حَتّٰٓى اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ
سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும். (அல்குர்ஆன் : 41:20)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: ضَحِكَ رَسُولُ اللَّهِ ﷺ ذَاتَ يَوْمٍ وَتَبَسَّمَ(٤) ، فَقَالَ: "أَلَا تَسْأَلُونِي عَنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتُ؟ " قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ؟ قَالَ: "عَجِبْتُ مِنْ مُجَادَلَةِ الْعَبْدِ رَبَّهُ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ: أَيْ رَبِّي، أَلَيْسَ وَعَدْتَنِي أَلَّا تَظْلِمَنِي؟ قَالَ: بَلَى فَيَقُولُ: فَإِنِّي لَا أَقْبَلُ عَلَيَّ شَاهِدًا إِلَّا مِنْ نَفْسِي. فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَوَ لَيْسَ كَفَى بِي شَهِيدًا، وَبِالْمَلَائِكَةِ الْكِرَامِ الْكَاتِبِينَ؟! قَالَ: فَيُرَدِّدُ هَذَا الْكَلَامَ مِرَارًا". قَالَ: "فَيُخْتَمُ عَلَى فِيهِ، وَتَتَكَلَّمُ أَرْكَانُهُ بِمَا كَانَ يَعْمَلُ، فَيَقُولُ: بُعْدًا لكُنَّ وسُحقا، عَنْكُنَّ كُنْتُ أُجَادِلُ"
ஒரு நாள் நபி ﷺ அவர்கள் சிரித்தார்கள். நான் ஏன் சிரித்தேன் என்று கேட்க மாட்டீர்களா? என்று தன் தோழர்களைப் பார்த்துக் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் அவர்களே நீங்கள் சிரித்ததற்காக காரணம் என்ன? என்று அவர்கள் கேட்ட போது, அடியான் இறைவனோடு செய்கின்ற
தர்க்கத்தை எண்ணிப்பார்த்து சிரித்தேன். மறுமையில் அடியான் இறைவனைப் பார்த்து இறைவா! நீ அநீதம் செய்ய மாட்டாய் என்று வாக்களிக்க வில்லையா! என்று கேட்பான். ஆம் என்று இறைவன் பதில் சொல்வான். அப்படியென்றால்
இன்றைக்கு என்னைத் தவிர வேறு எந்த சாட்சியையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்பான்.
ஏன் நான் சாட்சியாக இருக்க கூடாதா? மலக்குமார்களுடைய சாட்சியை ஏற்க மாட்டாயா? என்று கேட்பான். அந்த மனிதன் திரும்பத் திரும்ப அவ்வாறு சொல்லிக்
கொண்டிருப்பான். அப்போது அவனுடைய வாயிக்கு பூட்டு போடப்படும். பிறகு அவனுடைய உறுப்புக்கள்
அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும். அவன் அந்த உறுப்புக்களைப் பார்த்து உங்களுக்கு
நாசம் ஏற்படட்டும் என்று கூறுவான் என நபி ﷺ
அவர்கள் கூறினார்கள்.
قَالَ أَبُو مُوسَى: وَيُدْعَى الْكَافِرُ
وَالْمُنَافِقُ لِلْحِسَابِ، فَيَعْرِضُ عَلَيْهِ رَبُّهُ -عَزَّ وَجَلَّ-عَمَلَهُ،
فَيَجْحَدُ وَيَقُولُ: أَيْ رَبِّ، وَعَزَّتِكَ لَقَدْ كَتَبَ عَلَيَّ هَذَا الْمَلَكُ
مَا لَمْ أَعْمَلْ! فَيَقُولُ لَهُ الْمَلَكُ: أَمَا عَمِلْتَ كَذَا، فِي يَوْمِ كَذَا،
فِي مَكَانِ كَذَا؟ فَيَقُولُ: لَا وَعِزَّتِكَ، أَيْ رَبِّ مَا عَمِلْتُهُ. [قَالَ](٨)
فَإِذَا فَعَلَ ذَلِكَ خُتِم عَلَى فِيهِ -قَالَ الْأَشْعَرِيُّ: فَإِنِّي لَأَحْسَبُ
أَوَّلَ مَا يَنْطِقُ مِنْهُ فَخِذَهُ الْيُمْنَى.
