என்னுடைய பழைய பதிவு. சிறிய மாற்றங்களோடு......
நம் நாட்டு நீதிமன்றங்களும் அதிலுள்ள நீதிபதிகளும் வித்தியாசமான, விசித்திரமான,அநீதமான தீர்ப்புகளை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவை ஆதரிக்கும் தீர்ப்பைக் கூறி இஸ்லாமியர்களை மட்டுமல்ல,
நாட்டிலுள்ள நடுநிலையாளர்களைக் கூட முகம் சுழிக்க வைத்தது. சமீப காலமாக நாட்டில் இருக்கிற சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் தீர்ப்புக்களைக் கூறி நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் இன்றைக்கு இருக்கிற நீதிபதிகள் இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகவே இன்றைய நீதிபதிகளின் தீர்ப்பு அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். அந்த வகையில் தான் இரண்டு தினங்களுக்கு முன்னால் ஹிஜாப் குறித்து கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பு என்ற பெயரில் இஸ்லாமிய சமூகம் உயிராக மதிக்கக்கூடிய ஷரீஅத்தில் கை வைத்திருக்கிறது.அநீதமாகவும்,
அறியாமையை வெளிப்படுத்தும் விதமாகவும் தீர்ப்புக்களை இன்றைக்குள்ள நீதிபதிகள்
கூறிக்கொண்டிருக்கிற இவ்வேளையில் நீதிமன்றங்கள் குறித்தும் நீதிபதிகள் குறித்தும்
அங்கே வழங்கப்படுகிற தீர்ப்புக்கள் குறித்தும் விரிவாக அலச வேண்டியது காலத்தின்
கட்டாயம்.
நீதிமன்றங்கள் குறித்தும் அங்கே
பிரச்சனைகளுக்கு தீர்ப்பை சொல்லக்கூடிய நீதிபதிகள் குறித்தும் இஸ்லாத்தின் பார்வை
என்ன? இஸ்லாத்தின்
வழிகாட்டுதல் என்ன என்பதை அலசுவதற்கு முன்பு தற்கால சூழ்நிலையில் நீதிமன்றங்களும்
நீதிபதிகளும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள
வேண்டும்.இந்தியாவிலுள்ள மற்ற நீதிமன்றங்களை விட இப்போது உச்ச நீதிமன்றத்தைப் பற்றி அறிந்து
கொள்வது மிகப் பொறுத்தமாக இருக்கும்.இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 ம் ஆண்டு ஜனவரி 28, ம் தேதி முதல்
உச்ச நீதிமன்றம் இயங்கத் தொடங்கியது.
பொதுவாக சட்டம்
படித்து வழக்கறிஞராக இருக்கும் அத்தனை பேருக்கும் நீதிபதியாக வேண்டும் என்ற
கனவு நிச்சயம் இருக்கும். கையைப் பிடித்து, காலைப் பிடித்து, எப்படியாவது
நீதிபதியாக வேண்டும் என்று முயற்சிக்காத எந்த வழக்கறிஞரையும் பார்க்க முடியாது.
காரணம் நீதிபதி பதவி என்பது சாதாரணமான ஒரு பதவியல்ல.இலட்சக்கணக்கான சம்பளம், சொகுசு பங்களா , அந்த
வீட்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை, ஃபர்னிச்சர்கள், வாசலில்
துப்பாக்கி ஏந்திய காவலர், மாதந்தோறும் 10 ஆயிரம்
யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம், மாதந்தோரும் 3800 லிட்டர் வரை இலவச
தண்ணீர்.நாட்டில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் இலவசமாக
விமானத்தில் முதல் வகுப்பில் பிரயாணம், ஸைரன் வைத்த
காரில் பாதுகாப்பான பயணம், இப்படி
ஏராளமான வசதிகளும் சலுகைகளும் வழங்கப்படும்.
