Thursday, August 5, 2021

துஆ கபூலாக வேண்டுமா ?

கடந்த வாரம் அடியார்கள்  தன்னிடம் துஆ கேட்பதை இறைவன் விரும்புகிறான்.  பதில் அளிப்பதற்கு காத்திருக்கிறான். துஆ கேட்காதவர்கள் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்.

தன்னிடம் உயரும் கரங்களை வெறும் கைகளாக காலியாக திருப்பி அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என் அடியார்கள் என்னை அழைத்தால் பதில் தறுவதாக வாக்களிக்கிறான். ஆனால் நாம் கேட்கும் எத்தனையோ துஆக்களுக்கு பதில் கிடைப்பதில்லை.நம்முடைய  நிறைய கோரிக்கைகள் நிறைவேறுவதில்லை. 


كان رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم يقولُ اللهم إني أعوذُ بك من قلبٍ لا يَخْشَعُ ومن دعاءٍ لا يُسْمَعُ ومن نفسٍ لا تَشْبَعُ ومن علمٍ لا يَنْفَعُ أعوذُ بكَ من هؤلاءِ الأربَعِ .

الراوي: عبدالله بن عمرو المحدث: الترمذي - المصدر: سنن الترمذي - الصفحة أو الرقم: 3482


இறை அச்சமில்லாத உள்ளம், பதிலளிக்கப்படாத பிரார்த்தனை, திருப்தியடையாத ஆத்மா, பயன் தராத கல்வி ஆகிய நான்கிலிருந்தும் நபி ஸல் அவர்கள் பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள்.



என் அடியார்கள் என்னை அழைத்தால் பதில் தறுவேன் என்று சொன்ன அல்லாஹ் ஏன் நம் அழைப்பிற்கு பதில் தறுவதில்லை.

நான் நிச்சயம் பதிலளிப்பேன் என்று அவன் வாக்களித்திருந்தும் ஏன் நம்  துஆக்கள் கபூல் ஆகுவதில்லை என்ற கேள்வி நம் எல்லோரிடத்திலும் இருக்கிறது.


இன்றைக்கு நம்மில் நிறைய பேர் துஆவில் அதிகம் கவனம் செலுத்தாததற்கு முக்கியமாக இரு காரணங்கள் உண்டு.1, நாம் தொழுவதில்லை, பள்ளித் தொடர்பு இல்லை. அதிகமாக பாவங்கள் செய்கிறோம். அதனால் நாம் எப்படி துஆ செய்வது.நம் துஆக்கள் எப்படி கபூலாகும் என்ற எண்ணத்தில் பல பேர் துஆ செய்வதில்லை. நமக்கு என்ன தெரியும்,நம்மிடம் என்ன திறமை இருக்கிறது. நாம் எப்படி இந்த காரியத்தை செய்து முடிப்பது என்ற எண்ணத்தில் பல காரியங்களை விட்டு விடுவதைப் போன்று  நம் மீது நமக்கே ஏற்பட்டிருக்கிற அவநம்பிக்கையில் துஆவை விட்டு விடுகிறோம்.


ஆனால் துஆ கபூலாகுவதற்கு நம்பிக்கை மிக மிக அவசியம். துஆ கபூலாகும், அல்லாஹ் நிச்சயம் பதில் தருவான் என்ற நம்பிக்கையோடு தான் துஆ செய்ய வேண்டும்.


لا تقنطوا من رحمة الله.

அல்லாஹ்வுடைய அருளிலிருந்து நிராசை அடையாதீர்கள். (அல்குர்ஆன்)


روى البخاري عَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمِ المَسْأَلَةَ، وَلاَ يَقُولَنَّ: اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي. 

உங்களில் ஒருவர் துஆ செய்தால் தன் கோரிக்கையை உறிதியாக கேட்கட்டும். இறைவா நீ விரும்பினால் கொடு என்று கேட்க வேண்டாம். (புகாரி)


 قال رسول الله "صلى الله عليه وسلم": (ادْعُوا الله وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ، وَاعْلَمُوا أَنَّ اللهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ)، رواه الترمذي.


