Thursday, March 11, 2021

நல்லோர் சகவாசம்

 


உலகில் வாழுகின்ற மனிதர்களில் பெரும்பாலும் எவரும் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. பிறருடன் சேர்ந்து வாழ்வதையும் பிறருடன் சேர்ந்து இருப்பதையும் தான் நாம் விரும்புகிறோம். அவ்வாறு சேர்ந்து இருப்பதில் தான் மகிழ்ச்சியும் இருக்கிறது.

சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் வித்தியாசமே சொர்க்கத்தில் ஒருவரை யொருவர் சந்திந்துக் கொள்ள முடியும். நரகத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள முடியாது என்பது தான். குர்ஆனில் நரகத்தைக் குறித்துப் பேசும் சில வசனங்களில் خالدا فيها அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்று சொல்லும் இறைவன், அதை ஒருமையாக பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

தனியாக இருப்பதே மிகப்பெரும் வேதனை. அதனால் நாம் அனைவரும் பிறருடன் சேர்ந்திருப்பதை விரும்புகிறோம்.பிறரின் சகவாசத்தைத் தேடுகிறோம். ஆனால் அந்த சகவாசம் நல்லதாக இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

ياايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين

ஈமான் கொண்டோர்களே நீங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் : 9 ; 119)

مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَالسَّوْءِ، كَحَامِلِ المِسْكِ وَنَافِخِ الكِيرِ، فَحَامِلُ المِسْكِ: إِمَّا أَنْ يُحْذِيَكَ -[يعطيك]- وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً، وَنَافِخُ الكِيرِ: إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإِمَّا أَنْ تَجِدَ رِيحًا خَبِيثَةً.

நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உனக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. ஒன்று அவர் அதை உனக்குத் தரலாம். அல்லது நீ அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது நீ பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உனது ஆடையை எரித்து விடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வாய். (புகாரி ; 2101)

قال الإمام النووي رحمه الله تعالى: "فيه فضيلةُ مجالسة الصالحين وأهلِ الخير والْمُروءة ومكارمِ الأخلاق والورع والعلمِ والأدبِ والنهيُ عن مجالسة أهلِ الشر وأهل البدع ومن يغتاب الناس أو يكثُرُ فُجرُه وبَطالتُه ونحوُ ذلك من الأنواع المذمومة.."

இந்த ஹதீஸ் நல்லோர்கள், சிறந்தவர்கள், மனிதநேயம் மிக்கவர்கள், நற்குணமுடையவர்கள், பேணுதல் மிக்கவர்கள், மார்க்கக் கல்வியையுடையவர்கள், ஒழுக்கமுடையவர்கள் ஆகியவர்களோடு அமர்வதின் சிறப்பைக் காட்டுகிறது. மேலும் தீயவர்கள், மார்க்கத்தில் இல்லாதவைகளை செய்யக்கூடியவர்கள், புறம் பேசுபவர்கள், பாவம் செய்யக்கூடியவர்கள், இது போன்றவர்களோடு அமர்வது தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் உணர்த்துகிறது என அல்லாமா நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். (ஷரஹு நவவி ; 16/187)

 "اِصحَبوا مع الله فإن لم تقدروا فَاصحَبوا مع من يصحَب مع الله"

அல்லாஹ்வோடு சேர்ந்திருங்கள். உங்களால் அது முடியவில்லை என்றால் அல்லாஹ்வோடு சேர்ந்திருப்பவர்களோடு நீங்கள் சேர்ந்து இருங்கள் என ஞானிகள் சொல்வார்கள்.

நல்லவர்களின் தொடர்பு நம்மையும் நல்லவர்களாக மாற்றி விடும்.உலக சரித்திரத்தில் நல்லவர்களின் தொடர்பினால் நல்லவர்களின் சகவாசத்தினால் வாழ்வில் உயர்ந்தவர்கள் எராளம்.

