Sunday, March 26, 2023

கல்நெஞ்சும் கறையும்

 

وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَـقِّ‌ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏

தவிர, (இத்தகையவர்களில் பலர் நம்முடைய) தூதர் மீது அருளப்பட்டவைகளை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர்கள். அன்றி "எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர். (அல்குர்ஆன் : 5:83)

அல்லாஹ் நாம் வாழ்வில் பின்பற்றி நடக்க அல்குர்ஆனை வழங்கியிருக்கிறான்.அல்லாஹ் நபிமார்களுக்கு கொடுத்த முஃஜிஸாக்களில் மாபெரும் முஃஜிஸாவாக, நபிமார்களுக்கு வழங்கிய அற்பதங்களில் பேரற்புதமாக குர்ஆன் இருக்கிறது. அன்றைக்கு மக்கத்து காஃபிர்கள் அண்ணல் நபி அவர்களிடம் "நீங்கள் உண்மையில் நபியாக இருந்தால் இதற்கு முன்னால் இருந்த நபிமார்கள் காட்டிய அற்புதங்களைப் போன்று நீங்களும் எங்களுக்கு அற்புதங்களைக் காட்டுங்கள்"  என்று இடை விடாமல் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அல்லாஹ் சொன்னான்.

اَوَلَمْ يَكْفِهِمْ اَنَّاۤ اَنْزَلْنَا عَلَيْكَ الْكِتٰبَ يُتْلٰى عَلَيْهِمْ‌ اِنَّ فِىْ ذٰلِكَ لَرَحْمَةً وَّذِكْرٰى لِقَوْمٍ يُّؤْمِنُوْنَ

(நபியே!) இவ்வேதத்தை மெய்யாகவே நாம் உங்கள் மீது இறக்கி வைத்திருக்கிறோம் என்பதற்கு அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் இவ்வேதமே போதுமான அத்தாட்சியல்லவா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கின்றது;  (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 29:51)

அல்குர்ஆனை இறக்கியிருக்கிறேன். அது அவர்களுக்கிடையே ஓதப்படுகிறது. இதை விட வேறென்ன அற்புதத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அல்லாஹ் கேட்கிறான். அல்குர்ஆன் ஓதப்படுவதே மிகப்பெரிய அற்புதம்.

உலக வரலாற்றில் எத்தனையோ கரடுமுரடான உள்ளம் கொண்டவர்களை, கல்நெஞ்சம் கொண்டவர்களை, குர்ஆனுக்கு எதிராக பேசியவர்களை, குர்ஆனுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களை தன் வசீகர வார்த்தையால் ஈர்த்து அவர்களின் கண்களிலும் கண்ணீர் வர வைத்து விடும்.

بعث النجاشي إلى النبيّ صلى الله عليه وسلم اثنى عشر رجلا يسألونه ويأتونه بخبره، فقرأ عليهم رسول الله صلى الله عليه وسلم القرآن، فبكوا

قالَ ابْنُ عَبّاسٍ: يُرِيدُ النَّجاشِيَّ وأصْحابَهُ؛ وذَلِكَ لِأنَّ جَعْفَرًا الطَّيّارَ قَرَأ عَلَيْهِمْ سُورَةَ مَرْيَمَ، فَأخَذَ النَّجاشِيُّ تَبِنَةً مِنَ الأرْضِ وقالَ: واللَّهِ ما زادَ عَلى ما قالَ اللَّهُ في الإنْجِيلِ مِثْلَ هَذا، وما زالُوا يَبْكُونَ حَتّى فَرَغَ جَعْفَرٌ مِنَ القِراءَةِ،

நஜ்ஜாசி பாதுஷா - அபிசீனிய மன்னர் அந்த நேரத்தில் இஸ்லாத்தை ஏற்க வில்லை. திருமறைக்குர்ஆனில் மர்யம் என்ற அத்தியாயம் அவருக்கு முன்னிலையில் ஓதப்படுகிறது. ஜாபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஓதினார்கள். அதைக் கேட்ட  பாதுஷா அவர்கள் அப்படியே அழுகிறார். அங்கிருந்த சபையோர்களும்,எல்லா பாதிரிமார்களும் அழுகிறார்கள்.