உச்ச நீதிமன்ற
நீதிபதியின் ரிடைர்மண்ட் வயது 65, அதற்கிடையில் அவரை பதவியிலிருந்து
நீக்க வேண்டுமென்றால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு
பெரும்பான்மை உறுப்பினர்களால் வாக்களித்து தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டு அதற்குப்
பிறகு குடியரசுத் தலைவரைத் தவிர வேறு எவராலும்
அவரை பதவியிலிருந்து நீக்க முடியாது.
இத்தனை பெரிய
உயர்ந்த கவுரமான பதவியான உச்சநீதிமன்ற நீதிபதி பதவியைப் பெற்ற ஒருவர் சட்டங்கள்
அத்தனையையும் கரைத்துக் குடித்திருப்பாரா ? என்றால் அவ்வாறு
கரைத்துக் குடிக்க வேண்டிய அவசியமும் இல்லை,அவ்வாறு அத்தனை
சட்டங்களையும் கரைத்துக் குடிக்கவும் முடியாது. ஏனென்றால் சட்டம்
என்பது ஒரு பெருங்கடல். கிரிமினல் வழக்குகள், சிவில் வழக்குகள், சொத்துரிமை
வழக்குகள், மான நஷ்டஈடு வழக்குகள், விவாகரத்து
வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், சர்வதேச சட்டம்
தொடர்பான வழக்குகள், பணி தொடர்பான வழக்குகள்,தொழிலாளர்
பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், என்று பல்வேறு
பிரிவுகள் இருக்கிறது. அத்தனையிலும் ஒருவர் முழுமையாக
தேர்ச்சி பெறுவது சாத்தியமில்லாத விஷயம்.
மட்டுமல்ல மற்ற
ப்ரொபஷனல் படிப்புகளைப் போல சட்டப்படிப்புக்கு 90 சதவிகிதமோ, 80 சதவிதமோ வருகைப்
பதிவேடு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 85 விழுக்காடு வருகை
இல்லாமல், மருத்துவக்
கல்லூரி மாணவர்கள் exam எழுத முடியாது. ஆனால் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு
அந்த சட்டமெல்லாம் இல்லை.வருடத்தின் முக்கால் வாசி நாட்களில் ஏதாவது போராட்டம்
ஆர்பாட்டம் என்று வீதியில் நிற்கிற அவர்கள் எப்படி முழுமையாக சட்டங்களை
படித்திருப்பார்கள்.இப்படி அரைகுறை சட்டங்களை தெரிந்து கொண்டு தான் சமூகத்தில்
அவர்கள் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நீதிபதியாக இருப்பவர் பணத்தாசை இல்லாதவராக யாருக்கும் அஞ்சாதவராக இருக்க
வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.
أما أمير المؤمنين الفاروق عمر بن الخطاب
رضي الله عنه، فقد حدد من ضمن شروط تولية القضاة، أن يكون القاضي من أسرة كبيرة صاحبة
وجاهة ومال، فقال في كتبه إلى بعض عماله "لا تستقضين إلا ذا مال وذا حسب؛ فإن
ذا المال لا يرغب في أموال الناس، وإن ذا الحسب لا يخشى العواقب بين الناس"،
(ادب الدنيا والدين)
பொருளாதாரமும் உயர்ந்த குடும்ப பின்னனியும்
உள்ளவரை மட்டுமே தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக ஆக்க வேண்டும். ஏனெனில் பொருளாதாரம்
விசாலமாக இருந்தால் அவர் பொருளுக்கு ஆசைப்பட்டு தவறான தீர்ப்பை வழங்க மாட்டார்.
உயர்ந்த குடும்ப பின்னனி இருப்பவர் தான் யாருக்கும் அஞ்சாமல் தீர்ப்பு வழங்குவார்
என்று உமர் ரலி அவர்கள் தனக்கு கீழ் இருந்த அதிகாரிகளுக்கு கடிதத்தின் வழியாக குறிப்பிட்டார்கள்.
