Tuesday, April 19, 2022

நன்றி மறப்பது நன்றன்று

 

لَقَدْ كَانَ لِسَبَاٍ فِىْ مَسْكَنِهِمْ اٰيَةٌ جَنَّتٰنِ عَنْ يَّمِيْنٍ وَّشِمَالٍ کُلُوْا مِنْ رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوْا لَهٗ  بَلْدَةٌ طَيِّبَةٌ وَّرَبٌّ غَفُوْرٌ‏‏

மெய்யாகவே "ஸபா"வாசிகள் வசித்திருந்த இடத்தில் அவர்களுக்கு நல்லதோர் அத்தாட்சியிருந்தது. (அதன் வழியாகச் செல்பவர்களுக்கு) வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரு சோலைகள் இருந்தன. "உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்தவைகளைப் புசித்துக்கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (இம்மையில்) வளமான நகரமும், (மறுமையில்) மிக்க மன்னிப்புடைய இறைவனும் (உங்களுக்கு) உண்டு" (எனவும் கூறப்பட்டது).  (அல்குர்ஆன் : 34:15)

لقد كان من عظيم ما أنعم الله - تعالى - به عليهم، أنهم كُفُوا مؤونة السفر ومشقته، ورُفِع عنهم عنَتُ الطريقِ ولصوصه، فارتاحوا في سفرهم وأَمِنوا، وسببُ ذلك اتِّصالُ القرى بينهم وبين الأرض المباركة، فكانوا يسافرون من اليمن إلى الشام في أمن وطمأنينة، لا يحملون للسفر زادًا لوفرته في طريقهم، ولا يعدون له عدة؛ بل يسيرون فيه ما شاؤوا، ويستريحون في القرى التي في طريقهم، وهي على مراحل لا تنقطع عنهم؛ ﴿ وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ القُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ ﴾ [سبأ: 18].

யமனில் வாழ்ந்த ஒரு அழகான பசுமையான கிராமம் ஸபா. அவர்களது ஊரைச்சுற்றி இரு புறமும் பசுமையான தோட்டந்துரவுகள், நீர் தேக்கங்கள்,அடர்ந்த மரங்கள், அதிலே இனிப்பான பழங்கள், நல்ல வசதியான இருப்பிடங்கள் என ரொம்ப ரொம்ப வளமாகவும் செழிப்பாகவும் வாழ்ந்த பூமி அது. தூய்மையான உணவு, நீர், காற்று என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையையும் அல்லாஹ் நிறைவாகவும் பசுமையாகவும் கொடுத்திருந்தான்.

மட்டுமல்ல அவர்களது பயணங்களை மிக மிக லேசானதாகவும் அச்சமற்றதாகவும் ஆக்கியிருந்தான். அவர்கள் வாழ்ந்த யமனிற்கும் ஷாமிற்கும் இடையில் அடுத்தடுத்து நிறைய ஊர்களை அல்லாஹ் அமைத்துக் கொடுத்தான். அதனால் அவர்கள் செல்லும் பாதையிலே அவர்களின் அனைத்து தேவைகளையும் அவர்களால் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். நீண்ட தூர பயணமாக இருக்கிற ஷாமிற்கு செல்வதாக இருந்தால் அவர்கள் எந்த தயாரிப்புமின்றி சென்று வந்து விடலாம்.இடையில் நிறைய ஊர்கள் இருப்பதினால் பயணம் அவர்களுக்கு இலகுவாக இருப்பதோடு அச்சமற்றதாகவும் அமைந்திருந்தது.

وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا قُرًى ظَاهِرَةً وَّقَدَّرْنَا فِيْهَا السَّيْرَ  سِيْرُوْا فِيْهَا لَيَالِىَ وَاَيَّامًا اٰمِنِيْنَ‏

அவர்களுடைய ஊருக்கும் நாம் அருள்புரிந்த (ஸிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி அவைகளில் பாதைகளையும் அமைத்து "இரவு பகல்  எந்த நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பிரயாணம் செய்யுங்கள்" (என்று கூறியிருந்தோம்). (அல்குர்ஆன் : 34:18)

இவ்வாறு ஏராளமான நிஃமத்துக்களைக் கொடுத்து அதற்காக  அல்லாஹ்விற்கு அதிகம் ஷுக்ர் செய்யும் படி கூறினான். ஆனால் அவர்கள் நன்றி மறந்தார்கள். அதனால் அவர்களுக்கு அல்லாஹ் அழிவை ஏற்படுத்தினான்.

فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَىْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَىْءٍ مِّنْ سِدْرٍ قَلِيْلٍ

எனினும், அவர்கள் (அதனைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தான தொரு ஏரியை உடைக்கக் கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பி வைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களையும், சில இலந்தை மரங்களையும் கொண்ட தோப்புகளாக மாற்றிவிட்டோம். (அல்குர்ஆன் : 34:16)

அல்லாஹ் நம் வாழ்க்கையில் நமக்கு எண்ணற்ற ஏராளமான நிஃமத்துகளை செய்திருக்கிறான். அல்லாஹ்வினுடைய கோடிக் கணக்கான நிஃமத்துகளை நாம் அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நம் உடலிலேயே ஆயிரம் நிஃமத்துகள் இருக்கிறது. ஐம்புலன்களைத் தந்திருக்கிறான். ஜோடியான உறுப்புக்களைக் கொடுத்திருக்கிறான். உள்ளுறுப்புகள் வெளி உறுப்புக்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன. உடலிலிருந்து அனைத்து கழிவுகளும் வெளியாகி மனிதன் ஆரோக்கியாக வாழ்வதற்குத் தேவையான 9 துவாரங்களை உடலில் அல்லாஹ்கொடுத்திருக்கிறான், அதன் வழியே வெவ்வேறு தன்மையுடைய கழிவுகள் வெளியேறும்படி அமைத்திருக்கிறான். இவ்வாறு நம் உடலை நாம் மேலோட்டமாக பார்த்தாலே அல்லாஹ்வின் எண்ணற்ற நிஃமத்துக்களை அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அல்லாஹ்வின் கோடிக்கணக்கான நிஃமத்துக்களை நாம் ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் சாதாரணமாக குடிக்கும் ஒரு மிடர் தண்ணீரும் மிகப்பெரிய நிஃமத். அல்லாஹ்வின் உதவி இல்லாமல் ஒரு மிடர் தண்ணீர் நம் உடலுக்குள் செல்லாது. ஒரு மிடர் தண்ணீர் நம் உடலை விட்டும் வெளியேறாது.

دخل ابن السماك على الرشيد، فاستسقى الرشيد ماءً، فقال له ابن السماك : بالله يا أمير المؤمنين لو منعت هذه الشربة بكم تشتريها ؟ قال : بملكي , قال : لو منعت خروجها ، بكم كنت تشتريه ؟ قال : بملكي , فقال : إن ملكًا قيمته شربة ماء لجدير ألا ينافس عليه» .

ஒருமுறை இப்னுஸ் ஸம்மாக் என்ற மாமேதை கலீஃபா ஹாரூன் ரஷீத் பாதுஷா அவர்களிடம் வருகிறார்கள்.பாதுஷா அவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் குவலையை வாயை நோக்கி உயர்த்திக் கொண்டிருப்பதைக் கண்ட இப்னுஸ் ஸம்மாக் அவர்கள் கலீஃபா அவர்களே! சற்று தாமதியுங்கள் என்று சொல்லி உள்ளே வந்து அமர்ந்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ; இந்த தண்ணீர் குடிக்க நீங்கள் தடை செய்யப்பட்டால், இந்த தண்ணீர் உங்களுக்கு மறுக்கப்பட்டால் அதை என்ன விலை கொடுத்து நீங்கள் வாங்குவீர்கள் ? என்றார்கள்.அப்போது என் ராஜாங்கத்தின் பாதியைக் கொடுத்து அதை வாங்குவேன் என்று கலீஃபா அவர்கள் பதில் சொன்னார்கள்.சரி இப்போது நீங்கள் குடிக்கலாம் என்று இப்னுஸ் ஸம்மாக் அவர்கள் கூற கலீஃபா அவர்களும் அதை குடிக்கிறார்கள்.இப்போது அல்லாஹ்வின் மீது சத்தியமாக இன்னொரு கேள்வி கேட்கிறேன் ; குடித்த அந்த நீர் வெளியே வர வில்லையென்றால் அதற்காக எவ்வளவு செலவு செய்வீர்கள் ? என்றார்கள்.அதற்கு கலீஃபா அவர்கள் என் முழூ ராஜாங் கத்தையும் கொடுத்து அதற்கு மருத்துவம் பார்ப்பேன் என்று கூறினார் கள். அப்போது இப்னு ஸம்மாக் ரஹ் அவர்கள் உங்களின் இந்த பிரமாண்டமான ராஜாங்கம் இந்த ஒரு மிடர் தண்ணீருக்குக் கூட ஈடாகாது என்றார்கள்.

