Monday, September 27, 2021

ஹதீஸ் எண் ; 25 القران جحة لك او عليك

 

عن أبي مالك الحارث بن عاصم الأشعري - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : (( الطهور شَطْرُ الإيمان ، والحمدلله تملأ الميزان ، وسبحان الله والحمد لله تملآن - أو تملأ - ما بين السماء والأرض،والصلاة نور، والصدقة بُرهان ،والصَّبْرُ ضِياءٌ، والقرآنُ حُجَّة لكَ أوعَليْكَ ، كُلُّ الناس يَغْدُو فبائِعٌ نفسَهُ فمُعْتِقـُها أو مُوبـِقـُها

தூய்மை ஈமானின் ஒரு பகுதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்பது நன்மையின் தட்டை நிரப்பும். சுப்ஹானல்லாஹி வல்ஹமது லில்லாஹ் என்பது வானம் மற்றும் பூமிக்கு இடையே உள்ளதை நிரப்பும். தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறுமை வெளிச்சமாகும். குர்ஆன் உனக்கு சாதகமாக அல்லது பாதகமாக இருக்கும். ஒவ்வொரு மனிதரும் முயற்சிக்கிறார்கள். தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சிலர் தன்னை அழிவில் இருந்து விடுவித்து விடுகிறார்கள். சிலர் தன்னை அழிவில் போட்டுக் கொள்கிறார்கள். (முஸ்லிம் ; 223)

இந்த ஹதீஸிலிருந்து ஒரு பகுதியை மட்டும் இன்றைக்கு நாம் எடுத்துக் கொள்ளலாம். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் குர்ஆன் ஒன்று சாதகமாக இருக்கும் அல்லது பாதகமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

அல்குர்ஆன் ஷரீஃப் என்பது உலகத்தாருக்கு வழிகாட்டுவதற்காக அல்லாஹ்வால் தரப்பட்ட அற்புத வேகமாக இருக்கும். உலகம் தோன்றியதிலிருந்து இதுவரை வாழ்ந்த மக்களுக்கும் வழிகாட்டியது. இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கும் வழிகாட்டுகிறது. நமக்கு பிறகு வரக்கூடிய மக்களுக்கும் வெளிகாட்டும். உலகத்தார் அனைவருக்கும் பொதுவான வேதமாக அல்லாஹ் அகிலத்தாருக்கு அருளியிருக்கிறான்.

அல்குர்ஆனுக்கு செய்ய வேண்டிய சில கடமைகளை இஸ்லாம் நமக்கு அடையாளப்படுத்துகிறது. நமக்குத் தரப்பட்டிருக்கிற அல்குர்ஆன் ஷரீஃபை நாம் ஓத வேண்டும். பிறர் ஓத கேட்க வேண்டும். மனனமிட வேண்டும். அதன் கருத்துக்களை விளங்க வேண்டும். அதைப்பற்றி சிந்திக்க வேண்டும். அதில் இருக்கக்கூடிய ஏவல்களை எடுத்து செயல்பட வேண்டும். அது தடுத்த விஷயங்களை விட்டும் தவிர்ந்து நடக்க வேண்டும். அது ஹலால் என்று சொன்னதை ஹலால் என்றும் ஹராம் என்று சொன்னதை ஹராம் என்றும் நம்ப வேண்டும். நமக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை குர்ஆனிலிருந்து தேட வேண்டும். குர்ஆன் சொல்லுகின்ற தீர்வை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி ஏராளமான கடமைகள் இருக்கிறது. இந்த கடமைகளை யெல்லாம் யார் சரியாக பேணுதலாக செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த குர்ஆன் சாதகமாக இருக்கும். மேற்கூறிய  கடமைகளில் யார் குறை உள்ளவர்களாக பேணுதல் இல்லாதவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு அல்குர்ஆன் பாதகமாக இருக்கும்.

وقال القرطبي :”يعني أنك إذا امتثلت أوامره؛ واجتنبت نواهيه، كان حجة لك في المواقف التي تُسأل فيها عنه، كمسألة الملكين في القبر، والمسألة عند الميزان” وفي عقبات الصراط، وإن لم تمتثل ذلك احتُجّ به عليك

அல்லாமா குர்துபீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; குர்ஆனில் இருக்கக்கூடிய ஏவலை எடுத்து செயல்பட வேண்டும். குர்ஆனிலேயே தடுக்கப்பட்ட விஷயங்களை விட்டும் தவிர்ந்து நடக்க வேண்டும். அவ்வாறு நடப்பவர்களுக்கு மண்ணறையிலும் மறுமையிலும் கேள்வி கணக்கு நடைபெறும் இடத்தில் அவர்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். அவ்வாறு நடக்காதவர்களுக்கு அவ்விரு இடங்களிலும் பாதகமான சூழ்நிலையை ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة، يقول الصيام: أى رب، منعته الطعام والشهوات بالنهار، فشفعنى فيه، ويقول القرآن: منعته النوم بالليل، فشفعنى فيه، فيشفعان

குர்ஆனும் நோன்பும் மறுமையில் ஒரு அடியாருக்காக பரிந்துரைக்கும். இறைவா பகலில் உணவை விட்டும் மனோ இச்சைகளை விட்டும் அவனை நான் படுத்திருந்தேன் ஆகவே அவர் விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள் என்று நோன்பு கூறும். இரவு நேரத்தில் தூக்கத்தை விட்டும் அவரை நான் எடுத்து வைத்திருந்தேன். எனவே அவர் விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள் என்று குர்ஆன் சொல்லும்.அவை இரண்டின் பரிந்துரைகளும் ஏற்கப்படும். (ஸஹீஹுல் ஜாமிவு ; 7329)

قال ميمون بن مهران: «إن الرجل يقرأ القرآن، وهو يلعن نفسه، قيل له: وكيف يلعن نفسه؟ قال: يقرأ: {أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ} ، وهو ظالم»[8]

மனிதன் தன்னை சபித்துக் கொண்டே குர்ஆனை ஓதுகிறான் என்று மைமூன் பின் மிஹ்ரான் ரலி அவர்கள் சொன்னார்கள். எப்படி என்று கேட்கப்பட்ட போது அநீதம் இழைத்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் என்ற வசனத்தை ஓதுகிறான். அவன் அநீதம் செய்தவனாக இருக்கிற போது அந்த சாபம் அவன் மீதே ஏற்பட்டு விடுகிறது என்றார்கள். (தன்பீஹுல் ஙாஃபிலீன்)

பொய் சொல்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது என்று ஓதுகிறோம். ஆனால் நாம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு குர்ஆனில் கூறப்பட்ட பாவங்களுக்கான பல்வேறு எச்சரிக்கை வசனங்களை ஓதுகிறோம். அந்த பாவங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம். குர்ஆன் பாதகமாக இருக்கிறது என்பதற்கு பொருள் இது தான்.

 

No comments:

Post a Comment