(அதபுத்துன்யா வத்தீன்)
இன்றைக்கு படித்தவனுக்கு
ஒரு தீர்ப்பு, பாமரனுக்கு ஒரு தீர்ப்பு,அதிகாரிக்கு ஒரு தீர்ப்பு, சாமானியனுக்கு ஒரு
தீர்ப்பு,பணக்காரனுக்கு ஒரு தீர்ப்பு,ஏழைக்கு
ஒரு தீர்ப்பு, பணம் எங்கே வாரி இறைக்கப்படுகிறதோ அதற்கு
சாதகமான தீர்ப்பு.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இன்றைக்கு அதிகம் இருப்பது
நீதிபதிகள் இல்லை, நிதிபதிகள். இது தான் இன்றைய நீதிபதிகளின்
நிலைபாடு.
தற்கால
சூழ்நிலையின் நீதிபதிகளைப்பற்றி அறிந்து கொண்ட அதே நேரத்தில் இஸ்லாமிய நீதிபதிகள்
எப்படி இருந்தார்கள். அவர்களின் தகுதி எப்படி இருந்தது, அவர்களின்
நீதியும் நேர்மையும் எப்படி இருந்தது.அவர்களின் தீர்ப்புக்கள் எப்படி
அமைந்திருந்தது என்பதையும் நாம் அறிய வேண்டும். அப்போது தான் நீதித்துறை
விஷயத்திலும் நீதிபதிகள் விஷயத்திலும் இஸ்லாத்திற்கும் உலகத்திற்கும் மத்தியில்
இருக்கிற வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
" ألا ان الاسلام حائط
منيع، وباب وثيق
فحائط الاسلام العدل.. وبابه الحق..
فاذا نقض الحائط، وحطّم الباب، استفتح الاسلام.
ولا يزال الاسلام منيعا ما اشتدّ السلطان
وليست شدّة السلطان قتلا بالسيف، ولا ضربا بالسوط
ولكن قضاء بالحق، وأخذا بالعدل
ஓ ஜனங்களே! இஸ்லாம் என்பது பலமானகோட்டையையும், உறுதியான வாயில்களையும்
கொண்டது. இஸ்லாத்தின் கோட்டை என்பது
நீதியாகும். அதன் வாயில்கள் உரிமைகளாகும். கோட்டை
தகர்க்கப் பட்டு வாயில்கள் உடைக்கப் பட்டால் இந்த மார்க்கம் வெற்றி கொள்ளப் பட்டு விடும். மக்களின் பிரதி
நிதிகளான அதிகாரிகள் உறுதியாக
இருக்கும் வரை இஸ்லாம் பாதுகாப்பாக இருக்கும். அதிகாரிகளின் உறுதி என்பதுவாளால் வெட்டுவதோ, கசையால் அடிப்பதோகிடையாது. மாறாக, நீதியை நிலைநாட்டுவதும்
மக்களின் உரிமை களைப் பெற்று
க்கொடுப்பதிலும் தான் இருக்கின்றது உமர் ரலி அவர்கள்
கூறினார்கள்.” (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் ; பக்கம் : 383)
கட்டுப்பாடான
கட்டுக்கோப்பான ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமென்றால் அங்கு இயற்றப்படுகின்ற
சட்டங்களும்,நீதிகளும் முறையாக இருக்க வேண்டும்.
மனிதனின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பேணும் விதத்தில் அந்த சட்டங்கள்
அமையப்பெற்றிருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக எந்த
வேற்றுமைகளோ எந்த ஏற்றத்தாழ்வுகளோ இல்லாமல் அந்த சட்டத்தில் சமத்துவம் பேணப்பட வேண்டும்.
