Wednesday, April 20, 2022

அல்லாஹ்வின் கருணைக்கு அளவே இல்லை

 

قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌  اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌  اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 39:53)

அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிக மிக கிருபையாளன், அன்பாளன்.அல்லாஹ்வின் அன்புக்கும் கிருபைக்கும் அளவே கிடையாது.அதுவும் எண்ணற்ற பாவச் சுமைகளை சுமந்து கொண்டிருக்கிற தன் அடியார்களை மன்னிப்பதற்காகவே தன் அருள்வாசலை திறந்தே வைத்திருக்கிறான். அல்லாஹ்வின் விசாலமான கருணைக்கு இந்த வசனம் ஒரு சான்று.

سَمِعْتُ ثَوْبَانَ -مَوْلَى رَسُولِ اللَّهِ -يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ يَقُولُ: "مَا أُحِبُّ أَنَّ لِيَ الدُّنْيَا وَمَا فِيهَا بِهَذِهِ الْآيَةِ: ﴿يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ﴾ إِلَى آخَرِ الْآيَةِ،

இந்த வசனத்திற்குப் பகரமாக எனக்கு இந்த உலகமும் அதில் உள்ளவைகளும் இருந்தாலும் அது எனக்கு பிரியமானதாக இருக்காது என்று நபி அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் தப்ரீ)

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " إِنَّ رَجُلَيْنِ مِمَّنْ دَخَلَ النَّارَ اشْتَدَّ صِيَاحُهُمَا ، فَقَالَ الرَّبُّ : أَخْرِجُوهُمَا ، فَأُخْرِجَا ، فَقَالَ لَهُمَا : لأَيِّ شَيْءٍ اشْتَدَّ صِيَاحُكُمَا ؟ قَالا : فَعَلْنَا ذَلِكَ لِتَرْحَمَنَا ، قَالَ : رَحْمَتِي لَكُمَا أَنْ تَنْطَلِقَا فَتُلْقِيَانِ أَنْفُسَكُمَا حَيْثُ كُنْتُمَا مِنَ النَّارِ ، قَالَ : فَيَنْطَلِقَانِ فَيُلْقِي أَحَدُهُمَا نَفْسَهُ فَجَعَلَهَا اللَّهُ عَلَيْهِ بَرْدًا وَسَلامًا وَيَقُومُ الآخَرُ فَلا يُلْقِي نَفْسَهَ ، فَيَقُولُ لَهُ الرَّبُّ : مَا مَنَعَكَ أَنْ تُلْقِيَ نَفْسَكَ كَمَا أَلْقَى صَاحِبُكَ ؟ فَيَقُولُ : رَبِّ ، إِنِّي لأَرْجُو أَنْ لا تُعِيدَنِي فِيهَا بَعْدَمَا أَخْرَجْتَنِي ، فَيَقُولُ الرَّبُّ : لَكَ رَجَاؤُكَ فَيَدْخُلانِ الْجَنَّةَ جَمِيعًا بِرَحْمَةِ اللَّهِ "

நரகத்தில் இரண்டு மனிதர்களின் சப்தம் மிகக் கடுமையானதாக இருக்கும். எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அவ்விருவரையும் நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொல்வான். அப்போது அவ்விருவரையும் பார்த்து ஏன் இவ்வளவு அதிகமாக சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்பான். எங்கள் மீது நீ இரக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் இவ்வாறு செய்தோம் என்று அவர்கள் கூறுவார்கள். அப்போது இறைவன், என்னுடைய அருள் உங்களுக்கு வேண்டு மென்றால் மறுபடியும் நரகத்தில் நீங்களாகவே போய் விழுந்து விடுங்கள் என்று கூறுவான். இருவரும் செல்வார்கள். அதில் ஒருவர் உலகத்தில் தான் அவன் சொல்லிற்கு மாறு செய்தேன். இங்கேயாவது கேட்கிறேன் என்று வேகமாக போய் விழுந்து விடுவார். அல்லாஹுத்தஆலா அவருக்கு அந்த நெருப்பை குளிராக மாற்றி விடுவான். இன்னொருவர் தயங்கிக் கொண்டே நிற்பார். உன்னுடைய சகோதரன் விழுந்ததைப் போன்று நீ ஏன் விழ வில்லை என்று அல்லாஹ் கேட்பான். அப்போது அவர், நரகத்திலிருந்து எங்களை வெளியே எடுத்த பிறகு மறுபடியும் நரகத்திற்கு அனுப்ப மாட்டாய் என்று நம்பினேன் என்பார். அப்பொழுது அல்லாஹ் உன்னுடைய நம்பிக்கை வீண் போக வில்லை என்று சொல்லி அவ்விருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பவான். (அல்பிதாயா வன் நிஹாயா)

