Monday, April 18, 2022

தனித்துவம் பெற்ற பத்ர் ஸஹாபாக்கள்

 

இன்று ரமலான் பிறை 17. இஸ்லாத்தின் முதல் போர்க்களமான பத்ரில் கலந்து கொண்ட வீர தியாகிகளின் நினைவு தினம் இன்று. பத்ர் இஸ்லாமிய வரலாற்றில் நடந்த மிக முக்கியமான, இஸ்லாமிய சரித்திரத்தில் தனிப்பெரும் முத்திரை பதித்த, இஸ்லாத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த, இஸ்லாம் உலக அரங்கில் தடம் பதிப்பதற்கும்  இன்று வரை வளர்ந்தோங்குவதற்கும் இனி கியாமத் வரை  நிலை நிற்பதற்கும் காரணமான ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு.

நமக்கெல்லாம் தெரியும் பத்ரில் ஸஹாபாக்கள் 313 பேர். ஆனால் அதை விட இரண்டு மடங்கு அதிகம். பத்ரின் இரவில் நபி அவர்கள் அல்லாஹ்விடம் கரம் ஏந்தி வெற்றிக்காக துஆ செய்தார்கள்.

"اللهم أنجز لي ما وعدتني، اللهم آت ما وعدتني، اللهم إن تهلك هذه العصابة من أهل الإسلام لا تعبد في الأرض

இறைவா! எனக்கு வாக்களித்ததை எனக்குக் கொடு.இந்த சிறிய படையை நீ அழித்து விட்டால் பூமியில் நீ வணங்கப்பட மாட்டாய் என்று நபி அவர்கள் பிரார்த்தித்தார்கள். (முஸ்னது அஹ்மது ; 1/112)

இதோ இந்த போரில் என்னோடு வந்திருப்பவர்கள் தான் இஸ்லாத்தின் ஆதாரம். இஸ்லாத்தின் அஸ்திவாரம். இவர்களைக் கொண்டு தான் இஸ்லாத்தை கட்டியெழுப்ப வேண்டும். இவர்கள் இல்லையென்றால் உன்னை நினைப்பதற்கும் துதிப்பதற்கும் அழைப்பதற்கும் தொழுவதற்கும் உன்னைப்பற்றி பேசுவதற்கும் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று அல்லாஹ்விடம் அழுது மன்றாடி பிரார்த்தித் தார்கள். அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தான்.

பத்ர் தான் இஸ்லாத்திற்காக விதை தூவப்பட்ட இடம். அது தான் இன்று செடியாக மரமாக வளர்ந்து உலகம் முழுவதும் பரவி விரிந்து வியாபித்து நிற்கிறது.

قال المؤرخون ان غزوة بدر شهادة الميلاد الحقيقي لدولة الإسلام.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் உண்மையான தோற்றம் உண்மையான பிறப்பு பத்ர் போர் தான் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَىْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَ لِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ‌  وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு போரில் கிடைத்த எந்தப் பொருளிலும் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரித்தானது. உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன், இரு படைகளும் சந்தித்து (முடிவான) தீர்ப்பளித்த (பத்ரு) நாளில் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை அவன்தான் இறக்கி வைத்தான் என்பதையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 8:41)

قال ابن كثير: ينبه تعالى على نعمته وإحسانه إلى خلقه بما فرق به بين الحق والباطل ببدر، ويُسمى الفرقان لأن الله أعلى فيه كلمة الإيمان على كلمة الباطل وأظهر دينه ونصر نبيه وحزبه.

மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் தன் அடியார்களுக்கு செய்த மாபெரும் நிஃமத்தையும் உபகாரத்தையும் குறிப்பிடுகிறான். யவ்முல் ஃபுர்கான் என்று சொல்லப்படுகிற பத்ரின் மூலம் தான் அல்லாஹ் சத்தியம் எது அசத்தியம் எது என்பதை உலகிற்கு பிரித்துக் காட்டினான். (இப்னுகஸீர்)

இஸ்லாத்தின் மிகப்பெரும் ஆதாரமாக அஸ்திவாரமாக ஆணிவேராக இஸ்லாம் நிலை பெருவதற்கு காரண கர்த்தாக்களாக பத்ரிய்யீன்கள் இருப்பதால் தான் ஸஹாபாக்களிலேயே  அவர்களுக்கு தனி அந்தஸ்தும் மரியாதையும் தரப்படுகிறது.நபி அவர்களின் தோழர்களிலேயே மிக உயர்ந்தவர்களாக மேலானவர்களாக அவர்கள் கருதப்பட்டார்கள்.

