Thursday, October 14, 2021

ஹதீஸ் எண் 38 انك توعك وعكا شديدا

وعن ابن مسعود -رضي الله عنه- قال: دخلت على النبي -صلى الله عليه وسلم- وهو يُوعَك، فقلت: يا رسول الله، إنك تُوعَك وعْكاً شديداً، قال: ((أجل، إني أُوعَك كما يوعك رجلان منكم)) قلت: ذلك أن لك أجرين؟ قال:((أجل، ذلك كذلك، ما من مسلم يصيبه أذى، شوكة فما فوقها إلا كفر الله بها سيئاته، وحُطت عنه ذنوبه كما تَحُطُّ الشجرةُ ورقها

இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; நபி ஸல் அவர்களுக்கு காய்ச்சலாக இருந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். இறைத்தூதர் அவர்களே நீங்களும் கடும் காய்ச்சலினால் அவதிப்படுகிறீர்களே என்று கேட்டேன். ஆம் உங்களில் இருவருக்கு காய்ச்சல் ஏற்படுவது போல் நான் காய்ச்சலுக்கு ஆளாகிறேன் என்று கூறினார்கள். இதற்கு உங்களுக்கு இரண்டு கூலி உண்டா என்று கேட்டேன். ஆம் அவ்வாறு தான். ஒரு முஸ்லிமுக்கு முள் குத்துவது மேலும் அதற்கு மேலாக எந்த நோவினை ஏற்பட்டாலும் அதன் மூலம் அவனது குற்றங்களை அல்லாஹ் மன்னிக்கிறான். மரம் தன் இலைகளை உதிர்ப்பது போல அவனது பாவங்கள் அவனை விட்டும் நீக்கப்படும் என்றார்கள். (புகாரி ; 5647)

நோய்நொடிகள் மற்றும் சிரமங்களை அல்லாஹ் மூன்று காரணங்களுக்காக தருகிறான். ஒன்று நம் பொறுமை சோதிப்பதற்காக. இரண்டாவது நம் பாவங்களை அழிப்பதற்காக. மூன்றாவது அந்தஸ்தை உயர்த்துவதற்காக. இந்த மூன்றும் நபிமார்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பொதுவானது.

ما من مسلم يصيبه أذى

இந்த ஹதீஸில் நல்லவர் என்ற வார்த்தையை நபியவர்கள் பயன்படுத்தாமல் முஸ்லிம் என்று பொதுவாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்.எனவே ஒரு முஸ்லிம் நல்லவராக இருந்தாலும் சரி பாவம் செய்பவராக இருந்தாலும் அவருக்கு வரும் நோய்களும் நோவினைகளும் இந்த மூன்றில் ஒன்றுக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் நபிமார்கள் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். அவர்களின் பொறுமையை சோதிக்க வேண்டிய அவசியமில்லாதவர்கள். எனவே இதில் முதல் இரண்டு விஷயங்கள் நபிமார்களுக்கு பொருந்தாது.நபிமார்களுக்கு அல்லாஹ் நோயைத் தருவது அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்குத்தான்.

إن العبد إذا سبقت له من الله منزلة لم يبلغها بعمله ابتلاه الله في جسده أ في ماله أو في ولده ثم صبره على ذلك يبلغه المنزلة التي سبقت له من الله " . رواه أحمد وأبو داود

ஒரு அடியானின் விதியில் அவன் ஒரு அந்தஸ்தை அடைய வேண்டும் என்று இருந்து அவன் அமலைக் கொண்டு அதை அடைய முடியாத நிலையில் இருந்தால் அவன் உடலிலோ அவன் பொருளிலோ அவன் குழந்தைகளிலோ அல்லாஹ் சோதனையைக் கொடுப்பான். அவன் பொறுமையாக இருந்து விட்டால் அதைக் கொண்டு அந்த அந்தஸ்தை அடைத்து விடுவான். (அபூதாவூது ; 3090)

وروي أن رجلا قال لموسى: يا موسى،سل الله لي في حاجة يقضيها لي هو أعلم بها، ففعل موسى، فلما نزل إذ هو بالرجل قد مزق السبع لحمه وقتله، فقال موسى: ما بال هذا يا رب ؟ فقال الله تبارك وتعالى له: (يا موسى إنه سألني درجة علمت أنه لم يبلغها بعمله فأصبته بما ترى لاجعلها وسيلة له في نيل تلك الدرجة     قرطبي

ஒரு மனிதர் தனக்கான ஒரு தேவையை முன்னிறுத்தி அல்லாஹ்விடம் துஆ செய்யும் படி மூஸா நபி அலை அவர்களிடம் வந்து கோரிக்கை வைத்தார். அவர்களும் துஆ செய்தார்கள்.ஆனால் ஒரு நாள் அவனை ஒரு கொடிய மிருகம் ஒன்று கடித்து அவன் சதைகளை கிழித்து அவனை கொன்றிருந்ததை மூஸா அலை அவர்கள் பார்த்தார்கள். அவரின் நிலை குறித்து அல்லாஹ்விடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், அவன் என்னிடம் ஒரு அந்தஸ்தைக் கேட்டான். ஆனால் அந்த அந்தஸ்தை அவன் தன்னுடைய அமலைக் கொண்டு அடைய முடியாது என்று எனக்குத் தெரியும். எனவே அந்த அந்தஸ்தை அவன் அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிலையை அவனுக்கு ஏற்படுத்தினேன் என்று கூறினான். (தஃப்ஸீர் குர்துபீ)

  

No comments:

Post a Comment