அல்லாஹ் பதில் தருவான் என்ற உறுதியுடன் அவனிடம் துஆ செய்யுங்கள். கவனக்குறைவான மறதியான இதயத்திலிருந்து வெளிவரக்கூடிய பிரார்த்தனைக்கு அல்லாஹ் பதில் அளிக்க மாட்டான்.


قال سفيان بن عيينة : لا يمنعن أحدا من الدعاء ما يعلمه من نفسه فإن الله قد أجاب دعاء شر الخلق إبليس ، قال : رب فأنظرني إلى يوم يبعثون ، قال فإنك من المنظرين (قرطبي

நாம் புரியும் பாவங்களை நினைத்து அதன் காரணமாக நாம் கேட்கும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.அதற்கு எந்த பயனும் இருக்காது என்று எண்ணி துஆவை விட்டு விடக்கூடாது. ஏனென்றால் படைப்பிலேயே மிகத்தீய படைப்பாக இருக்கிற ஷைத்தானின் கோரிக்கையையே அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.உலக அழிவு நாள் வரை வாழ எனக்கு அவகாசம் வழங்கு என்று கேட்டான்.அல்லாஹ்வும் அதை கொடுத்து விட்டான் என்று சுஃப்யான் இப்னு உயைனா ரஹ் அவர்கள் கூறுவார்கள் {குர்துபி}


2 வது காரணம் நம்முடைய பெரும்பாலான துஆக்கள் கபூலாகுவதில்லை. அதற்கு பதில் கிடைப்பதில்லை. நாம் செய்யக்கூடிய துஆக்கள் தான் கபூலாகுவதில்லையே பிறகு துஆ செய்து என்ன பயன் ? நாம் எதற்கு துஆ செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் துஆ செய்வதை விட்டு விடுகிறார்கள்.



என்றாலும் துஆக்கள் அங்கீகாரம் அளிக்கப்படுவதற்கு மார்க்கம் சில நிபந்தனைகளை விதிக்கிறது.அவைகளைப் பேணி துஆ செய்ய வேண்டும். அதேபோன்று துஆக்கள் கபூலாகுவதை தடுக்கக்கூடிய சில காரணங்கள் உண்டு அவைகளை தவிர்ந்து நடக்க வேண்டும்.அப்போது தான் அந்த துஆவிற்கு கபூலியத் கிடைக்கும்.



وقال سهل بن عبد الله التستري : شروط الدعاء سبعة : أولها التضرع والخوف والرجاء والمداومة والخشوع والعموم وأكل الحلال (قرطبي)


ஸஹ்லுத்துஸ்தரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;

பிரார்த்தனையின் ஷர்த்துகள் ஏழு

1, பணிவு 2, அச்சம் 3, நம்பிக்கை 4, விடாமல் தொடர்ந்து கேட்பபது 5, மன ஓர்மை 6, அனைவருக்கும் பொதுவாக கேட்பது 7, ஹலாலான உணவு. {குர்துபி}


அதே போன்று நம் துஆக்கள் கபூலாகாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. 


1, இணை வைப்பிற்குரிய காரியங்கள்.


قال تعالى (وما دعاء الكافرين إلاّ في ضلال )، أي لا ينفع دعاؤهم لله تعالى ولا يتقبّل الله منهم صرفًا أو عدلًا يوم القيامة

 காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டில் தான் இருக்கிறது.(அல்குர்ஆன் : 40 ; 50)


இந்த வசனத்திற்கு விளக்கம் தரும் இமாம்கள் அவர்களின் பிரார்த்தனைக்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறுகிறார்கள்.


2, ஹராமான உணவு முறை.