قال: جَاءَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صلى اللهُ عليه وسلم فَقَالَ: "مَا تَعُدُّونَ أَهْلَ بَدْرٍ فِيكُمْ؟" قَالَ: مِنْ أَفْضَلِ الْمُسْلِمِينَ، - أَوْ كَلِمَةً نَحْوَهَا - قَالَ: وَكَذَلِكَ مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْمَلَائِكَةِ[5].

ஜிப்ரயீல் அலை அவர்கள் நபி அவர்களிடம் பத்ர் தோழர்களை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள் என்று கேட்டார்கள். அவர்கள் தான் முஸ்லிம்களில் மிகச்சிறந்தவர்கள் என்றார்கள். அப்போது ஜிப்ரயீல் அலை அவர்கள் அவ்வாறே அவர்களுக்கு உதவி செய்வதற்காக பத்ரில் கலந்து கொண்ட மலக்குகள் தான் எங்களில் சிறந்தவர்கள் என்று கூறினார்கள்.

ஸஹாபாக்களில் சிறந்தவர்கள் என்பதினால் அவர்களுக்கு எல்லா நிலைகளிலும் அந்தஸ்து தரப்பட்டது. நபி அவர்களும் பத்ர் ஸஹாபாக்களுக்கு எல்லா நிலையிலும் முன்னுரிமையளித்தார்கள். ஸஹாபாக்களும் அதையே பின்பற்றினார்கள்.

கண்ணியத்திற்குரிய கலீஃபாக்கள் போர்க்களத்திலிருந்து கிடைத்த கனீமத் பொருளை பங்கிடுகின்ற போது மற்றவர்களை விட பத்ரீன்களுக்கு அதிகமாக கொடுப்பார்கள்.

அவர்களுக்கான ஜனாஸா தொழுகையில் கூட கூடுதலான தக்பீர்களை சொல்வார்கள்.

أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ صَلَّى عَلَى سَهْلِ بْنِ حُنَيْفٍ ، فَكَبَّرَ عَلَيْهِ سِتًّا ، ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ : إِنَّهُ مِنْ أَهْلِ بَدْرٍ

ஹள்ரத் அலி ரலி அவர்கள் ஸஹ்ல் பின் ஹுனைஃப் ரலி அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்திய போது ஆறு தக்பீர்கள் சொன்னார்கள். பின்பு மக்களை நோக்கி திரும்பி இவர் பத்ரில் கலந்து கொண்டவர் என்றார்கள்.

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّهُ كَانَ يُكَبِّرُ عَلَى أَهْلِ بَدْرٍ سِتًّا وَعَلَى أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسًا , وَعَلَى سَائِرِ النَّاسِ أَرْبَعًا

ஹள்ரத் அலி ரலி அவர்கள் பத்ரில் கலந்து கொண்டவர்களின் ஜனாஸா தொழுகையில் ஆறு தக்பீர்களையும் மற்ற நபித்தோழர்களின் ஜனாஸா தொழுகையில் ஐந்து தக்பீர்களையும் மற்றவர்களின் ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்களையும் சொல்பவர்களாக இருந்தார்கள். (முஸன்னஃப் லிஇப்னி அபீ ஷைபா)

மறுமையிலும் மிக உயர்ந்த அந்தஸ்து அவர்களுக்கு உண்டு.

أَنَّ أُمَّ الرُّبَيِّعِ بِنْتَ الْبَرَاءِ وَهِيَ أُمُّ حَارِثَةَ بْنِ سُرَاقَةَ أَتَتِ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ: أَلَا تُحَدِّثُنِي عَنْ حَارِثَةَ؟ وَكَانَ قُتِلَ يَوْمَ بَدْرٍ، أَصَابَهُ سَهْمٌ غَرْبٌ، فَإِنْ كَانَ فِي الْجَنَّةِ صَبَرْتُ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ اجْتَهَدْتُ عَلَيْهِ فِي الْبُكَاءِ، قَالَ: "يَا أُمَّ حَارِثَةَ! إِنَّهَا جِنَانٌ فِي الْجَنَّةِ، وَإِنَّ ابْنَكِ أَصَابَ الْفِرْدَوْسَ الْأَعْلَى"[6].

