Thursday, September 23, 2021

ஹதீஸ் எண் ; 22 ان امراة من جهينة اتت

 

وَعَنْ أبي نُجَيْد-بِضَم النُّونِ عِمْرانَ بْنِ الحُصيْنِ الخُزاعيِّ رَضِي اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرأَةً مِنْ جُهينةَ أَتَت رَسُولَ الله وَهِيَ حُبْلَى مِنَ الزِّنَا، فقَالَتْ: يَا رسول الله أَصَبْتُ حَدًّا فأَقِمْهُ عَلَيَّ، فَدَعَا نَبِيُّ الله وَليَّهَا فَقَالَ: أَحْسِنْ إِليْهَا، فَإِذَا وَضَعَتْ فَأْتِنِي فَفَعَلَ، فَأَمَرَ بِهَا نَبِيُّ اللَّهِ ، فَشُدَّتْ عَلَيْهَا ثِيَابُها، ثُمَّ أَمَرَ بِهَا فرُجِمتْ، ثُمَّ صلَّى عَلَيْهَا. فَقَالَ لَهُ عُمَرُ: تُصَلِّي عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ زَنَتْ، قَالَ: لَقَدْ تَابَتْ تَوْبةً لَوْ قُسِمَتْ بَيْن سبْعِينَ مِنْ أَهْلِ المدِينَةِ لوسعتهُمْ، وَهَلْ وَجَدْتَ أَفْضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنفْسهَا للَّهِ ؟

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி அவர்களிடம் வந்தார். அப்பெண் விபச்சாரம் மூலம் கர்ப்பிணியாக இருந்தார். இறைத்தூதர் அவர்களே தண்டனைக்குரிய செயலை நான் செய்து விட்டேன். அந்த தண்டனையை என் மீது நிறைவேற்றுங்கள் என்று கூறினாள். நபி அவர்கள் அவளின் பொறுப்பாளரை அழைத்து இவளை நல்ல விதமாக வைத்துக்கொள். குழந்தை பெற்று விட்டால் என்னிடம் அழைத்து வா என்று கூறினார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவள் வந்ததும் அவள் விஷயமாக தண்டனை தர நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். அவள் மீது அவளின் ஆடைகள் சுற்றப்பட்டது. பின்பு அவளை கல்லால் எறிந்து கொல்ல கட்டளையிட்டார்கள். பிறகு அவளுக்கு ஜனாஸா தொழ வைத்தார்கள். அப்போது உமர் ரலி அவர்கள் இறைத்தூதர் அவர்களே விபச்சாரம் செய்து விட்ட இவளுக்கா தொழ வைக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது மக்களில் 70 நபர்களுக்கு பங்கிட்டு அவர்களுக்குச் சமமாக தரும் அளவுக்குறிய தவ்பாவை அவள் செய்து விட்டாள். அல்லாஹ்விற்காக தன்னை அர்ப்பணித்து விடுவதை விட சிறந்த ஒன்றை நீர் காணப் போகிறீரா என்று நபியவர்கள் கேட்டார்கள். (முஸ்லிம் ; 1696)

1 - திருமணம் முடிக்காத ஆணோ பெண்ணோ விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும். திருமணம் முடித்த ஆணோ பெண்ணோ விசாரத்தில் ஈடுபட்டால் அவர்களைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். இது தான் இஸ்லாத்தினுடைய சட்டம். அந்தப் பெண்மணி திருமணம் முடித்த பெண்மணியாக இருப்பதினால் நபி அவர்கள் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இன்றைக்கு அதிகமாக இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள், குறை சொல்பவர்கள் அதற்கு அவர்கள் சொல்லக்கூடிய மிக முக்கியமான காரணங்களில் ஒன்று இஸ்லாம் கடுமையான சட்டங்களை ஏற்படுத்தி மக்களை வதை செய்கிறது. சிரமப் படுத்துகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் பார்த்தால் இது மாதிரியான தண்டனைச் சட்டங்களின் மூலம் அவர்களுக்கு நன்மையைத் தான் இஸ்லாம் நாடுகிறது. குற்றம் செய்தவர்களுக்கு மறுமையில் அதற்காக கிடைக்கும் தண்டனையை விட உலகத்தில் அவர்களுக்கு தரப்படும் தண்டனை மிக மிக லேசானது தான். அந்த வகையில் அது அவர்களுக்கு ரஹ்மத் ஆகும். அதே போன்று இவ்வாறு நிறைவேற்றப்படுகின்ற இஸ்லாமிய சட்டங்கள் அதைப் பார்க்கின்ற மற்றவர்களுக்கும் ரஹ்மத் ஆகும்.

حد يعمل به في الأرض، خير لأهل الأرض من أن يمطروا أربعين صباحًا[8] أن ينزلهم عليهم المطر في أربعين يومًا متتابعة

நாற்பது நாட்கள் தொடர்ந்து மழை பெய்து பூமியை செழிப்பாக்குவதை விட ஒரு குற்றத்திற்கான தண்டனை நிறைவேற்றப்படுவது பூமியில் உள்ளவர்களுக்கு நன்மையானதாக இருக்கும்.

 

2 - அவளிடத்தில் நல்ல விதமாக நடந்து கொள் என்ற நபியின் வார்த்தையிலிருந்து ஒருவன் எவ்வளவு பெரிய குற்றங்களை செய்திருந்தாலும் அதற்காக அவனை இழிவுபடுத்துவதோ அசிங்கமாக பார்ப்பதோ கருதுவதோ அவனை தள்ளி வைப்பதோ கூடாது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

3 - குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு என்னிடத்தில் வா உனக்கு தன்னை நிறைவேற்றுகிறேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அந்த பெண் அவ்வாறு குழந்தையை பெற்றெடுத்த பிறகு அவருக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று வந்திருக்கிறது. வேறு சில  அறிவிப்புகளில் குழந்தையை பெற்றெடுத்து வந்த போது கூட அந்த குழந்தைக்கு பால்குடி மறக்கடிக்கப்பட்ட பிறகு என்னிடத்தில் வா என்று நபி ஸல் அவர்கள் திருப்பி அனுப்பினார்கள். மீண்டும் அந்தப் பெண்மணி குழந்தை பாலை நிறுத்தி விட்டது என்பதற்கு அடையாளமாக தன் குழந்தையின் கையில் ரொட்டித் துண்டைக் கொடுத்து அழைத்து வந்தாள். அதற்கு பிறகு தான் அவளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று வந்திருக்கிறது. இந்நிகழ்வில் இருந்து ஒரு குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என்தற்காக அவனை சார்ந்திருக்கிற மற்றவர் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்

4 - பாவ மன்னிப்பைப் பெற்று விட வேண்டும். தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் நபியின் தோழர்கள் காட்டிய அதீத முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் நமக்கு பிரதிபலித்துக் காட்டுகிறது. தான் செய்த குற்றத்தை சபைக்கு வந்து வெளிப்படுத்துவது அது இழிவைத் தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கு தண்டனையாக தன் உயிரே போய் விடும் என்று இருந்தாலும் அந்தப் பெண்மணி தன் தவறை முன்மொழிந்து தண்டனையை பெறுகிறார் என்றால் அவர்களை பொறுத்த வரை தன்னை இறைவன் மன்னிப்பதற்காக எதையும் செய்ய தயாராக இருந்தார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

No comments:

Post a Comment