Monday, September 27, 2021

பாடம் 3 பொறுமை

 

ரியாளுஸ் ஸாலிஹீன் கிதாபின் மூன்றாவது பாடம் பொறுமையாகும். பொறுமையை மூன்று வகையாக மார்க்கம் பிரிக்கிறது. ஒன்று அல்லாஹ் கொடுக்கின்ற சோதனைகளில் பொறுமை கொள்ளுதல். தன் அடியார்கள் பொறுமையை மேற்கொள்கிறார்களா என்பதை சோதிப்பதற்குத் தான் அல்லாஹுத்தஆலா மனிதர்களுக்கு சோதனைகளைத் தருகிறான்.

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الأَمْوَالِ وَالأَنفُسِ وَالثَّمَرَاتِ

நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள்,உயிர்கள், விலைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். (அல்குர்ஆன் : 2 ; 155)

இரண்டாவது, பாவங்களை விட்டும் தன்னை தடுத்துக்கொள்வதில் பொறுமை கொள்வது. பாவம் செய்ய வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும். பாவம் செய்ய வேண்டுமென்று ஷைத்தான் தூண்டுவான். அவனுடைய நஃப்ஸும் தூண்டும். ஆனால் அந்த நேரத்தில் அதை செய்யாமல் இருப்பதற்கு பொறுமை அவசியம். மூன்றாவது நன்மையான காரியங்களை செய்வதில் பொறுமையை மேற்கொள்வது. நன்மையான காரியங்களை செய்வது சிரமமாகத் தான் இருக்கும். குளிர் காலங்களில் பஜர் தொழுகைக்கு வருவதும் வெயில் காலங்களில் லுஹர் தொழுகைக்கு வருவதும் வேலைப்பளு இருக்கின்ற பொழுது இஷா தொழுகைக்கு வருவதும் மதிய ஓய்வைத் தாண்டி அஸர் தொழுகைக்கு வருவதும் வியாபாரம் நன்கு சூடு பிடித்துக் கொண்டு இருக்கின்ற பொழுது மக்ரிப் தொழுகைக்கு வருவதும் சிரமமான காரியம் தான். இருந்தாலும் பொறுமையோடு பள்ளிக்கு வர வேண்டும். எனவே நன்மையான காரியங்களைச் செய்வதற்கும் பொறுமை தேவைப்படுகிறது.

الصبرُ ثلاثةٌ : فصبرٌ على المصيبةِ ، وصبرٌ على الطاعةِ ، وصبرٌ عن المعصيةِ ؛ فمَن صبر على المصيبةِ حتى يَرُدَّها بحُسْنِ عَزائِها . كتب اللهُ له ثلاثَمائةِ درجةٍ ، ما بينَ الدرجتينِ كما بينَ السماءِ والأرضِ ،

ومَن صبر على الطاعةِ كتب اللهُ له سِتَّمِائةِ درجةٍ ما بينَ الدرجتينِ كما بينَ تُخُومِ الأرضِ إلى مُنْتَهَى الْأَرَضِينَ السَّبْعِ ،

ومَن صبر عن المعصيةِ كتب اللهُ له تِسْعَمِائةِ درجةٍ ما بينَ الدرجتينِ كما بينَ تُخُومِ الأرضِ إلى مُنْتَهَى العرشِ مرتينِ

பொறுமை மூன்று வகையாகும். சோதனைகள் மீது பொறுமை. பாவத்தை விடுவதின் மீது பொறுமை. நன்மையை செய்வதின் மீது பொறுமை. யார் சோதனைகளில் பொறுமை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு 300 படித்தரங்களை அல்லாஹ் எழுதுகிறான். அந்த ஒவ்வொரு படித்தரத்திற்கும் மத்தியில் வானம் பூமிக்கு இடையே உள்ள தூரமாகும். யார் நன்மையை செய்வதின் மீது கொடுமை மேற்கொள்கிறார்கள் அவர்களுக்கு அல்லாஹ் 600 படித்தரங்களை எழுதுகிறான். அந்த ஒவ்வொரு படித்தரத்திற்கும் மத்தியில் முதல் பூமிக்கும் ஏழாவது பூமிக்கும் இடையே உள்ள தூரமாக இருக்கும். யார் பாவங்களை விட்டும் தன்னை தடுத்து கொள்வதில் பொறுமை கொள்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் 900 படித்தரங்களை எழுதுகிறான். அந்த ஒவ்வொரு படங்களுக்கும் இடையில் பூமிக்கும் அரஷின் எல்லைக்கும் உள்ள தொலை தூரமாக இருக்கும். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 5120)