பூவோடு சேர்ந்து நாறும் மனக்கும் என்ற சொல்லுக்கேற்ப நாறாக இருந்த எத்தனையோ பேர் நல்லவர்களோடு சேர்ந்த காரணத்தினால் மனம் பெற்றிருக்கிறார்கள்.

உலக வரலாற்றில் மிக மோசமான பழக்கங்களைக் கொண்ட, அறியாமை காலத்தின் மூடப்பழக்க வழக்கங்கள் அனைத்தையும் செய்து கொண்டு அறியாமையில் மூழ்கிப் போய் இருந்த அரபியர்கள் உலகத்து உத்தமர்களாக அடையாளம் காணப்பட்டார்கள் என்றால், மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு கூட்டம் பரிசுத்தமான வாழ்வில் அடியெத்து வைத்தார்கள் என்றால், கெளரவத்திற்காகவும் பெருமைக் காகவும் வாழ்ந்த ஒரு  சமூகம் உயர்ந்த இலட்சியத்திற்காகவும் அல்லாஹ்வின் திருப்திக்காகவும் அவர்களின் வாழ்வு மாறியது என்றால் இவையனைத்திற்கும் காரணம் நாயகம் அவர்களோடு ஏற்பட்ட அந்த உன்னதமான தொடர்பு தான் என்பது உலகம் அறிந்த உண்மை.

ஒரு நேரத்தில் ஆடு மேய்க்கக் கூட தகுதி இல்லை என்று சொல்லப்பட்ட உமர் ரலி அவர்கள் மிகப்பெரிய ஜனாதிபதியாக அன்றைய காந்தி முதல் இன்றைய கெஜ்ரிவால் வரை உமரின் ஆட்சி வேண்டும்,உமரின் ஆட்சி வந்து வந்தால் சமூகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று சொல்லுகிற அளவுக்கு மிக உயர்ந்த அந்தஸ்தைக் கொடுத்தது நபியோடு அவர்களுக்கு ஏற்பட்ட அந்த உன்னதமான சகவாசம் தான்.

குகை வாசிகளைப்பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.நாம் வார வாரம் ஜும்ஆ தினமன்று ஓதி வருகிற கஹ்ஃப் சூராவில் இடம் பிடித்திருத்து கியாமத் வரை குர்ஆன் படிக்கிற அத்தனை பேராலும் நினைவு கூறப்படுகிற நல்லோர்கள்.அவர்களோடு ஒரு நாயும் உடன் சென்றது.அவர்களோடு சேர்ந்து அந்த நாயும் 309 வருடம் தூங்கியது.அந்த நாய் அவர்களோடு சென்றதோ அல்லது அவர்களோடு சேர்ந்து தூங்கியதோ இங்கு முக்கியமல்ல. அந்த நாய் உலகத்திருமறையான அல்குர்ஆன் ஷரீஃபில் இடம் பிடித்திருக்கிறது.மட்டுமல்ல நாளை சுவனம் செல்லக்கூடிய 10 பிராணிகளில் இந்த நாயும் ஒன்று.

பொதுவாக இன்றைக்கு நாம் நாயை ஜ்ஜி என்று சொல்கிறோம்.நஜீஸ் என்று சொல்கிறோம்.அது வாய் வைத்து விட்டால் ஏழு முறை கழுவ வேண்டும் என்றெல்லாம் சொல்கிறோம். அந்தளவு சமூகத்தால் ஒதுக்கப்பட்ட தள்ளி வைக்கப்பட்ட அந்த நாயுக்கு இந்த அந்தஸ்து கிடைக்க காரணம் நல்லோர்களின் அந்த சகவாசம் தான்.

