Thursday, October 14, 2021

ஹதீஸ் எண் 39 من يرد الله به خيرا يصب منه

 

وعن ابي هريرة رض قال قال رسول الله صل من يرد الله به خيرا يصب منه رواه البخاري

யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ அவரை சோதிக்கிறான். (புகாரி ; 5645)

وقال الفضل بن سهل : إن في العلل لنعَماً لا ينبغي للعاقل أن يجهلها ، فهي ١، تمحيص للذنوب ، ٢ وتعرّض لثواب الصبر ، ٣ وإيقاظ من الغفلة ، ٤ وتذكير بالنعمة في حال الصحة ، ٥ واستدعاء للتوبة ، ٦ وحضّ على الصدقة

ஃபள்ல் இப்னு ஸஹ்ல்  ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; நோயில் எண்ணற்ற நிஃமத்துக்கள் இருக்கிறது. அறிவாளி நிச்சயம் அதை அறியாமல்  இருக்க முடியாது. 1,  நம் பாவங்களை அழிக்கிறது. 2, அதில் பொறுமை கொள்கிற  போது அல்லாஹ்விடம் அதற்காக கூலி வழங்கப்படுகிறது. 3, அல்லாஹ்வை மறந்த அந்த நிலையிலிருந்து நமக்கு விழிப்பைத் தருகிறது. பொதுவாக ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிற போது அவருக்கு இறைவனுடைய ஞாபகம் வருவதில்லை. இறைவன் இருக்கிறான் என்ற உணர்வே இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பார். என்றைக்கு நோய் வருகிறதோ அன்றைக்குத்தான் இறைவனுடைய ஞாபகம் வரும். ஆரோக்கியமாக இருந்த போது இறைவனை மறந்து உலகை சுற்றி வந்தவர் ஆரோக்கியம் கெட்டு நோய் வந்தவுடன் எனக்கு சுகத்தைக் கொடு ஆரோக்கியத்தைக் கொடு என்று இறைவனை சுற்றி வந்து கொண்டிருப்பார். ஆனால் உண்மையில் ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் என்றால், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிற போது இறைவனுடைய நினைவில் இருக்க வேண்டும். அப்போது தான் நோய்களும் கஷ்டமும் வருகின்ற பொழுது இறைவன் அவனை நினைத்துப் பார்ப்பான். ஆனால் நாம் பெரும்பாலும் அவ்வாறு இருப்பதில்லை. அல்லாஹ்வை மறந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நிலையிலிருந்து இறைவனுடைய ஞாபகம் வர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நோயைத் தருகிறான்.

4,  ஆரோக்கியத்தின் மகத்துவத்தை நமக்கு புரிய வைக்கிறது. நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்று சொல்வார்கள். ஒரு பொருளின் மகத்துவம் அந்தப் பொருள் நம்மிடம் இருக்கின்ற வரை நமக்கு தெரியாது. எப்போது நம் கையை விட்டும் செல்கிறதோ அப்போது தான் அந்தப் பொருளுடைய மகத்துவம் நமக்கு புரிய ஆரம்பிக்கும். ஆரோக்கியம் அடியார்களுக்கு அல்லாஹ் கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். மிகப்பெரிய நிஃமத். அதனால் தான் ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் அதிகம் கேட்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அல்லாஹ்விடத்தில் நாம் கேட்கக் கூடிய விஷயங்களில் மிகவும் சிறந்தது எது என்று கேட்ட போது அவனிடத்தில் ஆரோக்கியத்தை கேட்பது என்று நபி ஸல் அவர்கள் பதில் தந்தார்கள்.

5, தவ்பாவின் பக்கம் நம்மைத் தூண்டுகிறது. ஆரோக்கியமாக இருக்கின்ற வரை தவ்பா செய்ய வேண்டும். இறைவனிடத்தில் மீழ வேண்டும் என்ற எண்ணமும் சிந்தனையும் ஏற்படாது. ஏதாவது பெரிய நோயில் சிக்கி விடும் போது தான், நம் நிலை என்னவாகுமோ நமக்கு மரணம் வந்து விடுமோ அவ்வாறு மரணம் வந்து விட்டால் இறைவனை இந்த பாவத்தோடு எப்படி சந்திப்பது என்ற எண்ணத்தில் அப்போது தான் தவ்பா செய்ய வேண்டும் என்ற உணர்வு அவருக்கு வரும்.

