Sunday, September 12, 2021

ஹதீஸ் எண் ; 8 - يقاتل شجاعة

 

عن أبي موسى الأشعري-رضي الله عنه- قال: «سُئِلَ رَسُولُ الله -صلى الله عليه وسلم- عَنْ الرَّجُلِ: يُقَاتِلُ شَجَاعَةً، وَيُقَاتِلُ حَمِيَّةً، وَيُقَاتِلُ رِيَاءً، أَيُّ ذَلِكَ فِي سَبِيلِ الله؟ فَقَالَ رَسُولُ الله -صلى الله عليه وسلم-: مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ الله هِيَ الْعُلْيَا، فَهُوَ فِي سَبِيلِ الله

ஒருவர் வீரத்திற்காக போராடுகிறார்.

ஒருவர் ரோசத்திற்காக போராடுகிறார்.ஒருவர் முகஸ்துதிக்காக போராடுகிறார்.இதில் யார் இறை வழியில் உள்ளவர் என்று நபி அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், அல்லாஹ்வின் கலிமா உயர வேண்டும் என்பதற்காக ஒருவர் போர் புரிந்தால் அவர் தான் இறை வழியில் உள்ளவர் என்று பதிலளித்தார்கள். (புகாரி ; 7458)

நாம் இன்றைக்கு அமல் செய்வது மறுமையின் வெற்றியைப் பெறுவதற்கும் இறைவனின் பொருத்தத்தை பெறுவதற்கும் தான். நம்முடைய பல்வேறு அலுவல்களுக்கு இடையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழுவதும் நோன்பு வைப்பதும் குர்ஆன் ஓதுவதும் உம்ரா,ஹஜ் போன்ற அமல்களில் ஈடுபடுவதும் மறுமையில் நம் வெற்றியைப் பதிவு செய்வதற்குத் தான். ஆனால் நாம் செய்கின்ற அமல்கள் எல்லாம் நமக்கு பயன் தர வேண்டுமென்றால், மறுமையின் வெற்றிக்கு காரணமாக அமைய வேண்டுமென்றால், அந்த அமலில் மனத்தூய்மை இருக்க வேண்டும். மனத்தூய்மை இல்லாத அமல்கள் நிச்சயம் நமக்கு பயன் தராது.

وقال ابن القيم رحمه الله تعالى: "العمل بغير إخلاص، ولا اقتداء، كالمسافر يملأ جرابه رملاً ينقُلُه ولا ينفعه

தன் பேக்கில் அல்லது பர்ஸில் மண்ணை நிரப்பிக் கொண்டு செல்லும் பயணிக்கு எப்படி அது பயன் தராதோ அவ்வாறு மனத்தூய்மையும் நபியின் வழியும் இல்லாத அமல்களும் ஒருவருக்கு பயன் தராது என்று இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே அமல் செய்வது மட்டும் முக்கியமல்ல. அது மனத்தூய்மையுடன் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.பெருமை என்பது நம் அமல்களை அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கி விடும். அதனால் தான் அந்த பெருமையிலிருந்து நபி அவர்கள் அதிகம் அஞ்சியிருக்கிறார்கள்.

فقال صلى الله عليه وسلم: إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر! قالوا وما الشرك الأصغر يا رسول الله ؟ قال: الرياء،

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள். நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித் தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்ட போது, அவர்கள் ரியா- முகஸ்துதி என்று பதிலளித்தார்கள். (ஷரஹுஸ் ஸுன்னா ; 4135)

عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:إن أول الناس يُقضى يوم القيامة عليه رجلٌ استشهد فأُتيَ به فعرَّفه نعمَه فعرفها، قال فما عملت فيها؟ قال: قاتلت فيك حتى استشهدت، قال كذبت، ولكنك قاتلت لأن يقال هو جريء، فقد قيل، ثم أمر به فسُحبَ على وجهه حتى ألقي في النار، ورجلٌ تعلَّم العلم وعلَّمه وقرأ القرآن فأتي به فعرَّفه نعمَه فعرفها، قال فما عملت فيها؟ قال: تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن، قال كذبت، ولكنك تعلمت ليقال عالم وقرأت القرآن ليقال هو قارئ، فقد قيل ثم أمر به فسُحبَ على وجهه حتى ألقي في النار، ورجلٌ وسع الله عليه وأعطاه من أصناف المال فأتي به فعرفه نعمه فعرفها، قال فما عملت فيها؟ قال: ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك، قال كذبت، ولكنك فعلت ليقال هو جواد، فقد قيل ثم أمر به فسُحبَ على وجهه ثم ألقي في النار

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி அவர்கள் கூற நான் கேட்டேன். மறுமை நாளில் முதன் முதலாக தீர்ப்பளிக்கப் படுபவர்களில் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட தியாகி. அவன் கொண்டு வரப்பட்டு அவனுக்கு உலகில் அருளப்பட்ட அருட்கொடைகள் எடுத்துரைக்கப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் அதைக் கொண்டு என்ன அமல்களைச் செய்தாய் என்று கேட்கப்படும். அவன் உனக்காக போர் செய்து ஷஹீதாக்கப்பட்டேன்என்று கூறுவான். அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய். நீ வீரன் என்று புகழப்படுவதற்காக போர் செய்தாய். அவ்வாறு உலகில் சொல்லப்பட்டு விட்டதுஎன்று கூறிவிடுவான். பிறகு, முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.

மற்றொரு மனிதன் கல்வியைக் கற்று பிறருக்கு கற்றுக் கொடுத்தான். குர்ஆனை ஓதியிருந்தான். அவன் கொண்டு வரப்பட்டு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அதை ஒப்புக் கொள்வான். அல்லாஹ் அதன் மூலம் என்ன அமல்களைச் செய்தாய்?” என்று கேட்பான். அவன் நான் கல்வியை கற்று பிறருக்குக் கற்றுக் கொடுத்தேன். உன் திருப்திக்காகவே குர்ஆனை ஓதினேன்என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் நீ பொய் சொல்கிறாய். நீ ஆலிம் என்று புகழப்படுவதற்காக கல்வி கற்றாய், காரி என்று புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டதுஎன்று சொல்வான். பிறகு அவனை முகம் குப்புற நரகில் வீசி எறியுமாறு உத்தரவிடப்படும்.

இன்னொரு மனிதன், அல்லாஹ் அவனுக்கு உலகில் பல்வேறு அருட்கொடைகளை வழங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தியிருந்தான். அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் அதைக்கொண்டு என்ன அமல்களைச் செய்தாய்?” என்று கேட்கப்படும். அவன் எந்த வழிகளில் செலவு செய்வது உனக்குப் பிரியமானதோ அந்த அனைத்து வழிகளிலும் நான் செலவு செய்தேன்என்று கூறுவான். அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய், நீ கொடை வள்ளல் என புகழப்படுவதற்காக செய்தாய், அவ்வாறு உலகில் சொல்லப்பட்டு விட்டதுஎன்று கூறுவான். பிறகு அவனை முகம் குப்புற இழுத்துச்சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.” (முஸ்லிம் ; 1905)

No comments:

Post a Comment