كتب عمر إلى أبي موسى الأشعرى - رضى الله عنهما -: أن القضاء فريضةٌ
محكمةٌ، وسنةٌ متبعةٌ، وآسِ بين الناس في وجهك ومجلسك وقضائك؛ حتى لا يطمع شريفٌ
في حيفك، ولا ييئَس ضعيفٌ من عدلك
பஸரா நாட்டின்
பொறுப்பில் இருந்த அபூமூஸா ரலி அவர்களுக்கு உமர் ரலி அவர்கள் எழுதிய கடிதம் ; தீர்ப்பு என்பது
உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கடமையாகும். பின்பற்றப்படும் ஒரு
வழிமுறையாகும்.உங்கள் அனுகுமுறையிலும் உங்கள் சபையிலும் உங்கள் தீர்ப்பிலும்
மக்களிடம் சமமாக நடந்து கொள்ளுங்கள். எந்த உயர்ந்தவரும் உங்கள் அநீதத்தில் ஆவல்
கொள்ளக்கூடாது. எந்த பலவீனமானவரும் உங்கள் நீதத்தை விட்டும் நிராசை அடைந்து
விடக்கூடாது. (தாரகுத்னீ : 4/132)
எல்லோருக்கும்
சமமான சட்டம்,எல்லாருக்கும் சமமான தீர்ப்பு,உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாராமல் அனைவரையும் சட்டத்திற்கு முன் சமமாக
பார்த்தல், நடத்துதல், நிறுத்துதல் இது
தான் உண்மையான நீதிபதிக்கான அடையாளம், இலட்சணம். இதைத்தான் நபி ﷺ அவர்கள் கற்றுக்
கொடுத்தார்கள், ஸஹாபாக்களும் பின்பற்றினார்கள்.
واستعدى رجل على علي بن أبي طالب عليه السلام عمر بن الخطاب رضي الله عنه
وعلى جالس فالتفت عمر إليه، فقال: قم يا أبا الحسن فاجلس مع خصمك، فقام فجلس معه
وتناظرا، ثم انصرف الرجل ورجع علي عليه السلام إلى محله، فتبين عمر التغير في
وجهه، فقال: يا أبا الحسن، ما لي أراك متغيرا! أكرهت ما كان؟ قال نعم قال:
وما ذاك قال: كنيتني بحضرة خصمي، هلا قلت: قم يا علي فاجلس مع خصمك! فاعتنق
عمر عليا، وجعل يقبل وجهه، وقال بأبي أنتم! بكم هدانا الله، وبكم أخرجنا من الظلمة
إلى النور.
உமர் ரலி
அவர்களின் சபையில் வந்து ஒருவர் ஹள்ரத் அலி ரலி அவர்கள் விஷயத்தில் எனக்கு உதவி
செய்யுங்கள் என்று கேட்டார்.உடனே உமர் ரலி அவர்கள் அலி ரலி அவர்களைப் பார்த்து
ஹஸனின் தந்தையே! எழுந்து அவனோடு அமருங்கள் என்று கூறி அவர்களின்
பிரச்சனையைக் கேட்டறிந்து தீர்ப்பளித்தார்கள்.அந்த மனிதரும் சென்று விட்டார்.அலி
ரலி அவர்களின் முகத்தில் மாற்றத்தைப் பார்த்தார்கள். என்ன ஆனது? நான் நடந்து
கொண்ட விதம் எதுவும் உங்களுக்கு பிடிக்க வில்லையா? என்று உமர் ரலி
அவர்கள் கேட்டார்கள். ஆம் என்றார்கள். என்னவென்று கேட்ட போது, எனக்கும்
அவனுக்கும் பிரச்சனை. எங்கள் இருவரையும் நீங்கள் விசாரிக்கிறீர்கள்.இந்நிலையில்
அவனைப் பெயர் கூறி அழைத்து விட்டு என்னை மட்டும் ஹஸனின் தந்தையே! என்று கண்ணியமாக
நீங்கள் அழைத்தீர்கள். எனவே எங்களிடையே நீங்கள் சமமாக நடந்து கொள்ள வில்லை என்று
அலி ரலி அவர்கள் கூறினார்கள். இந்த பதிலைக் கேட்டதும் அவர்களைக் கட்டியணைத்து
முத்தமிட்டு உங்களைக் கொண்டு தான் அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டினான்.
உங்களைக் கொண்டு தான் இருளிலிருந்து ஒளியின் பக்கம் எங்களை அல்லாஹ் கொண்டு வந்தான்
என்று உமர் ரலி அவர்கள் கூறினார்கள். (ஷரஹு நஹ்ஜில் பலாகா : 17/65)
வாதி பிரிதிவாதி
இருவருக்கும் பாரபட்சமில்லாமல் சமமாக நீதமாக தீர்ப்பளிக்க வேண்டும் என்பது ஒரு
புறம் இருந்தாலும் அந்த இருவரையும் அழைப்பதில் கூட பாரபட்சம் காட்டக்கூடாது
என்றால் இஸ்லாம் எந்தளவு நீதித்துறையில்
சமத்துவம் பேணக் கற்றுத்தருகிறது என்பதை உணர முடிகிறது.சமூகத்தில் சாதாரண
குடிமகனான ஹள்ரத் அலி ரலி அவர்கள் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு ஆச்சரியம் என்றால்
ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் விஷயத்தில் இதை விட ஆச்சரியமான நிகழ்வு ஒன்று நடந்தது.
كان بين عمر وبين أبي بن كعب خصومة فقال عمر: اجعل بيني وبينك رجلا، فجعلا
بينهما زيد بن ثابت فأتياه فقال عمر: أتيناك لتحكم بيننا وفي بيته يؤتى الحكم فلما
دخلا عليه وسع له زيد عن صدر فراشه فقال: ها هنا يا أمير المؤمنين، فقال له عمر:
هذا أول جور جرت في حكمك ولكن أجلس مع خصمي
உமர் ரலி
அவர்களுக்கும் உபய்யிப்னு கஃப் ரலி அவர்களுக்கும் மத்தியில் நிகழ்ந்த ஒரு
பிரச்சனைக்கு நீதி வழங்கத் தேடி அவ்விருவரும் ஜைத் பின் ஸாபித் ரலி அவர்களின்
வீட்டிற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஹள்ரத் உமர் ரலி அவர்களை தன்
விரிப்பில் வந்து அமரும் படி ஜைத் ரலி அவர்கள் சைகை செய்தார்கள். அப்போது, உங்கள்
நீதித்துறையில் நடந்த முதல் அநீதம் இது என்று உமர் ரலி அவர்கள் கூறினார்கள். (அஸ்ஸுனனுல்
குப்ரா : 20510)
இந்த மாதிரியான
ஒரு நிகழ்வை உலக வரலாற்றில் எங்காவது பார்க்க முடியுமா ? இன்றைக்குள்ள சூழ்நிலையில்
நாட்டை ஆளக்கூடிய ஒரு ஆட்சியாளர் சட்டத்திற்கு முன் குற்றவாளியாக நிறுத்தப்படுவதே
ஒரு அபூர்வம்.சட்டத்தில் இருக்கிற ஓட்டையை பயன்படுத்தி இலகுவாக தப்பித்துக்
கொள்வார். அப்படியே ஒருவேலை நிறுத்தப்பட்டாலும் அவருக்கென்று தனி சலுகைகள் தனி
மரியாதை. ஆனால் இங்கே குற்றவாளிக்கூண்டில் நிற்கிற தனக்கு
அவரது இருக்கையில் இடமளிப்பதற்கு அழைத்த அவர்களைக் கண்டிக்கிறார்கள் என்றால்
நீதித்துறையில் சமத்துவம் பேணுவதில் ஸஹாபாக்கள் எந்தளவு முனைப்புக் காட்டினார்கள்
என்பதற்கு இந்த வரலாறு மிகச்சிறந்த சான்று.
குர்ஆனில்
அல்லாஹ் ஒரு வரலாற்றை சொல்லிக் காட்டுகிறான். ஹள்ரத் தாவூது அலை அவர்களிடம் ஒரு
வழக்கு வருகிறது.