அதன் பின் அந்த மன்னர் நபி அவர்களிடத்தில் ஒரு தூதுக்குழுவை அனுப்பி வைக்கிறார்கள்.அதிலே 70 பேர் கொண்ட கிருஸ்தவ அறிஞர்கள் அங்கே செல்கிறார்கள். அப்பொழுது நபி அவர்கள், யாஸின் என்ற அத்தியாயத்தை அவர்களிடத்தில் அழகாக ஓதினார்கள். அதை ஓதி முடிக்கிற போது அந்த 70 கிருஸ்தவ அறிஞர்களும் அதைக் கேட்டு மனமுறுகி கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். இது எங்கள் நபி ஈஸா அலை அவர்களுக்கு இறங்கிய வேதத்தைப் போலல்லவா! இருக்கிறது என்று சொல்லி விட்டு இறைவனையும்,இறைத்தூதர் நபி அவர்களையும் நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றார்கள்.

 

 

குர்ஆனுடைய வார்த்தைகளைக் கேட்டு மயங்கிய அதில் தன் உள்ளங்களைப் பரிகொடுத்த அதைக் கேட்டு மெய்மறந்து போன எத்தனையோ பேர்களை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற காரிகளில் ஒருவர் அப்துல் பாஸித். அவருடைய கிராஅத்தைக் கேட்காத முஸ்லிம்கள் இருக்க மாட்டார்கள். உலகப் பிரசித்த பெற்ற அந்த காரி அப்துல் பாசித் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது ;  குர்ஆனை நீங்கள் உலகெங்கும் கொண்டு சேர்த்து விட்டீர்கள். குர்ஆன் ஒரு அற்புதம் என்பதில் ஏதாவது அனுபவம் உங்களுக்கு உண்டா? என்று கேட்டனர். அப்போது அவர்கள் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. அந்த நேரம் எகிப்தின் அதிபராக ஜமால் அப்துன் நாஸர் அவர்கள் இருந்தார்கள். அவர் ரஷ்யாவுக்கு செல்கிறார். ரஷ்யா கம்யூனிசத்தின் இரும்புப் பிடியில் இருந்த கால காட்டம் அது. அந்த நேரத்தில் அப்துன் நாசர் அவர்கள் ரஷ்யாவினுடைய சுற்றுப் பயணத்திற்கு என்னையும் அழைத்துச் சென்றார்கள்.

அங்கே கம்யூனிசத்தினுடைய முக்கியமான தலைவர்களெல்லாம் கூடி இருக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சியிலே ஜமால் அப்துன் நாஸர் அவர்கள் ;  என்னோடு வந்திருக்கிற இந்த காரி அவர்கள் உங்களுக்கு மத்தியிலே கொஞ்சம் நேரம் ஓதுவார்கள் என்று கூற அவர்கள் அனுமதித்தார்கள்.

எந்த அத்தியாயம் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வாழ்விலே புரட்சியை ஏற்படுத்தியதோ, அவர்களுடைய வாழ்கையை புரட்டிப் போட்டதோ அந்த தாஹா என்ற அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தேன். இரண்டு பக்கங்கள் ஓதி முடித்து விட்டு கண்களைத் திறந்த பொழுது தான் குர்ஆனுடைய அற்புதத்தைக் கண்டேன்.

அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. நான் ஓதி முடித்து விட்டு கண்களைத் திறந்து பார்த்த பொழுது அங்கிருந்த கம்யூனிசத் தலைவர்களில் நான்கு அல்லது ஐந்து பேர்களுடைய கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருக்கிறது, தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள்.

ஜமால் அப்துன் நாஸர், ஏன் அழுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். அது தான் எங்களுக்கும் தெரிய வில்லை. இவர் என்ன ஓதினார்.....? என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் இவர் ஓதியதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது. அதில் ஒரு வசீகரம் இருக்கிறது. அது ஏதோ ஒரு மாற்றத்தை எங்கள் இதயத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. என்ன காரணம் என்று தெரியாமலேயே அழுகை வருகிறது என்று கூறினார்கள்.