أَيُّها النَّاسُ، إنَّ اللَّهَ طَيِّبٌ لا يَقْبَلُ إلَّا طَيِّبًا، وإنَّ اللَّهَ أمَرَ المُؤْمِنِينَ بما أمَرَ به المُرْسَلِينَ، فقالَ: {يا أيُّها الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّباتِ واعْمَلُوا صالِحًا، إنِّي بما تَعْمَلُونَ عَلِيمٌ}[المؤمنون:51] وقالَ: {يا أيُّها الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّباتِ ما رَزَقْناكُمْ}[البقرة:172]، ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أشْعَثَ أغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إلى السَّماءِ، يا رَبِّ، يا رَبِّ، ومَطْعَمُهُ حَرامٌ، ومَشْرَبُهُ حَرامٌ، ومَلْبَسُهُ حَرامٌ، وغُذِيَ بالحَرامِ، فأنَّى يُسْتَجابُ لذلكَ؟ .

الراوي: أبو هريرة المحدث: مسلم - المصدر: صحيح مسلم - الصفحة أو الرقم: 1015


ஒரு மனிதன் நெடுந்தூரம் பயணம் செய்கிறான். (பிரயாணத்தில் துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது) பிரயாணத்தின் காரணத்தால், தலைமுடிகள்  பரட்டையாகவும் ஆடைகள் அழுக்காகவும் இருக்கின்றன.


அந்நிலையில் அவன் இருகைகளையும் வானத்தின் பக்கம் உயர்த்தி யா அல்லாஹ்! யா அல்லாஹ்! என்று அல்லாஹ்விடம் துஆ கேட்கிறான். ஆனால்,  அவன் உண்ணும் உணவு ஹராமானதாகவும், உடை ஹராமானதாகவும் அவன் குடிக்கும் பானம் ஹராமானதாகவும் அவன் அணியும் உடை ஹராமானதாகவும் இருக்கின்றன. பிறகு எப்படி அவனுடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படும்? (முஸ்லிம் : 10;15)


عن ابن عباس قال: تُليت هذه الآية عند النبي صلى الله عليه وسلم: { يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الأَرْضِ حَلالا طَيِّبًا } فقام سعد بن أبي وقاص، فقال: يا رسول الله، ادع الله أن يجعلني مستجاب الدعوة، فقال. "يا سعد، أطب مطعمك تكن مستجاب الدعوة، والذي نفس محمد بيده، إن الرجل ليَقْذفُ اللقمة الحرام في جَوْفه ما يُتَقبَّل منه أربعين يومًا، وأيّما عبد نبت لحمه من السُّحْت والربا فالنار أولى به"


ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "சஃதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் தூய்மையானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள். (இப்னு கஸீர்,


3, அவசரப்படுதல். இன்றைக்கு நம்மில் பலருக்கு துஆ செய்தவுடன் கபூலாக வேண்டும். கேட்டது உடனே கிடைத்து விட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.அடியான் கேட்பதை உடனே கொடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வுக்கு நிர்பந்தம் இல்லை. 2 வது  இந்த நேரத்தில் துஆ விஷயத்தில் அல்லாஹ் நடந்து கொள்ளக்கூடிய முக்கியமான நடைமுறை ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.


நாம் கேட்கக்கூடிய துஆவில் அல்லாஹ் ஐந்து விஷயங்களை கையாளுகிறான். 1, நாம் கேட்டதைத் தருகிறான். அல்லது நாம் கேட்டதைத் தராமல் அதற்கு பகரமாக அதை விட சிறந்த ஒன்றைத் தருகிறான். அல்லது நமக்கு வர இருக்கும் ஒரு ஆபத்தைத் தடுத்து விடுகிறான். அல்லது எதையும் தராமல் அதற்கு பகரமாக  மறுமையில் நம் அந்தஸ்தை உயர்த்துகிறான். அல்லது அதற்கு பகரமாக நம் பாவங்களை அழித்து விடுகிறான்.