أن رجلين دخلا على داود، أحدهما صاحب حرث والآخر صاحب غنم، فقال صاحب
الحرث: إن هذا أرسل غنمه في حرثي، فلم يُبق من حرثي شيئا، فقال له داود: اذهب فإن
الغنم كلها لك، فقضى بذلك داود، ومرّ صاحب الغنم بسليمان، فأخبره بالذي قضى به
داود، فدخل سليمان على داود فقالا يا نبيّ الله إن القضاء سوى الذي قضيت، فقال:
كيف؟ قال سليمان: إن الحرث لا يخفى على صاحبه ما يخرج منه في كل عام، فله من صاحب
الغنم أن يبيع من أولادها وأصوافها وأشعارها حتى يستوفي ثمن الحرث، فإن الغنم لها
نسل في كلّ عام، فقال داود: قد أصبت، القضاء كما قضيت، ففهَّمها الله سليمان
தாவூது நபியிடம்
இருவர் வந்தனர். ஒருவரின் நிலத்தில் மற்றொருவரின் ஆடுகள் இரவில் மேய்ந்து பயிர்களை
அழித்து விட்டதாக வழக்குரைத்தனர். தாவூது நபி வழக்கை விசாரித்து, அழிந்த
பயிர்களின் இழப்பும் பயிர்களை அழித்த ஆடுகளின் விலையும் சமமாக இருந்ததால்
நிலத்திற்குரியவர் இழப்பிற்கு ஈடாக ஆடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு தீர்ப்பு
அளித்தார்கள்.
தீர்ப்பைப்
பெற்றுத் திரும்பிய இருவரும் வழியில் தாவூது நபியின் மகன் சுலைமான் நபியை சந்தித்தனர்.
அவர்களின் வழக்கையும் தாவூது நபி அவர்கள் வழங்கிய தீர்ப்பையும் சுலைமான் நபி
அவர்களிடம் கூறினர். அப்பொழுது சுலைமான் நபி அவர்களுக்கு சுமார் 13 வயது. தந்தை
தாவூது நபி அவர்களின் தீர்ப்பினும் தெளிவான எளிய தீர்ப்பு இருப்பதாக சுலைமான் நபி
அவர்கள் அறிவித்தார்கள். இச்செய்தியை அறிந்த தாவூது நபி மகனை அழைத்து தக்க
தீர்ப்பு என்ன வென்று வினவினார்கள்
"ஆடுகள்
பயிரை அழித்துவிட்டதாக வழக்கு. ஆடுகளுக்கு சொந்தக்காரன் அந்நிலத்தில் விவசாயம்
செய்து கதிர் அறுத்து விளைச்சலை நிலத்துக்கு உரியவரிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு
விளைச்சலை ஆடுகளுக்கு உரியவன் கொடுக்கும் வரை ஆடுகளை விவசாயி வளர்த்து ஆடுகளின்
பாலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆடுகள் ஈனும் குட்டிகளையும் திரும்ப
ஒப்படைக்கும் வரையில் நிலத்துக்குரியவன் வளர்த்து பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்று
கூறினார்கள். இது தான் சரியான தீீர்ப்பு என்று தாவூது நபி அலை அவர்கள்
கூறினார்கள். (தஃப்ஸீீர் தப்ரீ)
இந்தத்
தீர்ப்பால் வழக்குரைத்த இருவருக்கும் பாதிப்பில்லாமல் இழப்பீடு செய்யப்பட்டது.
அழிந்த பயிரின் விளைச்சலை நிலத்துக்குச் சொந்தக்காரன் பெறுகிறான். ஆட்டுக்குச்
சொந்தக்காரனும் ஆடுகளை இழந்துவிடாமல் மீண்டும் பெறுகிறான்.
எனவே நீதிபதிகள்
ஒரு பக்க சார்பாக தீர்ப்பை வழங்கி அதன் மூலம் இன்னொரு பக்கம் முற்றிலுமாக
பாதிக்கப்படுவதை இஸ்லாம் விரும்ப வில்லை. எனவே தீர்ப்புகள் ஒரு நியாயத்தின்
அடிப்படையில் வழங்கப்பட்டாலும், நியாயத்தையும் தாண்டி தொலை நோக்கு சிந்தனையும் இருக்க
வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அவர்கள் வழங்கிய இந்த தீர்ப்பின் காரணமாக
கொஞ்ச காலத்தில் இருவருக்குமே எந்த வித பாதிப்பும் இல்லாமல்
இழந்ததைப் பெற்றுக் கொண்டார்கள்.