பத்ரில் உயிர்த்தியாகம் அடைந்த ஹாரிஸா ரலி அவர்களின் தாயார் உம்மு ஹாரிஸா ரலி அவர்கள் நபி அவர்களிடம் வந்து என் மகனைப் பற்றி நீங்கள் கூறக்கூடாதா அவர் சுவனத்தில் இருந்தால் நான் சகித்துப் பொறுமை கொள்வேன். இல்லையெனில் அவருக்காக அதிகம் அழுதி பிரார்த்திப்பேன் என்று கேட்டார்கள். அப்போது நபி அவர்கள் உங்கள் மகன் ஹாரிஸா ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸைப் பெற்று விட்டார் என்றார்கள். (புகாரி ; 2809)

حديث عَلِيٍّ رضي الله عنه قَالَ: بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَا وَالزُّبَيْرَ وَالْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ قَالَ: «انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ، فَإِنَّ بِهَا ظَعِينَةَ، وَمَعَهَا كِتَابٌ، فَخُذُوهُ مِنْهَا». فَانْطَلَقْنَا تَعَادَى بِنَا خَيْلُنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى الرَّوْضَةِ فَإِذَا نَحْنُ بِالظَّعِينَةِ فَقُلْنَا: أَخْرِجِي الْكِتَابَ فَقَالَتْ: مَا مَعِي مِنْ كِتَابٍ فَقُلْنَا: لَتُخْرِجَنَّ الْكِتَابَ أَوْ لَنُلْقِيَنَّ الثِّيَابَ فَأَخْرَجَتْهُ مِنْ عِقَاصِهَا فَأَتَيْنَا بِهِ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا فِيهِ: مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ، إِلَى أُنَاسٍ مِنَ الْمُشْرِكِينَ، مِنْ أَهْلِ مَكَّةَ، يُخْبِرُهُمْ بِبَعْضِ أَمْرِ رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا حَاطِبُ مَا هذَا؟» قَالَ: يَا رَسُولَ اللهِ لاَ تَعْجَلْ عَلَيَّ إِنِّي كُنْتُ امْرَءًا مُلْصَقًا فِي قُرَيْشٍ، وَلَمْ أَكُنْ مِنْ أَنْفُسِهَا وَكَانَ مَنْ مَعَكَ مِنَ الْمُهَاجِرِينَ، لَهُمْ قَرَابَاتٌ بِمَكَّةَ يَحْمُونَ بِهَا أَهْلِيهِمْ وَأَمْوَالهُمْ؛ فَأَحْبَبْتُ، إِذ فَاتَنِي ذَلِكَ مِنَ النَّسَبِ فِيهِمْ، أَنْ أَتَّخِذَ عِنْدَهُمْ يَدًا يَحْمُونَ بِهَا قَرَابَتِي وَمَا فَعَلْتُ كُفْرًا وَلاَ ارْتِدَادًا، وَلاَ رِضًا بِالْكُفْرِ بَعْدَ الإِسْلاَمِ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ صَدَقَكُمْ». فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللهِ دَعْنِي أَضْرِبْ عُنُقَ هذَا الْمُنَافِقِ. قَالَ: «إِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا، وَمَا يُدْريكَ لَعَلَّ اللهَ أَنْ يَكُونَ قَدِ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ، فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ».

ஹள்ரத் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; இறைத்தூதர் அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் நீங்கள் ரவ்ளத்து காக்என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் ரவ்ளாஎனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), ‘கடிதத்தை வெளியே எடுஎன்று கூறினோம். அவள், ‘என்னிடம் கடிதம் எதுவுமில்லைஎன்று கூறினாள். நாங்கள், ‘ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர் அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ ரலி அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர் அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர் அவர்கள், ‘ஹாத்திபே! என்ன இது?’ என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி), அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்க வில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்ய வில்லைஎன்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர் அவர்கள் இவர் உங்களிடம் உண்மை பேசினார்என்று கூறினார்கள். உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்என்று கூறினார்கள். நபி அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்என்று கூறி விட்டிருக்கலாம்என்றார்கள். (புகாரி ; 4274)

 قال ابن حجر: "وهي بشارة عظيمة لم تقع لغيرهم"[11].

நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள் என்ற வார்த்தை பத்ர் ஸஹாபாக்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் சொல்லப்பட வில்லை என்று இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள் உங்களின் எல்லா குற்றங்களும் மன்னிக்கப்படும் நீங்கள் குற்றமற்றவர்கள் என்று வேறு யாருக்கும் சொல்லாத வார்த்தையை  இறைவன் பத்ர் ஸஹாபாக்கள் விஷயத்தில் சொல்லி அவர்களை கண்ணியப்படுத்தினான். அதனால் தான் பத்ர் ஸஹாபாக்கள் அன்றைக்கும் போற்றப்பட்டார்கள். இன்றைக்கும் போற்றப்படுகிறார்கள்.

ரமலான் 17 ம் நாள் இன்றைய இரவு அவர்களின் நினைவு தினமாக உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது. இஸ்லாத்தின் வெற்றிக்கும் இஸ்லாம் நிலைப்பதற்கும் காரணமாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மறு பிறப்பாக இருக்கிற அவர்களை நாம் நினைவு கூறுவோம்.

 

No comments:

Post a Comment