பொதுவாக ஒருவர் சுவனம் செல்ல வேண்டுமென்றால் அவர் ஈமான் கொண்டிருக்க வேண்டும்,நல்லமல்கள் செய்ய வேண்டும்,அந்த அமல்களில் மனத்தூய்மை இருக்க வேண்டும்.அல்லாஹ்வின் ரஹ்மத் என்பது அதற்கு மறைமுகமான காரணமாக இருந்தாலும் ஒருவர் சுவனம் செல்ல வெளிப்படையாக அவரிடம் இருக்க வேண்டியது இந்த மூன்றும் தான்.

ஆனால் ஈமானும் இல்லை!அமலும் இல்லை!அவ்வளவு ஏன்?மனித இனமே இல்லாத ஒரு நஜீஸான நாய் குகைவாசிகளின் நட்பால் அவர்களின் தொடர்பால் அவர்களோடு சேர்ந்திருந்த காரணத்தால் சுவனம் செல்கிறது என்றால் நல்லோர்களின் தொடர்பு எந்தளவு நமக்கு நன்மைகளைத் தரும் என்பதை யோசிக்க வேண்டும்.

قال مالك بن دينار -رحمه الله-: "إنك إن تنقل الحجارة مع الأبرار خير من أن تأكل الحلوى مع الأشرار"

தீயவர்களுடன் அமர்ந்து ஹல்வா சாப்பிடுவதை விட நல்லோருடன் இருந்து கற்களை புரட்டுவது சிறந்தது என்று மாலிக் பின் தீனார் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல,எங்கிருந்து செய்கிறோம்,யாரோடு இருந்து செய்கிறோம் என்பது தான் முக்கியம்.நல்லோர்களின் சேர்க்கையும் அவர்களோடு இருத்தலும் நம்மை உயர்த்தி விடும். நம் வாழ்வை பிரகாசமாக்கி விடும்.

ஹதீஸ் துறையிலும் ஃபிக்ஹுடைய துறையிலும் பல்வேறு சாதனைகளை செய்து அதில் உச்சத்தைத் தொட்டு மாபெரும் இமாம் என்றும் மாமேதை என்றும் அடையாளங்களோடு இஸ்லாமிய சரித்திரத்தில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிற எத்தனையோ இமாம்கள், மார்க்க அறிஞர்கள் கூறும் உண்மை செய்தி என்ன வென்றால், எங்களுக்கு இத்தனை பெரிய கல்விஞானமும் மார்க்க அறிவும் இருந்தாலும் எங்களை சீர்படுத்தி, எங்கள் வாழ்வை ஒழுங்குபடுத்தி அதில் வெளிச்சத்தைத் தந்தது இறைநேசர்களின் தொடர்பு தான் என்று கூறுகிறார்கள்.

இமாம் சுப்யான் ஸவ்ரி ரஹ் அவர்கள் மிகப்பெரும் ஹதீஸ் கலை வல்லுனர்.அவர்கள் கூறுகிறார்கள் ; அபூ ஹாஷிம் சூபி ரஹ் அவர்களின் தொடர்பு எனக்கு கிடைக்கா விட்டால் முகஸ்துதியின் நுனுக்கங்களைப் பற்றி நான் தெரிந்திருக்க முடியாது.

இமாம் அபூ ஹனீபா ரஹ் அவர்களிடம் வயதைக் கேட்டால் இரண்டு என்று சொல்வார்கள்.காரணம் இமாம் ஜஃபர் ஸாதிக் ரஹ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்பில் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதில் தான் வாழ்க்கைக்கான அர்த்தங்களை நான் உணர்ந்தேன் என்று கூறுகிறார்கள்.

எனவே எவ்வளவு கற்றாலும் மார்க்கத்தின் அறிவைப் பெற்றாலும் நல்லோர்களின் தொடர்பு இல்லையெனில் கரை சேர முடியாது என்பதை இதுபோன்ற இமாம்களின் வார்த்தைகள் நமக்கு உண்ர்த்துகிறது.

