Friday, October 8, 2021

ஹதீஸ் எண் 28 لما ثقل النبي جعل يتغشاه الكرب

 

عَنْ أنَسٍ - رَضِيَ اللهُ عَنْهُ - قَالَ: لَمَّا ثَقُلَ النَّبيُّ -صلى الله عليه وسلم- جَعَلَ يَتَغَشَّاهُ الْكَرْبُ، فَقَالَتْ فَاطِمَةُ - رَضِيَ اللهُ عَنْهَا -: وَاكَربَ أَبَتَاهُ. فَقَالَ: «لَيْسَ عَلَى أَبِيكِ كَرْبٌ بَعْدَ الْيَوْمِ»، فَلَمَّا مَاتَ، قَالَتْ: يَا أَبَتَاهُ، أَجَابَ رَبًّا دَعَاهُ! يَا أَبَتَاهُ، جَنَّةُ الْفِرْدَوْسِ مَأْوَاهُ! يَا أَبَتَاهُ، إِلَى جبْرِيلَ نَنْعَاهُ! فَلَمَّا دُفِنَ قَالَتْ فَاطِمَةُ - رَضِيَ اللهُ عَنْهَا -: أَطَابَتْ أنْفُسُكُمْ أَنْ تَحْثُوا عَلَى رَسُولِ اللهِ -صلى الله عليه وسلم- التُّرَابَ؟![1]؛ رواه البخاري.

நபி அவர்களுக்கு நோய் ஏற்பட்ட போது மரண வேதனை அவர்களை சூழ்ந்து கொண்டது. அப்போது பாத்திமா ரலி அவர்கள் என் தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள் இந்த நாளைக்கு பின் உன் தந்தைக்கு கஷ்டம் எதுவும் இல்லை என்றார்கள். அவர்கள் இறந்த போது என் அன்புத் தந்தையே என்று அழைத்து, தன்னை அழைத்த இறைவனுக்கு பதிலளித்து விட்டார்கள். அவர்களின் ஒதுங்குமிடம் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கமாக இருக்கிறது.ஜிப்ரயீல் அலை அவர்களிடம் இதை எப்படி நாங்கள் தெரிவிப்போம் என்று கூறினார்கள். அடக்கம் செய்து விட்டு வந்த போது நபி அவர்கள் மீது மண்ணைப் போட உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று கேட்டார்கள். (புகாரி ; 5647)

நபி அவர்கள் உலக மக்களிலேயே அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானவர். அல்லாஹ்வினுடைய உற்ற தோழர். அவர்கள் இல்லையென்றால் எதுவும் இல்லை என்று சொல்லுமளவிற்கு அல்லாஹ்வின் மிக உயர்ந்த நெருக்கத்தை பெற்றவர்கள். அத்தகைய உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிற அவர்களுக்கும் அல்லாஹ் கஷ்டத்தையும் சிரமத்தையும் நோய் நொடிகளையும் கொடுத்திருக்கிறான். அவர்கள் ரபியுல் அவ்வல் பன்னிரண்டாம் நாள் இவ்வுலகத்தை விட்டும் பிரிகிறார்கள். ஆனால் அவர்களின் மரணத்திற்கு முன்பு ஸஃபர் மாதத்தின் கடைசியிலேயே அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். ஏறக்குறைய பதினைந்து நாட்கள் நோயினால் மிகவும் சிரமப்பட்டார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை. அதில் ஒரு கட்டத்தில் அவர்களால் வீட்டை ஒட்டி இருக்கிற மஸ்ஜிதுக்கு தொழுகைக்கு வர முடியாத அளவிற்கு பலவீனப் பட்டார்கள்.

ما رأيت أحداً أشد عليه الوجع (المرض) من رسول الله ـ صلى الله عليه وسلم

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் நபி ஸல் அவர்களை விட மிகக் கடுமையாக நோயினால் சிரமப்பட்ட வேறு யாரையும் நான் கண்டதில்லை.

நோய்நொடிகள் மற்றும் சிரமங்களை அல்லாஹ் மூன்று காரணங்களுக்காக தருகிறான். ஒன்று நம் பொறுமை சோதிப்பதற்காக. இரண்டாவது நம் பாவங்களை அழிப்பதற்காக. மூன்றாவது அந்தஸ்தை உயர்த்துவதற்காக. இதில் முதல் இரண்டு விஷயங்கள் நபிமார்களுக்கு பொறுந்தாது.நபிமார்களுக்கு அல்லாஹ் நோயைத் தருவது அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்குத்தான்.