உலகத்திலே அல்லாஹ்வை மறுக்கக் கூடிய, உண்மையான வேதம் என்று ஏற்றுக் கொள்ளாத கம்யூனிசத் தலைவர்களான அவர்களுடைய இதயத்தைக் கூட மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி இந்த குர்ஆனுக்கு  இருக்கிறது என்றால் குர்ஆன் எத்தகைய அற்புதமான வேதம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு இஸ்லாமிய அழைப்பு பிரச்சாரம் பரவலாக எல்லோராலும் செய்யப்படுகிறது. மக்களை இஸ்லாத்தின் அளவில் கொண்டு வருவதற்கு இஸ்லாத்தின் தனிச்சிறப்புக்களை சொல்வார்கள். குர்ஆன் கூறும் அறிவியல் செய்திகளை சொல்வார்கள், நபி அவர்களின் மேலான நற்குணங்களை சொல்வார்கள். இப்படி சொல்லி சொல்லித்தான் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பார்கள். அதைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் உள்ளம் மாறும். இஸ்லாத்தின் தனித்தன்மைகளை இஸ்லாமியப் புத்தகங்கள் வழியாக படித்து ஆய்வு செய்து பிற மதங்களோடு ஒப்பிட்டு பார்த்து இஸ்லாத்தை நோக்கி வருபவர்களும் உண்டு. ஆனால் பெருமானார் அவர்களும் சரி அருமை ஸஹாபாக்களும் சரி மக்காவில் இருந்த அந்த நாட்களில் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட முக்கியமான விஷயம் குர்ஆன் ஓதுவது தான். குர்ஆனுடைய சப்தத்தைக் கேட்டு அதில் உள்ளத்தை பரிகொடுத்து கலிமா சொன்னவர்கள் அன்றைக்கு அதிகம்.  

سَعْد بن معاذ رضي الله عنه الذي كان مُشْرِكاً وعِنْدما عَلِم بقدوم مصعب ابن عمير رضي الله عنه قَبْل الهجرة لِلدعوة إلى الإسلام ذهب إليه ومعه حَرْبَتُه لِمَنْعِه وعِنْدما قرأ عَلَيْه مصعب رضي الله عنه قوله تعالى { حم * وَالْكِتَـبِ الْمُبِينِ * إِنَّا جَعَلْنَـهُ قُرْءَانًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُون  سورة الزخرف الآيات 1 - 3 [، فأَسْلَم في حِينه رضي الله عنه وأَسْلَم قومُه بإسلامه

முஸ்அப் பின் உமைர் ரலி அவர்கள் முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு மதீனாவிற்கு வருகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக ஸஅத் பின் முஆத் ரலி அவர்கள் வந்தார்கள். (அந்த நேரத்தில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வில்லை) அப்போது அவர்களைப் பார்த்தவுடன் முஸ்அப் ரலி அவர்கள் ஜுஹ்ருஃப் அத்தியாயத்தின் வசனங்களை ஓதினார்கள். அதைக் கேட்டவுடன் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுடைய சமூகமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

குர்ஆன் வசனங்களைக் கேட்டவர்களெல்லாம் மாறிப்போனார்கள். அதன் வசீகர வார்த்தைகளை செவிமடுத்தவர்களெல்லாம் உள்ளத்தைப் பரிகொடுத்தார்கள். கண்ணீர் வடித்தார்கள். இஸ்லாத்தின் பக்கம் மையல் கொள்ள ஆரம்பித்தார்கள். இதனால் மக்கத்து காஃபிர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. முஸ்லிம்கள் ஒன்றும் செய்யாமல் வெறும் குர்ஆனை ஓதியே மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்களே, இப்படியே போனால் எல்லாரும் அந்த பக்கம் போய் விடுவார்கள் என்ற பயத்தில் கூறினார்கள் :

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ‏

நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் "இந்தக் குர்ஆனை (உங்கள் காதாலும்) கேட்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டு பண்ணினால் நீங்கள் வென்று விடுவீர்கள்" என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் : 41:26)

வெளியூரிலிருந்து யாராவது வியாபார விஷயமாகவோ எதாவது தேவைக்காகவோ மக்காவிற்கு வந்தால் அவர்களிடம் நீங்கள் குர்ஆனைக் கேட்காதீர்கள் என்று சொல்வார்கள்.

