Friday, October 8, 2021

ஹதீஸ் எண் 33 سالت رسول الله عن الطاعون

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّاعُونِ، فَأَخْبَرَهَا أَنَّهُ كَانَ عَذَابًا يَبْعَثُهُ اللهُ تَعَالَى عَلَى مَنْ يشَاءُ، فَجَعَلَهُ اللهُ تَعَالَى رَحْمَةً لِلْمُؤْمِنينَ، فَلَيْسَ مِنْ عَبْدٍ يَقَعُ فِي الطَّاعُونِ، فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابرًا مُحْتَسِبًا يَعْلَمُ أَنَّهُ لَا يُصِيبُهُ إِلَّا مَا كَتَبَ اللهُ لَهُ إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ الشَّهِيدِ

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; பிளேக் நோய் பற்றி நபி அவர்களிடம் நான் கேட்டேன். தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தும் வேதனையாகும். மேலும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதை அல்லாஹ் அருளாக ஏற்படுத்தி இருக்கிறான். தனக்கு அல்லாஹ் விதித்ததைத் தவிர நோய் ஏற்படாது என்பதை அறிந்து நோய் ஏற்பட்ட அந்த ஊரிலேயே பொறுமையாக நன்மையை எதிர் பார்த்தவனாக இருக்கும் ஒரு அடியானுக்கு ஷஹீதுடைய கூலியைப் போன்றது உண்டு என்று நபி அவர்கள் கூறினார்கள்.

நோய்த்தொற்று ஏற்படும் நேரத்தில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து நபிகள் நாயகம் அவர்கள் அழகாக வழிகாட்டி இருக்கிறார்கள்.

إِذَا سَمِعْتُمْ بِالطاعون بِأَرْضٍ فَلَا تَدخلوها، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا مِنْها

நீங்கள் ஒரு ஊரில நோய்த் தொற்று இருப்பதை கேள்விப்பட்டால் அந்த ஊருக்குள் நுழையாதீர்கள். நீங்கள் இருக்கும் நிலையில் ஒரு ஊரில் அந்த நோய் ஏற்பட்டால் அதிலிருந்து நீங்கள் வெளியே வராதீர்கள்.   (புகாரி ; 5728)

நோய்தொற்று இருக்கும் ஊருக்கு செல்ல வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம், அவ்வாறு இருப்பதை அறிந்து அங்கே செல்வது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமமாகும்.

ولا تلقوا بايديكم الي التهلكة

உங்கள் கரங்களை நீங்கள் அழிவில் போட்டுக் கொள்ளாதீர்கள் என்று இறைவன் திருமறையில் கூறுகிறான்.

أنَّ عُمَرَ بنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عنْه خَرَجَ إلى الشَّأْمِ، حتَّى إذَا كانَ بسَرْغَ لَقِيَهُ أُمَرَاءُ الأجْنَادِ؛ أبُو عُبَيْدَةَ بنُ الجَرَّاحِ وأَصْحَابُهُ، فأخْبَرُوهُ أنَّ الوَبَاءَ قدْ وقَعَ بأَرْضِ الشَّأْمِ. قَالَ ابنُ عَبَّاسٍ: فَقَالَ عُمَرُ: ادْعُ لي المُهَاجِرِينَ الأوَّلِينَ، فَدَعَاهُمْ فَاسْتَشَارَهُمْ، وأَخْبَرَهُمْ أنَّ الوَبَاءَ قدْ وقَعَ بالشَّأْمِ، فَاخْتَلَفُوا؛ فَقَالَ بَعْضُهُمْ: قدْ خَرَجْتَ لأمْرٍ، ولَا نَرَى أنْ تَرْجِعَ عنْه، وقَالَ بَعْضُهُمْ: معكَ بَقِيَّةُ النَّاسِ وأَصْحَابُ رَسولِ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّم، ولَا نَرَى أنْ تُقْدِمَهُمْ علَى هذا الوَبَاءِ، فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي، ثُمَّ قَالَ: ادْعُوا لي الأنْصَارَ، فَدَعَوْتُهُمْ فَاسْتَشَارَهُمْ، فَسَلَكُوا سَبِيلَ المُهَاجِرِينَ، واخْتَلَفُوا كَاخْتِلَافِهِمْ، فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي، ثُمَّ قَالَ: ادْعُ لي مَن كانَ هَاهُنَا مِن مَشْيَخَةِ قُرَيْشٍ مِن مُهَاجِرَةِ الفَتْحِ، فَدَعَوْتُهُمْ، فَلَمْ يَخْتَلِفْ منهمْ عليه رَجُلَانِ، فَقالوا: نَرَى أنْ تَرْجِعَ بالنَّاسِ ولَا تُقْدِمَهُمْ علَى هذا الوَبَاءِ، فَنَادَى عُمَرُ في النَّاسِ: إنِّي مُصَبِّحٌ علَى ظَهْرٍ فأصْبِحُوا عليه. قَالَ أبُو عُبَيْدَةَ بنُ الجَرَّاحِ: أفِرَارًا مِن قَدَرِ اللَّهِ؟! فَقَالَ عُمَرُ: لو غَيْرُكَ قَالَهَا يا أبَا عُبَيْدَةَ؟! نَعَمْ نَفِرُّ مِن قَدَرِ اللَّهِ إلى قَدَرِ اللَّهِ، أرَأَيْتَ لو كانَ لكَ إبِلٌ هَبَطَتْ وادِيًا له عُدْوَتَانِ، إحْدَاهُما خَصِبَةٌ، والأُخْرَى جَدْبَةٌ، أليسَ إنْ رَعَيْتَ الخَصْبَةَ رَعَيْتَهَا بقَدَرِ اللَّهِ، وإنْ رَعَيْتَ الجَدْبَةَ رَعَيْتَهَا بقَدَرِ اللَّهِ؟ قَالَ: فَجَاءَ عبدُ الرَّحْمَنِ بنُ عَوْفٍ -وكانَ مُتَغَيِّبًا في بَعْضِ حَاجَتِهِ- فَقَالَ: إنَّ عِندِي في هذا عِلْمًا؛ سَمِعْتُ رَسولَ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّم يقولُ: إذَا سَمِعْتُمْ به بأَرْضٍ فلا تَقْدَمُوا عليه، وإذَا وقَعَ بأَرْضٍ وأَنْتُمْ بهَا فلا تَخْرُجُوا فِرَارًا منه. قَالَ: فَحَمِدَ اللَّهَ عُمَرُ ثُمَّ انْصَرَفَ.

