தக் குதிரை தங்குதடையின்றி
வேகமாக ஓடக் கூடியது' என்று கூறினார்கள்.
(புகாரி : 2908)
இதுவரை கூறப்பட்ட விஷயங்கள் நபி ﷺ
அவர்களின் வீரத்தையும்
அவர்களின் பலத்தையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. நபியின் ஆற்றலை
கலங்கப்படுத்தி யிருக்கிற இந்நேரத்தில் இதுமாதிரியான தகவல்களை மக்களுக்கு சொல்வது
சிறந்ததாக இருக்கும். வல்லோன் அல்லாஹ் நபியின் மகத்துவத்தை உலகெங்கும் பரவச்
செய்வானாக. அவர்களைக் கலங்கப்படுத்த நினைக்கிற அனைவரையும் இல்லாமல் ஆக்குவானாக.
நபியவர்களுக்கு நோவினை கொடுத்தவர்களுக்கு
அல்லாஹ் கொடுத்த தண்டனைகள் குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பார்க்கலாம்.
அருமையான அவசியமான பதிவு
ReplyDelete