நாளை மறுமையில் இறை மறுப்பாளர்களும் நயவஞ்சகர்களும்
கேள்வி கனக்கிற்காக அழைக்கப்படுவார்கள். இப்போது அவர்கள் செய்த குற்றங்கள் எடுத்து
காண்பிக்கப்படும். அதை பார்த்து விட்டு அவர்கள் மறுப்பார்கள். நாங்கள் இந்த குற்றத்தை
செய்ய வில்லை. நாங்கள் செய்யாததையெல்லாம் வானவர்கள் எங்கள் பதிவேட்டில் பதிவு செய்து
விட்டார்கள் என்று சொல்வார்கள். உடனே வானவர்கள், இந்த இடத்தில் இந்த நேரத்தில் இந்த
தேதியில் இந்த குற்றத்தை நீ செய்ய வில்லையா? என்று கேட்பார்கள். இல்லை, நிச்சயம் நாங்கள் செய்ய வில்லை என்பார்கள். அப்போது அவர்களது
நாவுகள் முத்திரையிடப்படும். மற்ற உறுப்புகள்
பேச ஆரம்பிக்கும்.
நம் உடலில் இருக்கிற உறுப்புக்கள் நம் பயன்பாட்டிற்காக அல்லாஹ் கொடுத்திருக்கிறான். பார்க்க கண்களையும் கேட்க செவிகளையும் நுகர மூக்கையும்
பேச நாவையும் எடுக்க கரங்களையும் நடக்க கால்களையும். இப்படி ஒவ்வொரு உறுப்புக்களும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக
படைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு உறுப்பு செயலிழந்து விட்டாலும் மிகப்பெரிய பாதிப்பை
சந்திக்க வேண்டிய நிலை வரும். ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு நிஃமத். அதை நாம் புரிவதில்லை. அந்த உறுப்பை இழந்தவனிடம்
கேட்டால் தான் அதன் அருமை புரியும்.
ஒவ்வொரு உறுப்பும் நமக்கு ஒவ்வொரு வேலையை செய்து
நமக்கு உதவுகிறது.ஆனால் இங்கே உதவுகிற இதே உறுப்புக்கள் நாளை நமக்கு எதிராக வந்து நிற்கும்.
அதனால் அந்த உறுப்புக்களிடமிருந்து நாம் தப்ப முடியாது. எனவே யாருக்கு பயப்படுகிறோமோ
இல்லையோ நம் உறுப்புக்களுக்கு பயப்பட வேண்டும்.
மறுமையில் மனிதனுக்கு எதிராக நான்கு சாட்சிகள் இருக்கும்.
1, நாம் வாழும் இந்த பூமி. அதன் மீது அமர்ந்து கொண்டு
நாம் செய்த நன்மைகளையும் பாவங்களையும் இறைவனிடத்தில் நாளை மறுமையில் எடுத்துச் சொல்லும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَرَأَ رَسُولُ
اللَّهِ ﷺ هَذِهِ الْآيَةَ: ﴿يَوْمَئِذٍ تُحَدِّثُ
أَخْبَارَهَا﴾ قَالَ: "أَتَدْرُونَ مَا أَخْبَارُهَا؟ ". قَالُوا: اللَّهُ
وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: "فَإِنَّ أَخْبَارَهَا أَنَّ تَشْهَدَ عَلَى كُلِّ
عَبْدٍ وَأَمَةٍ بِمَا عَمِل عَلَى ظَهْرِهَا، أَنْ تَقُولَ: عَمِلَ كَذَا وَكَذَا،
يَوْمَ كَذَا وَكَذَا، فَهَذِهِ أَخْبَارُهَا
رواه الترمذي ٣٣٥٣
يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا بِاَنَّ
رَبَّكَ اَوْحٰى لَهَا
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவைகளை
எல்லாம் அறிவித்து (இவ்வாறே) உங்களது இறைவன் வஹீ மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கின்றான்
என்று கூறும். (அல்குர்ஆன் : 99:4-5)
நபி ﷺ அவர்கள் இந்த வசனத்தை ஓதி விட்டு அது கூறும் செய்திகள் என்னவென்று உங்களுக்கு
தெரியுமா எனக் கேட்ட போது அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று ஸஹாபாக்கள்
சொன்னார்கள். அப்போது நபி ﷺ
அவர்கள் அது அறிவிக்கும் செய்தி
