Wednesday, April 12, 2023

இதுவே தெளிவான வெற்றி

 

اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا ۙ‏

(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அல்குர்ஆன் : 48:1)

لِّيَـغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَ مَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ‏

(அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்து வீராக! அதனால்,) உங்களது முன் பின்னுள்ள தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துத் தனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைபடுத்தி வைத்து, உங்களை அவன் நேரான வழியிலும் நடத்துவான். (அல்குர்ஆன் : 48:2)

وَّ يَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِيْزًا‏

(நபியே!) மேலும் (தொடர்ந்து) அல்லாஹ் உங்களுக்குப் பலமான உதவி புரிந்தே வருவான். (அல்குர்ஆன் : 48:3)

نَزَلَتْ هَذِهِ السُّورَةُ الْكَرِيمَةُ لَمَّا رَجَعَ رَسُولُ اللَّهِ من الْحُدَيْبِيَةِ فِي ذِي الْقِعْدَةِ مِنْ سَنَةِ سِتٍّ مِنَ الْهِجْرَةِ، حِينَ صَدَّهُ الْمُشْرِكُونَ عَنِ الْوُصُولِ إِلَى الْمَسْجِدِ الْحَرَامِ لِيَقْضِيَ عُمْرَتَهُ فِيهِ، وَحَالُوا بَيْنَهُ وَبَيْنَ ذَلِكَ، ثُمَّ مَالُوا إِلَى الْمُصَالَحَةِ وَالْمُهَادَنَةِ، وَأَنْ يَرْجِعَ عَامَهُ هَذَا ثُمَّ يَأْتِيَ مِنْ قَابِلٍ، فَأَجَابَهُمْ إِلَى ذَلِكَ عَلَى تَكَرُّهٍ مِنْ جَمَاعَةٍ مِنَ الصَّحَابَةِ، مِنْهُمْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ، 

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு நபிகள் நாயகம் அவர்கள் 1400 சஹாபாக்களை அழைத்துக் கொண்டு உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி கிளம்பினார்கள். அங்கே மக்காவாசிகள் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள். அங்கே ஹுதைபியா என்ற இடத்தில் உடன்படிக்கை கையெழுத்தானது. அந்த உடன்படிக்கை முடிந்து திரும்பிய பிறகு இந்த வசனம் அருளப்பட்டது. (இப்னுகஸீர்)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: نَزَلَتْ عَلَى النَّبِيِّ : ﴿لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ﴾ مَرْجِعَهُ مِنَ الْحُدَيْبِيَةِ، قَالَ النَّبِيُّ : "لَقَدْ أُنْزِلَتْ عَلَيَّ آيَةٌ أَحَبُّ إِلَيَّ مِمَّا عَلَى الْأَرْضِ"، ثُمَّ قَرَأَهَا عَلَيْهِمُ النَّبِيُّ فَقَالُوا: هَنِيئًا مَرِيئًا يَا نَبِيَّ اللَّهِ، لَقَدْ بَيَّنَ اللَّهُ، عَزَّ وَجَلَّ، مَاذَا يَفْعَلُ بِكَ، فَمَاذَا يَفْعَلُ بِنَا؟ فَنَزَلَتْ عَلَيْهِ: ﴿لِيُدْخِلَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ﴾ حَتَّى بَلَغَ: ﴿فَوْزًا عَظِيمًا

"உங்களது முன் பின்னுள்ள தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துத் தனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைபடுத்தி வைத்து, உங்களை அவன் நேரான வழியிலும் நடத்துவான்"

இந்த வசனத்தைக் குறித்து பெருமானார் அவர்கள் எனக்கு ஒரு வசனம் இறங்கி இருக்கிறது. அது இந்த பூமியில் இருக்கிற அத்தனை வஸ்துக்களை விட எனக்குப் பிரியமானது என்று கூறினார்கள். அதைக் கேட்டு வாழ்த்துக்கள் கூறிய சஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களைப் பற்றி இறைவன் சொல்லி விட்டான். எங்களின் நிலைமை என்ன என்று கேட்டார்கள். அப்போது பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.

لِّيُدْخِلَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَيُكَفِّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ‌ وَكَانَ ذٰ لِكَ عِنْدَ اللّٰهِ فَوْزًا عَظِيْمًا ۙ‏

(அல்லாஹ்) நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சுவனபதிகளில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். அவர்களின் பாவச்சுமையையும், அவர்களிலிருந்தும் நீக்கி விடுவான். இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கின்றது.. (அல்குர்ஆன் : 48:5)

عَنِ ابْنِ عَبَّاسٍ: إِنَّ الْيَهُودَ شَتَمُوا النَّبِيَّ وَالْمُسْلِمِينَ لَمَّا نَزَلَ قَوْلُهُ تَعَالَى: ﴿وَما أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلا بِكُمْ﴾(٣) [الأحقاف: ٩] وَقَالُوا: كَيْفَ نَتَّبِعُ رَجُلًا لَا يَدْرِي مَا يُفْعَلُ بِهِ! فَاشْتَدَّ ذَلِكَ عَلَى النَّبِيِّ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: "إِنَّا فَتَحْنا لَكَ فَتْحاً مُبِيناً. لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَما تَأَخَّرَ". وَنَحْوَهُ قال مقاتل ابن سُلَيْمَانَ: لَمَّا نَزَلَ قَوْلُهُ تَعَالَى: ﴿وَما أَدْرِي ما يُفْعَلُ بِي وَلا بِكُمْ﴾(٤) [الأحقاف: ٩] فَرِحَ الْمُشْرِكُونَ وَالْمُنَافِقُونَ وَقَالُوا: كَيْفَ نَتَّبِعُ رَجُلًا لَا يَدْرِي مَا يُفْعَلُ بِهِ وَلَا بِأَصْحَابِهِ، فنزلت بعد ما رَجَعَ مِنَ الْحُدَيْبِيَةِ: "إِنَّا فَتَحْنا لَكَ فَتْحاً مُبِيناً" أَيْ قَضَيْنَا لَكَ قَضَاءً. فَنَسَخَتْ هَذِهِ الْآيَةُ تِلْكَ. فَقَالَ النَّبِيُّ :] لَقَدْ أُنْزِلَتْ عَلَيَّ سُورَةٌ مَا يَسُرُّنِي بِهَا حُمْرُ النَّعَمِ (قرطبي)

قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدْرِىْ مَا يُفْعَلُ بِىْ وَلَا بِكُمْ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَىَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ‏

(நபியே! அவர்களை நோக்கி, பின்னும்) நீங்கள் கூறுங்கள்: (இறைவன் அனுப்பிய) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்ல. (எனக்கு முன்னர் தூதர்கள் பலர் வந்தே இருக்கின்றனர்.) அன்றி, என்னைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹீ மூலமாக அறிவிக்கப்பட்டவைகளை தவிர, (மற்ற எதையும்) நான் பின்பற்றுபவன் அல்ல. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை. (அல்குர்ஆன் : 46:9)

இந்த வசனம் இறங்கிய போது அவருக்கும் அவரின் தோழர்களுக்கும் என்ன நடக்கும் என்பதை அறியாத ஒரு மனிதரை நாம் எப்படி பின்பற்றுவது என்று மக்காவாசிகள் கேலி செய்தார்கள். அது பெருமானார் அவர்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியது. எனவே தான் ஹுதைபியா உடன்படிக்கைக்கு பிறகு நபி அவர்களைக் குறித்தும் ஸஹாபாக்களைக் குறித்தும்  மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் இறக்கினான். (குர்துபீ)

وَقَالَ الزُّهْرِيُّ: لَقَدْ كَانَ الْحُدَيْبِيَةُ أَعْظَمَ الْفُتُوحِ، وَذَلِكَ أَنَّ النَّبِيَّ جَاءَ إِلَيْهَا فِي أَلْفٍ وَأَرْبَعِمِائَةٍ، فَلَمَّا وَقَعَ الصُّلْحُ مَشَى النَّاسُ بَعْضُهُمْ فِي بَعْضٍ وَعَلِمُوا وَسَمِعُوا عَنِ اللَّهِ، فَمَا أَرَادَ أَحَدٌ الْإِسْلَامَ إِلَّا تَمَكَّنَ مِنْهُ، فَمَا مَضَتْ تِلْكَ السَّنَتَانِ إِلَّا وَالْمُسْلِمُونَ قَدْ جَاءُوا إِلَى مَكَّةَ فِي عَشْرَةِ آلَافٍ (قرطبي)

மேலோட்டமாகப் பார்க்கும் போது எந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் பணிந்து போய் செய்து கொண்டார்கள் என்று விமர்சிக்கப்பட்டதோ, அந்த ஒப்பந்தத்தை தெளிவானதொரு வெற்றிஎன்று வர்ணிப்பது, வியப்பாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் நடந்த நிகழ்ச்சிகளும், உருவான சூழ்நிலைகளும் உண்மையிலேயே ஹுதைபிய்யா உடன்படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் பெரியதொரு வெற்றிக்கான முன்னோடியாகத் திகழ்ந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு முஸ்லிம்களுக்கும், குரைஷிகளுக்கும் இடையே போர் மயமான சூழலே நிலவி வந்தது. இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பமோ, வாய்ப்போ அறவே இல்லாத நிலை இருந்தது. இந்தச் சமாதான உடன்படிக்கை இத்தகைய சூழ்நிலைக்கு முடிவு கட்டி விட்டது.