இன்றைக்கு நாம் சிலரைப் பார்க்கிறோம். எல்லா வசதியும் இருக்கிறது. கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது. ஆனால் அவரால் ஒரு பிடி உணவை சாப்பிட முடியாது. இன்னும் சில பேருக்கு அவர்களின் உடம்பிலிருந்து கழிவுகள் வெளியேறாது. எனவே நாம் சாதாரணமாக பார்க்கின்ற ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் மிகப்பெரிய நிஃமத்துக்கள் என்பதை உணர வேண்டும்.

மகான்மார்களில் ஒருவர் கூறுவார்கள் ; நான் குளிர்ந்த நீரை அருந்தினால் என் மனதின் அடி ஆழத்திலிருந்து அல்லாஹ்வுக்கு ஷுக்ரு (நன்றி செலுத்துதல்) வெளிப்படுகிறது.

எனக்கு வரும் ஒவ்வொரு நோயிலும் நான்கு நிஃமத்துகளை உணருவேன் என்று கூறுகிறார்கள் இப்னு உமர் {ரலி}அவர்கள். 1,என்னை விட மோசமானவனைப் பார்த்து அவனை விட அல்லாஹ் நம்மை ராஹத்தாக்கி இருக்கிறானே என்று அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்வேன். 2,எந்த நோய் வந்தாலும் பொருமையை மேற்கொள்வேன். எனவே அந்த பொருமையைக் கொடுத்த அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்வேன். 3,எனக்கு எந்த நோய் வந்தாலும் அது என் தீனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.அதற்காக அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்வேன். 4,எந்த நோய் வந்தாலும் அதற்கான நன்மையை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பேன். எனவே அந்த எண்ணத்தைக் கொடுத்த அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்வேன் என்று கூறுகிறார்கள்.

இன்றைக்கு நிஃமத்துக்களை எண்ணிப் பார்ப்பவர்களும் குறைவு. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவர்களும் மிகக் குறைவு தான்

يَعْمَلُوْنَ لَهٗ مَا يَشَآءُ مِنْ مَّحَارِيْبَ وَتَمَاثِيْلَ وَجِفَانٍ كَالْجَـوَابِ وَقُدُوْرٍ رّٰسِيٰتٍ  اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا  وَقَلِيْلٌ مِّنْ عِبَادِىَ الشَّكُوْرُ

அ(ன்றி, ஜின் ஆகிய)வைகள் ஸுலைமான் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், (பெரிய பெரிய) தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத பெரிய (பெரிய) "தேகு" (சமையல் பாத்திரங்)களையும் செய்து கொண்டிருந்தன. (அவருடைய குடும்பத்தினரை நோக்கி) "தாவூதுடைய சந்ததிகளே! இவைகளுக்காக நீங்கள் (நமக்கு)   நன்றி செலுத்திக் கொண்டிருங்கள்" (என்று கட்டளையிட்டோம்). எனினும் என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சொற்பமாகவே இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் : 34:13)

مر سيدنا عمر بن الخطاب رضي الله عنه ذات يوم برجل في السوق، فإذا بالرجل يدعو ويقول:(اللهم اجعلني من عبادك القليل. اللهم اجعلني من عبادك القليل) فقال له سيدنا عمر : من أين أتيت بهذا الدعاء؟ فقال الرجل: إن الله يقول في كتابه العزيز: (وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ). فبكى سيدنا عمر وقال : كل الناس أفقه منك يا عمر. اللهم اجعلنا من عبادك القليل