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் ஒரு பெரும் கொண்ட கூட்டத்தை அழைத்துக்கொண்டு சிரியாவை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.பயணத்தின் இடையில் சிரியாவில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நோயினால் அங்கே இருக்கிற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டவுடன் என்ன செய்வது என்று ஆலோசனை மேற்கொள்கிறார்கள். அதில் சிலர் நாம் ஒரு காரியத்திற்காக புறப்பட்டு வந்து விட்டோம்.எனவே திரும்பி செல்ல வேண்டாம். சிரியாவிற்கு போகலாம் என்று கூறினார்கள். இன்னும் சிலர் உங்களோடு நபித்தோழர்கள் இருக்கிறார்கள். அங்கே ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைவது அது சரியல்ல. எனவே நாம் திரும்பி விடலாம் என்று இரு ஆலோசனைகள் சொல்லப்பட்டது. இறுதியாக முஹாஜிர்களில் அனுபவம் பெற்ற வயதில் மூத்தவர்களை அழைத்து ஆலோசனை கேட்ட போது, அவர்கள், மக்களை அழைத்துக் கொண்டு சிரியாவிற்கு செல்வது சரியல்ல. எனவே நாம் திரும்பி விடலாம் என்று கூறினார்கள். அதைக் கேட்ட பிறகு ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் திரும்புங்கள் என்று உத்தரவு பிறப்பித்தார்கள். அப்போது அபூ உபைதா ரலி அவர்கள் அல்லாஹ்வின் விதியை விட்டும் நீங்கள் விரண்டோட நினைக்கிறீர்களா என்று கேட்டார்கள். அதற்கு உமர் ரலி அவர்கள் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கம் தான் நாம் ஓடுகிறோம் என்று பதில் தந்தார்கள். (புகாரி ; 5729)

உள்ளே நுழைந்து நமக்கு ஆபத்து ஏற்படுவதும் ஏற்படாமல் போவதும் எவ்வாறு அல்லாஹ்வின் விதிக்குட்பட்டதோ அவ்வாறே நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்காக ஊருக்குச் செல்லாமல் திரும்பி விடுவதும் அல்லாஹ்வின் விதி தான் என்று சொன்னார்கள். எனவே நோய் தொற்று ஏற்படும் ஊரை நோக்கி செல்வது கூடாது.

நாம் இருக்கிற இடத்தில் நோய் தொற்று ஏற்பட்டால் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று சொல்லப்பட்டதற்கு காரணம், எல்லாம் அல்லாஹ்வின் விதிப்படி தான் நடக்கிறது. அல்லாஹ் எழுதியதைத் தவிர எதுவும் நடக்காது. நோய் தொற்றால் ஒரு ஊரில் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் ஒருவருக்கு நோய் ஏற்படக் கூடாது என்று எழுதி விட்டால் நிச்சயம் அவரை நோய் தொடாது. அதே சமயத்தில் நோய்த்தொற்று பூமியிலிருந்து வெளியேறுவதால் மட்டும் அந்த நோயிலிருந்து தப்பித்து விட முடியாது. ஒருவருக்கு அல்லாஹ் நோயைத் தர வேண்டும் என்று நாடி விட்டால் அவரின் விதியில் எழுதி விட்டால் அங்கிருந்து வெளியே சென்று எங்கு இருந்தாலும்  அந்த நோய் அவருக்கு வந்து விடும். எனவே தான் நோய்த்தொற்று ஏற்பட்ட பூமியில் இருந்து வெளியேற வேண்டாம் என்று நபி அவர்கள் வழி காட்டினார்கள்.

இது மாதிரியான நோய்கள் மூமின்களுக்கு ரஹமத் சென்று நபி அவர்கள் சொன்னதற்கு காரணம், ஒரு மூஃமின் நிச்சயம் பொறுமையாக இருப்பான். அதற்கு நன்மை கிடைப்பதை இறைவனிடத்தில் எதிர் பார்ப்பான்.அதனால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கொடுத்து விடுவான். எனவே தான் நோய்கள் என்பது மூஃமின்களுக்கு அருள் கொடை என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment