Sunday, October 24, 2021

ஹதீஸ் எண் 45 ليس الشديد بالصرعة

 

عن أبي هريرة  أن رسول الله 

قال: ليس الشديد بالصُّرَعة، إنما الشديد الذي يملك نفسه عند الغضب[1] متفق عليه.

வீரன் என்பது மல்யுத்தம் செய்வதைக் கொண்டல்ல. கோபம் ஏற்படும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவன் தான் வீரன். (புகாரி ; 6114)

தன்னை காயப்படுத்தும் சொற்கள் அல்லது நடத்தைகளை மற்றவரோ, தானோ செய்யும் போது கோபம் ஏற்படுகிறது. மூளையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அமிக்டலாவின் கட்டளைப்படி, (கேட்டகாலமைன்) எனும் ரசாயனம் சுரக்கத் தொடங்குகிறது. இந்த ரசாயனம் மூச்சின் வேகத்தை அதிகரித்துகிறது, இதயத்தை வேகமாகத் துடிக்க வைக்கிறது, உடலின் எல்லா பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை வழக்கத்தை விட அதிகமாகவும் அதிவேகத்திலும் வழங்குகிறது. இதனால் சிறிது நேரத்துக்கு அதிவேக ஆற்றல் கிடைக்கும். அட்ரினலின், நான்-அட்ரினலின் ஹார்மோன்களும் கோபத்தின் போது சுரந்து, ஒரு மனிதனை சண்டையிடும் நிலைக்கு தயார்படுத்தும்.

عن أبي هريرة رضي الله عنه: أن رجلًا قال للنبي صلى الله عليه وسلم: أوصني، قال: ((لا تغضب))، فردد مرارًا، قال: ((لا تغضب

நபி ஸல் அவர்களிடம் ஒருவர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டார். நீ கோபம் கொள்ளாதே என்றார்கள். அவர் திருப்பி திருப்பி அதே கேள்வியைக் கேட்ட போதும் நீ கோபம் கொள்ளாதே என்றார்கள். (புகாரி ; 6116)

கோபம் என்பது மிகவும் ஆபத்தானது. இன்றைக்கு நடக்கின்ற குடும்பத்தின் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி சமூகத்தின் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி எல்லாவற்றுக்கும் மூலக் காரணம் கோபம். இன்றைக்கு அதிகமான தம்பதிகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்திற்கு செல்வதற்கு அடிப்படைக் காரணம் கோபம் தான். எனவே தான் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.அவர் திருப்பித் திருப்பிக் கேட்டும் நபியவர்கள் அதையே சொன்னார்கள்.

கோபம் வருகிற பொழுது அதைக் கட்டுப்படுத்துவதற்கான அதை அடக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளையும் இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது. கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான முதல் வழிமுறை நம்முடைய சூழ்நிலைகளை மாற்றி அமைப்பது. அதாவது நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்து விடுவது. உட்கார்ந்து கொண்டிருந்தால் படுத்து விடுவது. சூழ்நிலை மாறுகின்ற போது நம்முடைய உணர்விலும் மாற்றம் ஏற்படும். இடத்தைப் பொருத்து உணர்வு மாறுபடுகிறது. அந்த வகையில் நம் சூழ்நிலைகளை மாற்றி அமைக்கின்ற பொழுது அந்த கோபம் குறைந்து விடும். மட்டுமல்ல நின்று கொண்டிருக்கிற பொழுது கோபத்தினால் எதிர்வினைகள் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. அங்கே உட்கார்ந்து விட்டால் அது குறைந்து விடும். அதுவும் படுத்து விட்டால்  எதிர்வினைக்கான சந்தர்ப்பமே இல்லாமல் ஆகி விடும். அதனால் தான் இஸ்லாம் அப்படி ஒரு வழிமுறையை நமக்கு சொல்லித் தருகிறது.

இரண்டாவது வழிமுறை கோபம் வருபவர் ஒழு செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கோபம் என்பது ஷைத்தானின் மூலம் ஏற்படுகிறது. ஷைத்தான் கோபம் என்ற அந்த நெருப்பை நம் உள்ளத்திலே போடுகிறான். அதனால் தான் கோபம் கொப்பளிக்கிறது. உடம்பு சூடாகி விடுகிறது. எனவே அந்த சூட்டை அணைப்பதற்கான ஒரே வழிமுறை ஒழு செய்து கொள்வது தான்.

மூன்றாவது கோபம் ஷைத்தானுடைய தூண்டுதலால் ஏற்படுவதனால் ஷைத்தானை விரட்டுவதற்கான வேலையை செய்ய வேண்டும் அதன் மூலமும் கோபம் நம்மிடம் இருந்து விலகும்.

عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَجُلاَنِ يَسْتَبَّانِ، فَأَحَدُهُمَا احْمَرَّ وَجْهُهُ وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ، لَوْ قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ‏.‏ ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ ‏"‏‏.‏ فَقَالُوا لَهُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ تَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ ‏"

நபி ஸல் அவர்களுடன் நான் அமர்ந்திருந்தேன். இரு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்திருந்தது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. அப்போது நபி ஸல் அவர்கள் ஒரு வார்த்தையை நான் அறிவேன். அதை அவன் கூறினால் அவனிடம் ஏற்பட்டுள்ள கோபம் அவனை விட்டும் போய் விடும். அதாவது அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறினார்கள். உடனே நபித்தோழர்கள் கோபப்பட்டவரிடம் சென்று ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறியதாக சொன்னார்கள். (புகாரி ; 3282)

No comments:

Post a Comment