நல்லோர்களின் தொர்பு எந்தளவு ஒரு மனிதனை பக்குவப்படுத்தி தூய்மைப்படுத்தும் என்றால் காலம் முழுக்க அவர்களோடு இருக்க வேண்டும் என்றோ வாழ்க்கை முழுக்க அவர்களோடு கழிக்க வேண்டும் என்றோ அவசியமில்லை.அவர்களோடு நாம் இருக்கிற ஒரு சில மணித்துளிகள் கூட நம் வாழ்க்கையை புரட்டி விடும்.

إنَّ للهِ مَلائِكةً سَيَّاحينَ في الأَرْضِ، فُضُلًا عَن كُتَّابِ النَّاسِ، فإذا وجَدوا قَوْمًا يَذْكُرون اللهَ تنادَوْا: هَلُمُّوا إلى بُغْيَتِكم، فيَجيئُون، فيَحُفُّون بـهم إلى السَّماءِ الدُّنيا، فيَقولُ اللهُ: أَيَّ شَيْءٍ تركْتُم عِبادي يَصْنَعون؟ فيَقولون: ترَكْناهم يَـحْمَدُونك ويُـمَجِّدونك ويَذْكُرونك، فيَقولُ: هل رأَوْني؟ فيَقولون: لا، فيَقولُ: فكيف لو رأَوْني؟ فيَقولون: لو رأَوْك لكانوا لك أَشَدَّ تَـحْمِيدًا وتَـمْجيدًا وذِكْرًا، فيَقولُ: فأَيَّ شيْءٍ يَطْلُبون؟ فيَقولون: يَطلُبون الجنةَ، فيَقولُ: وهل رأَوْها؟ قال: فيَقولون: لا، فيَقولُ: فكيف لو رأَوْها؟ فيَقولون: لو رأَوْها كانوا أَشَدَّ عليها حِرصًا، وأَشدَّ لَـها طَلَبًا، قال: فيَقولُ: مِن أَيِّ شيءٍ يَتعَوَّذون؟ فيَقولون: مِن النَّارِ، فيَقولُ: وهل رأَوْها؟ فيَقولون: لا، قال: فيَقولُ: فكيف لو رأَوْها؟ فيَقولون: لو رأَوْها كانوا أَشَدَّ مِنها هَرَبًا، وأَشَدَّ مِنها خَوْفًا، قال: فيَقولُ: إنِّـي أُشْهِدُكم أنِّـي قد غفرْتُ لَـهم، قال: فيَقولون: فإنَّ فيهم فُلانًا الـخَطَّاءَ، لَـمْ يُرِدْهم، إنَّـما جاءَ لِـحاجَةٍ، فيَقولُ: هُمُ القَوْمُ لا يَشْقى بِـهِم جَلِيسُهم

 அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்என்று வானவர்கள் கூறுகின்றனர்.  அதற்கு இறைவன், ”அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லைஎன்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ”என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?” என்று கேட்பான். வானவர்கள், ”உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள் இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்என்று பதிலளிப்பார்கள்.  அதற்கு இறைவன், ”என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?” என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ”அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்என்பார்கள். அதற்கு இறைவன், ”அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லைஎன்பர். அதற்கு இறைவன், ”அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்பான். வானவர்கள், ”சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்என்று பதிலளிப்பார்கள்.  இறைவன், ”அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?” என்று வினவுவான். வானவர்கள், ”நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)என்று பதிலளிப்பார்கள். இறைவன், ”அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லைஎன்பர். அதற்கு இறைவன், ”அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?” என்று கேட்பான் வானவர்கள், ”நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்என்பர்.  அப்போது இறைவன், ”எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்என்று கூறுவான். அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ”(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் இல்லை. அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்என்பார். அதற்கு இறைவன், ”அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்என்று கூறுவான்.  (புகாரி ; 6408) 

ﺩﺧﻞ ﻟﺺ ﺑﻴﺖ ﺭﺍﺑﻌﺔ ﺍﻟﻌﺪﻭﻳﺔ ﻟﻴﻼ ﻟﻜﻲ ﻳﺴﺮﻗﻪ .. ﻓﻠﻢ

ﻳﺠﺪ ﻓﻴﻪ ﻏﻴﺮ ﺇﺑﺮﻳﻖ ﻓﻴﻪ ﻣﺎﺀ .. ﻓﻠﻤﺎ ﺃﺭﺍﺩ ﺍﻟﺨﺮﻭﺝ ﻗﺎﻟﺖ ﻟﻪ

ﻋﻨﺪﻣﺎ ﺭﺃﺗﻪ ﻳﺘﺴﻠﻞ ﺇﻟﻰ ﺍﻟﺒﺎﺏ

ﻳﺎ ﻫﺬﺍ .. ﺇﻥ ﻛﻨﺖ ﻣﻦ ﺍﻹﺫﻛﻴﺎﺀ ﻓﻼ ﺗﺨﺮﺝ ﺑﻐﻴﺮ ﺷﻴﺊ ..

ﻓﻘﺎﻝ ﺍﻟﻠﺺ ..

ﺇﻧﻲ ﻟﻢ ﺁﺧﺬ ﺷﻴﺌﺎ ،

ﻓﻘﺎﻟﺖ ﻟﻪ :

ﻳﺎ ﻣﺴﻜﻴﻦ ﺗﻮﺿﺄ ﺑﻬﺬﺍ ﺍﻹﺑﺮﻳﻖ ﻭﺍﺩﺧﻞ ﻓﻲ ﻫﺬﻩ ﺍﻟﺤﺠﺮﺓ

ﻭﺻﻞ ﺭﻛﻌﺘﻴﻦ ﻓﺈﻧﻚ ﻣﺎ ﺗﺨﺮﺝ ﺇﻻ ﺑﺸﻴﺊ .

ﻓﻔﻌﻞ ﺍﻟﻠﺺ ﻣﺎ ﺃﻣﺮﺗﻪ ﺑﻪ .. ﻓﻠﻤﺎ ﻗﺎﻡ ﻳﺼﻠﻲ ﺭﻓﻌﺖ

ﺭﺍﺑﻌﺔ ﺑﺼﺮﻫﺎ ﺍﻟﻰ ﺍﻟﺴﻤﺎﺀ ﻭﻗﺎﻟﺖ :

ﺳﻴﺪﻱ ﻭﻣﻮﻻﻱ .. ﻫﺬﺍ ﺃﺗﻲ ﺑﺎﺑﻲ ﻓﻠﻢ ﻳﺠﺪ ﺷﻴﺌﺎ ﻋﻨﺪﻱ ﻭﻗﺪ

ﺃﻭﻗﻔﺘﻪ ﺑﺒﺎﺑﻚ ﻓﻼ ﺗﺤﺮﻣﻪ ﻣﻦ ﻓﻀﻠﻚ ﻭﺛﻮﺍﺑﻚ ..

ﻓﻠﻤﺎ ﻓﺮﻍ ﺍﻟﻠﺺ ﻣﻦ ﺻﻼﺓ ﺍﻟﺮﻛﻌﺘﻴﻦ ﻟﺬﺕ ﻟﻪ ﺍﻟﻌﺒﺎﺩﺓ ..

ﻓﻤﺎ ﺑﺮﺡ ﻳﺼﻠﻲ ﺇﻟﻰ ﺁﺧﺮ ﺍﻟﻠﻴﻞ .. ﻓﻠﻤﺎ ﻛﺎﻥ ﻭﻗﺖ ﺍﻟﺴﺤﺮ

ﺩﺧﻠﺖ ﻋﻠﻴﻪ ﺭﺍﺑﻌﺔ ﻓﻮﺟﺪﺗﻪ ﺳﺎﺟﺪﺍ ﻭﻫﻮ ﻳﻘﻮﻝ ﻓﻲ

ﺳﺠﻮﺩﻩ ﻣﻌﺎﺗﺒﺎ ﻧﻔﺴﻪ :

