Sunday, September 12, 2021

ஹதீஸ் எண் ; 9 - القاتل والمقتول في النار

 

وعن ابي بكرة نفيع بن الحارث الثقفي رض ان النبي صلى الله عليه وسلم قال: إذا التقى المسلمان بسيفيهما، فالقاتل والمقتول في النار. فقيل: يا رسول الله هذا القاتل، فما بال المقتول؟! قال: إنه كان حريصاً على قتل صاحبه

அபூபக்ரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாள்கள் மூலம் (சண்டையில்) சந்தித்தால்

அதில் கொலை செய்தவரும் கொலை செய்யப்பட்டவரும் நரகத்தில் இருப்பார்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள். அப்போது இறைத்தூதர் அவர்களே கொலை செய்தவர் விஷயத்தில் இது சரி.ஆனால் கொலை செய்யப்பட்டவர் நரகில் நுழையக் காரணம் என்ன என்று நான் கேட்டேன்.அதற்கு நபியவர்கள், நிச்சயமாக அவரும் தன் தோழரைக் கொல்வதில் ஆர்வமுள்ளவராகவே இருந்தார் என்றார்கள். (புகாரி ; 31)

இந்த ஹதீஸில் நிய்யத்தின் வலிமையும் உள்ள ஓட்டத்தின் விபரீதமும் நமக்கு விளக்கப்படுகிறது. ஒரு மனிதர் குற்றம் புரியாமலேயே அந்த குற்றத்தின் எண்ணத்தைக் கொண்டு தண்டிக்கப்படுகிறார் என்றால் தீய எண்ணத்தினால் ஏற்படும் விளைவை நாம் இந்த ஹதீஸின் வழியாக புரிந்து கொள்ள வேண்டும்.

إنما الدنيا لأربعة نفر:

عبد رزقه الله مالاً وعلماً فهو يتقي فيه ربه ويصل فيه رحمه ويعلم أن لله فيه حقاً، فهذا بأفضل المنازل،

وعبد رزقه الله علماً ولم يرزقه مالاً فهو صادق النية يقول لو أن لي مالاً لعملت بعمل فلان فهو بنيته فأجرهما سواء.

وعبد رزقه الله مالاً ولم يرزقه علماً فهو يخبط في ماله بغير علم، لا يتقي في ربه ولا يصل فيه رحمه ولا يعلم لله فيه حقاً، فهذا بأخبث المنازل،

وعبد لم يرزقه الله مالاً ولا علماً فهو يقول لو أن لي مالاً لعملت فيه بعمل فلان فهو بنيته فوزرهما سواء

உலகம் நான்கு மனிதர்களுக்கு உரியது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் பொருளையும் மார்க்க அறிவையும் கொடுத்திருந்தான். அவர் அந்த பொருளைக் கொண்டு  அல்லாஹ்வை அஞ்சுபவராகவும் தன் உறவை ஆதரிப்பவராகவும் அல்லாஹ்வின் ஹக்கை அறிந்தவராகவும் இருந்தார். இவர் உயர்ந்த படித்தரத்தில் இருக்கிறார். இன்னொரு நபருக்கு அல்லாஹ் மார்க்க அறிவை கொடுத்திருந்தான்.ஆனால் அவருக்கு பொருளாதாரத்தைக் கொடுக்க வில்லை. அவர் உண்மையான எண்ணத்துடன், எனக்கும் அல்லாஹ் பொருளாதாரத்தைக் கொடுத்திருந்தால், அவர் செய்வதைப் போன்றே நானும் செய்வேன் என்று சொல்கிறார் என்றால், அவ்விருவரின் கூலியும் சமமானதாகும்.

ஒருவருக்கு அல்லாஹ் பொருளாதாரத்தைக் கொடுத்திருந்தான். ஆனால் மார்க்க அறிவைக் கொடுக்க வில்லை. அவர் மார்க்க அறிவின்றி பொருளாதாரத்தை வீணான காரியங்களில் செலவழித்து அழித்துக் கொண்டிருக்கிறார். அல்லாஹ்வை அஞ்சி நடப்பவராகவும் இல்லை. அதைக் கொண்டு தன் உறவுகளை ஆதரித்து வாழ்பவராகவும் இல்லை. அதிலே அல்லாஹ்வின் ஹக் இருக்கிறது என்று புரிந்து நடப்பவராகவும் இல்லை. இவர் ஆக மோசமானவர் ஆகும். இன்னொருவருக்கு அல்லாஹ் பொருளாதாரத்தையும் கொடுக்க வில்லை. மார்க்க அறிவையும் கொடுக்க வில்லை.இவர், எனக்கும் அவரைப் போன்ற பொருளாதாரத்தை அல்லாஹ் கொடுத்திருந்தால் நானும் அதை அவரைப் போன்று செலவு செய்வேன்  என்று நினைக்கிறார் என்றால் இவ்விருவருக்கும் கிடைக்கும் தண்டனையும் சமமானதாகும். (திர்மிதி ; 2325)

கொலை செய்யப்பட்டவர் நரகத்திற்கு செல்வார் என்ற மேற்கூறப்பட்ட ஹதீஸ் அல்லாஹ்வுடைய பாதையில் கொலை செய்யப்பட்ட ஷஹீதுக்கும், அநீதமான முறையில் கொலை செய்யப்பட்ட ஒருவருக்கும், விளையாட்டாக நடைபெற்ற ஒரு சண்டையில் கொலை செய்யப்பட்டவருக்கும் தன் குடும்பத்தையோ பொருளாதாரத்தையோ தன் மானத்தையோ பாதுகாப்பதற்காக கொலை செய்யப்பட்ட ஒருவருக்கும் பொருந்தாது. மாறாக இருவர் அநீதமான முறையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அதில் ஒருவர் கொலை செய்கிறார். மற்றவர் கொலை செய்யப்படுகிறார் என்றால், அவ்விருவரும் நரகத்திற்கு செல்லக்கூடியவர்கள் என்பது தான் இதன் பொருளாகும்.

ومن هم بسيئة فلم يعملها كتبها الله له عنده حسنه كاملة

ஒரு தீமையை எண்ணி அதை செய்யவில்லையென்றால் அவருக்கு ஒரு நன்மையும் எழுதப்படும் என்று வரும் இந்த ஹதீஸ் மேற்கூறப்பட்ட அந்த ஹதீஸுக்கு முரண்படுகிறது. இதற்கு விளக்கம் தரும் மார்க்க அறிஞர்கள் ஒரு தீய காரியத்தை எண்ணி அல்லாஹ்வின் பயத்தினாலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுவதற்காகவும் அதை விட்டு விடுபவருக்குத்தான் நன்மை எழுதப்படும். ஒரு தீமையைச் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டு இயலாமையின் காரணமாக அதை செய்ய வில்லை என்றால் அவருக்கு அந்த தீமை எழுதப்படும் என்று குறிப்பிடுகிறார்கள்.

No comments:

Post a Comment