இப்போது முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் ஒருவரை யொருவர் சந்திக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு இடையே குடும்ப மற்றும் வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட ஆரம்பித்தது. முஸ்லிம் அல்லாதவர்கள் எந்தவித தயக்கமோ பயமோ இல்லாமல் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்தனர். பல நாட்கள் பல மாதங்கள் அங்கு தங்கி முஸ்லிம்களுடன் பழகினார்கள். எந்த நல்லடியார்களுடன் நாம் போரை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தோமோ, அவர்களின் உள்ளங்களில் பகை உணர்வோ, வெறுப்போ இல்லை என்பதை உணர்ந்து கொண்டனர். இதனால் முஸ்லிம் அல்லாதவர்கள் தாமாகவே இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டனர். குரைஷித் தலைவர்கள் அவர்களின் உள்ளங்களில் விதைத்திருந்த தவறான எண்ணங்கள் தாமாகவே மறையத் தொடங்கின.

இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு முஸ்லிம்களின் எண்ணிக்கை 1400 ஆக இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது முஸ்லிம்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக உயர்ந்தது. இதே காலகட்டத்தில் தான் குரைஷிகளின் புகழ் பெற்ற தலைவர்கள் சிலர் இஸ்லாத்தினால் கவரப்பட்டு, முஸ்லிம் அல்லாதவர்களிடம் இருந்து ஒதுங்கி, முஸ்லிம்களின் நண்பர்களாய், உற்ற துணைவர்களாய் மாறினார்கள். காலித் பின் வலித், அம்ரு பின் ஆஸ், உஸ்மான் இப்னு தல்ஹா ரலி ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்தனர். இந்த ஒப்பந்தத்தின் படி, பத்தாண்டுகளுக்குப் போரை நிறுத்திக் கொள்வது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். குரைஷிகளுடன் முஸ்லிம்கள் ஒருபோதும் முதலில் போரைத் தொடங்கியதில்லை. மாறாக எப்போதும் குரைஷிகள் தான் முதலில் போரைத் தொடங்கினார்கள். இந்த பத்தாண்டு போர் நிறுத்தம் என்பது அல்லாஹ்வின் பாதையில் இருந்து மக்களைத் தடுக்கும் குரைஷிகளின் கொடுமைக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் இன்னொரு அம்சம், முஸ்லிம்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும்; வரும் ஆண்டு மக்காவுக்கு வந்து மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம் என்பதாகும். இதன் மூலம் இறை இல்லமான கஅபாவிற்கு முஸ்லிம்களை குரைஷிகள் வர விடாமல் இது வரை தடுத்து வந்ததற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அந்த ஆண்டு மட்டும் முஸ்லிம்களை மக்காவுக்கு வர விடாமல் தடுக்க முடிந்ததைத் தவிர வேறெந்த சாதகமும் குரைஷிகளுக்கு இல்லை.

இறுதி அம்சத்தில் இடம் பெற்ற, அதாவது மக்காவில் இருந்து யாராவது தப்பித்து மதீனா வந்தால் அவர்களைத் திரும்ப மக்காவுக்கு அனுப்பி விட வேண்டும்; ஆனால் மதீனாவில் இருந்து தப்பித்து யாராவது மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம்என்பதையே குரைஷிகள் தங்களுக்குச் சாதகமாக நினைத்தனர். ஆனால் அதுவும் உண்மையில் அவர்களுக்குப் பாதகமானதே. ஏனெனில் எந்த ஓர் உண்மை முஸ்லிமும் அல்லாஹ்வை விட்டோ, அவனது தூதரை விட்டோ, மதீனாவை விட்டோ விலகிச் செல்ல மாட்டார். அப்படிச் சென்றாலும் அதில் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. இதையே நபிகளார், “யாரொருவர் நம்மிடம் இருந்து விலகி அவர்களுடன் சென்று விடுவாரோ அல்லாஹ் அவரைத் தூரமாக்கி விடுவானாகஎன்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டினார்கள். மதீனாவில் இருந்து யாராவது தப்பித்து மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்று குரைஷிகள் கூறியதை நபிகளார் ஏற்றுக் கொண்டதற்கு, தனது மார்க்கத்தின் மீதும், அதைப் பின்பற்றியவர்கள் மீதும் தான் வைத்திருந்த முழுமையான நம்பிக்கைக்கு ஆதாரமாகும்.

மேற்கூறப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் அம்சங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டன. இருந்த போதிலும் இந்த ஒப்பந்தம் செய்த போது வெளிப்படையான இரு காரணங்களால் அனைத்து முஸ்லிம்களின் உள்ளத்திலும் கவலை குடிகொண்டது.