பொறுமையாளர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற கூலியும் அந்தஸ்தும் மகத்தானது மிக உயர்வானது

 أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون

அத்தகையவர் (பொறுமையாளர்) களின் மீது இறைவனின் நல்லாசியும் கிருபையும் ஏற்படுகிறது. இன்னும் அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள். (அல்குர்ஆன் : 2 ; 157)

ان اعمار امتي قصيرة فزد من ثوابهم فانزل يؤتون اجرهم مرتين قال فزد من ثوابهم فانزل من جاء بالحسنة فله عشر امثالها ﻟﻤﺎ ﻧﺰﻟﺖ : }ﻣﺜﻞ ﺍﻟﺬﻳﻦ ﻳﻨﻔﻘﻮﻥ ﺃﻣﻮﺍﻟﻬﻢ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠّﻪ ﻛﻤﺜﻞ ﺣﺒﺔ ﺃﻧﺒﺘﺖ ﺳﺒﻊ ﺳﻨﺎﺑﻞ { ﺇﻟﻰ ﺁﺧﺮﻫﺎ ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠّﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﺭﺏ ﺯﺩ ﺃﻣﺘﻲ‏) ﻓﻨﺰﻟﺖ : } ﻣﻦ ﺫﺍ ﺍﻟﺬﻱ ﻳﻘﺮﺽ ﺍﻟﻠّﻪ ﻗﺮﺿﺎً ﺣﺴﻨﺎً ﻓﻴﻀﺎﻋﻔﻪ ﻟﻪ ﺃﺿﻌﺎﻓﺎً ﻛﺜﻴﺮﺓ {، ﻗﺎﻝ : ‏( ﺭﺏ ﺯﺩ ﺃﻣﺘﻲ‏)، ﻓﻨﺰﻟﺖ : }ﺇﻧﻤﺎ ﻳﻮﻓﻰ ﺍﻟﺼﺎﺑﺮﻭﻥ ﺃﺟﺮﻫﻢ ﺑﻐﻴﺮ ﺣﺴﺎﺏ { "" ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﺣﺎﺗﻢ ﻋﻦ ﻧﺎﻓﻊ ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ ""

என் சமூகத்தின் ஆயுட்காலம் ரொம்பக் குறைவானது.எனவே அவர்களுக்கு நன்மைகளை அதிகமாகக் கொடு என்று நபி அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்.அப்போது அல்லாஹ் அவர்கள் இரு முறை கூலி வழங்கப்படுவார்கள் என்ற வசனத்தை அருளினான்.இன்னும் அதிகப்படுத்து என்று கேட்டார்கள்.அப்போது ஒரு நன்மை செய்தால் அதுபோன்று பத்து கூலி உண்டு என்ற வசனத்தை இறக்கினான்.இன்னும் அதிகப்படுத்து என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் செலவு செய்பவர்களுக்கு உதாரணம் ஒரு வித்தைப் போல என்று தொடங்கும் வசனத்தை இறக்கினான். இன்னும் அதிகப்படுத்து என்று கேட்டார்கள்.அல்லாஹ்விற்கு யார் அழகிய கடன் தருகிறாரோ அவருக்கு அதனை பன்மடங்காக்கித் தருவான் என்ற வசனத்தை இறக்கினான். அதற்குப் பிறகும் இன்னும் அதிகப்படுத்து என்று கேட்டார்கள். பொருமையாளர்கள் கணக்கின்றி கூலி வழங்கப்படுவார்கள் என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான். (இப்னு அபீ ஹாதம்)

No comments:

Post a Comment