ما منْ رجلٌ يدعو اللهَ بدعاءٍ إلا استُجيبَ لهُ, فإما أنْ يُعجِّل لهُ في الدنيا، وإما أن يدِّخرَ لهُ في الآخرةِ، وإما أنْ يكفِّر عنهُ ذنوبَهُ بقدرِ ما دعا ما لمْ يدعُ بإثمٍ أو قطيعةِ رحمٍ، أو يستعجلَ، قالوا يا رسولَ اللهِ،وكيف يستعجلُ ؟ قال : يقول دعوتُ ربي فما استجابَ لي


الراوي: أبو هريرة المحدث: الترمذي - المصدر: سنن الترمذي -الصفحة أو الرقم: 3677

அடியான் கேட்கின்ற அனைத்து துஆக்களுக்கும் அகீகாரம் உண்டு. அடியான் துஆ கேட்கும் போது மூன்றில் ஒரு விஷயம் நடைபெறும். 1,அவன் கேட்டது உலகத்திலேயே கிடைத்து விடும்.அல்லது 2, மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும்.அல்லது 3, அவன் கேட்ட துஆவின் அளவு அவன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

துஆவில் மூன்று விஷயங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். 1, பாவமான காரியம் குறித்து கேட்காமல் இருக்க வேண்டும். 2, துஆ கேட்பவன் உறவை முறிக்காதவனாக இருக்க வேண்டும். 3, அவசரம் காட்டாமல் இருக்க வேண்டும். {திர்மிதி}


இன்னொரு ஹதீஸில் அவனுக்கு வர இருக்கும் ஆபத்தை அல்லாஹ் நீக்குவதாக வந்திருக்கிறது.


يقول النبي "صلى الله عليه وسلم": (ما من مسلم يدعو الله عز وجل بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث خصال: إما أن يعجل له دعوته، وإما أن يدخرها له في الآخرة، وإما أن يصرف عنه من السوء مثلها. قالوا: إذن نكثر، قال: الله أكثر) رواه أحمد


நாம் கேட்கும் எந்த துஆவும் வீணாகுவதில்லை. ஒழுங்காக முறைப்படி கேட்கப்பட்ட எந்த துஆவுக்கும் பலன் இல்லாமல் இல்லை. கபூலாகும் விதங்கள் மாறலாமே தவிர துஆக்கள் வீணாகாது. எனவே கேட்பதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கிடைக்க வில்லையே என்று கவலைப்படவும் கூடாது. சீக்கிரம் கபூலாக வேண்டும் என்று அவசரப்படவும் கூடாது.


4, அவசரத்திற்கு மட்டும் துஆ கேட்குதல்.இதுவும் நம்முடைய அநேக துஆக்கள் கபூலாகாமல் போவதற்கு காரணம். 


روى الترمذي عن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((مَن سره أن يستجيب اللهُ له عند الشدائد والكرب، فليُكثر الدُّعاء في الرخاء))؛ (حديث حسن) (صحيح الترمذي - للألباني - حديث 2693).

கஷ்டமான நேரங்களிலும் துன்பமான நேரங்களிலும் அல்லாஹ் பிரார்த்தனைக்கு பதிலளிக்க வேண்டும் என்று எவர் விரும்புகிறாரோ அவர் மகிழ்ச்சியான நேரங்களில் அதிகம் துஆவில் ஈடுபட வேண்டும். (ஸஹீஹுத் திர்மிதி)


5 முழுமையான ஈடுபாட்டுடன் துஆ கேட்க வேண்டும்.


الحجاج بن يوسف الثقفى كان ذات يوم وهو يطوف ببيت الله الحرام (الكعبة المشرفة)

اذا به يمر بشيخ كبير فى السن قد كف بصره 

ولا يرى  ! فاذا بهذا الرجل يدعو الله عز وجل ان يرد الله عليه بصره 

ونتهى اليوم  ثم فى اليوم الثانى ذهب الحجاج للطواف مرة اخرى فأذا بهذا الرجل يدعو الله ان يرد عليه بصره 

ثم ان الله لا يستجيب له  ثم يمر فى اليوم الثالث  واذا بنفس الرجل يدعو نفس دعائه  فقال له الحجاج 