இஸ்லாமிய
தீர்ப்பு இப்படித்தான் அமைந்திருந்தது.அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும்
தொலைநோக்குச் சிந்தனையோடும் தீர்ப்புக்களை வழங்கினார்கள் இஸ்லாமிய நீதிபதிகள்.
அறிவின் வாசல் என்று அண்ணல் நபி ஸல் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட ஹள்ரத் அலி
ரலி அவர்கள் இது மாதிரி எண்ணற்ற வழக்குகளை சந்தித்திருக்கிறார்கள்.நபியின்
சொல்லுக்கிணங்க அவர்களின் அத்தனை தீர்ப்புக்களும் அறிவுப்பூர்வமாகத்தான்
அமைந்திருந்தது.
நீதிபதிகள்
இப்படித்தான் இருக்க வேண்டும்.சட்டங்களில் மிகச்சிறந்த விற்பன்னர்களாக இருப்பதோடு
சமயோஜித சிந்தனையோடு தீர்ப்பு வழங்குவதற்கும் திறன் பெற்றவர்களாக இருக்க
வேண்டும்.ஆனால் இன்றைக்குள்ள நீதிபதிகள் சட்டத்தில் கூட அறைகுறையாக இருப்பது வேதனை
தரும் செய்தி.
நீதிபதிகள்
குறித்து நபி ﷺ அவர்கள்
சொன்னார்கள் :
الْقُضَاةُ
ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي
الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ
فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ
فَهُوَ فِي النَّارِ
நீதிபதிகள்
மூன்று வகையினர். அதில் ஒரு வகையினர் சொர்க்கம் செல்வார்கள். இன்னும் இரு வகையினர்
நரகம் செல்வார்கள். உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர் சொர்க்கம்
செல்வார். உண்மையை அறிந்து அநியாயமாக தீர்ப்பு வழங்குபவரும் அறியாமையால்
மக்களுக்கு தவறாக தீர்ப்பு வழங்குபவரும் நரகம் செல்வார்கள். (அபூதாவூது : 3573)
இந்த ஹதீஸின் படி
முதல் பிரிவில் இன்றைக்குள்ள நீதிபதிகளைப் பார்ப்பது அரிதான விஷயம்.ஒன்று
சத்தியத்தை அறிந்து கொண்டு அதற்கு மாற்றமாக தீர்ப்பு வழங்குவார்கள், அல்லது
எதுவும் தெரியாமல் தீர்ப்பு வழங்குவார்கள்.இது தான் இன்றைய நீதிபதிகளின் நிலை.
தீர்ப்பு
வழங்கும் இடத்தில் இருப்பவர் எல்லா சட்ட நுனுக்கங்களையும் அறிந்தவராக இருக்க
வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் அவர் குர்ஆனுடைய ஞானம் உள்ளவராக இருக்க
வேண்டும். குர்ஆனுடைய ஞானம் இல்லாத ஒருவர் நீதிபதியாக ஆக முடியாது.
القاضي الجاهل مهلك لنفسه ولغيره: قال علي
بن أبي طالب رضي الله عنه لرجل كان يقضي بين الناس: "هل تعرف الناسخ والمنسوخ؟
قال: لا، قال: هل أشرفت على مراد الله في أمثال القرآن؟ قال: لا، قال: إذن هلكتَ وأهلكتْ".
