Friday, October 8, 2021

ஹதீஸ் எண் 36 اللهم اغفر لقومي فانهم لا يعلمون

 

عَنْ أَبِي عَبْدِالرَّحْمَنِ عَبْدِاللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْكِي نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ، صَلَوَاتُ اللهِ وَسَلَامُهُ عَلَيْهِمْ، ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ، فَجَعَلَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ

ஒரு நபியை அவரது சமூகத்தினர் அடித்தார்கள். அவரை ரத்தம் சிந்த வைத்தார்கள். அவர் தன் முகத்தில் ரத்தத்தை துடைத்தவறாக இறைவா எனது இந்த சமூகத்தை மன்னிப்பாயாக நிச்சயமாக அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று கூறினார் என நபிமார்களில் ஒருவரை பற்றி நபி அவர்கள் கூறிய ஒரு சம்பவம் நான் இன்றும் நேரில் பார்ப்பதைப் போல இருக்கிறது. (புகாரி ; 3477)

நாம் தொடர்ந்து பொறுமை குறித்த நபியின் வார்த்தைகளை பார்த்து வருகிறோம். இந்த ஹதீஸில் கூறப்பட்ட அந்த நபியின் நிகழ்வு மிக உயர்ந்த பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் எடுத்துக் காட்டாகும். பொதுவாக நாம் ஒரு தவறு செய்து விட்டோம், ஒருவரும் அநீதம் பிரிந்து விட்டோம். அவர் நம்மை அடிக்கிறார் என்றாலே நமக்கு கோபம் வரும். என்ன தான் தவறு செய்திருந்தாலும்  என்னை நடு ரோட்டில் வைத்து அடிப்பாயா என்று நாம் கேட்போம்.நாம் தவறே செய்திருந்தாலும் நம்மை ஒருவர் பொது வெளியில் அடிப்பதை என்றைக்கும் நாம் ஏற்க மாட்டோம். ஆனால் நபிமார்கள் எந்த குற்றமும் செய்ய வில்லை. யாருக்கும் எந்த அநீதத்தையும் செய்ய வில்லை. மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்புப் பணியை செய்தவர்கள் தான் நபிமார்கள். இங்கே அந்த மக்கள் அவர்களை அதிகமாக அடிக்கிறார்கள். காயப்படுத்துகிறார்கள் என்றாலும் அதையெல்லாம் தாங்கிக் கொள்வதோடு அவர்களுக்கு பிரார்த்தனையும் செய்கிறார்கள் என்றால் இது பொறுமையின் உச்சகட்டம்.

தனக்குத் தீங்கு இழைத்தவனுக்கும் உபகாரம் செய்வது என்பது இஸ்லாம் காட்டித்தந்த குணங்களில் ஆக உயர்ந்த குணம்.

صل من قطعك واعف عمن ظلمك واحسن الي من اساء اليك.

உன்னை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உனக்கு அநீதம் செய்தவரை நீ மன்னித்து விடு. உனக்கு தீங்கிழைப்பவருக்கும் உபகாரம் செய்.

خرج إبراهيم بن أدهم يومًا إلى بعض البراري، فسأله جنديٌ: هل أنت عبدٌ؟ قال: نعم. فقال: أين العُمران؟! فأشار إلى المقْبَرة. فقال الجندي: إنما أرَدْتُ العُمران! فقال: هو المقْبَرة! فغاظَهُ ذلك فضربَ رأسَهُ بالسَّوط فشجَّه وردَّه إلى البلد. فلمَّا علم أنه ابن أدهم أخذ يعْتذر منه. فقيل لإبراهيم: لِمَ قلتَ له إنَّك عَبْدٌ؟ فقال: إنَّه لم يسألني عبد مَنْ أنتَ، بلْ قال: أنتَ عَبْدٌ؟! فقلت: نعم؛ لأنِّي عبدالله. فلمَّا ضرب رأسي سألتُ الله له الجنَّة! قيل: كيف، وقدْ ظلَمَكَ؟ قال: علِمْتُ أنني أُوْجَرُ على ما نالني منهُ، فلمْ أُرِدْ أنْ يكونَ نصيبي منهُ الخيرَ، ونصيبُه منّي الشَّرّ!

இப்ரஹீம் பின் அத்ஹம் அவர்கள் வீதியில் சென்று கொண்டிருந்த போது ராணுவ வீரன் ஒருவன் அவர்களை அழைத்து நீ அடிமையா என்று கேட்டான். அவர்களும் ஆம் என்று பதில் சொன்னார்கள். பின்பு குடியிருப்பு எங்கே இருக்கிறது என்று கேட்டான். அதற்கவர்கள் மண்ணரையை நோக்கி சுட்டிக்காட்டி அது தான் குடியிருப்பு என்று சொன்னார்கள். நான் இதைக் கேட்க வில்லை. மக்கள் வசிக்கக்கூடிய இடம் எது என்று அவன் மீண்டும் கேட்டான். அப்போதும் இப்ராஹீம் பின் அத்ஹம் அவர்கள் மண்ணறையைத் தான் அடையாளம் காட்டினார்கள். அவனுக்கு கோபம் ஏற்பட்டு அவர்களை அடித்து இழுத்து வந்தான். நீ யாரை இழுத்து வருகிறாய் தெரியுமா? இவர் தான் இப்ரஹிம் பின் அத்ஹம் என்று மக்கள் சொன்ன போது, அவன் தன் தவறை உணர்ந்து அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்டான். பிறகு இப்ரஹீம் பின் அத்ஹம் அவர்களிடம் நீங்கள் அடிமையா என்று அவன் கேட்ட பொழுது நீங்கள் ஏன் ஆம் என்று சொன்னீர்கள் என்று மக்கள் கேட்டார்கள். அப்போது அவர்கள், அவன் என்னிடம் யாருடைய அடிமை என்று கேட்க வில்லை. அவ்வாறு கேட்டிருந்தால் நான் உண்மையை சொல்லியிருப்பேன். என்னைப் பார்த்து பொதுவாக அடிமையா என்றான்.நான் இறைவனுடைய அடிமையாக இருப்பதால் ஆம் என்று சொன்னேன். மட்டுமல்ல அவன் என்னை அடித்துக் கொண்டிருந்த போது அவனுக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்று நான் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தேன் என்றார்கள். அவ்வாறு எப்படி நீங்கள் கேட்டீர்கள். உங்களை அடிப்பவக்கும் சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்று எப்படி ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்ட போது, இப்ராஹீம் பின் அத்ஹம் அவர்கள், என்னை அவன் அநியாயமாக அடிக்கிற பொழுது நான் பொறுமையாக இருந்தேன். எனவே அல்லாஹ் எனக்கு நன்மைகளை எழுதி விடுவான். எனவே எனக்கு நன்மையைப் பெற்றுத் தந்த அவனுக்கு பிரதியுபகாரமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் அவனுக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் கேட்டேன் என்றார்கள்.

 

No comments:

Post a Comment