اسمع ياهذا اذا اتيت غدا ولم اجد ان الله عزوجل قد رد عليك بصرك فسأقطع عنقك 

فاذا بالرجل يخاف خوف شديدا  من الحجاج ثم انصرف الحجاج واخذ الرجل فى يدعو الله عزوجل بكل ما اتى من طاقة ويبكى ويخشع فى الدعاء وتلح على الله فى دعائه ان يرد عليه بصره خشيت ان لا يقطع الحجاج عنقة

 ثم اذا بالحجاج فى اليوم الرابع والرجل قد رد الله عليه بصره 

فقال له الحجاج ياهذا انك ظللت كل هذه الايام تدعو الله وانت ساهى القالب غير عابأ بدعائك

فلما تضرعت الى الله وانت حاضر القلب صفى البالى ليس فى عقلك الا ان يرد الله عليك بصرك استجاب الله لك

ஒரு நாள் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தபோது பார்வையை இழந்த வயதான ஒருவர் தனக்குப் பார்வை கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் முறையிட்டுக் கொண்டிருந்தார். இரண்டாவது நாள் அவரைப் பார்த்த பொழுது அவர் அப்படியே துஆ செய்து கொண்டிருந்தார். மூன்றாவது நாளும் அதே துஆவில் தான் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் அவரைப்பார்த்து நாளை நான் வருவேன். அப்போது உனக்கு பார்வை கிடைத்திருக்க வேண்டும். நாளையும் உனக்கு பார்வை கிடைக்க வில்லை என்றால் உன்னைக் கொன்று விடுவேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். மறுநாள் தனக்கு பார்வை கிடைக்க வில்லை என்றால் உயிர் போய் விடுமே என்ற  அச்சத்தில் மிகவும் ஈடுபாட்டுடனும் பிடிவாதத்துடன் இறைவனிடத்தில் தனக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்று மன்றாடினார். நான்காவது நாள் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவரைப் பார்த்த பொழுது அவருக்கு பார்வை கிடைத்திருந்தது. இவ்வளவு நாட்களாக நீ ஈடுபாடு இல்லாமல் கேட்டதினால் உன் துஆ  ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இன்று உன் உயிருக்கு பயந்து அதீத ஈடுபாட்டுடனும் கிடைத்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்துடனும் நீ கேட்ட காரணத்தினால் இப்போது உனக்கு பார்வை கிடைத்திருக்கிறது என்று சொன்னான்.


وللدعاء أوقات وأحوال يكون الغالب فيها الإجابة ، وذلك كالسحر ووقت الفطر ، وما بين الأذان والإقامة ، وما بين الظهر والعصر في يوم الأربعاء ، وأوقات الاضطرار وحالة السفر والمرض ، وعند نزول المطر والصف في سبيل الله . كل هذا جاءت به الآثار ، ويأتي بيانها في مواضعها (قرطبي)

துஆக்கள் கபூலாகும் சில தருணங்கள் உண்டு.

1, ஸஹர் நேரம் 2, இஃதார் நேரம் 3, பாங்கு இகாமத் மத்தியில் உள்ள நேரம் 4, வியாழக்கிழமை லுஹர் மற்றும் அஸருக்கு மத்தியில் உள்ள நேரம் 5, நெருக்கடிகள் ஏற்படும் நேரம் 6, பயணத்தின் போது 7, நோயின் போது 8, மழை பொழியும் போது 9, அல்லாஹ்வின் பாதையில் இருக்கும் போது. {குர்துபி}



2 comments:

  1. يوم الأربعاء
    4,புதன் கிழமை தானே நீங்கள் (வியாழக்கிழமை லுஹர் மற்றும் அஸருக்கு மத்தியில் உள்ள நேரம்) என்று குறிப்பிட்டுள்ளீர்கள்

    ReplyDelete
    Replies
    1. தவறைச் சுட்டிக் காட்டியதற்கு ஜஸாகல்லாஹு அஹ்ஸனல் ஜஸா. இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்.

      Delete