1, இறை இல்லத்திற்குச் செல்வோம்; உம்ரா செய்வோம்என்று பெரும் ஆசையுடன் வந்தவர்களுக்கு ஏமாற்றம்.

2, முகம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர்; அப்படியிருக்க அவர்கள் ஏன் குரைஷிகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிய வேண்டும்? சமாதான ஒப்பந்தத்தில் ஏன் தாழ்மையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்பது இரண்டாவது காரணம்.

இதன் காரணமாக முஸ்லிம்களின் உணர்வுகள் காயமடைந்தன. ஏனைய மக்களைக் காட்டிலும் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவலை கொண்டார்கள். ஒப்பந்தம் முடிந்ததும் நபிகளாரை சந்தித்து தனது மனக்குறையைத் தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, “(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக!)” (திருக்குர்ஆன்-48:1) என்ற வசனம் அருளப்பட்டது. உடனே நபிகளார் அவர்கள் ஒருவரை அனுப்பி அந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டும் படி கூறினார்கள். அதைக் கேட்டு நபிகள் நாயகம் அவர்களிடம் வந்த உமர் ரலி அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியான விஷயமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் , ‘ஆம்என்றவுடன் உமர் ரலி அவர்கள் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்கள்.

فَلَمَّا نَحَرَ هَدْيَهُ حَيْثُ أُحْصِرَ، وَرَجَعَ، أَنْزَلَ اللَّهُ، عَزَّ وَجَلَّ، هَذِهِ السُّورَةَ فِيمَا كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِهِمْ، وَجَعَلَ ذَلِكَ الصُّلْحَ فَتْحًا بِاعْتِبَارِ مَا فِيهِ مِنَ الْمَصْلَحَةِ، وَمَا آلَ الْأَمْرُ إِلَيْهِ، كَمَا رُوِيَ عَنِ ابْنِ مَسْعُودٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، وَغَيْرِهِ أَنَّهُ قَالَ: إِنَّكُمْ تَعُدُّونَ الْفَتْحَ فَتْحَ مَكَّةَ، وَنَحْنُ نَعُدُّ الْفَتْحَ صُلْحَ الْحُدَيْبِيَةِ.

وَقَالَ الْأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ: مَا كُنَّا نَعُدُّ الْفَتْحَ إِلَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ

உம்ரா செய்வதற்கு மக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டாலும் இந்த உடன்படிக்கையைக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு மறை முகமான நிறைய நன்மைகள் ஏற்பட்ட காரணத்தினால் அதை வெற்றி என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நீங்களெல்லாம் மக்கா வெற்றி கொள்ளப்பட்டதைத்தான் வெற்றி என்று கருதுகிறீர்கள். ஆனால் நாங்கள் ஹுதைபியா உடன்படிக்கையைத் தான் வெற்றியாகக் கருதுகிறோம். (இப்னுகஸீர்)

இந்த ஹுதைபியா உடன்படிக்கையின் மூலம் நாம் பெறக்கூடிய முக்கியமான பாடம், ஒரு விஷயம் வெளிப்படையில் தீங்கைப் போன்று தெரிந்தாலும் அதிலும் அல்லாஹுத்தஆலா மிகப்பெரிய நன்மைகளை வைத்திருப்பான்.

லுக்மான் அலை அவர்கள் தன் மகனை அழைத்துக் கொண்டு அவசரமாக ஒரு ஊருக்குப் புறப்படுகிறார்கள். வழியில் ஒரு காட்டுப் பகுதியில் மகனின் காலில் முள் ஒன்று தைத்து இரத்தம் வழிகிறது. கடுமையான வலி. நடக்க முடியவில்லை. சரி இன்றிரவு இங்கேயே பொழுதைக் கழித்து விட்டு வலி குறைந்ததும் பயணிக்கலாம் என்று அங்கு தங்குகிறார்கள். மறுநாள் காலையில் புறப்பட்டு அந்த ஊருக்கு சென்று பார்த்த போது ஒரே மயானமாக காட்சி தந்தது . அன்று அதிகாலையில் நடந்த பூகம்பத்தில் அந்த ஊரே காணாமல் போயிருந்தது.

மகனே! ஒருவேளை உன் காலில் முள் குத்தாமல் இருந்திருந்தால் நாமும் பூமிக்குள் புதையுண்டிருப்போம். எனவே உனக்கு முள் குத்தியதிலும் அல்லாஹ் நமக்கு மிகப்பெரிய நன்மையை வைத்து விட்டான் என்று லுக்மான் {அலை} அவர்கள் தன் மகனிடம் கூறினார்கள்.

No comments:

Post a Comment