"إِنَّ الْعَبْدَ إِذَا أَذْنَبَ لَمْ يُكْتَبْ عَلَيْهِ حَتَّى يُذْنِبَ ذَنْبًا آخَرَ فلَمْ يُكْتَبْ عَلَيْهِ حَتَّى يُذْنِبَ ذَنْبًا آخَرَ ، فَإِذَا اجْتَمَعَتْ عَلَيْهِ خَمْسَةٌ مِنَ الذُّنُوبِ، وَعَمِلَ حَسَنَةً وَاحِدَةً كُتِبَ لَهُ خَمْسُ حَسَنَاتٍ، وَجُعِلَ الْخَمْسُ بِإِزَاءِ خَمْسِ سَيِّئَاتٍ فَيَصِيحُ عِنْدَ ذَلِكَ إِبْلِيسُ - عَلَيْهِ اللَّعْنَةُ - وَيَقُولُ: كَيْفَ أَسْتَطِيعُ عَلَى ابْنِ آدَمَ، وَإِنِّي وَإِنِ اجْتَهَدْتُ عَلَيْهِ يُبْطِلُ بِحَسَنَةٍ وَاحِدَةٍ جَمِيعَ جَهْدِي؟"؟

ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்து விடுகிறான்.வானவர்கள் அதை பதிவு செய்யட்டுமா?என அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறார்கள். அல்லாஹ்தஆலா கொஞ்சம் பொருங்கள்,அவன் தவ்பா செய்யலாம் என்கிறான்.மீண்டும் இரண்டாவது ஒரு பாவத்தை செய்கிறான். இப்போதும் மலக்குகள் பதிவு செய்ய அனுமதி வேண்டி நிற்கின்றனர். அப்போதும் அல்லாஹுத்தஆலா கொஞ்சம் பொருமையாக இருக்கச் சொல்கிறான். இப்படி ஐந்து தடவை அந்த அடியான் பாவம் செய்து விடுகிறான்.ஆறாவது தடவை ஒரு நல்ல காரியத்தை செய்கிறான். இப்போது அல்லாஹுத் தஆலா அவன் செய்த ஒரு நன்மைக்கு பத்தை பதிவு செய்யுங்கள்.அந்த பத்தில் ஐந்தை கொண்டு அவனின் ஐந்து பாவத்தை அழித்து விடுங்கள் என்று கூறுகிறான்.இதை செவிமடுத்த ஷைத்தான் தன் தலையில் கைவைத்து ,நான் இவனை பாவம் செய்ய வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன்.ஒரு நன்மையால் அத்தனையும் அழிந்து விட்டதே என்று புலம்புகிறான். (தன்பீஹுல் காஃபிலீன்)

كان هناك شيخ كبير يعبد صنما دهرا طويلا ثم حصل له أمر مهم فاستغاث به فلم يغثه فقال: يا أيها الصنم ارحم ضعفي فقد عبدتك دهرا طويلا فلم يجبه فانقطع عند ذلك الرجل رجاؤه منه ونظر الله إليه بعين الرحمه فخطر على قلبه أن يدعو الواحد الصمد فرمق بطرفه نحو السماء وقد وقع في الخجل وقال: ياصمد فسمع صوتا من الهواء يقول: لبيك ياعبدي أطلب ما تريد فأقر لله بالوحدانيه فقالت الملائكه: ربنا دعا صنمه دهرا فلم يجبه ودعاك مرة واحده فأجبته؟

فقال: ياملائكتي إذا دعا الصنم فلم يجبه ودعا الصمد فلم يجبه فأي فرق بين الصنم والعبد