ﺇﺫﺍ ﻣﺎ ﻗﺎﻝ ﻟﻲ ﺭﺑﻲ ﺃﻣﺎ ﺍﺳﺘﺤﻴﻴﺖ ﺗﻌﺼﻴﻨﻲ

ﻭﺗﺨﻔﻲ ﺍﻟﺬﻧﺐ ﻣﻦ ﺧﻠﻘﻲ ﻭﺑﺎﻟﻌﺼﻴﺎﻥ ﺗﺄﺗﻴﻨﻲ

ﻓﻤﺎ ﻗﻮﻟﻲ ﻟﻪ ﻟﻤﺎ ﻳﻌﺎﺗﺒﻨﻲ ﻭﻳﻘﺼﻴﻨﻲ

ﻓﻠﻤﺎ ﺍﻧﺘﻬﻰ ﺍﻟﺮﺟﻞ ﻣﻦ ﻟﻴﻠﺘﻪ ﻗﺎﻟﺖ ﻟﻪ :

ﻛﻴﻒ ﻟﻴﻠﺘﻚ ؟

ﻓﻘﺎﻝ :

ﺑﺨﻴﺮ ﻭﻗﻔﺖ ﺑﻴﻦ ﻳﺪﻱ ﻣﻮﻻﻱ ﺑﺬﻟﻲ ﻭﺍﻓﺘﻘﺎﺭﻱ .. ﻓﻘﺒﻞ

ﻋﺬﺭﻱ ، ﻭﺟﺒﺮ ﻛﺴﺮﻱ ، ﻭﻏﻔﺮ ﺫﻧﺒﻲ ﻭﺑﻠﻐﻨﻲ ﺍﻟﻤﻄﻠﻮﺏ ..

ﺛﻢ ﺍﻧﻄﻠﻖ ﻫﺎﺋﻤﺎ ﻋﻠﻰ ﻭﺟﻬﻪ


ராபியத்துல்  அதவிய்யா ரலி அவர்கள் வீட்டில் திருடுவதற்கு ஒரு திருடன் வந்தான். ஆனால் அவர்கள் வீட்டில் தண்ணீர் கூஜாவைத் தவிர வேறு எதுவும் அவனுக்கு கிடைக்க வில்லை. ஏமாற்றமடைந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு புறப்பட்ட பொழுது ராபியத்துல் அதவிய்யா ரலி அவர்கள் அவனை பார்த்து விட்டார்கள். நீ உண்மையில் புத்திசாலியாக இருந்தால் எதுவும் இல்லாமல் இங்கிருந்து நீ வெளியேறக்கூடாது என்றார்கள். நான் எதையும் எடுக்க வில்லை. இங்கு எதுவும் எனக்கு கிடைக்க வில்லை என்று அவன் கூறினான். உடனே ராபியத்துல் அதவிய்யா ரலி அவர்கள் இந்த கூஜாவில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஒளு செய்து இந்த அறைக்குள் சென்று இரண்டு ரக்அத் தொழு என்றார்கள். அவனும் தொழ ஆரம்பித்தான். அந்த நேரத்தில் ராபியத்துல் அதவிய்யா ரலி அவர்கள் இறைவனிடத்தில் கையேந்தி, இவன் என் வீட்டிற்கு வந்தான். அவனிடம் கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. நான் எதவும் அவனுக்கு கொடுக்கவும் முடியாது. எனவே அவனை உனக்கு முன்னால் நிறுத்தி இருக்கிறேன். எனவே அவனுக்கு உன் அருளையும் நற்கூலியையும் நீ இல்லாமல் ஆக்கி விடாதே என்று முறையிட்டார்கள். இரண்டு ரக்அத்தை அவன் தொழுது முடித்தவுடன் தொழுகையில் அவனுக்கு இன்பம் ஏற்பட்டது அதனால் இரவு முழுக்க நின்று தொழ ஆரம்பித்து விட்டான். தஹஜ்ஜத் நேரத்தில் ராபியத்துல் அதவிய்யா ரலி அவர்கள் வந்து பார்த்த பொழுது அவன் சஜ்தாவில் இருந்து கொண்டு இறைவனிடத்தில் மன்றாடிக் கொண்டிருந்தான். உனக்கு வெட்கமில்லையா எனக்கு மாறு செய்து கொண்டு இருக்கிறாயே! பாவம் செய்து கொண்டிருக்கிறாயே! என்று நீ என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன் என்று அழுது கொண்டிருந்தான். தொழுது முடித்தவுடன் அவனை அழைத்து இந்த இரவு எப்படி இருந்தது என்று கேட்டார்கள். எனக்கு இந்த இரவு மிகவும் சிறந்த இரவாக இருந்தது. நான் இறைவனுக்கு முன்னால் பணிவோடும் என் தேவையை முன்னிறுத்தியும் நின்றேன். இவ்வளவு நாட்களாக நான் தவறு செய்து விட்டேன். உனக்கு மாறு செய்து விட்டேன் என்று இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்டேன். இறைவன் எனக்கு மன்னிப்பை தந்து விட்டான். நான் அடைய வேண்டியதை அடைந்து விட்டேன் என்று சொல்லி பயத்தோடும் திடுக்கத்தோடும் அங்கிருந்து விடைபெற்றான்.