6, ஸதகா செய்வதை நமக்குத் தூண்டுகிறது. தர்மம் நோயைத் தடுக்கும் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள். நோயைத் தடுப்பதோடு மட்டுமல்ல, இன்னும் நிறைய நன்மைகள் தர்மம் செய்வதனால் நமக்கு கிடைக்கும். சில நேரங்களில் உடம்பில் ஏதோ மாற்றங்கள் ஏற்படும். ஆனால் என்ன நோய் இருக்கிறது என்பதை கண்டு பிடிக்க முடியாது. அதேபோன்று சில நேரங்களில் உடம்பில் நோய் இருக்கும். ஆனால் எந்த மருத்துவரிடம் செல்ல வேண்டும். யாரிடத்தில் சென்றால் குணம் கிடைக்கும் என்ற முடிவுக்கு நம்மால் வர முடியாது. இன்னும் சில நேரங்களில் மருத்துவரிடம் சென்றாலும் அவர் நம் உடம்புக்கு தகுந்த சிகிச்சையை செய்யாமல் இருக்கலாம். அதனால் குணம் கிடைப்பதற்கு தாமதமாகும். இந்த எல்லா விஷயத்திற்கும் தர்மம் என்பது பயன் தரும். உடல் பரிசோதனை செய்வதற்கு செல்வதற்கு முன்பு சதகா செய்து விட்டு சென்றால் அதன் முடிவு நன்மையாக இருக்கும் என்று சொல்வார்கள். இதுவெல்லாம் ஸதகாவின் மூலம் நாம் பெறும் நன்மைகள். அவ்வாறு ஸதகா செய்வதை நமக்கு தூண்டுவதற்கும் அல்லாஹ் நோயைத் தருகிறான்.

நோய்கள் என்பது நமக்கு நன்மையாகத்தான் இருக்கும்.

 من يحب أن يصح فلا يسقم‏؟‏‏"‏ فابتدرنا‏.‏ فقلنا‏:‏ نحن يا رسول الله‏.‏ فعرفناها في وجهه فقال‏:‏ ‏"‏أتحبون أن تكونوا كالحمير الضالة‏؟‏‏"‏ قالوا‏:‏ لا يا رسول الله‏.‏ قال‏:‏ ‏"‏ألا تحبون أن تكونوا أصحاب كفارات‏؟‏ والذي نفس أبي القاسم بيده إن الله يبتلي المؤمن بالبلاء وما يبتليه به إلا لكرامته عليه، إن الله تعالى قد أنزله منزلة لم يبلغها بشيء من عمله فيبتليه من البلاء ما يبلغه تلك الدرجة

நபி அவர்கள் ஸஹாபாக்களிடம் நோயே வராமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உங்களில் யாருக்கு விருப்பம் இருக்கிறது என்று கேட்டார்கள். அவர்கள் அனைவரும் முந்திக் கொண்டு எங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்றார்கள். அந்த பதிலைக் கேட்டவுடன் நபியின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. நீங்கள் அனைவரும் தவறிப் போன கழுதையைப் போல ஆக விரும்புகிறீர்களா? என்றார்கள். இல்லையென்றார்கள் அவர்கள். பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக ஆகுவதற்கு நீங்கள் விரும்ப வில்லையா? என்று கேட்டு விட்டு, இறைவன் மீது சத்தியமாக ஒரு முஃமினை உயர்வுபடுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் அவனை சோதிப்பதில்லை. அல்லாஹ் ஒரு அடியானுக்கு ஒரு அந்தஸ்தை வைத்திருக்கிறான். அந்த அடியான் தன் அமலால் அதை அடைய முடிய வில்லையென்றால், அந்த அந்தஸ்தை அவன் அடைந்து கொள்ளும் அளவுக்கு அவனுக்கு சோதனையைக் கொடுக்கிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (மஜ்மவுஸ் ஸவாயிது : 2/296)

 

 

 

No comments:

Post a Comment