நீண்ட காலங்களாக சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த  ஒரு முதியவர் கடுமையான சோதனையில் மாட்டிக் கொள்கிறார்.தன் சிலையிடம் தன் தேவையை இரவு பகலாக முறையிடுகிறார். விழிப்பிலும் தூக்கத்திலும் يا صنم சிலையே சிலையே என் மீது கருணை காட்டு. எனக்கு உதவி செய் என்று கூப்பிடுகிறார். எந்தப் பதிலும் இல்லை. அல்லாஹ்வின் கருணை அவர் மீது ஏற்படுகிறது. எனவே எப்போதும் يا صنم சிலையே சிலையே என்று அழைத்துக் கொண்டிருந்த அவரின் நாவில்  يا صمد  என்று தன் பெயரை வர வைத்தான். ஒரே ஒரு தடவை அந்த வார்த்தையை அவர் சொன்னார். உடனே அல்லாஹுத்தஆலா   لبيك يا عبدي (என் அடியானே இதோ பதில் சொன்னேன்) உனக்கு என்ன வேண்டும்  என்று பதில் கூறுகிறான்.  உடனே வானவர்கள், யா அல்லாஹ்! இவன் ஒரு சிலை வணக்கம் செய்பவன்.  காலங்காலமாக அவன் தன் சிலையை அழைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவைகள் பதில் தர வில்லை. அவனையே அறியாமல் நாவு தடுமாறி யா ஸமத் என்று சொன்னதற்காக நீ பதில் கூறுகிறாயே!  எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது என்றார்கள். அதற்கு அல்லாஹுத்தஆலா இவன்  يا صنم  என்று பல தடவை அழைத்தான்.ஆனால் அவைகள் பதில் கூற வில்லை. ஆனால் ஒரு தடவை தான் என்னை அழைத்தான். நான் பதில் சொல்லி விட்டேன். நானும் பதில் சொல்ல வில்லையானால் எனக்கும் அந்த சிலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?என்று கேட்டான். (நுஜ்ஹதுல் மஜாலிஸ்)

الاسلام يهدم ما كان قبله

இஸ்லாம் அதற்கு முன்பிருந்த அனைத்து பாவங்களை தகர்த்து விடும். (முஸ்லிம் ; 121)

இஸ்லாம் பாவங்களை மட்டும் தான் அழிக்கும். நன்மைகளை அழிக்காது.

عَنْ حَكِيمِ بنِ حِزامٍ رَضِيَ اللَّهُ عنْه، قالَ: قُلتُ: يا رَسولَ اللَّهِ، أرَأَيْتَ أشْياءَ كُنْتُ أتَحَنَّثُ بها في الجاهِلِيَّةِ مِن صَدَقَةٍ أوْ عَتاقَةٍ، وصِلَةِ رَحِمٍ، فَهلْ فيها مِن أجْرٍ؟ فقالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أسْلَمْتَ علَى ما سَلَفَ مِن خَيْرٍ

நபி அவர்களின் கரம் பற்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஹகீம் இப்னு ஹிஸாம் ரலி அவர்கள் நபி அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே!அறியாமை காலத்தில் நான் தர்மம்,அடிமை யை உரிமை விடுதல்,சொந்தங்களை அரவணைக்குதல் போன்ற நற்காரியங்களை செய்துள்ளேன்.இப்போது நான் இஸ்லாமாகி விட்டேன்.அந்த நற்காரியங்களின் நிலை என்ன?என கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்,(அவை வீணாகாமல்)  அந்த நன்மையுடன் தான் இஸ்லாத்திற்கு வந்துள்ளீர் என்றார்கள். (புகாரி ; 1436)

இப்படி அல்லாஹ் தன் அடியார்கள் மீது கொண்டிருக்கிற கருணையின் விசாலத்திற்கு எண்ணற்ற செய்திகள் உண்டு. அல்லாஹ் நம் அனைவரையும் அவன் கருணையால் நரகிலிருந்து பாதுகாத்து மேலான சொர்க்கத்தில் இடமளிப்பானாக.

 

فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمة لم ييأس من الجنة،

4 comments:

  1. بارك الله وتقبل الله منك...آمين

    ReplyDelete
  2. فرق بين الصنم والعبد
    மௌலானா இந்த இடத்தில் சிறு தவறு என்று தெரிகிறதே எனக்கும் சிலைக்கும் என்ன வித்தியம் என்றுதான் அதில் உள்ள அர்த்தம் ஆனால் இதில் உள்ளப்படி படித்தால் எனக்கும் அடியானுக்கும் என்ன வித்தியாஷம் என்றுதானே பொருள் வரும் நான் கூறியது தவறு இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது கரைக்ட் தான் மவ்லானா. அரபி வார்த்தையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

      Delete
    2. தவறை சுட்டிக் காட்டியதற்கு ஜஸாக்குமுல்லாஹ்

      Delete