உமர் ரலி அவர்கள் ஒரு நாள் கடைவீதியில் ஒரு மனிதரை கடந்து சென்றார்கள். அவர் யா அல்லாஹ் உன்னுடைய அந்த குறைவான அடியார்களில் என்னையும் ஆக்குவாயாக என்று துஆ செய்து கொண்டிருந்தார். உமர் ரலி அவர்கள் அதற்கு விளக்கம் கேட்ட போது எனினும் என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சொற்பமாகவே இருக்கின்றார்கள் என்ற வசனத்தை ஓதினார். அதைக் கேட்டு உமர்  ரலி அவர்கள் அழுது கொண்டே அனைவரும் உன்னை விட அதிகம் மார்க்கம் தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று தன்னைப் பார்த்து சொன்னார்கள். (குர்துபீ)

عن بريدة أن رسول الله صلى الله عليه وسلم كان يقول: اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا.

நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் செய்த மிக முக்கியமான துஆக்களில் ஒன்று ; யா அல்லாஹ் என்னை அதிகம் நன்றி செலுத்துபவனாகவும் அதிகம் பொறுமை கொள்பவனாகவும் ஆக்கு. என்னை என் பார்வையில் சிறியவனாகவும் மக்களின் பார்வையில் பெரியவனாகவும் ஆக்கு. (பஜ்ஜார்)

இறைவன் நமக்கு இதுவரை செய்த இப்போதும் செய்து கொண்டிருக்கிற இனி நம் மரணம் நமக்கு செய்ய இருக்கிற உபகாரங்களுக்கு  நன்றி செலுத்துவது என்பது ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய மிகச்சிறந்த பண்புகளில் ஒன்று.

நன்றி செலுத்தியதால் உயர்வு பெற்ற வரலாறுகளும்,நன்றி மறந்ததினால் அழிந்து போன வரலாறுகளும் குர்ஆனில் நிறையவே உண்டு.இப்ராஹீம் நபியை தேர்வு செய்தோம் என்று சொல்லும் இடத்தில் அதற்கான காரணங்களை கூறும்போது அவர்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார் என்று நஹ்ல் அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதேபோன்று நன்றி மறந்த பல சமுதாயங்களை இறைவன் அழித்த வரலாறுகளையும் குர்ஆனில் அநேக இடங்களில் காணமுடியும். ஸபாவாசிகளும் இதற்கு உதாரணம்.

நன்றி என்பது மூன்று அமைப்பில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உள்ளத்தால் நன்றி செலுத்த வேண்டும், நாவால் நன்றி செலுத்த வேண்டும்,நம் உடல் உறுப்புக்களால் நன்றி செலுத்த வேண்டும்,அல்லாஹ்வின் நிஃமத்துக்களை நிஃமத் என்று நம்ப வேண்டும்.இது உள்ளத்தால் செய்யும் நன்றி.அதற்காக அல்லாஹ்வை புகழ வேண்டும்.இது நாவால் செய்யும் நன்றி.அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை செய்ய வேண்டும்.இது உடல் உறுப்புக்களால் செய்யும் நன்றி. இந்த மூன்றும் இருந்தால் தான் முழுமையாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாக ஆக முடியும்.

عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له). رواه مسلم.

ஒரு முஃமினுடைய விஷயம் ஆச்சரியம் தான்.அவனுக்கு நடக்கிற எல்லா விஷயமும் அவனுக்கு நல்லதாக ஆகி விடுகிறது.அவனுக்கு ஏதாவது சந்தோஷமான விஷயம் நடந்தால் அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்கிறான்.அதுவும் அவனுக்கு நல்லதாக ஆகி விடுகிறது.அவனுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் அப்போது பொறுமையாக இருக்கிறான்.அதுவும் அவனுக்கு நல்லதாக ஆகி விடுகிறது. (முஸ்லிம்)

No comments:

Post a Comment