حينما قدم إلى مكة للحج نهاية السنة السادسة من البعثة (617 م) استقبلته قريش وقالوا له:

يا طفيل، إنك قدمت بلادنا، وهذا الرجل الذي بين أظهرنا قد أعضل بنا، وقد فرق جماعتنا، وشتت أمرنا، وإنما قوله كالسحر يفرق بين الرجل وأبيه، وبين الرجل وأخيه، وبين الرجل وزوجته، وإنا نخشى عليك وعلى قومك ما قد دخل علينا، فلا تكلمنَّه ولا تسمعنّ منه شيئا فما زالوا به حتى حشي إذنيه كرسفا فَرقا من أن يبلغه شيء منه فلما ذهب الكعبة فإذا رسول الله يصلي عند الكعبة فقام منه قريبا فلما رجع النبي إلى بيته لحقه وقال: يا محمد إن قومك قد قالوا لي كذا وكذا فوالله ما برحوا يخوفونني أمرك حتى سددت أذني بكرسف لئلا أسمع قولك، ثم أبى الله إلا أن يُسمعني قولك، فسمعته قولا حسنا، فاعرض علي أمرك.

 

فتلا عليه النبي شيئا من القرأن فقال: والله ما سمعت قولا قط أحسن منه، ولا أمرا أعدل منه، فأسلم ورجع إلى دوس يدعوهم إلى الإسلام فأسلموا كلهم، وهاجر معه منهم 80 بيتا.ودعا له الرسول فأصبح على سوطه ضوء.

ஒருவர் மக்காவிற்கு வந்தார் அவருக்கு துஃபைல் பின் அம்ருத் தவ்ஸீ என்று பெயர். அவர் மிகப்பெரிய கவிஞர் அரபியில் மிகவும் புலமைப் பெற்றவர். அவர் மக்காவிற்கு வந்த போது முக்காவாசிகள் நகரை சந்தித்து நீங்கள் எங்க ஊருக்கு வந்திருக்கிறீர்கள். இங்கே ஒருவர் இருக்கிறார். அவர் இங்கே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எங்கள் சமூகத்தை பிரித்து விட்டார். தகப்பனையும் மகனையும் பிரித்து விட்டார். அண்ணன் தம்பியை பிரித்து விட்டார். கணவன் மனைவியை பிரித்து விட்டார். அவரால் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு உனக்கும் ஏற்பட்டு விடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே அவரிடத்தில் நீ பேச வேண்டாம். அவர் ஏதாவது சொன்னால் நீ காது கொடுத்து கேட்க வேண்டாம் என்று சொன்னார்கள். அவரும் தன் காதுகளில் பஞ்சை வைத்துக்கொண்டு சென்றார். அங்கே கஃபாவிற்கு அருகில் நபியவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். தொழுது முடித்து அவர்கள் இல்லம் திரும்பிய போது அவர்களை அழைத்து, இப்படி உங்கள் சமூகம் உங்களைப் பற்றி சொல்கிறார்கள்.எனவே நீங்கள் சொல்வதை கேட்கக் கூடாது என்பதற்காக காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டு வந்தேன். நீங்கள் அப்படி என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது நபி அவர்கள் குர்ஆனுடைய வசனங்களை ஓதினார்கள் அதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதை விட அழகான வார்த்தையை நான் இதுவரை கேட்டதில்லை. இதை விட நயமான நடுநிலையான செய்தியை நான் கேட்டதில்லை என்று சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். பின்பு தன்னுடைய ஊருக்கு சென்று அவர்களையும் இஸ்லாத்தை நோக்கி அழைத்தார். அவரைப் பின்பற்றி அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

எனவே நாம் கையில் வைத்திருப்பது சாதாரணமான வேதம் அல்ல. மிகவும் அற்புதமான ஆற்றல் பெற்ற வேதம். சரித்திர சாதனை படைத்த வேதம், மிகப்பெரிய புரட்சியையும் சமூக மாற்றத்தையும் ஏற்படுத்திய ஒரு வேதம். ஓதியவர்களையும் கேட்டவர்களையும் வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு போன உன்னதமான வேதம்.

No comments:

Post a Comment