உலக வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற சிரமங்களும் நோய் நொடிகளும் நிச்சயம் நம் மறுமை வாழ்க்கையின் உயர்வுக்கு காரணமாகத் தான் இருக்கும். இன்றைய நாளுக்கு பிறகு உன் தந்தைக்கு எந்த சிரமமும் இல்லை என்ற நபியின் வார்த்தையிலிருந்தே இதை உணர முடிகின்றது.

ஆனால் நோய் நொடிகள் ஒருவருடைய அந்தஸ்தின் உயர்வுக்கு காரணமாக ஆக வேண்டுமென்றால் அதற்கு 2 நிபந்தனைகள் உண்டு. ஒன்று அவரிடத்தில் இறை நம்பிக்கை இருக்க வேண்டும். இரண்டாவது அந்த நோயின் போது அவர் பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.

நோய்கள் நம் அந்தஸ்திற்கு கரணமாக இருக்கும் என்பதினால் தான் நமக்கு வருகின்ற நோய் நொடிகளை திட்டுவதோ பழிப்பதோ கூடாது என்று மார்க்கம் சொல்கிறது.

لا تَسُبِّي الحُمَّى، فإنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ، كما يُذْهِبُ الكِيرُ خَبَثَ الحَدِيدِ

காய்ச்சலை திட்டாதே இரும்பின் துருவை நெருப்பு நீக்கி விடுவதைப் போல நிச்சயமாக காய்ச்சல் என்பது பாவங்களை நீக்கி விடுகிறது. (முஸ்லிம் ; 2575)

أطابت أنفسكم أن تحثوا على رسول الله التراب

நபி அவர்கள் மீது மண்ணைப் போட உங்களுக்கு எப்படி மனம் வந்தது.

நபியின் பிரிவு என்பது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத மிகப்பெரிய சோதனை. அதுவும் நபிகள் மீது அளவு கடந்த அன்பும் பிரியமும் வைத்திருக்கிற பாத்திமா ரலி அவர்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்.

ما رأيت أحدا كان أشبه سمتا وهديا ودلا برسول الله صلى الله عليه وسلم من فاطمة كرّم الله وجهها، كانت اذا دخلت عليه قام اليها فأخذ بيدها وقبّلها وأجلسها في مجلسه، وكان إذا دخل عليها قامت اليه فأخذت بيده فقبّلته وأجلسته في مجلسها.

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள் பாத்திமா ரலி அவர்களை விட நபி ஸல் அவர்களுக்கு தோற்றத்தாலும் நடைமுறையாலும் ஒப்பாக நிகராக இருக்கும் யாரையும் நான் பார்த்ததில்லை. பாத்திமா ரலி அவர்கள் நபியை சந்திப்பதற்காக அவர்களின் இல்லத்திற்கு வந்தால் நபி ஸல் அவர்கள் மகளை வரவேற்று எழுந்து நின்று அவர்களது கரத்தை பிடித்து முத்தமிட்டு அவர்களை தன் இருப்பிடத்தில் அமர வைப்பார்கள். அதே போன்று நபி ஸல் அவர்கள் பாத்திமா ரலி அவர்களை சந்திப்பதற்காக அவர்களின் இல்லத்திற்கு வந்தால் அன்னை பாத்திமா ரலி அவர்கள் நபியை வரவேற்பதற்காக எழுந்து நின்று அவர்களது கரத்தை பிடித்து முத்தமிட்டு தன் இருப்பிடத்தில் அமர வைப்பார்கள்.

நபியின் மீது இவ்வளவு அன்பும் பிரியமும் வைத்திருக்கிற அன்னை பாத்திமா ரலி அவர்களுக்கு நபியின் மரணம் என்பது மிகப்பெரிய பேரிழப்பு. எனவே தான் அந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத அவர்கள் நாவிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் தான் இது. எனவே இது அல்லாஹ்வின் விதியை மறுக்கும் வார்த்தை அல்ல என்பதை நாம் உணர கடமைப்பட்டிருக்கிறோம்.

 

No comments:

Post a Comment