Pages

Pages

Tuesday, June 30, 2020

நபியின் மகத்தான குடும்பம்





இஸ்லாமிய மாதங்களின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். شهر الله  அல்லாஹுடைய மாதம் என்று மாநபி    அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட மாதம் இந்த முஹர்ரம் மாதம். வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களையும் அவர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் நமக்கு நினைவுபடுத்துவதைப் போல வருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதம் அண்ணல் நபி    அவர்களின் குடும்பமான அஹ்லு பைத்துகளை நமக்கு நினைவுபடுத்தும்.

Monday, June 29, 2020

ரமலான் இறுதியில் மூன்று கவலை




அல்லாஹ்வின் மகத்தான அருளால் அருள் நிறைந்த ரமலான் மாதத்தை அடைந்து அதில் எண்ணற்ற அமல்களை செய்து அந்த மாதத்தை நிறைவு செய்யும் தருணத்தில் நாம் இருக்கிறோம்.இந்த மாதத்தில் நாம் வைத்த நோன்புகள், நாம் தொழுத தராவீஹ் தொழுகைகள், நாம் செய்த தானதர்மங்கள், கடமையான ஜகாத்துகள் உட்பட நாம் செய்த அத்தனை நற்கருமங்களையும் வல்லோன் அல்லாஹ் கபூல் செய்வதோடு அதற்கு ஈருலகத்திலும் சிறந்த பகரத்தை தருவானாக.

மனத்தூய்மை



அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் :
ان الذين امنوا وعملو الصلحات كانت لهم جنات الفردوس نزلا
நிச்சயமாக ஈமான் கொண்டு நல் அமல்களைச் செய்தவர்களுக்கு தங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் எனும் தோட்டங்கள் இருக்கிறது” (அல்குர்ஆன் : 18 ; 107)

ரமலானும் துஆவும்




இது ரமழான் மாதம். ரமழானில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நாட்களும் பாக்கியமானவை, ஒவ்வொரு நேரங்களும் பாக்கியமானவை,  ஒவ்வொரு தருணங்களும் பாக்கியமானவை.

குடியுரிமை சட்டத்தைப் பற்றி பயம் வேண்டாம்



நாட்டிலே தற்போது அச்சுறுத்தலான சூழ்நிலைகள், முஸ்லிம் சமூகத்தை பீதியடையச் செய்கின்ற சூழ்நிலைகள் நிலவிக் கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல் படுத்தி விட்டார்கள். அந்த சட்டத்தை நிலை நிறுத்துவதற்கும் நடைமுறைப் படுத்துவதற்கும் சாத்தியக்கூறுகளை கண்டறிந்து ஒன்றன்பின் ஒன்றாக அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பரக்கத் என்றால் என்ன ?



                                       

நாம் இன்று 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களை விட இந்த காலம் பொருளாதாரத்திலும் தொழில் நுட்பங்களிலும் அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் இன்ன பிற மனித வாழ்வின் அனைத்து வசதி வாய்ப்புகளிலும் கடந்த காலத்து மனிதனின் சிந்தனையில் கூட உதிக்காத பல்வேறு முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டு விட்ட காலம்.

அல்லாஹ்வின் அன்பை அல்லாஹ்விடம் அன்பைக் கேட்போம்




அல்லாஹுத்தஆலா உலகத்தில் நம்மைப் படைத்து நமக்கு மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறான். அன்பு இரக்கம் என்பது நமக்கு மட்டுமல்ல உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசி களுக்கும் இருக்கிற ஒரு இயற்கைப் பண்பு. அதை ஏற்படுத்துபவன் அல்லாஹ். நாமாக நம் உள்ளத்திலோ பிறர் உள்ளத்திலோ அன்பை விதைக்க முடியாது.இரக்கத்தைப் புகுத்த முடியாது.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 6 ; தவ்பா



தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்திய அடுத்த விஷயம் தவ்பா. நாம் தவறு செய்து விட்டால் அதற்கான தவ்பாவை அல்லாஹ்விடம் உடனடியாக தேடிக் கொள்ள வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்,கடைசி காலத்தில் செய்து கொள்ளலாம் என்று அதை தள்ளிப் போடுவது ஆரோக்கியமானதல்ல என்று இஸ்லாம் கூறுகிறது.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியங்கள் 5 ; ஹஜ்




இஸ்லாத்தின் பார்வையில் ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் விரைவாக செய்ய வேண்டிய அடுத்து மிக முக்கியமான இறுதிக் கடமையான ஹஜ்.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 4 ; திருமணம்



வாழ்க்கையில் அவசரமாக செய்ய வேண்டும் என்று இஸ்லாம் அடையாளப்படுத்திய வலியுறுத்திய விஷயங்களை நாம் பார்த்து வருகிறோம். அதில் ஒன்று திருமண வயதை அடைந்த பெண்ணை மணமுடித்து வைப்பது,ஒரு பெண் திருமண வயதை அடைந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு தகுந்த ஜோடி அமைந்து விட்டால் அந்தப் பெண்ணை மணமுடித்து வைப்பதில் அவசரம் காட்ட வேண்டும்.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 3 ; விருந்தோம்பல்



வாழ்க்கையில்  எந்தக் காரியத்தை செய்தாலும் எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும் அது உலகம் சார்ந்த காரியமாக இருந்தாலும் மறுமையை நோக்கமாகக் கொண்ட காரியமாக இருந்தாலும் அதிலே நின்று நிதானமாக அமைதியாக பக்குவமாக பொறுமையாக யோசித்து, செய்யலாமா? வேண்டாமா? அது நன்மையா? தீமையா? நமக்கு அது தேவையா? தேவை இல்லையா? என்று தீர்க்கமாக முடிவு செய்து அதற்குப் பிறகு தான் செய்ய வேண்டும். அந்த நிதானமும் பொறுமையும் தான் அந்த காரியத்தில் நமக்கு வெற்றியைப் பெற்றுத்தரும்.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய காரியம் 2 ; கடனை அடைப்பது.