என்பது ஒரு ஆணோ பெண்ணோ தன் மீது செய்த அமல்களைப் பற்றி இறைவனிடத்தில் இவர் இந்த நாளில்
இன்ன அமலை செய்தார் என்று சாட்சி சொல்லும் என்றார்கள். (திர்மிதி ; 3353)
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " أَيَعْجِزُ أَحَدُكُمْ إِذَا صَلَّى
أَنْ يَتَقَدَّمَ، أَوْ يَتَأَخَّرَ، أَوْ عَنْ يَمِينِهِ، أَوْ عَنْ شِمَالِهِ
உங்களில் ஒருவர் தொழுதால் கொஞ்சம் முன்னாலோ அல்லது
பின்னாலோ வலப்பக்கமாகவோ இடப்பக்கமாகவோ செல்வதற்கு அவர் இயலாமல் ஆகிவிட்டாரா? (இப்னுமாஜா ; 1427)
இந்த ஹதீஸை வைத்து, ஒருவர் ஃபர்ள் தொழுது விட்டால்
அவர் நஃபில் தொழுவதற்காக இடத்தை வலப்பக்கமாகவும் இடப் பக்கமாகவோ முன்னாலோ பின்னாலோ
மாற்றி அமைத்துக் கொள்வது முஸ்தஹப்பு என்று இமாம்கள் கூறுகிறார்கள். காரணம், அவர் தொழுத
இடங்கள் இறைவனிடத்தில் சாட்சி சொல்லும் என்பதினால்.
2, மலக்குகள்
وَاِنَّ عَلَيْكُمْ لَحٰـفِظِيْنَۙ
நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு
இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 82:10)
كِرَامًا كَاتِبِيْنَۙ
அவர்கள் (மலக்குகளில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
(அல்குர்ஆன் : 82:11)
يَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ
நீங்கள் செய்பவைகளையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து
(எழுதிக்) கொள்வார்கள். (அல்குர்ஆன் : 82:12)
3, உடல் உறுப்புக்கள்
عن سعد ابن أبي وقاص حدثني أبي أن عبد الله
بن جحش قال يوم أحد ألا تأتي ندعو الله تعالى فخلوا في ناحية فدعا سعد فقال يا رب إذا
لقينا العدو غدا فلقني رجلا شديدا بأسه شديدًا حرده أقاتله ويقاتلني ثم ارزقني الظفر
عليه حتى أقتله وآخذ سلبه !!
فأمنّ عبد الله ثم قال: اللهم ارزقني غدا
رجلا شديداً بأسه شديداً حرده ,فأقاتله ويقاتلني!! ثم يأخذني فيجدع أنفي وأذني !فإذا
لقيتك غدا قلت لي: يا عبدالله فيم جدع أنفك وأذناك؟؟ فأقول فيك وفي رسولك فتقول :صدقت!
قال: سعد كانت دعوته خيرا من دعوتي فلقد رأيته آخر النهار وإن أنفه وأذنه لمعلق في
خيط
உஹத் போர் நடைபெற்ற அந்த நாளில் சஅது பின் அபீவக்காஸ்
ரலி அவர்களும் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் ரலி அவர்களும் தனியாக அமர்ந்து கொண்டு துஆ செய்தார்கள்.
ஆரம்பமாக ஸஅத் ரலி அவர்கள் இறைவா! நாளை போர்க்களத்தின் போது நான் மிகப்பெரும் வீரனை
எதிர் கொண்டு அவனோடு மோத வேண்டும். அவனோடு நான் சண்டையிட வேண்டும். அவன் என்னோடு சண்டை
விட வேண்டும். இறுதியில் அவனை வீழ்த்தி நான் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டார்கள்.
அதற்கு இவர்கள் ஆமீன் என்று சொன்னார்கள். பின்பு அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் ரலி அவர்கள்
இறைவா! நாளை போர்க்களத்தின் போது நானும் மிகப்பெரிய வீரனை
சந்திந்து அவனை எதிர்த்து போரிட வேண்டும். இறுதியில் அவன் என்னை வீழ்த்த வேண்டும்.
என் மூக்கையும் என் காதுகளையும் அவன் துண்டிக்க வேண்டும். நாளை மறுமையில் உன்னை சந்திக்கின்ற
பொழுது உன்னுடைய மூக்கும் காதுகளும் எதற்காக துண்டிக்கப்பட்டது என்று நீ கேட்க வேண்டும்.