மேலே குறிப்பிட்ட ஹதீஸில் அவரின் நோக்கம் வேறாக இருந்தாலும் திக்ர் செய்பவர்களோடு கொஞ்ச நேரம் அமர்ந்த காரணத்தினால் அவர் பாக்கியம் பெற்றார். இங்கே இந்த திருடன் ஒரு சிறிது நேரம் ராபியத்துல் அதவிய்யா ரலி அவர்களின் சகவாசத்தைப் பெற்றதால் திருந்தி இறை பக்தியுள்ளவனாக மாறினான். இது தான் நல்லோர்களின் சகவாசத்தினாலும் தொடர்பினாலும் கிடைக்கும் நற்பேறு.

يقول ابن القيم رحمه الله

مجالسة الصالحين تحولك من ستة إلى ستة

من الشك إلى اليقين

ومن الرياء إلى الإخلاص

ومن الغفلة إلى الذكر

ومن الرغبة في الدنيا إلى الرغبة في الآخرة

ومن الكبر إلى التواضع

ومن سوء النية إلى النصيحة

நல்லோர்களுடன் அமர்வது ஆறிலிருந்து இன்னொரு ஆறின் பக்கம் உன்னை திருப்பும் என இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் குறிப்பிடுவார்கள் ;

1, சந்தேகத்திலிருந்து உறுதியின் பக்கம்.

2, முகஸ்துதியிலிருந்து மனத்தூய்மையின் பக்கம்.

3, மறதியிலிருந்து இறை நினைவின் பக்கம்.

4, உலக ஆசையிலிருந்து மறுமையின் தேட்டத்தின் பக்கம்.

5, பெருமையிலிருந்து பணிவின் பக்கம்.

6, கெட்ட எண்ணத்திலிருந்து நல்லெண்ணத்தின் பக்கம்.

 

அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அந்த மேலான நல்லோர்களின் தொடர்பையும் அவர்களின் சகவாசத்தையும் உருவாக்கித் தருவானாக!


5 comments:

  1. சுப்ஹானல்லாஹ் என்ன அருமையான உவமைகள் எடுத்துக்காட்டுகள் எல்லாம்வல்ல இறைவனுடைய அருள் தங்களுக்கு நிரப்பமாகட்டுமாக....

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் தங்களின் சகவாசத்தினால் எங்களது இன்றைய ஜூம்ஆ உரை சிறப்பு பெற்றது.💐

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் அருமை

    ReplyDelete
  4. Mashallah barakhala
    barak Allah

    ReplyDelete