(الناسخ والمنسوخ)
மக்களுக்கு தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்த
ஒருவரிடம் அலி ரலி அவர்கள் உனக்கு குர்ஆன் வசனங்களில் ناسخ எது منسوخ எதுவென்று தெரியுமா
என்று கேட்டார்கள். அவர் தெரியாது என்றார். குர்ஆனில் உதாரணம் கூறும் வசனங்களின்
நோக்கங்களை நீ அறிவாயா என்று கேட்டார்கள். அவர் தெரியாது என்றார். அப்படியானால்
தீர்ப்பு கூறுவதால் நீயும் அழிந்து மக்களையும் அழிவில் கொண்டு போய் சேர்த்து
விடுவாய் என்றார்கள். (அன்நாஸிஹ் வல் மன்ஸூஹ்)
நீதிபதி பொறுப்பு
என்பது சாதாரணமான மற்ற பொறுப்புக்களைப் போல் அல்ல. ஈருலகத்திலும் பெரும்
ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய நிலை வரும். அதனால் தான் நபி ஸல் அவர்கள் இவ்வாறு
கூறினார்கள் ;
والقضاء مسؤولية عظيمة حيث قال النبي صلى
الله عليه وسلم "من ولي القضاء فقد ذبح بغير سكين" رواة الترمذي
தீர்ப்பு வழங்கும் பொறுப்பு யாரிடம்
ஒப்படைக்கப்படுகிறதோ அவர் கத்தியின்றி அறுக்கப்படுவார். (அபூதாவூது : 3571)
கத்தியைக் கொண்டு
அறுப்பதால் வேதனையின்றி இலகுவாக மரணம் ஏற்படும்.ஆனால் கத்தியின்றி அறுக்கப்படுவது
எவ்வளவு வேதனையைத் தருமோ அதை விட மிகவும் ஆபத்தானது தீர்ப்பளிக்கும் பொறுப்பு
என்பது. ஏனென்றால் நீதமாக தீர்ப்பளித்தால் யாருக்கு எதிராக அத்தீர்ப்பு அமைகிறதோ
அவரின் மூலம் உலகில் அவருக்கு ஆபத்து ஏற்படும். அநீதமாக தீர்ப்பளித்தால் மறுமையில்
வேதனை உண்டு. எனவே இவ்வாறு நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அதனால் தான் அந்தப் பொறுப்புக்கு வருவதற்கு நம் முன்னோர்கள் தயக்கம்
காட்டினார்கள். எப்படியாவது அதிலிருந்து தப்பிக்க முயற்சித்தார்கள்.
فهذا بكر بن عبد الله المزني -رحمه الله-
لما ذهبوا به إلى القضاء قال: "إني والله لا علم لي بالقضاء، فإن كنت صادقاً فما
ينبغي لكم أن تستعملوني، وإن كنت كاذباً فلا تولوا كاذبًا" الطبقات الكبرى (7/ 157)،
தாபிஃ யான பிக்ர் பின் அப்தில்லாஹ் அல்முஜ்னீ
ரஹ் அவர்களிடம் தீர்ப்புக்காக மக்கள் சென்ற போது அல்லாஹ்வின் மீது சத்தியமாக
அதைப்பற்றிய அறிவு எனக்கில்லை என்று கூறினார்கள். அவர்கள் விடுவதாக இல்லை. நீங்கள்
தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று சொன்ன போது,
எனக்கு அந்த அறிவு இல்லை. நான் உண்மை சொல்கிறேன் என்று நீங்கள்
நினைத்தால் எனக்கு அந்த பொறுப்பைத்
தராதீர்கள். நான் சொல்வது பொய் என்று நீங்கள் கருதினால் பொய் சொல்பவருக்கு அந்த
தகுதி இல்லை என்று கூறினார்கள். (அத்தபகாதுல் குப்ரா)
அல்லாஹ் நீதமான
ஆட்சியாளர்களையும் நீதிபதிகளையும் நம் சமூகத்திற்கு வழங்குவானாக
மெய்சிலிர்க்க வைத்த கட்டுறை இறையச்சமே மிக சிறந்த நீதம்
ReplyDeleteஅல்லாஹ் தங்களுடைய இல்மை பொருந்திக்கொள்வானாக