நான் உனக்காகவும் உன்னுடைய தூதருக்காகவும் அவைகள் அறுபட்டன என்று சொல்ல வேண்டும். அதைக்
கேட்டு நீ கூறுவது உண்மை என்று கூற வேண்டும் என்று துஆ கேட்டார்கள். அதற்கு ஸஅத்
ரலி அவர்கள் ஆமீன் சொல்லி விட்டு என்னுடைய துஆவை விட அவருடைய துஆ தான் மிகச் சிறந்ததாக
இருந்தது. அவருடயை துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டதை போர்க்களத்தில் நான் பார்த்தேன். அவருடைய
மூக்கும் காதுகளும் துண்டிக்கப்பட்டு ஒரு கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தது என்று கூறுகிறார்கள்.
(ஸியரு அஃலாமின் நுபலா ; 1 /113)
4, அல்லாஹ்வே சாட்சியாகும்
سَنُرِيْهِمْ اٰيٰتِنَا فِى الْاٰفَاقِ
وَفِىْۤ اَنْفُسِهِمْ حَتّٰى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَـقُّ اَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰى كُلِّ
شَىْءٍ شَهِيْدٌ
நிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத்
தெளிவாகும் பொருட்டு, நம்முடைய அத்தாட்சி
களை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (அத்தாட்சிகளைக்)
காண்பிப்போம். (நபியே!) உங்கள் இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்
என்பது (உங்களுக்கு) போதாதா? (அல்குர்ஆன் : 41:53)
இன்று உலகத்தில் எல்லா இடங்களிலும் அங்கே யார் வந்தார்கள்.
என்ன செய்தார்கள் என்று கண்டுபிடிக்க cctv வைக்கப்பட்டிருக்கிறது. இன்று நிறைய குற்றவாளிகள்
பிடிபடுவது இந்த cctv
மூலம் தான். இன்று நாமே ஒரு
இடத்தில் cctv
இருந்தால் கொஞ்சம் கவனமாகத்
தான் இருப்போம். ஆனால் நம்மைச் சுற்றி ஒன்றல்ல 4 cctv இருக்கிறது. அதுவும் எந்த edit ம் செய்ய முடியாத அளவு perfect ஆனவை. ஆனால் எத்தனை பேர் இறையச்சத்தோடு இருக்கிறோம்
என்பது இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டிய விஷயம்.
இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன்
பார்வையிலிருந்து தப்ப முடியாது என்ற உணர்வு வேண்டும். யாரும் இல்லாத போது,
தனிமையில் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர் தான் சிறந்த முஃமின். அவருக்கே கூலி அதிகம்.
اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ
بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ
நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகின்றார்களோ அவர்களுக்கு
மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு.
(அல்குர்ஆன் : 67:12)
عن ثوبان مولى رسول الله ﷺ:] لأعلمنَّ أقوامًا من أمتي يأتون يومَ
القيامةِ بحسناتٍ أمثالِ جبالِ تهامةَ بيضًا فيجعلُها اللهُ ﷿
هباءً
منثورًا قال ثوبانُ يا رسولَ اللهِ صِفْهم لنا جَلِّهم لنا أن لا نكونَ منهم ونحنُ
لا نعلمُ قال أما إنهم إخوانُكم ومن جِلدتِكم ويأخذون من الليلِ كما تأخذون ولكنَّهم
أقوامٌ إذا خَلْوا بمحارمِ اللهِ انتهكُوها.
நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தில் சில மனிதர்களை
நான் அறிவேன். அவர்கள் மறுமையில் மலைகளைப் போன்று நன்மைகளைக் கொண்டு வருவார்கள். ஆனால்
அல்லாஹ் அவைகளை பறத்தப்பட்ட புழுதிகளாக ஆக்கி விடுவான் என்று நபி ﷺ அவர்கள் கூறிய போது ஸவ்பான்
ரலி அவர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்களைப் போன்று நாங்கள் ஆகி விடக்கூடாது. அவர்கள்
யார் என்று எங்களுக்கு விவரித்துச் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அவர்கள் உங்களுடைய சகோதரர்கள் தான்.
நீங்கள் இரவு வணங்குவதைப் போன்று அவர்களும் வணங்குவார்கள். ஆனால் அவர்கள் மக்களை விட்டும்
தனித்து விட்டால் அல்லாஹ் தடுத்த விஷயங்களை செய்வார்கள் என்றார்கள். (இப்னுமாஜா ; 3442)
No comments:
Post a Comment