இஸ்லாம் எதிலும் அவசரம் கூடாது, எதையும் நிதானத்தோடு செய்ய வேண்டும், நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்ன அதே நேரத்தில் ஒரு சில காரியங்களை துரிதமாகச் செய்ய வேண்டும், சற்றும் தாமதிக்காமல் அதை தள்ளிப் போடாமல்  விரைவாகச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.அதில் ஒன்று கடனாளிகள் குறித்தது.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 1 ; தொழுகை



வாழ்க்கை என்பது அவசரத்திற்குரியதல்ல, பதட்டத்திற்குரியதல்ல. அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் ஏற்று முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மைப் பொறுத்த வரை எதிலும் நிதானம் தேவை, பொறுமை தேவை,சிந்தனை தேவை.இஸ்லாம் நமக்கு இதைத்தான் பயிற்றுவித்திருக்கிறது,பழக்கப்படுத்தியும் இருக்கிறது.

அவசரம் கூடாது



நாம் வாழ்க்கையில் எந்தக் காரியத்தை செய்தாலும் அதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு குறிக்கோல் இருக்கும். ஒரு இலக்கு இருக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் குறிக்கோல் இல்லாமல் எந்த காரியத்தையும் நாம் செய்வதில்லை. எந்தக் காரியத்திலும் நாம் இறங்குவதில்லை.அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்தக் குறிக்கோலும் இல்லாமல் இறங்குபவர்கள் நிச்சயம் புத்திசாலியாக இருக்க முடியாது.எனவே ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிய பயணம் தான் நம் வாழ்க்கை.

Sunday, June 28, 2020

அல்லாஹ்வின் பாதுகாப்பில் மூன்று



நாம் 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களை விட இந்த காலத்தில் எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறோம்.எல்லா வகையான முன்னேற்றங்களையும் சந்தித்திருக்கிறோம்.ஒரு பக்கம் எல்லா வகையான வளர்ச்சிகளையும் முன்னேற்றங்களையும் சந்தித்திருந்தாலும் இன்னொரு பக்கம் பல வகையான பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அல்லாஹ்வின் அன்பு கிடைத்து விட்டால் ......



உலகில் வாழும் அனைத்துப் படைப்பினங்களுக்கும்  அன்பும் இரக்கமும் இருக்கிறது. மனிதர்கள் முதல் பறவைகள்,மிருகங்கள்,சிறு எறும்பு வரை அனைத்துப் படைப்புகளும் தங்களுக்குள் அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தும் ஜீவன்களாகத்தான் இருக்கிறது.

அருள் நபி நாதர்



      
அண்ணல் நபி அவர்கள் அகிலத்தில் அவதரித்த மாதத்தில் அமர்ந் திருக்கிறோம்.வருடம் முழுக்க நபியைப் பற்றி பேசப்படுகிறது.நபியின் வாழ்க்கை அலசப்படுகிறது.நபியின் வரலாறுகள் குறித்து ஆராயப் படுகிறது.

அரஃபா & பெருநாள்



அல்லாஹ்வின் அருள் நிறைந்த மிகச்சிறந்த மாதத்தில், மிகச்சிறந்த நாட்களில்,  அதிலும் குறிப்பாக அரஃபாவுடைய தினத்தில் நாம் அமர்ந்திருக்கிறோம். நமக்கு இன்ஷா அல்லாஹ் நாளை தியாகத்திருநாளாக, நாம் கொண்டாடும் பெருநாளாக இருந்தாலும் உண்மையில் நாம் ஈமானிய உணர்வோடு ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய,

அய்யாமுத் தஷ்ரீக்



அல்லாஹ்வின் பெரும் கிருபையால் தியாகத்திருநாளை சந்தித்து தியாகத்தின் அடையாளமான குர்பானிகளைக் கொடுத்து விட்ட மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் அமர்ந்திருக்கிறோம்.

மூன்று விதமான அநீதங்கள்




இஸ்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக வழங்கியிருக்கிறது. மனிதன் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது, எதைப் பெற வேண்டும் எதைப் பெறக்கூடாது, எப்படி நடக்க வேண்டும் எப்படி நடக்கக் கூடாது, எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது, இப்படி அத்தனை விஷயங்களையும் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கிறது.

அதிகாலைப் பொழுதின் மகிமை


   
இஸ்லாம் நம் வாழ்வில் பரக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எண்ணற்ற வழிகளை கற்றுத் தந்திருக்கிறது. எந்த பரக்கத்தை நபி அவர்கள் விரும்பினார்களோ,எந்த பரக்கத் வேண்டுமென்று அனைத்து நபிமார்களும் ஆசைப்பட்டார்களோ,எந்த பரக்கத்தைப் பெற்றதினால் ஸஹாபாக்கள் வளமாகவும் செழிப்பாகவும் நிறைவாகவும் வாழ்ந்தார்களோ அந்த பரக்கத்தை நாம் பெற வேண்டு மென்றால் நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் அதிகாலையில் எழுதல்.