Saturday, August 22, 2020

அரஃபா நோன்பு

  

صِيَامُ يَومِ عَرَفَةَ، أَحْتَسِبُ علَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتي قَبْلَهُ، وَالسَّنَةَ الَّتي بَعْدَهُ

அரஃபா நோன்பு அது, கடந்த வருடம் மற்றும் அடுத்த வருட பாவங்களை மன்னித்து விடும் என்று  நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

 

நூல்              : முஸ்லிம்

அறிவிப்பாளர்    : அபூகதாதா {ரலி} அவர்கள்

பக்கம், ஹதீஸ் எண்  : 1162

 

வெள்ளிக்கிழமை நோன்பு வைப்பது கூடுமா ?

வெள்ளிக்கிழமை நோன்பு வைப்பதாக இருந்தால் அதற்கு முந்தைய நாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ இணைத்து வைக்க வேண்டும் என்பது நபிமொழி {புகாரி ; 1985}

என்றாலும் இந்த சட்டம் நஃபிலான நோன்புக்கு மட்டும் தான் பொருந்தும்.ஏனென்றால் முஸ்லிமில் {2103} வந்திருக்கிற ஒரு ஹதீஸில் ஒருவர் வழமையாக நோன்பு வைக்கும் தினம் வெள்ளிக்கிழமையாக அமைந்து விட்டாலே தவிர என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. எனவே வெள்ளிக்கிழமை சுன்னத்தான நோன்பு வைப்பதில் தவறேதும் இல்லை.

No comments:

Post a Comment